மணப்பெண்ணாய் மங்கல கோலத்தில் நீ...
உறவு பந்தத்தின் கட்டாய வருகையாளனாய் நான்...
முதலும் இறுதியுமாய் தவித்துகொண்டது எனது இதயம்
உன்னிடம் பேசிக்கொள்ள..
இறுதியில் பேசிக்கொண்டன நம் கண்கள்...
மங்கல வாத்தியங்கள் என் மனதை உரித்தெடுக்க..
உன் கழுத்தை அழகு படுத்தியது மாற்றானின் மாங்கல்யம்...
பலமுறை பார்க்க துடித்த என் கண்கள் இன்று மட்டும்
உன்னை பார்க்க மறுக்கின்றது...
காலத்தின் கோலம் அந்த மரண நொடியிலும்
உன்னருகே நான் வருவதாய் நேர்ந்தது ...
அந்த ஒரு சில நிமிடங்களில் எனது இதயத்தை
அமில தொட்டியில் முக்கி எடுத்தாற்போல் நரக சுகம்...
அதனை மேலும் நீட்டிப்பதாய்
எதிர்பாராத விதமாய்
இடித்து கொண்டன நம் உயிர்கள் ...
இறுதியாய் உன்னை அருகில் பார்த்துக்கொண்ட சந்தோசத்தில்
துடித்துக்கொண்டது என் காயம் கண்ட இதயம்...
ஒரு திருமணத்தில் ஆரம்பித்த நம் காதல்
உன் திருமணத்தினால் முடிவு பெற்றது...
இறுதி பார்வையில் விடைப் பெற்று சென்றாய்,
நம் காதல் வாழ்விலிருந்து, உனது இல்லற வாழ்விற்கு!
இன்று முழுமையாய் முதல் வருடத்தை பூர்த்தி செய்து
இனிதே!
இரண்டாம் வருடத்தை துவக்குகிறது
என் காதல் தோல்விப் பயணம்.....
கடந்த கால நினைவுச் சுமைகளோடு!!!
அரசன்
உகந்த நாயகன் குடிக்காடு....
Tweet |
5 கருத்துரைகள்..:
தங்கள் அனுபவம் ..கவிதை வடிவில் :P
அருமை வாழ்த்துகள் ... :)
வாழ்த்துக்கள் அரசன் (ராஜா) தங்கள் புதிய முயசிற்கு. முற்று புள்ளி உங்கள் கவிதைக்கு மட்டும் வேண்டும். உங்கள் முயசிற்கு அல்ல.......
விஜய்
நன்றி அருள்...
மிக்க நன்றி....
தல வணக்கம்.. வாருங்கள்....
நன்றி தங்களின் வாழ்த்துக்கள் எனக்கு இன்னும் உற்சாகத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை...
vaaztthukkal
http://nanjilmano.blogspot.com
கருத்துரையிடுக