அக்சய திருதியை என்றாலே அனைவரின் மனதில் சட்டென உதிப்பது குண்டுமணி அளவாது தங்கம் வாங்க வேண்டும் என்றுதான். அன்றைய தினத்தில் தங்கம் வாங்கினால் அந்த ஆண்டு முழுதும் நாம் தங்கம் வாங்கி கொண்டே இருப்போம் (!?) என்பது தான் இன்றைய பெரும்பாலான மக்களின் மன நிலை.
அறிவியலின் துணை கொண்டு அதிவேகமாக முன்னேறும் நாம் இந்த பாழும் மூட நம்பிக்கையில் தான் இன்றும் பின்னோக்கியே செல்கிறோம் என்பது கசப்பான உண்மைதான். அவற்றுள் ஒன்றுதான் இந்த "அக்சய திருதியை".
இந்த கண்மூடித்தனமான நம்பிக்கையை யார் பரப்பியது?. யாரின் தூண்டுதல் இருக்கும்?. ஒரு பொய்யான பரப்புரைக்கு பின் பெரியே கூட்டத்தின் சுய நலம்தான் காரணமாக இருக்க முடியும். கவர்ச்சி விளம்பரம் காட்டி இன்னும் மக்களை மயக்க நிலையிலே வைத்து தங்களது லாபத்தை கூட்ட முயலுகின்ற கூட்டம் இங்கு நிறையவே இருக்கின்றனர்.
அக்சய திருதியை மோகம் உச்சத்திற்கு சென்று விட்டது என்றே கூறலாம். முதல் நாள் பின்னிரவிலே இருந்து நீண்ட வரிசையில் கால் கடுக்க நின்று குண்டு மணி அளவாது தங்கம் வாங்கி விட வேண்டும் என்ற வெறி மனதில் குடி புகுந்து ஆட்டுவிக்கிறது. இன்னும் சிலர் வட்டிக்கு வாங்கியாவது தங்கம் வாங்குகின்றனர். அந்த வருடத்தில் அவர்கள் வாங்கிய தங்கத்தின் மதிப்பை விட கட்டிய வட்டியின் மதிப்பு தான் அதிகமாக இருக்கும். இந்நிலைக்கு யார் காரணம்???
லட்ச கணக்கில் பணம் கொடுத்து முன்னணி நடிகையை வைத்து விளம்பரம். நிமிடத்திற்கு நிமிடம் தொலைகாட்சியில் பரப்புரை. நம் மக்களை எளிதில் வசிய படுத்தி அதன் மூலம் தங்களது எண்ணங்களை நிறைவேற்றி கொள்வது தான் இன்றைய முதலாளிகளின் வியாபார யுக்தி. இன்னும் அதை உணராமல் அவர்கள் விரித்த வலையில் சிக்கி அல்லல் படுகிறோம் என்பது மறுக்க முடியா உண்மை. எரியும் வீட்டில் பிடுங்கி கொள்வதெல்லாம் லாபம் என்பது போல் நம்மிடம் எந்தெந்த வழிகளில் சுரண்ட முடியுமோ அனைத்து வழிகளிலும் முயலுகிறார்கள் என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.
ஒருவேளை அவர்கள் கூறுவது போல் அக்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்கினால் தங்கம் விளைவது உண்மை என்றால், தங்கம் வாங்கும் நமக்கு விளையும் என்றால், அன்றைய தினத்தில் தங்கத்தினை பெருமளவில் விற்கும் அவர்களின் நிலை என்னவாக இருக்க வேண்டும் ????!!!!. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் நண்பர்களே!
இறுதியாக,
மூடநம்பிக்கை வேறு!, இறை நம்பிக்கை வேறு என்று உணரும் நிலை வந்தால் தான் இந்நிலை மாறும் என்று நம்புகிறேன்.

Tweet |
46 கருத்துரைகள்..:
வணக்கம் அண்ணே நலமா? :)
அண்ணே வணக்கம் நான் நலம் ..
நீங்க எப்படி இருக்கீங்க ...
ரொம்ப நாளா ஆச்சு ..
பணிச்சுமை அதிகமோ ...
