உச்சி வெயில் நேரத்தில்...
நரி வெற்றிலை என்று சொல்வார்கள் எங்கள் ஊரில்..
யாருக்கோ மலர்ந்த ரோசா...
ஒரு வகை காட்டாமணக்கு மலர்...
பெயர் தெரிஞ்சா சொல்லுங்க ...
இது ஒரு வகை புல்...
இண்ட முள் ...
இதுவும் ஒரு வகை காட்டு செடி
மொட்டை அடிக்கப்பட்ட முருங்கை..
தாய்ப்பாசம்...
(இவை அனைத்தும் எனது ஊரில் என்னால் எடுக்கப்பட்டவை ... படத்தின் மேல் சுட்டினால் பெரியதாக தெரியும்)
Tweet |
30 கருத்துரைகள்..:
வரிகளற்ற
கவிதை சித்திரங்கள்
அழகு
ம்ம்ம்...
சித்திரங்களில் ஒளிர்கிறது
உங்கள் கலை உள்ளமும்
கிராம நேசமும்
///யாருக்கோ மலர்ந்த ரோசா...///
அண்ணே அந்த ரோசா இந்த ராசாவுக்கு தான்...
சூப்பர் அண்ணே ..நமது கிராமத்தின் அழகு..
பெயர் எனக்கு தெரியும்... பட்டுக்கோட்டை பக்கம் அதா கொரங்கு வால் ன்னு சொல்லுவோம்...:))
சாதரணமாய் எண்ணி ஏளனம் செய்யும் சின்னஞ்சிறு புல்லையும் முல்லையும் படம் பிடித்ததில் தெரிகிறது உங்களின் கலைக்கண்... வாழ்த்துக்கள் நண்பரே.. முந்தைய புகைப்படங்களை விட இன்று இந்த கோழி படம் அருமை...
அப்புடியே மெட்ராஸ்ல நாலு ஜிகிடிகள ஃபோடோ புடிச்சு போட்டிங்கன்னா புண்ணியமா போவும்... ஹி ஹி...
ஹைஈ அரசன் இண்டைக்கு படம் படமா காட்டுறாங்கள் ....
பெயர் தெரிஞ்சா சொல்லுங்க ...///
ஏன் அடிமை படம் புடிச்ச உங்களுக்கு தெரியாதா
இதுவும் ஒரு வகை காட்டு செடி //////////////
காட்டுச் செடிக்கு இன்னும் பெயர் வைக்கலையா
அடிமை கவிதை எழுதுங்கள் ..அது தான் உங்களை ஓட்டுவதற்கு வசதியா இருக்கு ..படத்தை பார்த்து ஒரு உருப்படியான கமெண்டும் வருகுரதில்லை ...
சிறப்பா இருக்கு.... நிறைய பதிவாக்குங்க ராசா.
மிக அருமை.வாழ்த்துக்கள்.
ஒருவகை காட்டுச்செடி-ன்னு ஒரு பூ போட்டிருக்கீங்களே அதன் இதழ்களைப் பாருங்கள்,
ஏழு வயதில் பல் விழுந்து புதிதாய் முளைக்கும் பல்லை நனைவூட்டுகிறது.
அந்தச் செடியை “கரிப்பூண்டுச் செடி” என கிராமத்தில் சொல்வார்கள். அதன் பூக்களை முழு காம்புடன் பறித்து காதலிக்கு கால்கொலுசு பின்னிக் கொடுத்து மகிழுவர் கிராமத்து இளைஞர்கள்.
எனக்கும் பின்னத் தெரியும் என்பதை உங்களுக்கு மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.
கிராமத்தில் அச்செடியின் முக்கிய பயன்பாடு,
சிறிதாக காயம் பட்டு விட்டால் அச்செடியின் இலைகளைப் பரித்து உள்ளங்கையில் வைத்து கசக்கி அதிலிருந்து வழியும் சாற்றினை காயத்தில் விட்டு, கசக்கிய இலையினை காயத்தின் மேல் வைத்து கட்டி வைப்பார்கள், 4அல்லது 5 நாட்களில் குணமாகி விடும்.
ஒரு சிறிய படம், இத்தனை வரலாறுகளை உள்ளடக்கியுள்ளது அரசன்.
