புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மார்ச் 07, 2012

நான் இரசித்த பாடல் (5)....


படம்: கௌரவர்கள்

பாடல் : ஆகா சொக்க வச்சான்...

இசை : திரு. தினா

வரிகளுக்கு சொந்தக்காரர்: கவிஞர். இளைய கம்பன்

"ஆகா சொக்க வச்சான் 
அழகா சிக்க வச்சான்
ஆசை மச்சான் கண்ணடிச்சான் 
ஐசு வச்சு கைய புடிச்சான்" 

என்ற ஆரம்ப வரியை அம்புபோல் கேட்போரின் நெஞ்சத்தில் இப்பாடல் பதிய வேண்டும் என்று வார்த்தைகளை மிக கவனமாக பயன்படுத்தி இருக்கும் இளைய கம்பருக்கு ஒரு பெரிய வாழ்த்துக்களே சொல்லலாம்.

அடுத்து 


ஒத்தை பனை உச்சியில 
பச்சை கிளி பேசியத 
ஓடக்கர மூங்கில் மரம் 
ஊஞ்சல் போல ஆடியத
ஓரக்கண்ணால் நீ ரசிச்ச 
உன்ன தான் நான் ரசிச்சேன் 

 ஓரக்கண்ணால் நீ ரசிச்ச 
உன்ன தான் நான் ரசிச்சேன் 

கடின வார்த்தைகள் இல்லாமலே கவிதை பொழிந்திருக்கின்றார் கவிஞர்.
இயல்பாய் பேசக்கூடிய வார்த்தைகளை தொடுத்து பாமாலை தொடுத்திருக்கின்றார் இனிமை கவிஞர்.


ரெண்டு துண்டா வெட்டி வச்ச 
என் அமாவாசை மீசைல 
தூளி கட்ட விளையாட 
காத்திருக்கேன் வாடி புள்ள 

தாலி கொடி தந்துபுடு 
காத்திருக்கேன் வாக்கப்பட!

சில நேரங்களில் கேட்டால் சிரிப்பாகவும் இருக்கும், சில நேரங்களில் சிலிர்ப்பாகவும் இருக்கும் இந்த இடத்தில கேட்கும்போது ,....


மார்கழி மாசத்துல 
மூணாம் சாம வேளையில
என் நெனைப்பில் நீயிருந்த 
உன் நெனைப்பில் நானிருந்தேன் 
கோடாங்கி குறி சொன்னான் 
குங்குமம் உனக்குன்னான் 

கோடாங்கி குறி சொன்னான் 
என் குங்குமம் உனக்குன்னான்....

இந்த மென்மையான வரிகளில் தனது காதலையும் , உள்ளத்து ஆசையையும் ஒற்றை பாடலில் உணர்த்த முயன்று வெற்றியும் கண்டுள்ளார் இளைய கம்பர். மொத்தத்தில் சிரமமே இல்லாமல் அற்புதமாய் அன்றாடம் பேசும் சொற்களை கொண்டே இனிமை பாடலை வழங்கிய கவிஞர் அவர்களுக்கு என் நன்றிகள். கிராமத்து சிட்டுகளுக்கு நல்ல மெட்டு அமைத்து வரிகளை கொலை செய்யாமல் அதன் வடிவம் மாறாமல் அப்படியே நம்மிடம் வழங்கி இருப்பார் இசை அமைப்பாளர் தினா. அவருக்கும் என் நன்றிகள்!

அடுத்து இந்த பாடலின் ஒளி வடிவம் பார்த்தேன் பாடலில் வரும் சொற்கள் சூழல் ஆகியவற்றில் முடிந்த வரை எடுத்திருக்கும் இயக்குனர் திரு. சஞ்சய் ராம் அவர்களுக்கும் என் நன்றிகள்! நடனத்தில் கொஞ்சம் கவனம் செலுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது!