அக்சய திருதியைப்பற்றி சரியான நேரத்தில் சொல்லியிருக்கீங்கண்ணே...
//இறுதியாக,
மூடநம்பிக்கை வேறு!, இறை நம்பிக்கை வேறு என்று உணரும் நிலை வந்தால் தான் இந்நிலை மாறும் என்று நம்புகிறேன்.//
உண்மைதான்...
நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய விழிப்புணர்வு கட்டுரையை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிண்ணே :)
மூடநம்பிக்கை வேறு!, இறை நம்பிக்கை வேறு என்று உணரும் நிலை வந்தால் தான் இந்நிலை மாறும்
உண்மைதான் நண்பரே. இது வியாபார தந்திரமே அன்றி வேறில்லை.
மூடநம்பிக்கை வேறு!, இறை நம்பிக்கை வேறு என்று உணரும் நிலை வந்தால் தான் இந்நிலை மாறும்
100%உண்மை நண்பரே
வாழ்த்துக்கள் ஒரு விழிப்புணர்வு பதிவிற்கு... நேற்று செல்வா கூட அருமையாக சொல்லியிருந்தார்..
அருமையான, தேவையான ஒரு பதிவு அரசன்...
இதுவும் ஒருவகையில் ஆடித்தள்ளுபடி போலத்தான்...
என்ன... அதில் விலை குறைக்கப்படும். (பொருளின் தரமும்!)
இதில் அப்படியில்லை... பேரமே பேசமுடியாது.
//இறுதியாக,
மூடநம்பிக்கை வேறு!, இறை நம்பிக்கை வேறு என்று உணரும் நிலை வந்தால் தான் இந்நிலை மாறும் //
சரியாகச் சொன்னீர்கள்...
சரி... எந்தக்கடையில முன்பதிவு பண்ணியிருக்கீங்க... :))
நான் பண்ணிட்டேன்..!!!!
இப்படி சாட்டையை சுழட்டுவதும் பதிவருக்கான கடமைதான்.
பாராட்டுக்கள்.
மிக தரமான படைப்பு.... வாழ்த்துக்கள்.
இன்னும் சிலர் வட்டிக்கு வாங்கியாவது தங்கம் வாங்குகின்றனர். அந்த வருடத்தில் அவர்கள் வாங்கிய தங்கத்தின் மதிப்பை விட கட்டிய வட்டியின் மதிப்பு தான் அதிகமாக இருக்கும்//
இது மகா கொடுமை....
அட்சய திரிதியை அன்று அன்ன தானம் செய்வதே மிக சிறந்த ஒன்று
தவறாக புரிந்து கொள்ளப்பட்ட பண்டிகைகளுள் இதுவும் ஒன்று
விஜய்
வணக்கம் நண்பரே முதலில் உளம் கனிந்த பாராட்டுகள் உமக்கு மட்டுமல்ல இந்த இடுகையை எழுததூண்டிய இந்த குமுகத்திற்கும் தான் அதாவது பண்டிததனமான கருத்துகளை பாமரத்தனமாக எழுதி விழிப்புணர்வு ஊட்டி உள்ளீர்கள் . முறையான சான்றுகூறி உள்ளீர்கள். அதாவது அப்படி கடன் வாங்கி நகை வாங்கியபிறகு வீட்டில் செல்வவளம் பெருக்கெடுத்து ஓடுகிறதா ? என்கிற ரீதியில் கேள்வி கேட்டுள்ளமை பாராட்டுகளுக்கும் மக்கள் சிந்திப்பதற்கும் நீங்கள் நல் வாய்ப்பை வழங்கி அவர்கள நல்வழிப்படுத்த முயற்சி செய்திருக்கிறீர்கள் உங்களின் இடுகை வெற்றியடையட்டும் வாழ்த்துகளுடன் ...
