புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜனவரி 07, 2011

ஒளியிழந்த நிலவு ...வறுமைக்கு வளர்ப்பு பிள்ளை, 
வழிதவறிய ஆணுக்கு அவசரத்துணை... 


பலரது பசிக்கு பலியான 
பாதை தவறிய பேதை...


பருவங்களின் மோகப்பார்வைக்கு 
பலமிழந்த பாவை...


மதிமங்கிய மன்மதர்கள் 
அருந்திப்போன மதுக்கிண்ணம்...


எனக்கான பெயரும் மறைந்து, 
அரிதாரம் பூசிய முகமே முகவரியுமானது...


மலர்மணம் விரும்பிய நான் 
பணவாசனை நுகர்ந்து 
பிணமாகி போகிறேன்...


வண்ணக்கனவுகளும்,
நெஞ்சுக்குழி காதலும்,
கலைந்தே போயின...


சுகம்தரும் புதையல் என 
சுரண்ட முயலுகின்றன 
முகவரி தெரியா 
மனித முண்டங்கள் - என் 
சுகங்களை கேளாமலே...


அடுக்கடுக்கான படையெடுப்புகளினால் 
சிதைந்த சிற்பமானேன்...
சிறு எச்சமாகியும் போனேன் ...
******************************************************************


சென்ற வாரம் என்னை வலைச்சரத்தில் அறிமுகபடுத்திய 
நண்பர் ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...

Post Comment

90 கருத்துரைகள்..:

ஜெ.ஜெ சொன்னது…

ஒளியிழந்த நிலவு..பொருத்தமான தலைப்பு..

நல்லா எழுதிருக்கிங்க..

dineshkumar சொன்னது…

அவளின் ஏக்கங்களும் நோக்கங்களும் மறுத்துபோய் மனிதநேயம் இல்லா மனிதர்களில் மனிதம் தேடும் சிறகொடிக்கப்பட்ட பறவையின் கண்ணீர்த்துளிகள் ..........

கவிதை உள்ளுக்குள் தீண்டும் ஈட்டியாய் பாய்கிறது உங்கள் வரிகளில்

க.பாலாசி சொன்னது…

நல்ல கவிதைங்க அரசன்.... தலைப்பை போலவே..

cheena (சீனா) சொன்னது…

அன்பின் அரசன்

ஒளியிழந்த நிலவு - கவிதை அருமை - உவமைகளும் வர்ணனைகலூம் அருமை - கவிதை உணர்த்தும் வலி தாங்க இய்லாது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Arun Prasath சொன்னது…

கவிதை உணர்த்தும் கருத்து சூப்பர் தல

ஜீ... சொன்னது…

நல்ல கவிதை அரசன்!

நா.மணிவண்ணன் சொன்னது…

தல கவிதை அருமை . உண்மைலே அவர்கள் ஒளி இழந்த நிலவுதான் .

மாணவன் சொன்னது…

வரிகள் ஒவ்வொன்றும் வலிகளை சுமந்த உணர்வுகள்
//அடுக்கடுக்கான படையெடுப்புகளினால்
சிதைந்த சிற்பமானேன்...
சிறு எச்சமாகியும் போனேன் ..//

வரிகளை படிக்கும்போதே மனது கனக்கிறது ரொம்ப நன்றி அண்ணே சிறப்பா எழுதியிருக்கீங்க

மாணவன் சொன்னது…

உங்களின் கவிப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
அண்ணே நன்றி

சி. கருணாகரசு சொன்னது…

கவிதை மிக செறிவா .... சமூக பிடிமானத்துடன்.இருக்கு.

கவிதையி வடிவம்... சொற்கள்... அளவு... சொல்லும் செய்தி.... அத்தனையும் கச்சிதமாய் இருக்கு.....

இப்படித்தான் நான் எதிர் பார்த்தேன்...

மனம் நிறைந்த பாராட்டுக்கள்,

பதிவுலகில் பாபு சொன்னது…

கவிதையும்.. தலைப்பும் சூப்பர்..

thendralsaravanan சொன்னது…

பலருக்கு நிலவானாள்!
தன்னொளி தொலைத்தாள்!

தங்கள் கவிதை அழகான வலிகள்(வரிகள்)கொண்டுள்ளது!

