புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

அக்டோபர் 14, 2011

நுட்ப வளர்ச்சி...


எந்தவொரு புதிய தொழில்நுட்பத்தையும் கண்டுபிடித்த நாட்டில் அதை பயன் படுத்துவதை விட இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தான் அறிமுக படுத்தி காசாக்க எண்ணுகிறார்கள்! அதை செய்தும் காட்டிவிட்டனர்.

"கவர்ச்சிகளை கண்டு மயங்குவதில் நமக்கு நிகர் நாமே தான் "

பெரும்பான்மையான பொருட்களை நாம் உதாரணமாக காணலாம் . 

அதில் ஒன்று தான் இந்த டிஜிட்டல் விளம்பர பதாகைகள்! எங்கு திரும்பினாலும் ஏதோ ஒரு வடிவில் இதை காணாத இடமே இல்லை. கிராமத்திலும் சரி , நகரத்திலும் சரி எங்கும் ஒரே நிலை தான். அதுவும் குறிப்பாக மூன்று நான்கு வருடங்களில் இதன் வளர்ச்சி அசூரத்தனமான வளர்ச்சி.நல்ல மாற்றம் தான் , தொழில்நுட்ப வளர்ச்சிதான். கண்டு பிடித்த ஒரு பொருளை அதன் பயன்பாட்டை விட மற்ற வழிகளில் பயன்படுத்துவதில் நம்மாட்கள் வல்லவர்கள்! 

முதலில் இந்த டிஜிட்டல் விளம்பரங்கள் சினிமா துறையில் பெருமளவில் பயன்படுத்தினர், பிறகு அரசியல் கட்சிகள் மற்றும் புதியதாய் தொழில் தொடங்கும் முதலாளிகள் தங்களின் கடைகளுக்கு மின்னொளியில் சிரிக்கும் விளம்பர பலகைகளை பயன்படுத்த ஆரம்பித்தனர். பளிச்சென்று கண்ணை கவரும் நடிகைகளையும், தலைவர்களையும் கண்டு ஒரு ஈர்ப்பு வந்து அதன் தாக்கமாய் நமது உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ திருமண வாழ்த்து பதாகைகளை வைத்து அழகு பார்த்தோம். பிறகு கொஞ்சம் நகர்ந்து ஊரின் திருவிழாக்களுக்கு வரவேற்பு பலகைகள் அமைத்து பெருமையாய் கொண்டாடினோம். பின்னர் கொஞ்சம் வளர்ந்து பிறந்த நாள் விழாக்களுக்கு (?!) வைத்து பெருமையை பறை சாற்றினோம். 

ஒரு பொருளை எந்த நோக்கத்திற்கு கண்டு பிடித்தானோ அதையும் மீறி நாம் அளவுக்கு அதிகமாய் பயன்படுத்தி கண்டுபிடித்தவனுக்கு எண்ணியதை விட வருமானத்தை பெருக்கி கொடுக்கும் வல்லமை நம் மக்களுக்கு தான் உண்டு. திருமண வாழ்த்துக்களை உறவினர்களோ , நண்பர்களோ தெரிவிப்பார்கள் அவர்களுக்கு முடிந்த வடிவில். முன்னரெல்லாம் ஒரு சின்ன வாழ்த்து மடல் அச்சடித்து அதன் ஓரத்தில் இனிப்பாய் ஒரு மிட்டாயை இணைத்து வந்து வாழ்த்திய அனைவருக்கும் வழங்குவார்கள். சமீப காலமாக எல்லோர் திருமண வீட்டிலும் இந்த டிஜிட்டல் பதாகைகள் கட்டாயம் இடம் பிடித்து விடுகிறது. இன்றைய நிலை வேறுமாதிரி உள்ளது , தன் வீட்டு நிகழ்வுக்கு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிரித்த வண்ணம் ஒரு பதாகைகளை தாங்களே வைத்து தமது குடும்பங்களின் பெருமையையும்? , பொருளாதரத்தையும் வெளிக்கொணரும் விதமாக காட்டிகொள்கிறார்கள்.

