முன்னேரே சொன்னது போல் எனது ஊர் ஒரு சிறிய கிராமம்ங்க. சில வசதிகள் இருக்கும், பல வசதிகள் இன்னும் எட்டா கனி?! தாங்க எங்க ஊர் மக்களுக்கு.. மிகவும் அத்தியாவசிய தேவைகள் நிறையவே மறுக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் வருகிறது. மிக முக்கியம் மின்சாரம். எங்க ஊர்ல மின்சாரம் எப்ப வரும் எப்போ போகும் என்று யாருக்கும் தெரியாது. (எல்லா ஊர்லையும் தான்). அங்குள்ள அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்குக்கு உதாரணம் இந்த படம்.
இந்த மின் கம்பங்களை அகற்றி புதிய மின் கம்பங்கள் அமைத்து தருமாறு கோரிக்கை வைத்து ஆறு , ஏழு ஆண்டுகள் இருக்கும் என்று நினைக்கிறேன்.
இதுவரையிலும் மற்றியபாடு இல்லை. கடந்த வருடங்களில் அடித்த காற்றுக்கும், மழைக்கும் நிலைத்து நின்று விட்டது. இனி வரப்போகும் மழைக்காலங்களில் தாக்கு பிடிப்பது கடினம் என்றே நினைக்கிறேன். புகார் கூறினால் அலட்சிய பதில் மட்டுமே வருகிறது.
ஒருவேளை முறிந்து விழுந்தால் அதன் பாதிப்பு வேறு விதமாகவும் இருக்கும்.
அதன் கீழ் செல்லும் விலங்குகளோ , இல்லை மனிதர்களோ என்ன ஆவார்கள் என்று எண்ணி பார்க்கவே நெஞ்சம் பதைக்கிறது.
இதைவிட கீழ் இருக்கும் படத்தை பாருங்கள் இன்னும் நெஞ்சம் பதறும். மின் மாற்றிகளை சுமக்கும் கம்பங்களின் நிலையை பாருங்கள். இதை கண்டும் காணாமல் செல்லும் அரசு விலங்குகளை என்னவென்று சொல்வது. முறிந்து விழுந்தால் பல நாட்களுக்கு மின்சாரம் தடைபடும். குழந்தைகளை வைத்து கொண்டு படும் அல்லல் சொல்லி மாளாது, பிறகு படிக்கும் குழந்தைகள் நிலை, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மக்களுக்காக உழைக்க வந்த மக்களின் சேவகர்கள் வரப்போகும் விளைவை உணர மறுப்பதுதான் வேடிக்கையாகவும், ஆதங்கமாகவும் இருக்கின்றது.
ஊதிய பற்றாக்குறை, பணி நியமனம் இல்லாமல் வேலை வாங்குவது என்று பல காரணங்களை கூறி சமாளிக்கின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முழு வீச்சில் கவனம் செலுத்தி குறைகளை களைந்தால் பல உயிரிழப்புகளை தடுக்கலாம். இது என்னோட சொந்த ஆதங்கம் மட்டும் இல்லை, தமிழகத்தின் பல கிராமங்களில் நிலை இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
"வருமுன் காப்பதே மேல்"
Tweet |
37 கருத்துரைகள்..:
தம்பி தேவையான ஆதங்கம் தான்... நீங்கள் மின்சார துறைக்கு மறுபடியும் மறுபடியும் எழுதுங்க அல்லது நேரடியாக முதலமைச்சர் பார்வைக்கு அனுப்புங்கள்...
நிச்சயம் விடிவு பிறக்கும்!
உண்மையான ஆதங்கம்..
:(
அனைத்து மக்களும் ஒன்று திரண்டு ஒரு முடிவெடுக்கலாமே....
இன்று பல இடங்களிலும் இதுதான்
நிலமை. பூனைக்கு யாரு மணி கட்டு
வது.?
தொடர்ந்து முயற்சியுங்கள் ஒரு நாள் விடியும்....
பெயருக்குத்தான் அந்தபதவி,இந்தப்பதவி, தமக்கான கடமைகளை கவனிக்கத்தான் தவறுகிறார்கள்.என்ன செய்ய..விடாது முயற்சியுங்கள்...
பதிவுக்கு அன்புடன் பாராட்டுக்கள் உறவே..
முயற்சி திருவினை ஆக்கும் .பயனுள்ள பகிர்வு
நன்றி பகிர்வுக்கு ......
தங்களின் ஆதங்கம் நியாயமானது தான். ஏதேனும் விபத்து நடந்து விட்ட பின் , போர் கால அவசரத்தில் சரி செய்கிறோம் என்று சொல்லி என்ன பயன் இருக்கப்போகிறது..
தங்களின் ஆதங்கம் சரியே என் செய்வது தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்
உங்கள் நாட்டு பற்று மெய்சிலிர்க்க வைக்கிறது
உங்கள் ஆதங்கம் முறையானதே நண்பா...
