புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜனவரி 23, 2012

ஆடை...


என்றைக்கும் மனிதர்கள் அதிகம் முக்கியத்துவம் செலுத்தும் பொருட்களில் ஆடைகளும் நிச்சயம் இருக்கும்.
அழகாய் உடையணிந்து அனைவரையும் கவரவேண்டும் என்பதில் அதிகம் பேர் ஆவல் கொள்வர். அது இயல்பு.
ஒவ்வொரு கட்டத்திலும் அதன் சூழலுக்கு, காலத்திற்கு, மக்களின் ரசனைகளுக்கு ஏற்ப புது வடிவம் அடைந்து 
வந்துள்ளது .. வந்து கொண்டும் இருக்கின்றது. அதன் வடிவத்திலும், வடிவாக்கதிலும் சரி, புதுப்புது வடிவம் கொண்டு மக்களின் 
நாகரிக வளர்ச்சியை மேம்படுத்தி உலகத்திற்கு பறை சாற்ற ஆடை அதிகம் முக்கியத்துவத்தில் உள்ளது.
உடைகளுக்கு மயங்காத மக்கள் இல்லை என்றே கூறலாம் . அந்த அளவுக்கு ஆடைகளின் மோகம் நாளுக்கு நாள் 
அதிகரித்து கொண்டுதான் வருகிறதே தவிர குறைந்த பாடில்லை ..ஒரு குறிப்பிட இனத்தின் அடையாளமோ, 
அல்லது ஒரு நாட்டின் அடையாளமோ அவர்கள் அணியும் ஆடைகளை வைத்தே நாம் அறிந்து கொள்ளலாம். 
இன்னும் சில நாடுகளில் அவர்களின் மரபுப்படி, பண்பாடுப்படி மட்டுமே ஆடை அணிந்து வருகின்றனர்.

 நமது தமிழர்களின் பண்பாடு நல்ல உடையணிந்து நாடு போற்ற வாழ்ந்தோம். நமது உடைகளை வெளிநாட்டினர் கூட விரும்பி அணிந்து 
கொண்டதை கண்கூடாய் காண முடிந்தது. இன்றைய வளரும் தலைமுறைகள் உடுத்தும் உடைகளை கண்டால் முகம் சுளிக்க வைக்கின்றது.
அந்த அளவுக்கு மட்டமான முறையில் உடையணிந்து வலம் வருகின்றனர். கேட்டால் நாகரிக வளர்ச்சி என்று கூறி மழுப்பி இருபாலரும் பிறந்த 
மேனியாய் வலம் வருவதை மாநகரங்களில் கண்கூடாக காணலாம். கொஞ்சம் முன்னேறி நகரம் கிராமம் நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டது இந்த உடை குறையும் கலாச்சாரம்!

தமிழையும் , தமிழர்களின் மரபுகளையும் அழிக்க வேறு எவரும் தேவையில்லை. தமிழனே அனைத்தையும் அழித்துவிடுவான் போலிருக்கின்றது. நெடுங்காலமாக மொழியை அழித்து வருகிறான், கூடவே இப்போ மரபுகளையும், பண்பாட்டையும்,  நவ நாகரிகம் என்ற சேற்றை கொண்டு பூசி வருகின்றான்.
இக்கால இளைய தலைமுறைகள் உலகளாவிய பன்னாட்டு நிறுவனங்களில் பணிக்கு செல்கின்றனர். அங்கு பலதரப்பட்ட பல்வேறு வகையான, பல மாநில, நாட்டு  மக்களின் தொடர்பும் எளிதில் கிட்டுகிறது. அந்த மக்கள் அணியும் ஆடைகள் சற்று வித்தியாசமாக கொஞ்சம் நாகரிகமாக??? இருப்பதால் அதை அணிய ஆரம்பித்து, அதையே தினமும் பின்பற்றி, வரும் தலைமுறைகளுக்கும் உதாரணமாய் இருக்கும் அவல நிலை கண்டு மனம் வெம்முகிறது. அப்புறம் முன்பை விட ஆடைக்கு அதிக விளம்பரம் கொடுத்து கவனத்தை ஈர்க்கின்றனர் வியாபார முதலாளிகள். இந்த படத்தில் இந்த நடி(கை)கன் அணிந்திருந்தது, அந்த படத்தில் அந்த நடி(கை) கன்  அணிந்திருந்தது என்று அணிந்து அனைவரின் கவனத்தை ஈர்க்கவே அதிக இளசுகள் விரும்பும் சூழல் இங்கு நிலவுகிறது. 