உங்கள் கிராமத்தில் என்ன பெயரோ அதைக்குறிப்பிடுங்கள்.
அழகானப் பகிர்வுக்கு நன்றி அரசன். உங்கள் கைவண்ணத்தில் மொட்டை முருங்கையும் ரசிக்கவைக்கிறது. பெயர் தெரியாப் பூவின் பெயர் எனக்கும் தெரியவில்லை. கோழிக்கொண்டைப்பூ என்று ஒன்று உள்ளது. அதுவாய் இருக்குமோ? அதற்கடுத்திருக்கும் புல் காக்கைக்கால் புல். ஆங்கிலத்தில் crowfeet grass என்றும் egyptian finger grass என்றும் அழைக்கப்படுகிறது.
ராஜாவுகேற்ற ரோஜா னு டைட்டில் வச்சிருக்கலாம் அரசன்
எல்லா படங்களும் அழகு வாழ்த்துக்கள் இந்த படங்களை பார்க்கையில் உங்கள் ஊருக்கு வரணும் என்ற ஆவலை மனதில் விதைக்கிறது
செய்தாலி கூறியது...
வரிகளற்ற
கவிதை சித்திரங்கள்
அழகு
ம்ம்ம்...
சித்திரங்களில் ஒளிர்கிறது
உங்கள் கலை உள்ளமும்
கிராம நேசமும்//
மிகுந்த நன்றிகள் நண்பரே
Uzhavan Raja கூறியது...
///யாருக்கோ மலர்ந்த ரோசா...///
அண்ணே அந்த ரோசா இந்த ராசாவுக்கு தான்...
சூப்பர் அண்ணே ..நமது கிராமத்தின் அழகு..//
நீ ஒரு ஆளே போதுமய்யா...
நன்றி உழவரே
மயிலன் கூறியது...
பெயர் எனக்கு தெரியும்... பட்டுக்கோட்டை பக்கம் அதா கொரங்கு வால் ன்னு சொல்லுவோம்...:))//
பெயர் நல்லா இருக்கே அண்ணாச்சி
மயிலன் கூறியது...
சாதரணமாய் எண்ணி ஏளனம் செய்யும் சின்னஞ்சிறு புல்லையும் முல்லையும் படம் பிடித்ததில் தெரிகிறது உங்களின் கலைக்கண்... வாழ்த்துக்கள் நண்பரே.. முந்தைய புகைப்படங்களை விட இன்று இந்த கோழி படம் அருமை...//
அன்பு நிறை கருத்துக்கு என் உள்ளம் நிறைந்த நன்றிகள்
மயிலன் கூறியது...
அப்புடியே மெட்ராஸ்ல நாலு ஜிகிடிகள ஃபோடோ புடிச்சு போட்டிங்கன்னா புண்ணியமா போவும்... ஹி ஹி...//
நெறையா இருக்கு அண்ணாச்சி .. இங்க வரும்போது காட்டுறேன் ... வாங்க
கலை கூறியது...
ஹைஈ அரசன் இண்டைக்கு படம் படமா காட்டுறாங்கள் ..//
ஒரு விளம்பரம்தான்
கலை கூறியது...
பெயர் தெரிஞ்சா சொல்லுங்க ...///
ஏன் அடிமை படம் புடிச்ச உங்களுக்கு தெரியாதா//
தெரிஞ்சா தான் சொல்லி இருப்பேன்ல ..
கலை கூறியது...
இதுவும் ஒரு வகை காட்டு செடி //////////////
காட்டுச் செடிக்கு இன்னும் பெயர் வைக்கலையா//
வைக்கும் பொது சொல்றேன்
கலை கூறியது...
அடிமை கவிதை எழுதுங்கள் ..அது தான் உங்களை ஓட்டுவதற்கு வசதியா இருக்கு ..படத்தை பார்த்து ஒரு உருப்படியான கமெண்டும் வருகுரதில்லை ...//
ஆளாளுக்கு ஒவ்வொரு கவலை .. ம்ம்ம் ...இருக்கட்டும்
சி.கருணாகரசு கூறியது...
சிறப்பா இருக்கு.... நிறைய பதிவாக்குங்க ராசா.//
என் நன்றிகள மாமா ..
