நித்தம் ஆட்டிவைக்கும் உன் குடும்பச்சுமைகளுக்கிடையில்
இவனின் நினைவுகீறல்கள் இருந்தால் அதற்குச்சமர்ப்பணம்...
அரை வாலிபம் எட்டிப்பார்க்கையிலே!
அப்போ நீ எட்டு, நான் பத்து
வகுப்புகள கடந்தும் கடக்காமலும்..
ஏதோ ஒரு தினசரியில் கதிரவன் மறைய
எத்தணிக்கும் நேரம் அது!
தோழிகளின் கூட்டத்துடன் நடை பயணமாய் நீ..
என் வகுப்பு பசங்களுடன் மிதி வண்டி பந்தயத்துடன் நான்..
ஏதோ என்னனு வெளங்கல எனக்கு,
தோழிகளுடன் சண்டையுனு அந்த கருவகாட்டு சாலையிலே
தன்னந்தனியா கொஞ்சம் பயத்தின் துணையுடன்
ஓட்டமும் நடையுமாய் சென்று கொண்டிருந்தாய்..
உன்னை பார்த்து விட்டு மனம் பதறி நின்று விட
அவ்வளவு தான்
நம் இளமை ரகசியம் வெளிச்சமானது
நம் தோழமைகளுக்கு...
நெடு நாட்களின் தவம் ஒன்று
நிறைவேறிய சந்தோசத்தில்
உன்னை என் வண்டியில் உட்க்கார வைத்து மிதிக்கையிலே!
வண்டி முன்னோக்கியும், மனசு பின்னோக்கியும்..
ஒரு சேர பயணித்தது..
அது ஒரு காலம் பெண்ணே....
நினைவு இருந்தால்
இரண்டு சொட்டு கண்ணீர் போதும்..
அந்த மிதிவண்டி கால நினைவுகள் மிளிரட்டும்..
இல்லையேல் மறித்தே போகட்டும்...
அன்புடன்..
அரசன்
Tweet |
2 கருத்துரைகள்..:
கவிதை மிக நெகிழ்வு..... பிரமிக்கிறேன்.
நன்றி தங்களின் கருத்துரை என்னை நிறைய மெருகேற்றும்...
கருத்துரையிடுக