உன் கட்டெறும்பு கண்ணால,
எட்டி நின்று பார்த்தாலும்,
வெட்டிரும்பா தேய்கிறேன்!
வேகாம சாகிறேன்!
கடையும் கடைக்கண் பார்வையால,
கனவுல மிதக்கிறேன்!
கற்பூரமா கரைகிறேன்!
அந்த சிக்கனச் சிரிப்புல,
சிற்பமா சிரிக்கிறேன்!
சிதைந்து தான் போகிறேன்!
உன் கரவளவி ஓசையில,
உறைந்து உருகுகிறேன்!
உடைந்தும் போகின்றேன்!
உன் மரிக்கொழுந்து கிறக்கத்துல,
மலைத்து நிற்கிறேன்!
மயக்குத்துல நடக்கிறேன்!
உன்னை பிரியும் வேளைகளில்,
பிணி வந்து சேருதடி,
பஞ்சா பறக்குதடி,
பாவிப்பய என்னுசுரு!
Tweet |
61 கருத்துரைகள்..:
super super....
nalla irukku arasan
கடைக்கண் கவிதை அருமை..
அன்போடு அழைக்கிறேன்..
உயிரைத் தின்று பசியாறு(அத்தியாயம்-1)
அட அட அட அருமை ,இப்பிடித்தான் ரசிக்கனும் ,அப்பத்தான் வாழ்வு இனிக்கும் அருமை நண்பா
//அந்த சிக்கனச் சிரிப்புல,
சிற்பமா சிரிக்கிறேன்!
சிதைந்து தான் போகிறேன்!//
பாவிமொவ...படுத்தியிருப்பா போல...:))
இரசனை அழகு நண்பரே...
என்னய்யா இப்பிடி உருகி எழுதி இருக்கீங்க ம்ம்ம்ம் சூப்பர்...!!!
//உன் கரவளவி //
என்பது வளையலை குறிக்கும் சொல்லா ??
அருமையான கவிதை .
வர வர அரசன் ரொம்ப ரசிச்சு ரசிச்சு கவிதை எழுதறீங்க .ஓகே ஓகே ஓகே
கவிதைகேற்ற புகைப்படம்
என்னங்க தம்பி என்னை மறந்திட்டேங்களே...மன்னாதி மன்னனெல்லாம் நம்மை நம்பி தூது விடுறாங்க....சொல்லுங்க பொண்ணு யாருன்னு...ஹ ஹ ஹ...
அரசன்...கருப்பி நல்ல வடிவு.அரைச் சிரிப்போ அதைவிட...!
Azgagu Kavithai Sago.
கலக்கல் தல...!
கவிதை முழுக்க காதல் வழியுது...! :)
-இப்படிக்கு அனீஷ் ஜெ...
பிரிவென வந்தாலும்
பாவையுன் பேரெழிலும்
உனைக்காணும் என்னுனர்வும்
பட்டாம்பூச்சியாய் பறக்கிறது..
அருமை அருமை சகோதரரே.
கட்டெறும்பு கண், கடையும் கடைக்கண் பார்வை, சிக்கனச் சிரிப்பு - அனைத்தும் அசத்தலான வர்ணனைகள். கிராமிய மணம் கமழும் கவியழகுக்கு அழகு சேர்க்கும் படம். பிரமாதம். பாராட்டுகள்.
கவிதை நல்லாருக்குண்ணே!
புத்தாண்டு நல்வாழ்த்துகள்! :-)
//உன்னை பிரியும் வேளைகளில்,
பிணி வந்து சேருதடி,
பஞ்சா பறக்குதடி,
பாவிப்பய என்னுசுரு!//பிரிவை இதை விட எப்படி சொல்ல ? அருமை
சிறப்பாக இருக்கிறது அரசன் பாராட்டுகள்
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
எளிய வரிகளில் காதலின் வலிமையை சொல்லும் கவிதை நன்று அரசன் வாழ்த்துக்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்
//உன்னை பிரியும் வேளைகளில்,
பிணி வந்து சேருதடி//
நன்றாக உள்ளது.
காதல் வட்ந்துவிட்டாலே உண்மையில் உள்ளம் போல உருக செய்துவிடும் இதைத்தான் வள்ளுவம் பசலைநோய் என கூறுகிறது . இந்த பசலை நோய் வந்து விட்டால் ஒரு மனிதனை கரைத்துவிடும் .கன்னியரின் கடைக்கண் பார்வை பசலை நோயை உண்டாக்க கூடும் .. அரசன் சற்று எச்சரிக்கையாக இருப்பீராக .....
உன் கட்டெறும்பு கண்ணால,
எட்டி நின்று பார்த்தாலும்,
அருமை & அழகு
அருமையான காதல் கவிதை
தங்கள் கவிதையினைத் தொடர்ந்து படித்தால்
நிச்சயம் நானும் நல்ல காதல் கவிதை
எழுதிவிடுவேன் என்கிறநம்பிக்கை
லேசாகத் துளிர்க்கிறது
மனம் கவர்ந்த கவிதை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
பாத்து தலைவா!பத்திரம்!!