இப்படி அங்கும் இங்கும் சிரிக்கும் பலகைகள் பெரும்பாலும் பெருமைக்கு வைக்கப் பட்டவைகளாகவே இருக்கின்றது. விவசாய விழிப்புணர்வோ, கல்வி விழிப்புணர்வோ, நமது பண்பாடு, பாரம்பரியம் பற்றிய விழிப்புணர்வாகவோ இருப்பதில்லை என்பது கசப்பான உண்மை ...இதில் கொடுமை என்னவெனில் எதற்குதான் இந்த பதாகைகள் வைக்க வேண்டும் என்ற ஒரு வரைமுறை இல்லாமல் மஞ்சள் நீராட்டு விழா, குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா இப்படி ஒவ்வொரு நிகழ்வுக்கும் வந்துவிட்டது, இன்னும் சில காலம் கழித்து பார்த்தால் நிமிர்ந்தாலும், குனிந்தாலும், நடந்தாலும், ஓடினாலும் பதாகைகள் அமைத்து அழகு பார்க்கும் நிலை வந்தாலும் வரலாம் என்று அஞ்சதோன்றுகிறது. 

இந்த டிஜிட்டல் வருகையால் இங்கு பல குடும்பங்கள் சோறின்றி போய்விட்டது, பல நல்ல கலைநயமிக்க ஓவியர்களை இழந்தோம். சுற்று சூழலையும் மாசுபடுத்துகிறோம். பல ஆண்டுகள் நம்மை அடிமை படுத்தி வைத்து இருந்த அந்நியர்கள் இன்று அவர்களின் பொருட்களால் நம்மை அடிமை படுத்தி வைத்திருக்கிறார்கள். என்று தணியும் இந்த அந்நிய மோகம். நான் இதை கூறுவதால் இந்த தொழில்நுட்பத்துக்கு எதிரி இல்லை.. இதை பயன் படுத்த வேண்டிய இடத்தில் பயன் படுத்தினால் நன்றாக இருக்கும் என்று தான் கூறுகிறேன். இந்த தொழில் நுட்பத்தை கண்டுபிடித்தவன் நாம் பயன்படுத்துவது போல் அவன் வீதிகளிலோ, வீடுகளிலோ பயன்படுத்துவதில்லை என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும் நட்புகளே!!!

இந்த பலகைகளை எங்கு எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்ற ஒரு நெறிமுறை இல்லாமல் ஊருக்கு மத்தியிலோ, மக்கள் அதிகம் கூடும் இடங்களிலோ, சாலைகளை இணைக்கும் முக்கிய வளைவுகளிலோ வைத்து அழகு பார்க்கின்றனர். விழா முடிந்து பல நாட்கள் ஆகியும் அப்புறபடுத்தாமல் விட்டு விடுகிறோம். அது முறிந்து விழுந்து,  பல விபத்துகளுக்கும், உயிர் சேதங்களுக்கும், வாகன ஓட்டிகளின் சிரமத்திற்கு நாமே காரணமாகின்றோம் என்பதை உணர மறுக்கின்றோம். 

பெயரளவில் நெறிமுறை படுத்தும் அரசு இதை கடுமையான சட்டம் இயற்றி நெறிபடுத்தினால் மதிப்புமிக்க பல உயிர் இழப்புகளையும், இன்னும்பிற  சேதங்களையும்  முன்கூட்டியே தடுக்கலாம். மக்களை காக்கவேண்டிய அரசு சரியான விழிப்புணர்வு கொடுத்து , தன் கடமையை முறையாக ஆற்றினால் நன்றாக இருக்கும்...

Post Comment

37 கருத்துரைகள்..:

பெயரில்லா சொன்னது…

நன்றி ஸார்,
உங்கள் விளிப்புணர்வு பகிர்வுக்கு ,,,, கண்டிப்பாக இந்த காலத்துல அனைவரும் உணர வேண்டிய உண்மை...

குறையொன்றுமில்லை. சொன்னது…

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது. நல்ல பதிவுக்கு நன்றி

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அரசாங்கத்தின் மேன்மையான கவனத்திற்கு....!!!

r.v.saravanan சொன்னது…

சமுதாய விழிப்புணர்வை வெளிபடுத்தும் அருமையான பதிவு அரசன் வாழ்த்துக்கள்

r.v.saravanan சொன்னது…

எதற்குதான் இந்த பதாகைகள் வைக்க வேண்டும் என்ற ஒரு வரைமுறை இல்லாமல் மஞ்சள் நீராட்டு விழா, குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா இப்படி ஒவ்வொரு நிகழ்வுக்கும் வந்துவிட்டது

சரியாக சொன்னீர்கள் அரசன் விளம்பர போர்டு கலாச்சாரத்தில் தான் இப்போது இருக்கிறோம்

rajamelaiyur சொன்னது…

நல்ல விழிப்புணர்வு பதிவு

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மக்களை காக்கவேண்டிய அரசு சரியான விழிப்புணர்வு கொடுத்து , தன் கடமையை முறையாக ஆற்றினால் நன்றாக இருக்கும்...//