மக்களுக்காக உழைக்க வந்த மக்களின் சேவகர்கள் வரப்போகும் விளைவை உணர மறுப்பதுதான் வேடிக்கையாகவும், ஆதங்கமாகவும் இருக்கின்றது.
உண்மைதான் நண்பா.
பல ஊர்களிலும் இதுதான் நிலைமை.
உண்மை தான் நண்பா கிராமத்தில் பிறந்தால் இது தான் கவலை
இது போன்ற சிக்கல் களுக்கு உண்மையில் பல காரணங்கள் இருக்கிறது உண்மையில் அரசு அலுவங்களில் ஆட்கள் பற்றாக்குறை தான் அதுமட்டும் இல்லாமல் அரசு அலுவர்களின் அலட்சிய போக்கும் நீவிர் குறிப்பிட்டதை போல ஒரு காரணம் நீங்கள் அருகில் உள்ள இளநிலை மின் பொறியாளர் அலுவலகத்தை இந்த படத்துடன் அணுகி சில நாளிதழ களுக்கு கொடுத்து வெளியிட சொல்லுங்கள் உடனே தீர்வு கிடைக்கும் பாருங்கள்
உரிய அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் இது.
உங்கள் பகுதியில் இருக்கும் தின பத்திரிக்கை நிருபர்களின் கவனத்திற்குக் கொண்டுச் சென்று செய்தி வெளியிட முயற்சிக்கலாமே அரசன்.
தொட்டால் அல்ல பார்த்தாலே “அதிர்வு” ஏற்படும் படங்கள். மிக உயர்வான பகிர்வு யாராவது துறைசார்ந்தவர்கள் பார்வைக்கு போகிறதா என பார்ப்போம்.
விழிப்புணர்வுள்ள பகிர்வு. முடிந்தால் உங்கள் பஞ்சாயத்து தலைவர், மற்றும் கவுன்சிலரிடம் முறையிடுங்கள். அவர்கள் நடவடிக்கை எடுக்கிறார்களா பார்க்கலாம்.
உண்மை தான் நண்பரே .பாதிப்பு ஏற்பட்ட பின் யோசிப்பதை விட முன்கூட்டியே ஆலோசிப்பது நல்லது தான் நண்பரே.சம்பந்த பட்டவர்கள் யோசிப்பார்களா!
thendralsaravanan கூறியது...
தம்பி தேவையான ஆதங்கம் தான்... நீங்கள் மின்சார துறைக்கு மறுபடியும் மறுபடியும் எழுதுங்க அல்லது நேரடியாக முதலமைச்சர் பார்வைக்கு அனுப்புங்கள்...
நிச்சயம் விடிவு பிறக்கும்!//
முயற்சி பண்ணுகிறேன் அக்கா ..
நன்றிங்க அக்கா
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
உண்மையான ஆதங்கம்..//
நன்றிங்க நண்பரே
ஆமினா கூறியது...
அனைத்து மக்களும் ஒன்று திரண்டு ஒரு முடிவெடுக்கலாமே....//
சரியான நபர் இல்லைங்க ..
எல்லாரும் என்னை போன்று வெளியில் இருக்கிறார்கள் ..
அதான் தீர்வு இல்லாமல் உள்ளது .. நன்றிங்க
Lakshmi கூறியது...
இன்று பல இடங்களிலும் இதுதான்
நிலமை. பூனைக்கு யாரு மணி கட்டு
வது.?//
கட்ட முயற்சிக்கிறோம் அம்மா .. நன்றிங்க அம்மா
# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
தொடர்ந்து முயற்சியுங்கள் ஒரு நாள் விடியும்....//
நன்றிங்க நண்பரே ...
vidivelli கூறியது...
பெயருக்குத்தான் அந்தபதவி,இந்தப்பதவி, தமக்கான கடமைகளை கவனிக்கத்தான் தவறுகிறார்கள்.என்ன செய்ய..விடாது முயற்சியுங்கள்...
பதிவுக்கு அன்புடன் பாராட்டுக்கள் உறவே..//
மிக்க நன்றிங்க
அம்பாளடியாள் கூறியது...
முயற்சி திருவினை ஆக்கும் .பயனுள்ள பகிர்வு
நன்றி பகிர்வுக்கு ......//
மிக்க நன்றிங்க சகோ
பாரத்... பாரதி... கூறியது...
தங்களின் ஆதங்கம் நியாயமானது தான். ஏதேனும் விபத்து நடந்து விட்ட பின் , போர் கால அவசரத்தில் சரி செய்கிறோம் என்று சொல்லி என்ன பயன் இருக்கப்போகிறது..//
விபத்துக்கு முன் சீர் செய்தால் நல்லா இருக்கும்.. பெரிய இழப்புகள் தவிர்க்க முடியும் ..