பகிர்வுக்கு நன்றி
வாழ்த்துக்கள் அண்ணே
மூடநம்பிக்கை வேறு!, இறை நம்பிக்கை வேறு என்று உணரும் நிலை வந்தால் தான் இந்நிலை மாறும் //
விழிப்புணர்வு ஊட்டும் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் சிறந்தப் பதிவு . பகிர்ந்தமைக்கு நன்றி
//////////////மூடநம்பிக்கை வேறு!, இறை நம்பிக்கை வேறு என்று உணரும் நிலை வந்தால் தான் இந்நிலை மாறும் என்று நம்புகிறேன்.
////////
ஒரு மிகப்பெரிய விவாத தகவலை அழகாக சொல்லி முடித்திருக்கும் விதம் சிறப்பு
விழிப்புணர்ச்சியை தரும் பதிவு நண்பரே இது போன்ற சமுதாயதிற்கு ஏற்ற பதிவுகளை தொடருங்கள் வாழ்த்துக்கள்
இறுதியாக,
மூடநம்பிக்கை வேறு!, இறை நம்பிக்கை வேறு என்று உணரும் நிலை வந்தால் தான் இந்நிலை மாறும் என்று நம்புகிறேன்.
super
எதிர்கட்சிக்காரர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரியாமல் என்னால் உங்கள் பதிவை ஆதரிக்கவோ அல்லது மறுக்கவோ முடியாது. வணிகர்கள், மதவாதிகள் என்ன சொல்கிறார்கள் ? வெறும் ஆண்டுமுழுவதும் பணம் பெருகும் என்றுதான் சொன்னார்களா ?
அது கிடக்க.
வட நாட்டில் ஒரு இந்துப்பண்டிகை. ஒன்பது வாட்கள். அது கொண்டாடப்படும் என்பதை விட அனுசரிக்கப்படும் என்பதே சரி. அந்நாட்களில் நகை, வீடு, அல்லது விசேஷ காரியங்கள் செய்யமாட்டார்கள். கோயில் செல்லல் பத்திய உணவு கொள்ளல் மட்டுமே. நகைக்கடைகளில் ஈயாடும். ஏனென்றால் நகை வாங்கல் தெய்வக்குத்தமாம்.
இப்போது ஒரு பதிவு போடுவோமா ?
இஃது என்ன மூடநம்பிக்கை ? மக்களை நகை வாங்கக்குடாது என்று ?
அங்கே ஆண்டுமுழுவதும் பணம் பெருகும். இங்கே ஆண்டு முழுவதும் தரித்திரம்.
மாணவன் சொன்னது…
அக்சய திருதியைப்பற்றி சரியான நேரத்தில் சொல்லியிருக்கீங்கண்ணே...
//இறுதியாக,
மூடநம்பிக்கை வேறு!, இறை நம்பிக்கை வேறு என்று உணரும் நிலை வந்தால் தான் இந்நிலை மாறும் என்று நம்புகிறேன்.//
உண்மைதான்.//
நன்றிங்க அண்ணே ,.,
மாணவன் சொன்னது…
நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய விழிப்புணர்வு கட்டுரையை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிண்ணே :)//
சிறு முயற்சி தான் ,... பாப்போம் ..
பாலா சொன்னது…
மூடநம்பிக்கை வேறு!, இறை நம்பிக்கை வேறு என்று உணரும் நிலை வந்தால் தான் இந்நிலை மாறும்
உண்மைதான் நண்பரே. இது வியாபார தந்திரமே அன்றி வேறில்லை.//
இரண்டு நாட்களாய் தொலைகாட்சியில் வரும் பரப்புரைகள்
நெஞ்சத்தை பிளக்கின்றது ... நண்பா ...
வாழ்த்துக்கு மிக்க நன்றி
r.v.saravanan சொன்னது…
மூடநம்பிக்கை வேறு!, இறை நம்பிக்கை வேறு என்று உணரும் நிலை வந்தால் தான் இந்நிலை மாறும்
100%உண்மை நண்பரே//
இருந்தும் திருந்திய பாடு இல்லையே நம் மக்கள் ..
நன்றிங்க சார் ..
!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…
வாழ்த்துக்கள் ஒரு விழிப்புணர்வு பதிவிற்கு... நேற்று செல்வா கூட அருமையாக சொல்லியிருந்தார்..//
மிக்க நன்றிங்க நண்பா ...