விழிப்புணர்வு பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

M.R சொன்னது…

உண்மையான கருத்து நண்பரே

பகிர்வுக்கு நன்றி

tamil manam 3 rd vote

Prem S சொன்னது…

//இந்த டிஜிட்டல் வருகையால் இங்கு பல குடும்பங்கள் சோறின்றி போய்விட்டது, பல நல்ல கலைநயமிக்க ஓவியர்களை இழந்தோம். சுற்று சூழலையும் மாசுபடுத்துகிறோம்//

உங்கள் ஆதங்கம் புரிகிறது அன்பரே .அருமையான கட்டுரை

*anishj* சொன்னது…

நல்ல பதிவு தல !

மகேந்திரன் சொன்னது…

டிஜிட்டல் போர்ட் இல்லாத சடங்குகளே இல்லை எனலாம்
அந்த அளவுக்கு இப்போது பெருகிவிட்டது.
விஷேசங்களை இவர்களே உருவாக்கி கொண்டு போர்ட் அடிக்கிறார்கள்.

அருமையான சமுதாய விழிப்புணர்வை முன் வைத்திருக்கிறீர்கள் நண்பரே.
அருமை.

மாய உலகம் சொன்னது…

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம்... நன்றி நண்பா

மாய உலகம் சொன்னது…

தமிழ்மணம் 6

காந்தி பனங்கூர் சொன்னது…

எல்லா மக்களுக்குமே புகழ்ச்சியை ரொம்பவே விரும்புறாங்க சகோ, அத்னால குட்டி குழந்தகளிலிருந்து வயதான பெரியவர்கள் வரை அனைவருக்கும் பேனரில் தங்கள் முகமும் இடம் பெற வேண்டும் என எண்ணுகிறார்கள். அதன் விளைவு தான் இது.

எங்கள் பக்கத்து ஊரில் கோவில் கும்பாபிஷேகத்துக்கு மக்கள் பேனர் வைத்திருந்தார்கள். இதில் சிரிப்பு என்னவென்றால் நடிகை த்ரிஷா ரசிகர் மன்றம் சார்பாக, விஜயகாந்த் ரசிகர் மன்றம் சார்பாக என வகை வகையாக பேனர்கள் வைத்திருக்கிறார்கள்.

அரசாங்கத்தை சொல்லி குறையில்லை. மக்கள் மாறனும் சகோ.

சத்ரியன் சொன்னது…

//இந்த டிஜிட்டல் வருகையால் இங்கு பல குடும்பங்கள் சோறின்றி போய்விட்டது, பல நல்ல கலைநயமிக்க ஓவியர்களை இழந்தோம். சுற்று சூழலையும் மாசுபடுத்துகிறோம்.//

சரியான கண்ணோட்டம்.

சாவுக்கும் பேனர் அடிக்கிறாங்க, சனியன் பிடிச்சவங்க.

சிந்தனைக்கு உரிய பதிவுங்க அரசன்.

செய்தாலி சொன்னது…

நல்ல சமூக உள்நோக்குப் பதிவு தோழரே

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

இந்த டிஜிட்டல் வருகையால் இங்கு பல குடும்பங்கள் சோறின்றி போய்விட்டது, பல நல்ல கலைநயமிக்க ஓவியர்களை இழந்தோம். சுற்று சூழலையும் மாசுபடுத்துகிறோம். பல ஆண்டுகள் நம்மை அடிமை படுத்தி வைத்து இருந்த அந்நியர்கள் இன்று அவர்களின் பொருட்களால் நம்மை அடிமை படுத்தி வைத்திருக்கிறார்கள். என்று தணியும் இந்த அந்நிய மோகம்

ஆழமான பார்வை..
தேவையான தேடல்..

சிந்திப்போம் நண்பா..

thendralsaravanan சொன்னது…

நன்றாக சொன்னீங்க தம்பி!
சத்ரியன் அவர்கள் கூறிய மாதிரி சாவுக்கெல்லாம் கட் அவுட் வைக்கிறான்களே என்ன செய்றது இவன்களை!!!!!!