பெயரில்லா சொன்னது…

ஒளியிழந்த நிலவு..பொருத்தமான தலைப்பு!!!!!
அருமைஅருமைஅருமைஅருமைஅருமைஅருமை

பார்வையாளன் சொன்னது…

உண்மையிலேயே மிக மிக சிறப்பான கவிதை

Chitra சொன்னது…

வறுமைக்கு வளர்ப்பு பிள்ளை,
வழிதவறிய ஆணுக்கு அவசரத்துணை...

..... ஆரம்பமே வலிகளை சொல்கிறது.

சிவகுமாரன் சொன்னது…

அடுக்கடுக்கான படையெடுப்புகளினால்
சிதைந்த சிற்பமானேன்...
சிறு எச்சமாகியும் போனேன் ...
******************************************************************
போர்க்களத்தில் கேட்கும் மரண ஓலத்தை விட கொடுமையான வலி தரும் வரிகள்.

Lakshmi சொன்னது…

கவிதைக்குப்பொறுத்தமான தலைப்பு. நல்ல இருக்கு.

அன்புடன் மலிக்கா சொன்னது…

தலைப்புக்கு ஏற்றகவி
தடம் மாறியவரின் வலி.

வலிநிறைந்த வரிகள்..

ரஹீம் கஸாலி சொன்னது…

நல்லதொரு கவிதை நண்பா

சி.பிரேம் குமார் சொன்னது…

//மலர்மணம் விரும்பிய நான்
பணவாசனை நுகர்ந்து
பிணமாகி போகிறேன்...//பிடித்த வரி இது அன்பரே

அருமையான கவிதை ஒவ்வொரு வரியும் அருமை

ரிஷபன் சொன்னது…

எனக்கான பெயரும் மறைந்து,
அரிதாரம் பூசிய முகமே முகவரியுமானது.

இந்த வரி என்னைப் பிடித்துக் கொண்டது!

ஆயிஷா சொன்னது…

அருமையான கவிதை.வாழ்த்துக்கள்.

அரசன் சொன்னது…

ஜெ.ஜெ சொன்னது…
ஒளியிழந்த நிலவு..பொருத்தமான தலைப்பு..

நல்லா எழுதிருக்கிங்க.//

அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க ...

அரசன் சொன்னது…

dineshkumar சொன்னது…
அவளின் ஏக்கங்களும் நோக்கங்களும் மறுத்துபோய் மனிதநேயம் இல்லா மனிதர்களில் மனிதம் தேடும் சிறகொடிக்கப்பட்ட பறவையின் கண்ணீர்த்துளிகள் ..........

கவிதை உள்ளுக்குள் தீண்டும் ஈட்டியாய் பாய்கிறது உங்கள் வரிகளில்//

உங்களின் மனம் நிறைவான வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க நண்பரே ...

அரசன் சொன்னது…

க.பாலாசி சொன்னது…
நல்ல கவிதைங்க அரசன்.... தலைப்பை போலவே..
//

வருகைக்கும் , வளமான வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க

அரசன் சொன்னது…

heena (சீனா) சொன்னது…
அன்பின் அரசன்

ஒளியிழந்த நிலவு - கவிதை அருமை - உவமைகளும் வர்ணனைகலூம் அருமை - கவிதை உணர்த்தும் வலி தாங்க இய்லாது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

உங்களை போன்ற நல் உள்ளங்களின் வாழ்த்துக்களில் கரைந்து போகிறேன் ...
மிக்க நன்றிங்க

அரசன் சொன்னது…

Arun Prasath சொன்னது…
கவிதை உணர்த்தும் கருத்து சூப்பர் தல//

மிக்க நன்றி தல ...
அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி தல

அரசன் சொன்னது…

ஜீ... சொன்னது…
நல்ல கவிதை அரசன்!//

மிக்க நன்றிங்க ஜீ...

அரசன் சொன்னது…

நா.மணிவண்ணன் சொன்னது…
தல கவிதை அருமை . உண்மைலே அவர்கள் ஒளி இழந்த நிலவுதான் .//

இனிப்பான வருகைக்கும் , வளமான வாழ்த்துக்கும் மிக்க நன்றி தல ...