சிசு சொன்னது…
அருமையான, தேவையான ஒரு பதிவு அரசன்...
இதுவும் ஒருவகையில் ஆடித்தள்ளுபடி போலத்தான்...
என்ன... அதில் விலை குறைக்கப்படும். (பொருளின் தரமும்!)
இதில் அப்படியில்லை... பேரமே பேசமுடியாது.
//இறுதியாக,
மூடநம்பிக்கை வேறு!, இறை நம்பிக்கை வேறு என்று உணரும் நிலை வந்தால் தான் இந்நிலை மாறும் //
சரியாகச் சொன்னீர்கள்...
சரி... எந்தக்கடையில முன்பதிவு பண்ணியிருக்கீங்க... :))
நான் பண்ணிட்டேன்..!!!!//
வாழ்த்துக்கு ... நன்றிங்க சிசு ...
சி.கருணாகரசு சொன்னது…
இப்படி சாட்டையை சுழட்டுவதும் பதிவருக்கான கடமைதான்.
பாராட்டுக்கள்.//
அன்புக்கு நன்றிங்க மாமா ,...
சி.கருணாகரசு சொன்னது…
மிக தரமான படைப்பு.... வாழ்த்துக்கள்.//
...உங்களின் உற்சாகமும் , பாராட்டும் தான் காரணம் மாமா ...
சி.கருணாகரசு சொன்னது…
இன்னும் சிலர் வட்டிக்கு வாங்கியாவது தங்கம் வாங்குகின்றனர். அந்த வருடத்தில் அவர்கள் வாங்கிய தங்கத்தின் மதிப்பை விட கட்டிய வட்டியின் மதிப்பு தான் அதிகமாக இருக்கும்//
இது மகா கொடுமை....//
உண்மைதான் மாமா ..
இனியும் திருந்தா மக்களை ஒன்றும் சொல்வதற்கு இல்லை ..
விஜய் சொன்னது…
அட்சய திரிதியை அன்று அன்ன தானம் செய்வதே மிக சிறந்த ஒன்று
தவறாக புரிந்து கொள்ளப்பட்ட பண்டிகைகளுள் இதுவும் ஒன்று
விஜய்//
உண்மைதான் சார் ..
மிக தவறான புரிதலே இந்த பண்டிகைக்கு காரணம் ..
போளூர் தயாநிதி சொன்னது…
வணக்கம் நண்பரே முதலில் உளம் கனிந்த பாராட்டுகள் உமக்கு மட்டுமல்ல இந்த இடுகையை எழுததூண்டிய இந்த குமுகத்திற்கும் தான் அதாவது பண்டிததனமான கருத்துகளை பாமரத்தனமாக எழுதி விழிப்புணர்வு ஊட்டி உள்ளீர்கள் . முறையான சான்றுகூறி உள்ளீர்கள். அதாவது அப்படி கடன் வாங்கி நகை வாங்கியபிறகு வீட்டில் செல்வவளம் பெருக்கெடுத்து ஓடுகிறதா ? என்கிற ரீதியில் கேள்வி கேட்டுள்ளமை பாராட்டுகளுக்கும் மக்கள் சிந்திப்பதற்கும் நீங்கள் நல் வாய்ப்பை வழங்கி அவர்கள நல்வழிப்படுத்த முயற்சி செய்திருக்கிறீர்கள் உங்களின் இடுகை வெற்றியடையட்டும் வாழ்த்துகளுடன் ...//
மனம் திறந்து நிறைவாய் பாராட்டிய உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பா ,..
Mahan.Thamesh சொன்னது…
பகிர்வுக்கு நன்றி
வாழ்த்துக்கள் அண்ணே//
மிக்க நன்றிங்க அண்ணே ..
இராஜராஜேஸ்வரி சொன்னது…
மூடநம்பிக்கை வேறு!, இறை நம்பிக்கை வேறு என்று உணரும் நிலை வந்தால் தான் இந்நிலை மாறும் //
விழிப்புணர்வு ஊட்டும் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.//
மிக்க நன்றிங்க மேடம் ..