அழகான கிராமிய பாடல் கேட்ட மாதிரி இருக்கு. அருமை
அருமை தோழா
அருமை தோழா
அரசன்,
கடைக்கண் கடையுதோ....?
கவிஞர் மனசை ரொம்ப குடைஞ்சிருக்கும் உண்மை வெளிப்பட்டிருச்சி.
2012-ல் தை பிறக்கும் நாளில், வழியும் பிறந்துவிட வாழ்த்துக்கள்.
கட்டெறும்பு கண்... உவமையே நல்லாயிருக்கு. காதல் ததும்பி வழியும் மொத்தக் கவிதையையும் ரசித்துப் படித்தேன். நன்று. வாழ்த்துக்கள்.
கவிதை கலக்கல் தோழரே!!
புத்தாண்டு வாழ்த்துக்கள்...
கடைக்கண் கவிதை அருமை நண்பரே...
கலை கூறியது...
super super....
nalla irukku arasan//
thank u kalai
மதுமதி கூறியது...
கடைக்கண் கவிதை அருமை..
அன்போடு அழைக்கிறேன்..
உயிரைத் தின்று பசியாறு(அத்தியாயம்-1)//
வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க தோழமையே
M.R கூறியது...
அட அட அட அருமை ,இப்பிடித்தான் ரசிக்கனும் ,அப்பத்தான் வாழ்வு இனிக்கும் அருமை நண்பா//
மிக்க நன்றிங்க அண்ணே
மயிலன் கூறியது...
//அந்த சிக்கனச் சிரிப்புல,
சிற்பமா சிரிக்கிறேன்!
சிதைந்து தான் போகிறேன்!//
பாவிமொவ...படுத்தியிருப்பா போல...:))
இரசனை அழகு நண்பரே...//
ஒரு வழி பண்ணிட்டா அந்த பாவிமொவ...
நன்றிங்க தோழரே
MANO நாஞ்சில் மனோ கூறியது...
என்னய்யா இப்பிடி உருகி எழுதி இருக்கீங்க ம்ம்ம்ம் சூப்பர்...!!!//
எல்லாம் ஒரு ஏக்கம் தான் அண்ணே ... நன்றிங்க
angelin கூறியது...
//உன் கரவளவி //
என்பது வளையலை குறிக்கும் சொல்லா ??
அருமையான கவிதை .
வர வர அரசன் ரொம்ப ரசிச்சு ரசிச்சு கவிதை எழுதறீங்க .ஓகே ஓகே ஓகே
கவிதைகேற்ற புகைப்படம்//
ஆம் சகோ வளவி வளையலை குறிக்கின்றது ...
சும்மா ஒரு கிறுக்கல் தான் சகோ....
நன்றிங்க சகோ ... மிக்க நன்றி
thendralsaravanan கூறியது...
என்னங்க தம்பி என்னை மறந்திட்டேங்களே...மன்னாதி மன்னனெல்லாம் நம்மை நம்பி தூது விடுறாங்க....சொல்லுங்க பொண்ணு யாருன்னு...ஹ ஹ ஹ...//
வணக்கம் அக்கா... உங்களுக்கு தான் முதலில் தெரிவிப்பேன் அக்கா..
அன்புக்கு நன்றிங்க அக்கா....
ஹேமா கூறியது...
அரசன்...கருப்பி நல்ல வடிவு.அரைச் சிரிப்போ அதைவிட...!//
மிக்க நன்றிங்க அக்கா...
துரைடேனியல் கூறியது...
Azgagu Kavithai Sago.//
மிக்க நன்றிங்க சகோ
நாந்தேன் :) கூறியது...
கலக்கல் தல...!
கவிதை முழுக்க காதல் வழியுது...! :)//
அன்பு வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க தல...
மகேந்திரன் கூறியது...
பிரிவென வந்தாலும்
பாவையுன் பேரெழிலும்
உனைக்காணும் என்னுனர்வும்
பட்டாம்பூச்சியாய் பறக்கிறது..
அருமை அருமை சகோதரரே.//
வணக்கம் அண்ணே ..
அன்பு வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணே
கீதா கூறியது...
கட்டெறும்பு கண், கடையும் கடைக்கண் பார்வை, சிக்கனச் சிரிப்பு - அனைத்தும் அசத்தலான வர்ணனைகள். கிராமிய மணம் கமழும் கவியழகுக்கு அழகு சேர்க்கும் படம். பிரமாதம். பாராட்டுகள்.//
அன்பின் வாழ்த்துக்கு ஆயிரம் நன்றிகள் சகோ..
மாணவன் கூறியது...
கவிதை நல்லாருக்குண்ணே!
புத்தாண்டு நல்வாழ்த்துகள்! :-)//
மிக்க நன்றிங்க அண்ணே
பிரேம் குமார் .சி கூறியது...