தனது மென்மை குரலில் அதன் காட்சியை அப்படியே கண்ணுக்குள் கொண்டு வரவும், அதன் உணர்வை நமக்குள்ளும் செலுத்த உதவியிருப்பது சைந்தவி மற்றும் ஹரிஷ் ராகவேந்திரா இவர்களுக்கு என் நன்றிகள்!

நெடு நாட்களாக நான் ரசித்த பாடலை உங்களுடனும் பகிர்ந்துள்ளேன், உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் இரசித்து மகிழுங்கள் நண்பர்களே! நன்றி!... 



 (நன்றி கூகுள் இணையம் யு டியுப்)


Post Comment

26 கருத்துரைகள்..:

பெயரில்லா சொன்னது…

நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

பெயரில்லா சொன்னது…

meeeeeee firstuu

செய்தாலி சொன்னது…

நல்ல பாடல் நண்பா
நானும் ரசித்தேன் பகிர்வுக்கு நன்றி

பெயரில்லா சொன்னது…

அரசன் மொக்கை பாட்டு அப்புடின்னு சொல்ல மாட்டேன் ....

சுபேரா இருக்குது

arasan சொன்னது…

கலை கூறியது...
அரசன் மொக்கை பாட்டு அப்புடின்னு சொல்ல மாட்டேன் ....

சுபேரா இருக்குது//

தமிழே இல்லாத தமிழ் பாட்டுத்தான் பிடிக்குமென்று நெனைக்கிறேன் கலை

சத்ரியன் சொன்னது…

நல்ல ரசனை தம்பிக்கு.

பகிர்விற்கு நன்றிங்க அரசன்.

மகேந்திரன் சொன்னது…

அழகான பாடல் நண்பரே
ரசித்தேன்...

பெயரில்லா சொன்னது…

நானும் ரசித்தேன்...

ஹேமா சொன்னது…

கிராமத்து வாசனையோடும் சுத்தமான சொற்களோடும் அழகான பாடலொன்று.நல்ல ரசனை அரசன் !

Prem S சொன்னது…

//ரெண்டு துண்டா வெட்டி வச்ச
என் அமாவாசை மீசைல
//என்ன ஒரு சிந்தனை! எழுதிய கவிஞருக்கு வாழ்த்துக்கள் .பாடலை அறிமுக படுத்திய அன்பருக்கு நன்றி

பெயரில்லா சொன்னது…

தமிழே இல்லாத தமிழ் பாட்டுத்தான் பிடிக்குமென்று நெனைக்கிறேன் கலை

7 மார்ச், 2012 12:36 pm///////////


ஹலோ ராசா நான் சொன்னனா தமிழ் இல்லாத தமிழ் பாட்டு தான் பிடிக்கம் மெண்டு .....

என்மேல எதுக்கு இம்புட்டு கோவம் ...

மீ சூப்பர் நு தான் சொன்னேன் ...
ரொம்ப திட்டிபோடதிங்க ...பதிலுக்கு நானும் சாபமிட்டுருவேன் .....

உழவன் சொன்னது…

பாடலும் அருமை..உங்கள் வரிகள் நயமும் சூப்பர் நண்பா...

பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா?

உழவன் சொன்னது…

கலை சாபமிட்டுட போறாங்க பாத்து..நண்பா...

பெயரில்லா சொன்னது…

உழவன் ராஜா கூறியது...
கலை சாபமிட்டுட போறாங்க பாத்து..நண்பா...//////////////



இப்புடிஈல்லாம் உசுப்பேத்தி விடுவீங்களா உழவரே ...
.ஒரு நல்லவரைஓ சாபமிடு அந்த பாவ்த்தை நான் வாங்கிக்கவா ....
நோ ஓ ...நோ ஓ ....மீ ரொம்ப நல்லாப் பெண்ணாக்கும் ,..

arasan சொன்னது…

கூகிள்சிறி .கொம் கூறியது...
நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு//

செய்திக்கு நன்றிங்க ...

arasan சொன்னது…

கலை கூறியது...
meeeeeee firstuu//

கொஞ்சம் தாமதம் கலை ..

arasan சொன்னது…

செய்தாலி கூறியது...
நல்ல பாடல் நண்பா
நானும் ரசித்தேன் பகிர்வுக்கு நன்றி

7 மார்ச், 2012 12:25 pm//

மிகுந்த நன்றிகள் தோழரே

arasan சொன்னது…

சத்ரியன் கூறியது...
நல்ல ரசனை தம்பிக்கு.