அரசன் சொன்னது…

மாணவன் சொன்னது…
வரிகள் ஒவ்வொன்றும் வலிகளை சுமந்த உணர்வுகள்
//அடுக்கடுக்கான படையெடுப்புகளினால்
சிதைந்த சிற்பமானேன்...
சிறு எச்சமாகியும் போனேன் ..//

வரிகளை படிக்கும்போதே மனது கனக்கிறது ரொம்ப நன்றி அண்ணே சிறப்பா எழுதியிருக்கீங்க//

அண்ணே எல்லாம் உங்கள் ஊக்கம் தான் அண்ணே ...
அன்பான வருகைக்கும் , நிலையான வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல .....

அரசன் சொன்னது…

மாணவன் சொன்னது…
உங்களின் கவிப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
அண்ணே நன்றி//

அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி அண்ணே

அரசன் சொன்னது…

சி. கருணாகரசு சொன்னது…
கவிதை மிக செறிவா .... சமூக பிடிமானத்துடன்.இருக்கு.

கவிதையி வடிவம்... சொற்கள்... அளவு... சொல்லும் செய்தி.... அத்தனையும் கச்சிதமாய் இருக்கு.....

இப்படித்தான் நான் எதிர் பார்த்தேன்...

மனம் நிறைந்த பாராட்டுக்கள்,//

எனக்கு மிக்க மகிழ்ச்சியா இருக்குங்க மாமா ....]
உங்களின் அன்பும் , ஆதரவும் தான் என்னோட இந்த படைப்புக்கு காரணம் ...
உங்களின் மனம் நிறைந்த பாராட்டுக்கு நான் தலை வணங்குகிறேன் மாமா ...
என்னோட இந்த வளர்ச்சிக்கு முழு காரணமும் உங்களின் அன்பான அறிவுரைகளே காரணம் ....
மிக்க நன்றிங்க மாமா ...

அரசன் சொன்னது…

பதிவுலகில் பாபு சொன்னது…
கவிதையும்.. தலைப்பும் சூப்பர்//

நிறைவான வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க

சி. கருணாகரசு சொன்னது…

மேலும் வளர்ந்து கவிதையில உன்னை நீ நிலை நாட்டணும் ....அதுவே என் ஆசை.

அரசன் சொன்னது…

thendralsaravanan சொன்னது…
பலருக்கு நிலவானாள்!
தன்னொளி தொலைத்தாள்!

தங்கள் கவிதை அழகான வலிகள்(வரிகள்)கொண்டுள்ளது!//

உங்களின் மனம் நிறைந்த பாராட்டுக்கு மிக்க நன்றிங்க மேடம் .....

அரசன் சொன்னது…

கல்பனா சொன்னது…
ஒளியிழந்த நிலவு..பொருத்தமான தலைப்பு!!!!!
அருமைஅருமைஅருமைஅருமைஅருமைஅருமை//

அன்பான வாழ்த்துக்கு நன்றி நன்றி நன்றி

அரசன் சொன்னது…

சி. கருணாகரசு சொன்னது…
மேலும் வளர்ந்து கவிதையில உன்னை நீ நிலை நாட்டணும் ....அதுவே என் ஆசை.//

நிச்சயமா மாமா ... உங்களின் அன்பு கட்டளைக்கு நான் பணிகிறேன் ...
எல்லாம் தங்களின் ஆசீர்வாதம் ...

அரசன் சொன்னது…

பார்வையாளன் சொன்னது…
உண்மையிலேயே மிக மிக சிறப்பான கவிதை//

மிக்க நன்றிங்க பார்வையாளரே ....

அரசன் சொன்னது…

Chitra சொன்னது…
வறுமைக்கு வளர்ப்பு பிள்ளை,
வழிதவறிய ஆணுக்கு அவசரத்துணை...

..... ஆரம்பமே வலிகளை சொல்கிறது.//


மிக்க நன்றிங்க சித்ரா மேடம் ....