முடிந்த வரை பதிவாக்கி வைப்போம் மாமா ..
Kalidoss Murugaiya கூறியது...
மிக அருமை.வாழ்த்துக்கள்.//
என் மிகுந்த நன்றிகள் சார்
சத்ரியன் கூறியது...
ஒருவகை காட்டுச்செடி-ன்னு ஒரு பூ போட்டிருக்கீங்களே அதன் இதழ்களைப் பாருங்கள்,
ஏழு வயதில் பல் விழுந்து புதிதாய் முளைக்கும் பல்லை நனைவூட்டுகிறது.
அந்தச் செடியை “கரிப்பூண்டுச் செடி” என கிராமத்தில் சொல்வார்கள். அதன் பூக்களை முழு காம்புடன் பறித்து காதலிக்கு கால்கொலுசு பின்னிக் கொடுத்து மகிழுவர் கிராமத்து இளைஞர்கள்.
எனக்கும் பின்னத் தெரியும் என்பதை உங்களுக்கு மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.
கிராமத்தில் அச்செடியின் முக்கிய பயன்பாடு,
சிறிதாக காயம் பட்டு விட்டால் அச்செடியின் இலைகளைப் பரித்து உள்ளங்கையில் வைத்து கசக்கி அதிலிருந்து வழியும் சாற்றினை காயத்தில் விட்டு, கசக்கிய இலையினை காயத்தின் மேல் வைத்து கட்டி வைப்பார்கள், 4அல்லது 5 நாட்களில் குணமாகி விடும்.
ஒரு சிறிய படம், இத்தனை வரலாறுகளை உள்ளடக்கியுள்ளது அரசன்.
உங்கள் கிராமத்தில் என்ன பெயரோ அதைக்குறிப்பிடுங்கள்.//
அண்ணே வணக்கம் .. இதுல இம்புட்டு விஷயம் இருக்கா ..?
இவ்வளவு நல்ல விசயத்தையும் நாம தொலைச்சிட்டு இருக்கோம் என்பதை எண்ணுகையில்
கோவம் வரத்தான் செய்கிறது அண்ணே ..
தகவலுக்கு என் உள்ளம் நிறைந்த நன்றிக
கீதமஞ்சரி கூறியது...
அழகானப் பகிர்வுக்கு நன்றி அரசன். உங்கள் கைவண்ணத்தில் மொட்டை முருங்கையும் ரசிக்கவைக்கிறது. பெயர் தெரியாப் பூவின் பெயர் எனக்கும் தெரியவில்லை. கோழிக்கொண்டைப்பூ என்று ஒன்று உள்ளது. அதுவாய் இருக்குமோ? அதற்கடுத்திருக்கும் புல் காக்கைக்கால் புல். ஆங்கிலத்தில் crowfeet grass என்றும் egyptian finger grass என்றும் அழைக்கப்படுகிறது.//
என் நன்றிகளும் வணக்கங்களும் அக்கா ..
நான் அந்த புல்லை பற்றி அறிந்து கொண்டேன் ,..
அந்த பூவுக்கு மயிலன் அண்ணாச்சி குரங்கு வால் என்று பெயர் வைச்சிருக்கார் ..
r.v.saravanan கூறியது...
ராஜாவுகேற்ற ரோஜா னு டைட்டில் வச்சிருக்கலாம் அரசன்
எல்லா படங்களும் அழகு வாழ்த்துக்கள் இந்த படங்களை பார்க்கையில் உங்கள் ஊருக்கு வரணும் என்ற ஆவலை மனதில் விதைக்கிறது//
ஹா ஹா ,,, அப்படியும் பெயர் வைச்சிருக்கலாம் சார்...
வாருங்கள் எப்பவுமே உங்கள்; வருகையை எதிர்பார்த்து காத்திருக்கு ...
நன்றிகள் சார்
கிராமத்து வாசனையோடு அழகான படங்கள்.குரங்கு வால் என்றுதான் ஊரில் சொல்வதாக ஞாபகம் அரசன்.புல்லைக்கூடப் படமாக்கும்போது அதன் அழகே தனித்துவமாகிவிடுகிறது !
தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .
கருத்துரையிடுக