! ♥ பனித்துளி சங்கர் ♥ ! சொன்னது…
விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் சிறந்தப் பதிவு . பகிர்ந்தமைக்கு நன்றி//
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க சார் ..
! ♥ பனித்துளி சங்கர் ♥ ! சொன்னது…
//////////////மூடநம்பிக்கை வேறு!, இறை நம்பிக்கை வேறு என்று உணரும் நிலை வந்தால் தான் இந்நிலை மாறும் என்று நம்புகிறேன்.
////////
ஒரு மிகப்பெரிய விவாத தகவலை அழகாக சொல்லி முடித்திருக்கும் விதம் சிறப்பு//
அன்பான வாழ்த்துக்கு மிக நன்றிங்க .
r.v.saravanan சொன்னது…
விழிப்புணர்ச்சியை தரும் பதிவு நண்பரே இது போன்ற சமுதாயதிற்கு ஏற்ற பதிவுகளை தொடருங்கள் வாழ்த்துக்கள்//
அன்பு வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க
ரஹீம் கஸாலி சொன்னது…
இறுதியாக,
மூடநம்பிக்கை வேறு!, இறை நம்பிக்கை வேறு என்று உணரும் நிலை வந்தால் தான் இந்நிலை மாறும் என்று நம்புகிறேன்.
super//
Thank you sir
பெயரில்லா சொன்னது…
எதிர்கட்சிக்காரர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரியாமல் என்னால் உங்கள் பதிவை ஆதரிக்கவோ அல்லது மறுக்கவோ முடியாது. வணிகர்கள், மதவாதிகள் என்ன சொல்கிறார்கள் ? வெறும் ஆண்டுமுழுவதும் பணம் பெருகும் என்றுதான் சொன்னார்களா ?
//
நீங்க சொல்ல வருவது தான் என்னா ????
பெயரில்லா நண்பரே ...
அது கிடக்க.
வட நாட்டில் ஒரு இந்துப்பண்டிகை. ஒன்பது வாட்கள். அது கொண்டாடப்படும் என்பதை விட அனுசரிக்கப்படும் என்பதே சரி. அந்நாட்களில் நகை, வீடு, அல்லது விசேஷ காரியங்கள் செய்யமாட்டார்கள். கோயில் செல்லல் பத்திய உணவு கொள்ளல் மட்டுமே. நகைக்கடைகளில் ஈயாடும். ஏனென்றால் நகை வாங்கல் தெய்வக்குத்தமாம்.
இப்போது ஒரு பதிவு போடுவோமா ? //
பதிவு போடுங்கள் யார் வேண்டாம் என்று சொன்னது ,,
முதலில் உங்களின் பெயரை தெரிய படுத்துங்கள் ./
நல்ல கருத்துக்களை கூறுங்கள் மக்கள் ஏற்று கொள்வார்கள் ..
இஃது என்ன மூடநம்பிக்கை ? மக்களை நகை வாங்கக்குடாது என்று ?
அங்கே ஆண்டுமுழுவதும் பணம் பெருகும். இங்கே ஆண்டு முழுவதும் தரித்திரம்.//
இறுதியாக என்ன சொல்ல வந்திர்கள் என்று கூட எனக்கு விளங்க வில்லை ..
மன்னிக்கவும் ..
இஃது என்ன மூடநம்பிக்கை ? மக்களை நகை வாங்கக்குடாது என்று ?//
அட்சய திருதிகை:
குண்டுமணியளவாவது தங்கம் “வாங்கினால்” அவர்களுக்கு செல்வம் செழிக்குமாம்!!!!!!
அவ்வளவோ தங்கம் “விற்கும்” கடைகாரன் பிச்சையா எடுக்கிறான்???????
முடிவு உங்க பகுத்தறிவுக்கு.
nice post....
எல்லாமே வியாபாரத் தந்திரம் !
தங்களின் இந்த இடுகை எப்படியோ காணாமல் விட்டேன் என்று தெரியவில்லை...
நல்ல பதிவு!விழிப்புணர்வு தருவதாக உள்ளது!
மக்கள் ஏமாற 100 வழி.. அதில் இதுவும் ஒன்று..
கருத்துரையிடுக