உடைகளின் விசயத்தில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்துவது நல்லது. உடையினால் நம் கலாச்சாரம் அழிவது ஒரு புறம் இருக்கட்டும் அவர்களின் உறுத்தலான உடைகள் பலரின் கவனத்தை சிதைத்து தேவையற்ற விபரீதத்துக்கு ஆளாகும் சூழல் பெருகி வருகின்றது!
பெருகி வரும் கற்பழிப்பு கொலைகளுக்கு இதுவும் ஒரு அடிப்படை காரணமாக இருக்கும். முன் கூட்டி தடுக்காமல் பின்னர் வருந்துவது முட்டாள் தனம். கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள் இளம்பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்களே!
இது ஒருபுறம் இருக்க சில வீடுகளில் தமது குழந்தைகளை பெற்றவர்களே இந்த மாதிரி உடையணிய ஊக்கப்படுத்தும் கொடுமையும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இந்த நாகரிக வாசிகளை??? எப்படி திருத்துவது? புகழ் விரும்பிகளுக்கு புத்தியில் புகட்டுவது எப்போது... குறைந்த உடையில் பவனி வரும் பிள்ளைகளை குறை கூற முடியாது அதை அனுமதிக்கும் பெற்றோர்களை தான் தண்டிக்கணும்! 

நவ நாகரிக உடைகளை நான் முற்றிலும் குறை கூறி தள்ளி நிற்க நான் விரும்பவில்லை ... நாம் அணியும் உடை அடுத்தவரை உறுத்தாமல் இருந்தாலே போதும். பாதுகாப்பான உடைகள் நிறைய இருக்கின்றனவே! ஏன் இந்த பத்தும் பத்தாமல் உடை அணிய வேண்டும் பின்னர் இன்னல்களை சந்திக்க வேண்டும்! சில பள்ளிகள் இன்னும் குட்டை பாவாடை சீருடைகளை பயன் படுத்த சொல்லி கட்டாய படுத்துகின்றனர். சில காம கொடூரங்களின் பசிக்கு இரையாகி போகின்றன சில பூக்கள். இந்த மாதிரி உடைகளை பள்ளியும் மாற்றவேண்டும். அடுத்து நடிகைகள் திரையில் குறைப்பதை விட வெளி விழாக்களுக்கு வருகையில் மேலும் குறைத்து அவர்களின் சம்பளத்தை உயர்திக்கொள்கின்றனர் என்பதை தெளிவாக புரிய வையுங்கள் பிள்ளைகளுக்கு. 
பல பிஞ்சுக்குழந்தைகள் பலாத்காரம் பண்ணி கொலை செய்யப்படுவதற்கு காரணம் அவர்களின் உடையாகவும் இருக்கலாம் அல்லவா? நித்தம் எங்கோ ஒரு மூலையில் நடந்து கொண்டுதானே இருக்கின்றது இந்த கொடுஞ்செயல். சிந்தியுங்கள் தமிழ் உறவுகளே!

நாகரிக வளர்ச்சி, அவன்(ள்) அணிந்திருக்காங்க அதனால் நானும் அணிகிறேன், பணம், மாற்றம் விரும்புவது , சினிமா இப்படி ஆயிரம் காரணங்கள் கூறிச்சென்றாலும் வன்மையாக கண்டிக்கவே தோன்றுகிறது! 