அரசன் சொன்னது…

சிவகுமாரன் சொன்னது…
அடுக்கடுக்கான படையெடுப்புகளினால்
சிதைந்த சிற்பமானேன்...
சிறு எச்சமாகியும் போனேன் ...
******************************************************************
போர்க்களத்தில் கேட்கும் மரண ஓலத்தை விட கொடுமையான வலி தரும் வரிகள்.//

உண்மை நண்பரே ... அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை நினைத்து பார்த்தாலே நெஞ்சம் கனத்து போகிறது ...
வாழ்த்துக்கும் , வருகைக்கும் மிக்க நன்றிங்க நண்பரே

அரசன் சொன்னது…

Lakshmi சொன்னது…
கவிதைக்குப்பொறுத்தமான தலைப்பு. நல்ல இருக்கு.//

வருகைக்கும் , வளமான வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க அம்மா

அரசன் சொன்னது…

அன்புடன் மலிக்கா சொன்னது…
தலைப்புக்கு ஏற்றகவி
தடம் மாறியவரின் வலி.

வலிநிறைந்த வரிகள்..//

மிக்க நன்றிங்க ....
அன்பான வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

அரசன் சொன்னது…

ரஹீம் கஸாலி சொன்னது…
நல்லதொரு கவிதை நண்பா//

மிக்க நன்றிங்க நண்பரே ...

அரசன் சொன்னது…

சி.பிரேம் குமார் சொன்னது…
//மலர்மணம் விரும்பிய நான்
பணவாசனை நுகர்ந்து
பிணமாகி போகிறேன்...//பிடித்த வரி இது அன்பரே

அருமையான கவிதை ஒவ்வொரு வரியும் அருமை
//

அன்பான வாழ்த்துக்கு இதயம் கனிந்த நன்றிகள்

அரசன் சொன்னது…

ரிஷபன் சொன்னது…
எனக்கான பெயரும் மறைந்து,
அரிதாரம் பூசிய முகமே முகவரியுமானது.

இந்த வரி என்னைப் பிடித்துக் கொண்டது//

நெஞ்சு நிறைந்த வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க தோழரே

அரசன் சொன்னது…

ஆயிஷா சொன்னது…
அருமையான கவிதை.வாழ்த்துக்கள்//

வருகைக்கும் , வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க ...

தவறு சொன்னது…

பாதிக்குது மனச அரசன்.

r.v.saravanan சொன்னது…

நல்ல கவிதை நண்பரே

வாழ்த்துக்கள்.

க.வனிதா சொன்னது…

arumai arumai ! solla vaarthai illai nanbare ! migavum arumai! sila kelvigalil oru velvithee uruvaanadhu ungalin varigalil arumai migavum rasikkiren

polurdhayanithi சொன்னது…

//அடுக்கடுக்கான படையெடுப்புகளினால்
சிதைந்த சிற்பமானேன்...
சிறு எச்சமாகியும் போனேன் ...//
parattugal nalla pathivu

அரசன் சொன்னது…

தவறு சொன்னது…
பாதிக்குது மனச அரசன்//


வருகைக்கும் , வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க

அரசன் சொன்னது…

r.v.saravanan சொன்னது…
நல்ல கவிதை நண்பரே

வாழ்த்துக்கள்//


மிக்க நன்றிங்க தோழரே

அரசன் சொன்னது…

க.வனிதா சொன்னது…
arumai arumai ! solla vaarthai illai nanbare ! migavum arumai! sila kelvigalil oru velvithee uruvaanadhu ungalin varigalil arumai migavum rasikkiren//


அன்பான வருகைக்கும், அளவு கடந்த வாழ்த்துக்கும் மிக்க நன்றி வனிதா

அரசன் சொன்னது…

polurdhayanithi சொன்னது…
//அடுக்கடுக்கான படையெடுப்புகளினால்
சிதைந்த சிற்பமானேன்...
சிறு எச்சமாகியும் போனேன் ...//
parattugal nalla pathivu//


செழிப்பான வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க தோழரே

ஹேமா சொன்னது…

அரசன்...கடைசியாகத்தான் வந்திருக்கிறேன்.தலைப்பும் கவிதையும் போட்டி போட்டு கவிவரிகளுக்குள் நிலைக்கவைக்கிறது !

இளம் தூயவன் சொன்னது…

வரிக்கு வரி வலி தெரிகிறது.

புதுச்சேரி அன்பழகன் சொன்னது…

அரசன் அவர்களுக்கு உங்கள் கவிதை அருமை .நீங்கள் அவசியம் அனோனிமா (முகம் மறைத்தவள் )என்ற நூலை படிக்கவும் .வாழ்த்துக்கள்

vanathy சொன்னது…

super!