//உன்னை பிரியும் வேளைகளில்,
பிணி வந்து சேருதடி,
பஞ்சா பறக்குதடி,
பாவிப்பய என்னுசுரு!//பிரிவை இதை விட எப்படி சொல்ல ? அருமை//
அன்பின் வாழ்த்துக்கு மிக நன்றிங்க அன்பரே
FOOD NELLAI கூறியது...
காதல் படுத்தும் பாடு.//
ஆம் அய்யா ,.
தமிழ்தோட்டம் கூறியது...
சிறப்பாக இருக்கிறது அரசன் பாராட்டுகள்
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in//
மிக்க நன்றிங்க அன்பரே
r.v.saravanan கூறியது...
எளிய வரிகளில் காதலின் வலிமையை சொல்லும் கவிதை நன்று அரசன் வாழ்த்துக்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்//
மிக்க நன்றிங்க சார்
Lingesh கூறியது...
//உன்னை பிரியும் வேளைகளில்,
பிணி வந்து சேருதடி//
நன்றாக உள்ளது.//
மிக்க நன்றிங்க நண்பரே
போளூர் தயாநிதி கூறியது...
காதல் வட்ந்துவிட்டாலே உண்மையில் உள்ளம் போல உருக செய்துவிடும் இதைத்தான் வள்ளுவம் பசலைநோய் என கூறுகிறது . இந்த பசலை நோய் வந்து விட்டால் ஒரு மனிதனை கரைத்துவிடும் .கன்னியரின் கடைக்கண் பார்வை பசலை நோயை உண்டாக்க கூடும் .. அரசன் சற்று எச்சரிக்கையாக இருப்பீராக .....//
நிச்சயமா எச்சரிக்கையா இருக்கிறேன் நண்பரே ,...
அன்பின் கருத்துக்கு மிகுந்த நன்றிகள்
sasikala கூறியது...
உன் கட்டெறும்பு கண்ணால,
எட்டி நின்று பார்த்தாலும்,
அருமை & அழகு//
மிக்க நன்றிங்க தோழமையே ..
Ramani கூறியது...
அருமையான காதல் கவிதை
தங்கள் கவிதையினைத் தொடர்ந்து படித்தால்
நிச்சயம் நானும் நல்ல காதல் கவிதை
எழுதிவிடுவேன் என்கிறநம்பிக்கை
லேசாகத் துளிர்க்கிறது
மனம் கவர்ந்த கவிதை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்//
அன்பின் வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க சார் ...
நீங்க எழுதுவிங்க எனக்கு நம்பிக்கை இருக்கு ...
சீனுவாசன்.கு கூறியது...
பாத்து தலைவா!பத்திரம்!!//
நன்றிங்க நண்பரே ...
சொல்லிட்டிங்க பத்திரமா இருக்கேன்
பாலா கூறியது...
அழகான கிராமிய பாடல் கேட்ட மாதிரி இருக்கு. அருமை//
அன்பின் கருத்துக்கு மிக்க நன்றிங்க தோழரே
mohandivya கூறியது...
அருமை தோழா//
மிக்க நன்றிங்க தோழமையே
சத்ரியன் கூறியது...
அரசன்,
கடைக்கண் கடையுதோ....?
கவிஞர் மனசை ரொம்ப குடைஞ்சிருக்கும் உண்மை வெளிப்பட்டிருச்சி.
2012-ல் தை பிறக்கும் நாளில், வழியும் பிறந்துவிட வாழ்த்துக்கள்.//
அண்ணே வணக்கம் ..
அன்பின் வருகைக்கும் , கருத்துக்கும் , வாழ்த்துக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ..
கணேஷ் கூறியது...
கட்டெறும்பு கண்... உவமையே நல்லாயிருக்கு. காதல் ததும்பி வழியும் மொத்தக் கவிதையையும் ரசித்துப் படித்தேன். நன்று. வாழ்த்துக்கள்.//
அன்பின் வாழ்த்துக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் சார்
வைகறை கூறியது...
கவிதை கலக்கல் தோழரே!!//
மிக்க நன்றிங்க தோழமையே
ரெவெரி கூறியது...
புத்தாண்டு வாழ்த்துக்கள்...
கடைக்கண் கவிதை அருமை நண்பரே...//
அன்பின் வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க சகோ
வணக்கம்.... உங்களுக்கும் உறவினர் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் ungal உறவினர் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...
eppudiiiii
அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...
என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...
// உன்னை பிரியும் வேளைகளில்,
பிணி வந்து சேருதடி,
பஞ்சா பறக்குதடி,
பாவிப்பய என்னுசுரு!//
உண்மைக் காதலிலே
உதிக்கின்ற உணர்வுகளின்
தன்மை குறையாமல்
தந்திட்டகவி அருமை!
புலவர் சா இராமாநுசம்
நல்லதொரு நாட்டுப்புறப்பாடலின் தொனியை உள்ளடக்கி இருக்கிற காதல் கவிதை,வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக