புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

பிப்ரவரி 23, 2012

நானும் எனது மண்ணும் ...




நஞ்சை நிலத்தின் நடுநடுவே வட்டமடிக்கும் கொக்குகளுடன் சேர்ந்து நானும் கழனியின் நடுவே களைப்பாறியவன் இன்று பொருளாதாரம் தேடி மாநகர மனித பூச்சிகளுடன் புழுதியில் புரண்டு எரிபொருட்கள் உமிழ்ந்த காற்றை சுவாசித்து கனவுகளை சுமந்து பறந்து கொண்டிருக்கின்றேன். அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் உகந்த நாயகன் குடிக்காடு தான் எனது பிறப்பிடம்.



பொதுவாக அதிக பேருந்து வசதி இல்லாத சிறிய கிராமம், இப்போ கொஞ்சம் பேருந்து நடமாட்டம் உள்ளது. ஊரில் நான்கு கோவில் உள்ளது, ஆடி மாத அம்மன் திருவிழா எங்களுக்கு பெருவிழா. விவசாயம்தான் பிரதான தொழில், பிறகு கூலி வேலை. சில அந்நிய நாட்டுக்கு சென்று வரும் பறவைகளும் உள்ளது, பொருளாதார இரையை தேடி!



மண்ணின் பெருமைகளை எடுத்துரைக்க ஆரம்பித்தாலே நெஞ்சில் ஊற்றெடுக்கும் இன்பத்திற்கு வார்த்தைகள் இல்லை இந்த பிரபஞ்சத்தில்!
வாய்க்கால் நீரில் முகம் கழுவி, தூக்கு சட்டியில் இருக்கும் பழைய கம்மங்கஞ்சியை குடிச்சி எண்ணையில பொரிச்ச பச்ச மிளகா வை ஒரு கடி கடிச்சா உச்சியில ஏறும் அந்த சுவைய இதுவரைக்கும் யாரும் ஏட்டுல எழுதி வைக்கவில்லை, அப்படி ஒரு சுவை... என்னங்க பண்றது அதுவும் கரைஞ்சி போச்சு நாகரிக காற்றுல!


மழைக்கால நாட்கள் கிராமத்தில் இன்னும் ரம்மியமானது, தொடர்மழையாக இருப்பின் பள்ளிகளும் விடுமுறையாக இருக்கும் பட்சத்தில் வீட்டில் உள்ள பசங்களை ஓரிடத்தில் அமரவைப்பது அவ்வளவு எளிதல்ல! காகித கப்பல் கொண்டு போர்தொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள்! இன்று அதை நினைத்து பார்த்தாலும் நெஞ்சுக்குள் தேன்சுரக்கும் காலங்கள்!  



திருட்டு மாங்காய், புளியம்பிஞ்சு, நுங்கு, ஈச்சம்பழம், இலந்தை பழம், கூட்டாஞ்ச்சோறு, ஏரியில் கிடைக்கும் கிழங்கு இப்படி எதையும் விட்டுவைக்காமல் எல்லாத்தையும் ஒரு கை பார்த்துவிடுவது. இன்னும் ஒட்டிருக்கின்றன அந்த நிறைவான தருணங்களின் நிலைத்த வடுக்கள்! 

எல்லா பசங்களும் இணைந்து பொழுதுக்கும் விளையாண்டு பொழுது முடியும் பொது வீட்டுக்கு சென்றால் கிடைக்கும் பாருங்க முதுகுல பரிசு அதெல்லாம் சுகமான காலமுங்க! இப்பெல்லாம் எங்க ஊர்லையே நகரம் மாதிரி எல்லாம் தொலைக்காட்சிக்கு அடிமையா கிடக்குதுங்க புள்ளைங்க ... என்னத்த சொல்லுறது!


முடிவாக எங்க ஊர்ல எந்த விதையும் போட்டாலும் நல்லா விளையும் மண்ணுங்க... இப்போ கொஞ்சம் விவசாயம் பழுது அடைந்து போச்சுன்னு சொல்லலாம்! கொஞ்சம் நாகரிகம் எட்டிப்பார்த்தாலும் இன்னும் நான் என் இளம் வயதில் விழுந்து புரண்டு மகிழ்ந்த மண் அப்படியே இருக்கிறது என்பதில் மன நிறைவடைந்து விடைபெறுகிறேன்... நன்றி ...


என் மண்ணை பற்றி கொஞ்சம் பின்னோக்கி பார்க்க வாய்ப்பளித்து தொடர்பதிவு எழுத அழைத்த அன்பின் தோழமை சசிகலா மேடம்(தென்றல்) அவர்களுக்கு என் உளம் நிறைந்த நன்றிகளை கூறிக்கொள்கிறேன்! 

சிட்டுக்குருவி எனக்களித்த அன்பின் விருது...

அன்பின் நண்பர் திரு. விமலன் சார் வழங்கிய அன்பு விருதுக்கு என் உள்ளம் நிறைந்த என் நன்றிகள்!

Post Comment

35 கருத்துரைகள்..:

பெயரில்லா சொன்னது…

me firtuuuuuuuuuuuuuuuu

பெயரில்லா சொன்னது…

superaaa irukku arasan unga ooru....


unga kiramathukku engalai kuttitu ponga

arasan சொன்னது…

கலை கூறியது...
me firtuuuuuuuuuuuuuuuu//

ஆம் .. முதல் வருகைக்கு என் நன்றிகள் கலை

arasan சொன்னது…

கலை கூறியது...
superaaa irukku arasan unga ooru....


unga kiramathukku engalai kuttitu ponga//

நிச்சயம் அழைச்சிட்டு போறேன் .. எப்போ வரிங்க அதை சொல்லுங்க

கோகுல் சொன்னது…

நினைவுகளைக்கிளரும் மண்மணம்.
செந்துறைக்கு ஒருமுறை வந்திருக்கிறேன்.

காந்தி பனங்கூர் சொன்னது…

கிராமத்து பெருமையை அருமையா படம் பிடிச்சிக் காட்டியிருக்கீங்க. சொர்க்கமே என்றாலும் நம் கிராம்த்திற்கு ஈடாகாது.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…

Thambi.... Ungalpathivu mikavum arumai.... innum niraivaaka solli irukkalam endru ninaikkiraen....

பெயரில்லா சொன்னது…

Thambi ayya ...ungaloor arumai...nirivaa engalai kutttiyu porennu sonnathukku nanri ...

ungal pillaigalukku kalyaanam vaiththaa sollunga en amma appavai kutti kondu unga pillaigal thirumanathirkku varugiren......

மகேந்திரன் சொன்னது…

அன்புச் சகோதரர் அரசன்,
நானும் தங்களுடன் தங்கள்
கிராமத்திற்கு பயணித்துவிட்டேன்..
அருமையான பதிவு.

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

உழவன் சொன்னது…

நண்பா சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா...என்னதான் நாகரிகம் எட்டி பார்த்தாலும் கிராமத்தின் பசுமை நகரத்தில் கிடைக்காது நண்பா...

Angel சொன்னது…

படங்கள் எல்லாம் அவ்ளோ அழகா இருக்கு அரசன் .ஆட்டுப்பட்டி /
அந்த மாடு இளைப்பாறும் அந்த மரம் கொடுக்காபுளி மரம்தானே .
கிராம வாழ்க்கை சொர்க்கம்தான் .

rajamelaiyur சொன்னது…

மண்வாசனை மிக்க பதிவு நண்பா

rajamelaiyur சொன்னது…

இன்று

எனது முதல் தொலைகாட்சி நிகழ்ச்சி ...

Admin சொன்னது…

உங்கள் ஊரைப் பற்றி ஏற்கனவே உங்கள் பதிவில் படித்ததாய் ஞாபகம் .இதையும் படித்தேன்..கிராமம் கிராமம்தான்.. விருதுக்கு வாழ்த்துகள்.

vimalanperali சொன்னது…

நல்ல படங்கள்.சொந்த மண்ணைப்பற்றி சொல்ல தனிமனம்தேவைப்படுகிறதுதான்.நல்ல முயற்சி.வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

மண்மணம்..நினைவுகள்...

மலரும் நினைவுகள் வர்றது....தொடருங்கள்...

வாழ்த்துக்கள்...

சத்ரியன் சொன்னது…

அழகிய மண்வாசனை அரசன்.

...αηαη∂.... சொன்னது…

அருமை.., ஊர பத்தி செமையா எழுதி இருக்கிங்க..,

r.v.saravanan சொன்னது…

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா என்று தான் பாட தோன்றுகிறது அரசன் பகிர்வுக்கு நன்றி

நம்ம ஊரு நல்ல ஊரு

ananthu சொன்னது…

மண் மனம் வீசும் பதிவுக்கு நன்றி ! .

arasan சொன்னது…

கோகுல் கூறியது...
நினைவுகளைக்கிளரும் மண்மணம்.
செந்துறைக்கு ஒருமுறை வந்திருக்கிறேன்.//

