புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மே 28, 2012

உன் பேரழகு !!!




நீ அமைதியாக
உறங்குகிறாய்!
உன் பேரழகு,
என்னிடம் பெரும் 
சண்டையிடுவதை 
அறியாமல்!!!

(என்னை வலைச்சரத்தில் அறிமுகபடுத்திய தோழர்  செய்தாலி அவர்களுக்கு என் நன்றிகள்) 

Post Comment

மே 24, 2012

ஓர் மழைக்கால இரவில்!








வேர் துளைத்த 
மண்ணின் வலி,

மேக கூட்டங்கள் 
சிந்திய கண்ணீர்,

பூக்கள் சுரந்த  
தேன்துளி!

வெட்டுண்ட மரத்தின் 
வேதனை பிசின்,


பறவையின் காலை 
நேர வாழ்த்து,

ஏரிழுத்த காளையின் 
களைப்பு,

கண்ணிமைக்கும் நேரத்தில் 
களவாடிய மாங்காய்,

வெற்று காம்பை
சுவைத்தே உறங்கி
போன வறுமையின் குழந்தை,

மாக்கோலத்தில் இரை
சேமிக்கும் எறும்புகள்,

இப்படி எத்தனை
நிகழ்வுகளை மௌனமாய் 
கீறிச் சொ(செ)ல்கிறது  
எனக்கான இந்த 
மழைக்கால இரவு!!!

Post Comment

மே 21, 2012

"மை"க்காரி...




மை பூசி 
வசியம் செய்வதில் 
நம்பிக்கையற்று
இருந்தேன்,

உன்னைக்  காணாதவரை!

Post Comment

மே 10, 2012

வினோத பார்வை...



வெகுநேரம் இருவரும் 
பேசி முடித்து 
வீடு திரும்ப 
பேருந்தில் 
நீ ஏறியதும்,

வழக்கமாய் விடை 
கூறும், உன் 
வினோத பார்வைக்கு, 
மனம் ஏங்குவதை 
ஏனோ தவிர்க்க 
முடியவில்லையடி!

Post Comment

மே 07, 2012

கரையும் மனிதநேயம்...


எப்படி நடந்த 
நிகழ்வோ புரியவில்லை!
எத்தனை கனவுகளை
சுமந்த உயிரோ,
விளங்கவில்லை!

சாலையோரத்தில்
குருதிப்பெருக்கில்
கரைந்து கொண்டிருந்த
அந்த முகத்தின்
வடிவம், இன்னும் 
மறையவில்லை!

தாமதமாய் சென்றால் 
சம்பளத்தில் துண்டு 
விழும் என்ற தவிப்பில் 
எட்டி பார்த்துவிட்டு 
தாண்டி தான் சென்றேன்!

வேலை முடிந்து 
திரும்புகையில் அதே 
இடத்தில் காண்கிறேன் 
கொஞ்சம் ரத்தக்கறையும்,
ஈக்கள் மொய்க்கும் 
தசை துணுக்களும்,
கூடவே,
என் மனித நேயத்தையும்!

Post Comment

மே 03, 2012

எனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் - 7

உச்சி வெயில் நேரத்தில்...


நரி வெற்றிலை என்று சொல்வார்கள் எங்கள் ஊரில்..


யாருக்கோ மலர்ந்த ரோசா...


ஒரு வகை காட்டாமணக்கு மலர்...


பெயர் தெரிஞ்சா சொல்லுங்க ...


இது ஒரு வகை புல்...


இண்ட முள் ...


இதுவும் ஒரு வகை காட்டு செடி


மொட்டை அடிக்கப்பட்ட முருங்கை..


தாய்ப்பாசம்...



(இவை அனைத்தும் எனது ஊரில் என்னால் எடுக்கப்பட்டவை ... படத்தின் மேல் சுட்டினால் பெரியதாக தெரியும்)

Post Comment