புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஆகஸ்ட் 01, 2011

நான் இரசித்த பாடல் (2)....படம்: தூத்துக்குடி 

பாடல்: கருவாப்பையா  கருவாப்பையா 

இசை: திரு. பிரவீன் மணி 

வரிக்கு சொந்தக்காரர்: கவிஞர் இளைய கம்பன். 


நான் அடிக்கடி கேட்கும் புதுப்பாடல்களில் இதுவும் ஒன்று.
இந்த பாடலின் சிறப்பு என்னவெனில் முழுப்பாடலையும் 
எளிய அன்றாட வழக்கு மொழியையே பயன்படுத்தி எழுதி இருப்பார் 
கவிஞர் இளைய கம்பன். 

2006  ஆம் ஆண்டு வெளி வந்த படம் இது.. தொடக்க வரிகளே உள்ளதை 
கொள்ளை கொள்ளும். "கருவாப்பையா கருவாப்பையா கருவாச்சி கவுந்துபுட்டா" என்று ஆரம்பித்து இசையுடன் சென்று செவிகளை சிலிர வைக்கும்.

"குண்டூசி மீசை குத்தி
மேல் உதடு காயமாச்சி
கிறுக்கு பைய பல்லு பட்டு 
கீழ் உதடு சாயம் போச்சு,
கிச்சு கிச்சு தாம்பூலத்தில் 
உசுர வச்சி விளையாடுறேன் 
நீ தான் வந்து கண்டுபிடிக்கணும் டா."

என்று கிராம காதலின் நேசத்தையும், ஏக்கத்தையும் மிக அழகாய் 
வெளி படுத்தி இருப்பார் கவிஞர். அடுத்து, 

"வீச்சருவா புடிக்கிற
வித்தை தெரிஞ்சவன் 
புத்தகத்தை சுமக்கிற 
பூவை ரசிக்கிறேன் "

என்ற வரிகளை இணைத்து உள்ளதை கட்டிப்போட்டு 
அந்த பாடலோடு நம்மையும் பயணிக்க தூண்டுவார்.

"கட்டபுலி மாடனுக்கு 
பொங்க வச்சி தான்
கட்டபொம்மன் உன்னோட 
கைய புடிக்கிறேன்"

என்ற உயிர்ப்பான வரிகளை கொண்டு உள்ளத்தின் ஆசையை உறதி பட கூறி இருப்பார் கவிஞர் இளைய கம்பன். இந்த பாடல் முழுதும் ஒரு அழகான மண் வாசனை நிறைந்த காதலை அழகுடனும், அழுத்தமாகவும் கொடுத்திருப்பார்.
இந்த பாடல் வெளி வந்த நேரத்தில் எங்க ஊர் பகுதியில் திரும்பிய இடத்தில எல்லாம் ஒலித்துகொண்டிருந்தது. அந்த அளவுக்கு இந்த பாடல் ரொம்ப பிரபலம் ஆன பாடல். கிராமத்து சோடிகள் அதிகம் விரும்பி கேட்ட கேட்கின்ற பாடல்களில் இதுவும் ஒன்றாய் அமைந்து விட்டது என்றே கூறலாம். 

இந்த வரிகளுக்கு தேவையான அற்புதமான ஒரு மெல்லிசை அமைத்து வரிகளை அதன் வடிவம் மாறாமல் நம்மை ரசிக்க தூண்டுவார் இசைஅமைப்பாளர் திரு. பிரவீன் மணி. 

ஆடம்பரமில்லா பசுமையான சூழலை கொண்டு எளிய காட்சி அமைப்புகளை வைத்து இந்த பாடலை ஒளி வடிவம் கொடுத்திருப்பார்கள் இயக்குனர் திரு. சஞ்சய் ராம் மற்றும் ஒளிப்பதிவாளர் திரு. ஜீவன். 

நாயகன் ஹரிக்குமார் மற்றும் நாயகி கார்த்திகா இரண்டு பேருமே அறிமுகமானது இந்த படத்தில் தான் என்று நினைக்கிறேன். 

இறுதியாக இந்த நெகிழ்வான வரிகளுக்கு உயிர் கொடுத்திருப்பார்கள் திருமதி. சித்ரா மற்றும் திரு. திப்பு. குறிப்பாக சின்னக்குயில் அவர்களின் குரலில் வரிகள் அனைத்தும் இனிமை கூட்டும்.. 

விரும்பி ரசிக்கும் பாடல்களில் ஒன்றான இந்த பாடலையும் உங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நட்புகளே. நன்றி 


(சென்ற வாரம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய நண்பர் முனைவர்.இரா.குணசீலன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்)

(நன்றி: கூகுள் இணையம் மற்றும் youtube)

Post Comment

26 கருத்துரைகள்..:

ம.தி.சுதா சொன்னது…

மென்மையான ஒரு தீண்டல்..


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவிட்ட பின் அழித்த பதிவுகளையும் தேடிப் படிக்கலாம்.