இப்போ செந்துறை நிறையவே மாறி இருக்குங்க ..
நன்றி

arasan சொன்னது…

காந்தி பனங்கூர் கூறியது...
கிராமத்து பெருமையை அருமையா படம் பிடிச்சிக் காட்டியிருக்கீங்க. சொர்க்கமே என்றாலும் நம் கிராம்த்திற்கு ஈடாகாது.
//

உண்மைதான் அண்ணே...
கிராமத்திற்கு இணை வேறு எதுவும் இல்லை அண்ணே ..

arasan சொன்னது…

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) கூறியது...
Thambi.... Ungalpathivu mikavum arumai.... innum niraivaaka solli irukkalam endru ninaikkiraen..//

நன்றிங்க அண்ணே ..
அடுத்த முறை பதிவிடும் போது கொஞ்சம் மெருகேற்றுகிறேன் ..
ஆனால் எனக்கு இந்த பதிவு நிம்மதியை தந்தது அண்ணே

arasan சொன்னது…

கலை கூறியது...
Thambi ayya ...ungaloor arumai...nirivaa engalai kutttiyu porennu sonnathukku nanri ...

ungal pillaigalukku kalyaanam vaiththaa sollunga en amma appavai kutti kondu unga pillaigal thirumanathirkku //

இன்னும் எனக்கே இல்லையாம் .. அதுக்குள்ள புள்ளை குட்டிகள் என்று ..
ஆசையப்பாரு .... போம்மா போ போயி படிக்கிற வேலைகள பாருங்க

arasan சொன்னது…

மகேந்திரன் கூறியது...
அன்புச் சகோதரர் அரசன்,
நானும் தங்களுடன் தங்கள்
கிராமத்திற்கு பயணித்துவிட்டேன்..
அருமையான பதிவு.

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்//

அன்பின் அண்ணனுக்கு என் நன்றிகள்

arasan சொன்னது…

உழவன் ராஜா கூறியது...
நண்பா சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா...என்னதான் நாகரிகம் எட்டி பார்த்தாலும் கிராமத்தின் பசுமை நகரத்தில் கிடைக்காது நண்பா...//

உண்மைதான் நண்பரே ...
சொர்க்கம் சொர்க்கம் தான் உழவரே ./.

arasan சொன்னது…

angelin கூறியது...
படங்கள் எல்லாம் அவ்ளோ அழகா இருக்கு அரசன் .ஆட்டுப்பட்டி /
அந்த மாடு இளைப்பாறும் அந்த மரம் கொடுக்காபுளி மரம்தானே .
கிராம வாழ்க்கை சொர்க்கம்தான்//

உண்மை தானே சகோ .. கிராமத்தின் மணம் வேறு எங்கும் கிடைக்காது ,.
அந்த மரம் கள்ளி மரம் சகோ ..
நன்றிங்க சகோ

arasan சொன்னது…

"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
மண்வாசனை மிக்க பதிவு நண்பா
//

நன்றிங்க ஆசிரியரே

arasan சொன்னது…

மதுமதி கூறியது...
உங்கள் ஊரைப் பற்றி ஏற்கனவே உங்கள் பதிவில் படித்ததாய் ஞாபகம் .இதையும் படித்தேன்..கிராமம் கிராமம்தான்.. விருதுக்கு வாழ்த்துகள்.//

அன்புக்கு நன்றிங்க கவிஞரே ...

arasan சொன்னது…

விமலன் கூறியது...
நல்ல படங்கள்.சொந்த மண்ணைப்பற்றி சொல்ல தனிமனம்தேவைப்படுகிறதுதான்.நல்ல முயற்சி.வாழ்த்துக்கள்.//

மிகுந்த நன்றிகள் சார்

arasan சொன்னது…

ரெவெரி கூறியது...
மண்மணம்..நினைவுகள்...

மலரும் நினைவுகள் வர்றது....தொடருங்கள்...

வாழ்த்துக்கள்...//

மிக்க நன்றிங்க சகோ

arasan சொன்னது…

சத்ரியன் கூறியது...
அழகிய மண்வாசனை அரசன்//

நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

...αηαη∂.... கூறியது...
அருமை.., ஊர பத்தி செமையா எழுதி இருக்கிங்க..//

மிக்க நன்றிங்க

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா என்று தான் பாட தோன்றுகிறது அரசன் பகிர்வுக்கு நன்றி

நம்ம ஊரு நல்ல ஊரு//

மிகுந்த நன்றிங்க சார்

arasan சொன்னது…

ananthu கூறியது...
மண் மனம் வீசும் பதிவுக்கு நன்றி !//

மிகுந்த நன்றிங்க நண்பரே