"ஆடை அங்கத்தை 
மறைப்பதற்கு மட்டுமே 
அங்குல அங்குலமாய் 
காட்டுவதற்கு அல்ல"

நட்புடன் 

அரசன் 

Post Comment

27 கருத்துரைகள்..:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஆடை பாதி ஆள் பாதி அழகுக்கு, இப்போ உள்ள பிள்ளைகள்கிட்டே இதை பற்றி வாயே திறக்க முடியாதுப்பா என்னா அழிச்சாட்டியம் பண்ணுதுங்க....!!!!

rajamelaiyur சொன்னது…

//"ஆடை அங்கத்தை
மறைப்பதற்கு மட்டுமே
அங்குல அங்குலமாய்
காட்டுவதற்கு அல்ல"


//

நெத்தியடி .. ஆனா யார் கேட்குறா ?

r.v.saravanan சொன்னது…

"ஆடை அங்கத்தை
மறைப்பதற்கு மட்டுமே
அங்குல அங்குலமாய்
காட்டுவதற்கு அல்ல"

super arasan

பெயரில்லா சொன்னது…

superu thaan,,,
அரசன் இப்போ இருக்கா ஆரும் இதை எல்லாம் கேக்கா மாட்டாங்க ... bcos காது கேக்காது..

ஹேமா சொன்னது…

வெளிநாடுகளில் எங்கள் கலாசாரங்களை விரும்பிப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.ஆனால் நாங்களோ கலாசார சீரழிவில்.கேட்டால் நாகரீகமாம்.இந்த வார நீயா நானா இதே தலைப்புத்தான் அரசன் !

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

தேவையான பதிவு நண்பா..

“சங்ககாலப் பெண்களுக்கு இடையே இல்லை..

எங்கள் காலப் பெண்களுக்கு உடையே இல்லை..“

என்பது உண்மைதானே நண்பா..

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

அன்பு நண்பா..

தங்கள் இடுகையோடு தொடர்புடைய நிழற்படத்தைத் தங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளேன்..

துரைடேனியல் சொன்னது…

//கேட்டால் நாகரிக வளர்ச்சி என்று கூறி மழுப்பி இருபாலரும் பிறந்த
மேனியாய் வலம் வருவதை மாநகரங்களில் கண்கூடாக காணலாம். கொஞ்சம் முன்னேறி நகரம் கிராமம் நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டது இந்த உடை குறையும் கலாச்சாரம்!//

- அருமையான விழிப்புணர்வுப் பதிவு சகோ. கிழிகிழியென்று கிழித்து விட்டீர்கள். இப்போதாவது உணர்வு வருகிறதா என்று பார்ப்போம்.

துரைடேனியல் சொன்னது…

தமஓ 2.

Yaathoramani.blogspot.com சொன்னது…

ஆடைகள் விஷயத்தில் முழுமையாக
பழைமைவாதிகள் போல் இருக்கவும் வேண்டியதில்லை
ஆபாசமாக ஆடை அணியவேண்டியதும் இல்லை
அதே சமயம் படிக்கும் பெண்கள் இன்னும் தாவணி மற்றும் சேலைகளில்
பொது இடங்களில் பார்வைக்கு அஞ்சும் நிலையும் இருக்கத்தான் இருக்கிறது
தற்காலத்திய உடைகள் அவர்கள் தன்னம்பிக்கையை
வளர்க்கிறது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதே
நாம் வேட்டியில் இருப்பதை யாரும் விரும்புவதில்லை
இது குறித்துவிரிவான பதிவிடும் எண்ணமும் இருக்கிறது
சிந்திக்கத் தூண்டிப்போகும் பதிவு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

“சங்ககாலப் பெண்களுக்கு இடையே இல்லை..