அரசன் சொன்னது…

ஹேமா சொன்னது…
அரசன்...கடைசியாகத்தான் வந்திருக்கிறேன்.தலைப்பும் கவிதையும் போட்டி போட்டு கவிவரிகளுக்குள் நிலைக்கவைக்கிறது !//

உங்களின் அன்பு வாழ்த்துக்களில் கரைந்து போகிறேன் ...
மிக்க நன்றிங்க ./...

அரசன் சொன்னது…

இளம் தூயவன் சொன்னது…
வரிக்கு வரி வலி தெரிகிறது.//

அன்பான வாழ்த்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் இளம் தூயவரே

அரசன் சொன்னது…

புதுச்சேரி அன்பழகன் சொன்னது…
அரசன் அவர்களுக்கு உங்கள் கவிதை அருமை .நீங்கள் அவசியம் அனோனிமா (முகம் மறைத்தவள் )என்ற நூலை படிக்கவும் .வாழ்த்துக்கள்
//

நிச்சயம் படிக்கிறேன்.. உங்களின் அன்பான வருகைக்கும், நேசமான வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க

அரசன் சொன்னது…

vanathy சொன்னது…
super!//

thank you so much...

பாரத்... பாரதி... சொன்னது…

கவிதை அழகான வார்த்தைகளால் கோர்க்கப்பட்டிருந்தாலும் உணர்த்தும் வலி மிக அதிகம்.

கனாக்காதலன் சொன்னது…

சுகம் விற்பவர்களின் வலியை அருமையாக பதிவு செய்துள்ளீர்கள். அருமை.

சி. கருணாகரசு சொன்னது…

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

ஜெ.ஜெ சொன்னது…

பொங்கல் வாழ்த்துக்கள் சகோ..

தஞ்சை.வாசன் சொன்னது…

ஒளியிழந்த நிலவு மாதத்தில் ஒருநாள் நம் கண்முன்னே வர வெட்கபட்டுக்கொண்டு வராமல் போகலாம்... ஆனால் மீண்டும் ஜொலிக்கும் நிலவாய் மீண்டும் வருவாள்... வரிகள் அருமை தம்பி...

வாழ்த்துகள்... மென்மேலும் வளர...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

தமிழ்த்தோட்டம் சொன்னது…

கலக்குங்க

kavikavitha சொன்னது…

மிக மிக அழகா இருக்கிறது. வலிகள் சொல்லும் வரிகள்... எங்கோ தொலைந்து போன அவளின் ஆழமான ஆசைகள், பல கனவு படு குழிக்குள் உறங்கிக் கொண்டு....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//மதிமங்கிய மன்மதர்கள்
அருந்திப்போன மதுக்கிண்ணம்...//ஆஹா அருமை அருமை...

ஆமினா சொன்னது…

கவிதை வரிகளில் புதைந்துள்ள ஆழமிக்க கருத்துக்கள் அருமை

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//அடுக்கடுக்கான படையெடுப்புகளினால்
சிதைந்த சிற்பமானேன்//

சூப்பரா இருக்கு அரசன்,
சாரி மக்கா லேட்டாயிடுச்சி...

"நந்தலாலா இணைய இதழ்" சொன்னது…

வார்த்தைகள் எங்கும் வழுக்கி விழாதபடி பயன்படுத்தி இருக்கின்றீர்கள்!! அருமை!!

"நந்தலாலா இணைய இதழ்" சொன்னது…

வருகை தாருங்கள்...!
வாசித்துப் பாருங்கள்...!
பங்கு பெறுங்கள்...!!

என்றும் உங்களுக்காக
"நந்தலாலா இணைய இதழ்"

Kalidoss சொன்னது…

வலிகளே வாழ்க்கையாகிப் போனது.
ஒளி இழந்த நிலவே..
வழி இழந்தது வறுமையாலா.
விழி நனைகிறேன் உன் வலி கண்டு

அரசன் சொன்னது…

பாரத்... பாரதி... சொன்னது…
கவிதை அழகான வார்த்தைகளால் கோர்க்கப்பட்டிருந்தாலும் உணர்த்தும் வலி மிக அதிகம்.//

வருகைக்கும் , வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க ..