போளூர் தயாநிதி சொன்னது…

சிறந்த பதிவு உண்மையில் இந்த பண்பாடு தமிழனுக்கு ஈராயிரம் ஆண்டுகளாக இருக்கிறது அதாவது சங்க காலத்தில் கிரேக்கத்தில் இருந்து குதிரைகள் முதலில் வந்திறங்கிய போது அதன் கவர்சியால் மயங்கிய தமிழ் மன்னர்கள் கண்மூட்டித்தனமாக குதிரைகளை வாங்கினார்கள் என்ன தீனி போடுவது எப்படி பராமரிப்பது யாருக்கும் புரியாது ஆனாலும் வாங்கி குவித்தார்கள் என சீன பயணி யுவான் சுவான் பதிவு செய்கிறான் இந்த டிஜிடல் பதாகை களினால் ... அதிலிருந்து உமிழப்படும் பெருந்தீங்கை எவரும் அறிந்து இருக்கவில்லை வெய்யலில் அதுகாய்ந்து பல்வேறு சுற்று சூழல் கேட்டை உண்டாக்குகிறது ....பகிர்வுக்கு பாரட்டுகள்...

arasan சொன்னது…

பெயரில்லா கூறியது...
நன்றி ஸார்,
உங்கள் விளிப்புணர்வு பகிர்வுக்கு ,,,, கண்டிப்பாக இந்த காலத்துல அனைவரும் உணர வேண்டிய உண்மை...//

நிறைவான தோழமைக்கு நன்றிங்க

arasan சொன்னது…

Lakshmi கூறியது...
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது. நல்ல பதிவுக்கு நன்றி//

அன்புக்கு நன்றிங்க அம்மா

arasan சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
அரசாங்கத்தின் மேன்மையான கவனத்திற்கு....!!!//

நெஞ்சார்ந்த நன்றிகள் சார்

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
சமுதாய விழிப்புணர்வை வெளிபடுத்தும் அருமையான பதிவு அரசன் வாழ்த்துக்கள்//

மிக்க நன்றிங்க சார்

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
எதற்குதான் இந்த பதாகைகள் வைக்க வேண்டும் என்ற ஒரு வரைமுறை இல்லாமல் மஞ்சள் நீராட்டு விழா, குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா இப்படி ஒவ்வொரு நிகழ்வுக்கும் வந்துவிட்டது

சரியாக சொன்னீர்கள் அரசன் விளம்பர போர்டு கலாச்சாரத்தில் தான் இப்போது இருக்கிறோம்//


பல நாட்களின் ஆதங்கம் சார்

arasan சொன்னது…

"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
நல்ல விழிப்புணர்வு பதிவு//

நன்றிங்க நண்பா

arasan சொன்னது…

இராஜராஜேஸ்வரி கூறியது...
மக்களை காக்கவேண்டிய அரசு சரியான விழிப்புணர்வு கொடுத்து , தன் கடமையை முறையாக ஆற்றினால் நன்றாக இருக்கும்...//

விழிப்புணர்வு பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.//

நெஞ்சார்ந்த நன்றிகள் மேடம்

arasan சொன்னது…

M.R கூறியது...
உண்மையான கருத்து நண்பரே

பகிர்வுக்கு நன்றி

tamil manam 3 rd vote
//

வாழ்த்துக்கும் வாக்குக்கும் நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

சி.பிரேம் குமார் கூறியது...
//இந்த டிஜிட்டல் வருகையால் இங்கு பல குடும்பங்கள் சோறின்றி போய்விட்டது, பல நல்ல கலைநயமிக்க ஓவியர்களை இழந்தோம். சுற்று சூழலையும் மாசுபடுத்துகிறோம்//

உங்கள் ஆதங்கம் புரிகிறது அன்பரே .அருமையான கட்டுரை//

அன்புக்கு நன்றிங்க அன்பரே

arasan சொன்னது…

*anishj* கூறியது...
நல்ல பதிவு தல !//


நன்றிங்க தல

arasan சொன்னது…

மகேந்திரன் கூறியது...
டிஜிட்டல் போர்ட் இல்லாத சடங்குகளே இல்லை எனலாம்
அந்த அளவுக்கு இப்போது பெருகிவிட்டது.
விஷேசங்களை இவர்களே உருவாக்கி கொண்டு போர்ட் அடிக்கிறார்கள்.

அருமையான சமுதாய விழிப்புணர்வை முன் வைத்திருக்கிறீர்கள் நண்பரே.
அருமை.//

எல்லாம் கையை மீறி சென்று கொண்டுள்ளது ..
தானே திருந்த வேண்டும் மக்கள் ..
அன்புக்கு நன்றிங்க

arasan சொன்னது…

மாய உலகம் கூறியது...
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம்... நன்றி நண்பா//

வாழ்த்துக்கும் வாக்குக்கும் நன்றிங்க நண்பா

arasan சொன்னது…

காந்தி பனங்கூர் கூறியது...
எல்லா மக்களுக்குமே புகழ்ச்சியை ரொம்பவே விரும்புறாங்க சகோ, அத்னால குட்டி குழந்தகளிலிருந்து வயதான பெரியவர்கள் வரை அனைவருக்கும் பேனரில் தங்கள் முகமும் இடம் பெற வேண்டும் என எண்ணுகிறார்கள். அதன் விளைவு தான் இது.