எங்கள் காலப் பெண்களுக்கு உடையே இல்லை..“

-:)

நல்லா வந்திருக்கு வாழ்த்துக்கள்...இருங்க சட்டையை மாட்டிட்டு வந்திர்றேன்...-:)

*anishj* சொன்னது…

நல்ல பதிவு தல...! இப்போலம் பசங்க போடுற ஆடையை போட்டுட்டுதான் பொண்ணுங்க அலைஞ்சிட்டு இருக்காங்க... பார்க்கவே சகிக்கல...!

அன்புடன் நான் சொன்னது…

உங்க ஆதங்கம் சரிதான்...

என்ன செய்ய....
மோகம் தலைவிரித்து ஆடுது!
மரபின்,
தாகம் நமைவிட்டு ஓடுது!!

கீதமஞ்சரி சொன்னது…

உடை என்பது நம் உடலை மறைக்க வேண்டும். வசதியாக இருக்கவேண்டும். நாகரிகமாக இருக்கவேண்டும். மற்றவர் கண்களை உறுத்தாதவகையில் இருக்கவேண்டும். இந்த அடிப்படையில் இருந்துவிட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஏதாவது ஒன்று குறைந்தாலும் பிரச்சனைதான். நல்ல பதிவு.

arasan சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
ஆடை பாதி ஆள் பாதி அழகுக்கு, இப்போ உள்ள பிள்ளைகள்கிட்டே இதை பற்றி வாயே திறக்க முடியாதுப்பா என்னா அழிச்சாட்டியம் பண்ணுதுங்க....!!!!//

உண்மைதான் அண்ணே ..
ஒன்னும் பேச முடியலை ..

arasan சொன்னது…

"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
//"ஆடை அங்கத்தை
மறைப்பதற்கு மட்டுமே
அங்குல அங்குலமாய்
காட்டுவதற்கு அல்ல"


//

நெத்தியடி .. ஆனா யார் கேட்குறா ?//

ஒருத்தரும் கேட்கும் மன நிலையில் இல்லை என்பதே உண்மை ..
நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
"ஆடை அங்கத்தை
மறைப்பதற்கு மட்டுமே
அங்குல அங்குலமாய்
காட்டுவதற்கு அல்ல"

super arasan//

மிக்க நன்றிங்க சார்

arasan சொன்னது…

கலை கூறியது...
superu thaan,,,
அரசன் இப்போ இருக்கா ஆரும் இதை எல்லாம் கேக்கா மாட்டாங்க ... bcos காது கேக்காது..//

உண்மையா கலை . எல்லோருக்குமே காது கேட்காதா ,????

நன்றி கலை

arasan சொன்னது…

ஹேமா கூறியது...
வெளிநாடுகளில் எங்கள் கலாசாரங்களை விரும்பிப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.ஆனால் நாங்களோ கலாசார சீரழிவில்.கேட்டால் நாகரீகமாம்.இந்த வார நீயா நானா இதே தலைப்புத்தான் அரசன் !//

அக்கா எல்லாம் காலம் செய்த கோலம் ..
மாற வேண்டும் இல்லை மாற்ற வேண்டும் ..
வருகைக்கு நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

guna thamizh கூறியது...
தேவையான பதிவு நண்பா..

“சங்ககாலப் பெண்களுக்கு இடையே இல்லை..

எங்கள் காலப் பெண்களுக்கு உடையே இல்லை..“

என்பது உண்மைதானே நண்பா..//

மிகச்சரியான உண்மை முனைவரே ,,
இங்கு நடக்கும் அவலங்களை காண மனசு வலிக்கின்றது...

நன்றிங்க தோழமையே

arasan சொன்னது…

guna thamizh கூறியது...
அன்பு நண்பா..