அரசன் சொன்னது…

கனாக்காதலன் சொன்னது…
சுகம் விற்பவர்களின் வலியை அருமையாக பதிவு செய்துள்ளீர்கள். அருமை.//

மிக்க நன்றிங்க கனாக்காதலன்

அரசன் சொன்னது…

தஞ்சை.வாசன் சொன்னது…
ஒளியிழந்த நிலவு மாதத்தில் ஒருநாள் நம் கண்முன்னே வர வெட்கபட்டுக்கொண்டு வராமல் போகலாம்... ஆனால் மீண்டும் ஜொலிக்கும் நிலவாய் மீண்டும் வருவாள்... வரிகள் அருமை தம்பி...

வாழ்த்துகள்... மென்மேலும் வளர..//

அண்ணே மிக்க நன்றி ...
உங்களின் அன்பு கலந்த வாழ்த்துக்களில் கரைந்தே போனேன் ...

அரசன் சொன்னது…

தமிழ்த்தோட்டம் சொன்னது…
கலக்குங்க
//

நீங்க சொல்லிட்டிங்க கலக்கிடலாம்

அரசன் சொன்னது…

kavikavitha சொன்னது…
மிக மிக அழகா இருக்கிறது. வலிகள் சொல்லும் வரிகள்... எங்கோ தொலைந்து போன அவளின் ஆழமான ஆசைகள், பல கனவு படு குழிக்குள் உறங்கிக் கொண்டு....//

அன்பான வருகைக்கும் , வாழ்த்துக்கும் நன்றிங்க கவி ...

அரசன் சொன்னது…

MANO நாஞ்சில் மனோ சொன்னது…
//மதிமங்கிய மன்மதர்கள்
அருந்திப்போன மதுக்கிண்ணம்...//ஆஹா அருமை அருமை..//

நன்றி நன்றி நன்றி

அரசன் சொன்னது…

ஆமினா சொன்னது…
கவிதை வரிகளில் புதைந்துள்ள ஆழமிக்க கருத்துக்கள் அருமை//

மிக்க நன்றிங்க மேடம்

அரசன் சொன்னது…

MANO நாஞ்சில் மனோ சொன்னது…
//அடுக்கடுக்கான படையெடுப்புகளினால்
சிதைந்த சிற்பமானேன்//

சூப்பரா இருக்கு அரசன்,
சாரி மக்கா லேட்டாயிடுச்சி...//

சார் வாழ்த்து தான் முக்கியம் ...
காலதாமதம் ஒன்னும் பிரச்சினை இல்லை ..
மிக்க நன்றி சார்

அரசன் சொன்னது…

"நந்தலாலா இணைய இதழ்" சொன்னது…
வார்த்தைகள் எங்கும் வழுக்கி விழாதபடி பயன்படுத்தி இருக்கின்றீர்கள்!! அருமை!//

நிறைவான வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க ...

அரசன் சொன்னது…

"நந்தலாலா இணைய இதழ்" சொன்னது…
வருகை தாருங்கள்...!
வாசித்துப் பாருங்கள்...!
பங்கு பெறுங்கள்...!!

என்றும் உங்களுக்காக
"நந்தலாலா இணைய இதழ்//

நிச்சயமாக வருகிறேன் ...
அழைப்புக்கு மிக்க நன்றிங்க

அரசன் சொன்னது…

Kalidoss சொன்னது…
வலிகளே வாழ்க்கையாகிப் போனது.
ஒளி இழந்த நிலவே..
வழி இழந்தது வறுமையாலா.
விழி நனைகிறேன் உன் வலி கண்டு
//

அன்பான வருகைக்கும் , ஆசி நிறைந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க ...

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள் sir ,
நீங்க நிறைய சாதிக்கணும்

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள் sir ,
நீங்க நிறைய சாதிக்கணும்

உழவன் ராஜா சொன்னது…

வலி நிறைந்த கவிதை வரிகள்...மீண்டும் இந்த வரிகளை நினை ஊட்டுங்கள் நண்பா இக்கால மன்மதர்களுக்கு..முகப்பு பக்கத்தில்..எதிர் பார்க்கிறேன் ..

உழவன் ராஜா சொன்னது…

வலி நிறைந்த வரிகள்..