எங்கள் பக்கத்து ஊரில் கோவில் கும்பாபிஷேகத்துக்கு மக்கள் பேனர் வைத்திருந்தார்கள். இதில் சிரிப்பு என்னவென்றால் நடிகை த்ரிஷா ரசிகர் மன்றம் சார்பாக, விஜயகாந்த் ரசிகர் மன்றம் சார்பாக என வகை வகையாக பேனர்கள் வைத்திருக்கிறார்கள்.

அரசாங்கத்தை சொல்லி குறையில்லை. மக்கள் மாறனும் சகோ.//

மக்கள் உணரனும் ... அரசாங்கம் விழிப்புணர்வு கொடுக்கணும் அண்ணே ..
மிக்க நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

சத்ரியன் கூறியது...
//இந்த டிஜிட்டல் வருகையால் இங்கு பல குடும்பங்கள் சோறின்றி போய்விட்டது, பல நல்ல கலைநயமிக்க ஓவியர்களை இழந்தோம். சுற்று சூழலையும் மாசுபடுத்துகிறோம்.//

சரியான கண்ணோட்டம்.

சாவுக்கும் பேனர் அடிக்கிறாங்க, சனியன் பிடிச்சவங்க.

சிந்தனைக்கு உரிய பதிவுங்க அரசன்.//


பெருமை தேடும் உலகம் தான் அண்ணே ..
கருத்துக்கும் வருகைக்கும் நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

செய்தாலி கூறியது...
நல்ல சமூக உள்நோக்குப் பதிவு தோழரே//

அன்புக்கு நன்றிங்க நண்பா

arasan சொன்னது…

முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
இந்த டிஜிட்டல் வருகையால் இங்கு பல குடும்பங்கள் சோறின்றி போய்விட்டது, பல நல்ல கலைநயமிக்க ஓவியர்களை இழந்தோம். சுற்று சூழலையும் மாசுபடுத்துகிறோம். பல ஆண்டுகள் நம்மை அடிமை படுத்தி வைத்து இருந்த அந்நியர்கள் இன்று அவர்களின் பொருட்களால் நம்மை அடிமை படுத்தி வைத்திருக்கிறார்கள். என்று தணியும் இந்த அந்நிய மோகம்

ஆழமான பார்வை..
தேவையான தேடல்..

சிந்திப்போம் நண்பா..//

மிகுந்த நன்றிங்க முனைவரே

arasan சொன்னது…

thendralsaravanan கூறியது...
நன்றாக சொன்னீங்க தம்பி!
சத்ரியன் அவர்கள் கூறிய மாதிரி சாவுக்கெல்லாம் கட் அவுட் வைக்கிறான்களே என்ன செய்றது இவன்களை!!!!!!//

மிகுந்த நன்றிங்க அக்கா ..
இவங்க திருந்தனும் ..
திருத்த முடியாது ,.,.

arasan சொன்னது…

போளூர் தயாநிதி கூறியது...
சிறந்த பதிவு உண்மையில் இந்த பண்பாடு தமிழனுக்கு ஈராயிரம் ஆண்டுகளாக இருக்கிறது அதாவது சங்க காலத்தில் கிரேக்கத்தில் இருந்து குதிரைகள் முதலில் வந்திறங்கிய போது அதன் கவர்சியால் மயங்கிய தமிழ் மன்னர்கள் கண்மூட்டித்தனமாக குதிரைகளை வாங்கினார்கள் என்ன தீனி போடுவது எப்படி பராமரிப்பது யாருக்கும் புரியாது ஆனாலும் வாங்கி குவித்தார்கள் என சீன பயணி யுவான் சுவான் பதிவு செய்கிறான் இந்த டிஜிடல் பதாகை களினால் ... அதிலிருந்து உமிழப்படும் பெருந்தீங்கை எவரும் அறிந்து இருக்கவில்லை வெய்யலில் அதுகாய்ந்து பல்வேறு சுற்று சூழல் கேட்டை உண்டாக்குகிறது ....பகிர்வுக்கு பாரட்டுகள்...//

மனம் திறந்து பாராட்டிய உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் அன்பரே