மாய உலகம் சொன்னது…

வந்த புதிதில் சக்க போடு பொட்ட பாடல்... அருமை வாழ்த்துக்கள்

சக்தி கல்வி மையம் சொன்னது…

எனக்கும் இந்தப்பாடல் ரொம்ப பிடிக்கும்..

thendralsaravanan சொன்னது…

அழகான பாடல் விமர்ச்சனம்!
எனக்கும் பிடிக்கும்!

சிசு சொன்னது…

//புதுப்பாடல்களில் இதுவும் ஒன்று//

2011-க்கு வாங்க அரசன்... :)

Chitra சொன்னது…

நல்லா இருக்குது.

ஆமினா சொன்னது…

நல்ல பாடல் மற்றும் விளக்கம்

r.v.saravanan சொன்னது…

எனக்கு பிடித்த பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி அரசன் பாடலை பற்றிய உங்கள் விளக்கம் நன்று வாழ்த்துக்கள்

Harini Nathan சொன்னது…

எனக்கும் பிடிக்கும்!
அழகான பாடல் விமர்ச்சனம் :)

பாலா சொன்னது…

மிக எளிமையாக இருப்பதே இந்த பாடல் மிக பிரபலம் ஆனதற்கு முக்கிய காரணம்.

ஹேமா சொன்னது…

எனக்கென்னமோ இந்தப் பாட்டு பிடிக்கிறதில்ல அரசன்.உங்க விமர்சனத்துக்கு அப்புரம்ம் பிடிக்கும்போல இருக்கே !

மாணவன் சொன்னது…

அருமையான பாடலை அழகான ரசனையுடன் விமர்சித்து பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிண்ணே!

ரசித்தப்பாடல்கள் தொடரட்டும்... :)

மாணவன் சொன்னது…

வணக்கம்ணே,

'மூன்று விஷயங்கள்' தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.. நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள் நன்றி!

arasan சொன்னது…

♔ம.தி.சுதா♔ சொன்னது…
மென்மையான ஒரு தீண்டல்..


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவிட்ட பின் அழித்த பதிவுகளையும் தேடிப் படிக்கலாம்.//

அன்புக்கு நன்றிங்க சகோ

arasan சொன்னது…

மாய உலகம் சொன்னது…
வந்த புதிதில் சக்க போடு பொட்ட பாடல்... அருமை வாழ்த்துக்கள்//

உண்மைதாங்க ... நன்றி

arasan சொன்னது…

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…
எனக்கும் இந்தப்பாடல் ரொம்ப பிடிக்கும்..//

நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

thendralsaravanan சொன்னது…
அழகான பாடல் விமர்ச்சனம்!
எனக்கும் பிடிக்கும்!//

நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

சிசு சொன்னது…
//புதுப்பாடல்களில் இதுவும் ஒன்று//

2011-க்கு வாங்க அரசன்... :)//

2011 ல் மெல்லிய பாடல்கள் வந்ததாக நினைவில்லை சிசு ..
கருத்துக்கு நன்றிங்க சிசு

arasan சொன்னது…

Chitra சொன்னது…
நல்லா இருக்குது.//

நன்றிங்க மேடம்

arasan சொன்னது…

ஆமினா சொன்னது…
நல்ல பாடல் மற்றும் விளக்கம்//

மிக்க நன்றிங்க மேடம்

arasan சொன்னது…

r.v.saravanan சொன்னது…
எனக்கு பிடித்த பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி அரசன் பாடலை பற்றிய உங்கள் விளக்கம் நன்று வாழ்த்துக்கள்//

அன்புக்கு நன்றிங்க சார்

arasan சொன்னது…

Harini Nathan சொன்னது…
எனக்கும் பிடிக்கும்!
அழகான பாடல் விமர்ச்சனம் :)//

மிக்க நன்றிங்க மேடம்

arasan சொன்னது…

பாலா சொன்னது…
மிக எளிமையாக இருப்பதே இந்த பாடல் மிக பிரபலம் ஆனதற்கு முக்கிய காரணம்.//

ஆம் நண்பரே ..
மிக்க நன்றிங்க

arasan சொன்னது…

ஹேமா சொன்னது…
எனக்கென்னமோ இந்தப் பாட்டு பிடிக்கிறதில்ல அரசன்.உங்க விமர்சனத்துக்கு அப்புரம்ம் பிடிக்கும்போல இருக்கே !//

அப்படியா அக்கா .. ஒரு முறை கேட்டு பாருங்க பிடிக்கும் ..
நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

மாணவன் சொன்னது…
அருமையான பாடலை அழகான ரசனையுடன் விமர்சித்து பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிண்ணே!

ரசித்தப்பாடல்கள் தொடரட்டும்... :)//

அன்புக்கு நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

மாணவன் சொன்னது…
வணக்கம்ணே,

'மூன்று விஷயங்கள்' தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.. நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள் நன்றி!//

அழைத்தமைக்கு நன்றிங்க அண்ணே .. வருகிறேன் ,,எழுதுகிறேன்