உன் குறும்பு மீசையினால் துள்ளி எழுந்தேன்!
கலையான முகம், கபடமில்லா சிரிப்பு,
வசீகர பேச்சு இவற்றில் கரைந்துதான் போனேன்!
உன் பார்வை என்மேல் விழவேண்டும் என்று
நீ வரும் திசைகளை நோக்கி,
வண்ணத்து பூச்சிகளாய் சிறகடித்த எனக்கு
மிஞ்சியது ஏமாற்றமே!
அதிசியமாய் என்னிடம் பேசும் உன்னிடம்
அதிகமாய் பேச மனசு துடித்தாலும்,
அளவாய் பேசவே உதடு திறக்கும்..
ஒரே ஊரில் இருந்தும் உன்னை
காணாத நாட்களில், என்றோ நீ தவறவிட்ட
உன் நிழற்படம் ஒன்று மட்டுமே
வலி நிவாரணியாய்...
என்றாவது என் காதலை
உணருவாய் என்று
"வலி கொண்ட இதயத்தோடு"
உன் நாயகி....
(ஒரு வித்தியாசமான முயற்சியில் கிறுக்கியது..)
அன்புடன்
அரசன்
உகந்த நாயகன் குடிக்காடு..
Tweet |
5 கருத்துரைகள்..:
உன் பார்வை என்மேல் விழவேண்டும் என்று
நீ வரும் திசைகளை நோக்கி,
வண்ணத்து பூச்சிகளாய் சிறகடித்த எனக்கு
மிஞ்சியது ஏமாற்றமே!
அதிசியமாய் என்னிடம் பேசும் உன்னிடம்
அதிகமாய் பேச மனசு துடித்தாலும்,
அளவாய் பேசவே உதடு திறக்கும்..
இது எனக்கும் நிகழ்ந்ததுதான்......
கவிதையோட்ட்டம் மிக சிறப்பு.... தொடர்க.
தங்களின் கருத்துரை என்னை இன்னும் நல்வழி படுத்தும்....
நன்றி... மிக்க நன்றி..
நல்லா இருக்கு ...
வாழ்த்துகள்
நன்றி அருள்....
மிகவும் அருமை .
கருத்துரையிடுக