தங்கள் இடுகையோடு தொடர்புடைய நிழற்படத்தைத் தங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளேன்..//

அஞ்சலை கண்டேன் ... உள்ளம் வெடித்து விடும் போலிருக்கின்றது ..
என்ன செய்ய ... பகிர்வுக்கு நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

துரைடேனியல் கூறியது...
//கேட்டால் நாகரிக வளர்ச்சி என்று கூறி மழுப்பி இருபாலரும் பிறந்த
மேனியாய் வலம் வருவதை மாநகரங்களில் கண்கூடாக காணலாம். கொஞ்சம் முன்னேறி நகரம் கிராமம் நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டது இந்த உடை குறையும் கலாச்சாரம்!//

- அருமையான விழிப்புணர்வுப் பதிவு சகோ. கிழிகிழியென்று கிழித்து விட்டீர்கள். இப்போதாவது உணர்வு வருகிறதா என்று பார்ப்போம்.//

அன்பின் நண்பருக்கு வணக்கம் ..
இனி திருந்த வாய்ப்பில்லை..
மேலும் குறைய வாய்ப்பு உண்டு ..
வருகைக்கும் , வாக்குக்கும் நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

Ramani கூறியது...
ஆடைகள் விஷயத்தில் முழுமையாக
பழைமைவாதிகள் போல் இருக்கவும் வேண்டியதில்லை
ஆபாசமாக ஆடை அணியவேண்டியதும் இல்லை
அதே சமயம் படிக்கும் பெண்கள் இன்னும் தாவணி மற்றும் சேலைகளில்
பொது இடங்களில் பார்வைக்கு அஞ்சும் நிலையும் இருக்கத்தான் இருக்கிறது
தற்காலத்திய உடைகள் அவர்கள் தன்னம்பிக்கையை
வளர்க்கிறது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதே
நாம் வேட்டியில் இருப்பதை யாரும் விரும்புவதில்லை
இது குறித்துவிரிவான பதிவிடும் எண்ணமும் இருக்கிறது
சிந்திக்கத் தூண்டிப்போகும் பதிவு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்//

அன்பின் சாருக்கு வணக்கம்..
என்ன செய்ய முடியும் நாகரிக போர்வையில் அலையும் கலாசார கொல்லிகளை..
நாகரிக உடை அவசியம் தான் அடுத்தவரை அது உறுத்தும் வரை ..
நீங்களும் பதிவுடுங்கள் ...

நன்றிங்க சார்

arasan சொன்னது…

ரெவெரி கூறியது...
“சங்ககாலப் பெண்களுக்கு இடையே இல்லை..

எங்கள் காலப் பெண்களுக்கு உடையே இல்லை..“

-:)

நல்லா வந்திருக்கு வாழ்த்துக்கள்...இருங்க சட்டையை மாட்டிட்டு வந்திர்றேன்...-:)//

அன்பின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றிங்க சகோ...

arasan சொன்னது…

*anishj* கூறியது...
நல்ல பதிவு தல...! இப்போலம் பசங்க போடுற ஆடையை போட்டுட்டுதான் பொண்ணுங்க அலைஞ்சிட்டு இருக்காங்க... பார்க்கவே சகிக்கல...!//

கொடுமை கொடுமை ...
ஆணின் பாதிக்கும் சரி சமம் என்பதை உடையிலும் அவர்கள் காட்டுகிறார்கள் ...
நன்றிங்க தல ..

arasan சொன்னது…

சி.கருணாகரசு கூறியது...
உங்க ஆதங்கம் சரிதான்...

என்ன செய்ய....
மோகம் தலைவிரித்து ஆடுது!
மரபின்,
தாகம் நமைவிட்டு ஓடுது!!//

மிக்க நன்றிங்க மாமா...

arasan சொன்னது…

கீதா கூறியது...
உடை என்பது நம் உடலை மறைக்க வேண்டும். வசதியாக இருக்கவேண்டும். நாகரிகமாக இருக்கவேண்டும். மற்றவர் கண்களை உறுத்தாதவகையில் இருக்கவேண்டும். இந்த அடிப்படையில் இருந்துவிட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஏதாவது ஒன்று குறைந்தாலும் பிரச்சனைதான். நல்ல பதிவு.//

அன்பின் வருகைக்கும் , ஆழமான கருத்துக்கும் என் அன்பு நன்றிகள் ...