பகிர்விற்கு நன்றிங்க அரசன்.//

எல்லாம் தங்களிடம் கற்றுக்கொண்டது தான் அண்ணே ..
வருகைக்கு நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

மகேந்திரன் கூறியது...
அழகான பாடல் நண்பரே
ரசித்தேன்...//

மிகுந்த நன்றிங்க அண்ணா

arasan சொன்னது…

ரெவெரி கூறியது...
நானும் ரசித்தேன்....//

மிகுந்த நன்றிங்க சகோ

arasan சொன்னது…

ஹேமா கூறியது...
கிராமத்து வாசனையோடும் சுத்தமான சொற்களோடும் அழகான பாடலொன்று.நல்ல ரசனை அரசன் !//


மிகுந்த நன்றிங்க அக்கா..

arasan சொன்னது…

PREM.S கூறியது...
//ரெண்டு துண்டா வெட்டி வச்ச
என் அமாவாசை மீசைல
//என்ன ஒரு சிந்தனை! எழுதிய கவிஞருக்கு வாழ்த்துக்கள் .பாடலை அறிமுக படுத்திய அன்பருக்கு நன்றி//

அன்பின் தோழருக்கு என் நன்றிகள்

arasan சொன்னது…

கலை கூறியது...
தமிழே இல்லாத தமிழ் பாட்டுத்தான் பிடிக்குமென்று நெனைக்கிறேன் கலை

7 மார்ச், 2012 12:36 pm///////////


ஹலோ ராசா நான் சொன்னனா தமிழ் இல்லாத தமிழ் பாட்டு தான் பிடிக்கம் மெண்டு .....

என்மேல எதுக்கு இம்புட்டு கோவம் ...

மீ சூப்பர் நு தான் சொன்னேன் ...
ரொம்ப திட்டிபோடதிங்க ...பதிலுக்கு நானும் சாபமிட்டுருவேன் .....

8 மார்ச், 2012 9:33 pm//
'
ஏன் பில்லி , சூனியம் வைக்க தெரியாதா கலை ..
அதையும் கற்றுக்கொள் ... ஹா ஹா ஹா

arasan சொன்னது…

உழவன் ராஜா கூறியது...
பாடலும் அருமை..உங்கள் வரிகள் நயமும் சூப்பர் நண்பா...

பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா?//

அன்பின் வருகைக்கு என் நன்றிகள் நண்பா

arasan சொன்னது…

உழவன் ராஜா கூறியது...
கலை சாபமிட்டுட போறாங்க பாத்து..நண்பா...

9 மார்ச், 2012 3:37 pm//

கொஞ்சம் பயமாத்தான் இருக்கு நண்பா ..

arasan சொன்னது…

கலை கூறியது...
உழவன் ராஜா கூறியது...
கலை சாபமிட்டுட போறாங்க பாத்து..நண்பா...//////////////



இப்புடிஈல்லாம் உசுப்பேத்தி விடுவீங்களா உழவரே ...
.ஒரு நல்லவரைஓ சாபமிடு அந்த பாவ்த்தை நான் வாங்கிக்கவா ....
நோ ஓ ...நோ ஓ ....மீ ரொம்ப நல்லாப் பெண்ணாக்கும் ,..//

நம்பிட்டேன் கலை.,.
நீ நல்ல பொண்ணுதான் ..
நான் ஒத்துக்குறேன் ...