நன்றிங்க
r.v.saravanan கூறியது...
தங்களின் ஆதங்கம் சரியே என் செய்வது தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்//
முயல்கிறேன் சார் ,.. நன்றிங்க சார்
"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
உங்கள் நாட்டு பற்று மெய்சிலிர்க்க வைக்கிறது
//
நன்றிங்க நண்பா
மாய உலகம் கூறியது...
உங்கள் ஆதங்கம் முறையானதே நண்பா...//
இயலாமையின் ஆதங்கம் நண்பரே
முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
மக்களுக்காக உழைக்க வந்த மக்களின் சேவகர்கள் வரப்போகும் விளைவை உணர மறுப்பதுதான் வேடிக்கையாகவும், ஆதங்கமாகவும் இருக்கின்றது.
உண்மைதான் நண்பா.
பல ஊர்களிலும் இதுதான் நிலைமை.
//
அரசு எந்திரங்கள் ஒழுங்கா பனி புரிந்தால் இந்த நிலை வராது ...
நன்றிங்க நண்பரே
கவி அழகன் கூறியது...
உண்மை தான் நண்பா கிராமத்தில் பிறந்தால் இது தான் கவலை//
மலைப்பகுதி கிராமங்கள் என்றால் சொல்லவே வேணாம் ..
என்ன பண்ணுவது நம் விதி அது ..
நன்றிங்க நண்பா
போளூர் தயாநிதி கூறியது...
இது போன்ற சிக்கல் களுக்கு உண்மையில் பல காரணங்கள் இருக்கிறது உண்மையில் அரசு அலுவங்களில் ஆட்கள் பற்றாக்குறை தான் அதுமட்டும் இல்லாமல் அரசு அலுவர்களின் அலட்சிய போக்கும் நீவிர் குறிப்பிட்டதை போல ஒரு காரணம் நீங்கள் அருகில் உள்ள இளநிலை மின் பொறியாளர் அலுவலகத்தை இந்த படத்துடன் அணுகி சில நாளிதழ களுக்கு கொடுத்து வெளியிட சொல்லுங்கள் உடனே தீர்வு கிடைக்கும் பாருங்கள்//
அவர்களின் அலட்சியத்தால் பாதிப்பு ஒன்றும் அறியா மக்களுக்கு தான் நண்பரே ..
முயன்று பார்ப்போம்.. நன்றிங்க நண்பரே
சத்ரியன் கூறியது...
உரிய அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் இது.
உங்கள் பகுதியில் இருக்கும் தின பத்திரிக்கை நிருபர்களின் கவனத்திற்குக் கொண்டுச் சென்று செய்தி வெளியிட முயற்சிக்கலாமே அரசன்.//
படத்துடன் ஒரு இறுதி மனு கொடுக்கலாம் என்று ஒரு சின்ன சிந்தனை ...
அதுவும் இல்லை என்றால் பிறகு பத்திரிக்கை களில் கொடுக்க வேண்டியது தான் ..
நன்றிங்க அண்ணே
சி.கருணாகரசு கூறியது...
தொட்டால் அல்ல பார்த்தாலே “அதிர்வு” ஏற்படும் படங்கள். மிக உயர்வான பகிர்வு யாராவது துறைசார்ந்தவர்கள் பார்வைக்கு போகிறதா என பார்ப்போம்.//
அதற்காக தான் இந்த பகிர்வு ..
பார்ப்போம் மாமா ..
நன்றிங்க மாமா
காந்தி பனங்கூர் கூறியது...
விழிப்புணர்வுள்ள பகிர்வு. முடிந்தால் உங்கள் பஞ்சாயத்து தலைவர், மற்றும் கவுன்சிலரிடம் முறையிடுங்கள். அவர்கள் நடவடிக்கை எடுக்கிறார்களா பார்க்கலாம்.//
சொல்லி பார்த்தாச்சு ,, அண்ணே ,,
இதெல்லாம் மின்சார அதிகாரிகள் தலையீட்டில் தான் சீர் செய்ய முடியுமாம் ..
அவர்கள் காதில் போட்டுகொள்வதாய் இல்லை .. பார்ப்போம் அண்ணே ..
நன்றிங்க அண்ணே
M.R கூறியது...
உண்மை தான் நண்பரே .பாதிப்பு ஏற்பட்ட பின் யோசிப்பதை விட முன்கூட்டியே ஆலோசிப்பது நல்லது தான் நண்பரே.சம்பந்த பட்டவர்கள் யோசிப்பார்களா!//
இதன் மூலமாவது ஒரு நல்லது நடக்காதா என்ற சின்ன எதிர்பார்ப்பு தான் சார் ..
நன்றிங்க சார்
கருத்துரையிடுக