புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மே 24, 2012

ஓர் மழைக்கால இரவில்!
வேர் துளைத்த 
மண்ணின் வலி,

மேக கூட்டங்கள் 
சிந்திய கண்ணீர்,

பூக்கள் சுரந்த  
தேன்துளி!

வெட்டுண்ட மரத்தின் 
வேதனை பிசின்,


பறவையின் காலை 
நேர வாழ்த்து,

ஏரிழுத்த காளையின் 
களைப்பு,

கண்ணிமைக்கும் நேரத்தில் 
களவாடிய மாங்காய்,

வெற்று காம்பை
சுவைத்தே உறங்கி
போன வறுமையின் குழந்தை,

மாக்கோலத்தில் இரை
சேமிக்கும் எறும்புகள்,

இப்படி எத்தனை
நிகழ்வுகளை மௌனமாய் 
கீறிச் சொ(செ)ல்கிறது  
எனக்கான இந்த 
மழைக்கால இரவு!!!

Post Comment

19 கருத்துரைகள்..:

ரிஷபன் சொன்னது…

பட்டியலிட்ட நிகழ்வுகளைப் ப்டிக்கும் போது மழைக்கால இரவு இன்னும் கனமாய் இருட்டாகிறது..

பெயரில்லா சொன்னது…

மழைக்கால இரவுகள் பல நேரங்களில் அமைதியையும்...அதன் கூடவே நிறைய கவனிப்புக்களையும் உள்நோக்கிய தேடல்களையும் விட்டு செல்கின்றன...

நன்று..

vimalanperali சொன்னது…

மழைக்கால் இரவுகள் எப்போதுமே சுகமானவை,தனித்திருத்தலின் இனிமையை சொல்லிச்செல்பவை/நல்ல படைப்பு. வாழ்த்துக்கள்.

Prem S சொன்னது…

//வெட்டுண்ட மரத்தின்
வேதனை பிசின்,//அடடா என்ன ஒரு கற்பனை

மகேந்திரன் சொன்னது…

தேர்ந்த உவமேயங்களுடன்
மழைக்கால நினைவுகள்
நெஞ்சில் மஞ்சமிட்டுக்கொண்டது சகோதரரே..

உழவன் சொன்னது…

அனுபவிக்க முடியாத மழைக்கால இரவு நிகழ்வுகளை நேரில் அனுபவித்த சுகம்..சூப்பர் அண்ணே..

மாலதி சொன்னது…

வருதேடுக்கும் இந்த கடுங் கோடையில் சிறந்த மழைக்கால பசுமையான நினைவுகள் கனவு காணவைக்கிறது பாராட்டுகள்....

செய்தாலி சொன்னது…

வலைச்சரம் வாங்க
http://blogintamil.blogspot.com/2012/05/blog-post_27.html

arasan சொன்னது…

ரிஷபன் கூறியது...
பட்டியலிட்ட நிகழ்வுகளைப் ப்டிக்கும் போது மழைக்கால இரவு இன்னும் கனமாய் இருட்டாகிறது..//

நெஞ்சார்ந்த நன்றிகள்

arasan சொன்னது…

ரெவெரி கூறியது...
மழைக்கால இரவுகள் பல நேரங்களில் அமைதியையும்...அதன் கூடவே நிறைய கவனிப்புக்களையும் உள்நோக்கிய தேடல்களையும் விட்டு செல்கின்றன...

நன்று..//

அன்பின் கருத்துக்கு என் நன்றிகள்

arasan சொன்னது…

விமலன் கூறியது...
மழைக்கால் இரவுகள் எப்போதுமே சுகமானவை,தனித்திருத்தலின் இனிமையை சொல்லிச்செல்பவை/நல்ல படைப்பு. வாழ்த்துக்கள்.//

மிகுந்த நன்றிகள் சார்

arasan சொன்னது…

PREM.S கூறியது...
//வெட்டுண்ட மரத்தின்
வேதனை பிசின்,//அடடா என்ன ஒரு கற்பனை//

மிகுந்த நன்றிகள் நண்பரே

arasan சொன்னது…

மகேந்திரன் கூறியது...
தேர்ந்த உவமேயங்களுடன்
மழைக்கால நினைவுகள்
நெஞ்சில் மஞ்சமிட்டுக்கொண்டது சகோதரரே..//

அன்பு நன்றிகள் அண்ணா

arasan சொன்னது…

Uzhavan Raja கூறியது...
அனுபவிக்க முடியாத மழைக்கால இரவு நிகழ்வுகளை நேரில் அனுபவித்த சுகம்..சூப்பர் அண்ணே..//

மிகுந்த நன்றிகள் தம்பி

arasan சொன்னது…

மாலதி கூறியது...
வருதேடுக்கும் இந்த கடுங் கோடையில் சிறந்த மழைக்கால பசுமையான நினைவுகள் கனவு காணவைக்கிறது பாராட்டுகள்....//

மிகுந்த நன்றிகள் மேடம்

arasan சொன்னது…

செய்தாலி கூறியது...
வலைச்சரம் வாங்க
http://blogintamil.blogspot.com/2012/05/blog-post_27.html//

இதோ வருகிறேன் தோழரே

Athisaya சொன்னது…

அருமையான மழைக்கால நினைவுகள்...படித்தேன்...ரசித்தேன்!வாழ்த்துக்கள்!

அன்புடன் நான் சொன்னது…

தரமான கவிதை....

வரிகலெல்லாம் ஒருவித வலி.
பாராட்டுகள்

ஹேமா சொன்னது…

மழைக்கால இரவு ஒரு அதிசயம் என்று அனுபவித்திருக்கிறேன் அரசன்.நாங்கள் அந்த நேரத்தில் எப்படியாயிருக்கிறோமோ அப்படித்தான் அந்த மழைகால இரவின் உணர்வும் இருக்கும்.சாரல் வீசுகிறது வரிகளில் !