புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூன் 25, 2012

பாவிகளின் பூமியிது!


பட்டாம்பூச்சியின் தலையில் 
பாரம் சுமத்திய 
பாவிகளின் பூமியிது!

வறுமையை விரட்ட, 
வாழ்க்கையை விற்ற
இறகை துறந்த 
பொன்வண்டுகளின் பூமியிது! 

எழுதுகோல் பிடிக்கும் 
கரத்தில், ஏக்கத்தை 
புகுத்திய நெருஞ்சிற், 
கூடாரமிது!

இளந்தென்றல் இவர்கள் 
சேமித்த சில்லறைகளில் 
கேட்கின்றது எதிர்கால 
இந்தியாவின் அழுகை 
குரல்!

இவர்களின் கைரேகை 
மறைய, மறைய 
உயர்கிறது 
வறுமை கோட்டின் 
வளர்ச்சி ரேகை!

அரசியல் முரடர்களே,
இனியும் சொல்லாதிர் 
நாளைய இந்தியா 
இளைஞர்கள் 
கையிலென்று! 

Post Comment

28 கருத்துரைகள்..:

rajamelaiyur சொன்னது…

//இளந்தென்றல் இவர்கள்
சேமித்த சில்லறைகளில்
கேட்கின்றது எதிர்கால
இந்தியாவின் அழுகை
குரல்!
//

வலி மிகுந்த வரிகள்

rajamelaiyur சொன்னது…

குழந்தை தொழிலாளர் முறை என்று ஒழியுமோ அன்றுதான் இந்தியா வல்லரசாகும்

MARI The Great சொன்னது…

அரசியல் வாதிகள் மட்டுமே இவர்களது நிலைமைக்கு காரணம் இல்லை.,

செய்தாலி சொன்னது…

எழுதப்பட்ட விதி
மாற்றுவோம் சொல்லில் மட்டுமே

Prem S சொன்னது…

//இவர்களின் கைரேகை
மறைய, மறைய
உயர்கிறது
வறுமை கோட்டின்
வளர்ச்சி ரேகை!//உண்மை அன்பரே நல்ல கவிதை

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இவர்களது நிலை மாறட்டும்...

சசிகலா சொன்னது…

அரசியல் முரடர்களே,
இனியும் சொல்லாதிர்
நாளைய இந்தியா
இளைஞர்கள்
கையிலென்று!
சாட்டையடி வரிகள் உணருவார்களா?

சத்ரியன் சொன்னது…

//இவர்களின் கைரேகை
மறைய, மறைய
உயர்கிறது
வறுமை கோட்டின்
வளர்ச்சி ரேகை!//

நன்கு வளரட்டும். மக்கள் புரட்சி வெடிக்கட்டும்.

காரஞ்சன் சிந்தனைகள் சொன்னது…

பட்டாம்பூச்சியின் தலையில்

பாரம் சுமத்திய

பாவிகளின் பூமியிது!

வலியுணர்த்தும் வரிகள்!
இதய்ங்கவர்ந்த பதிவுக்கு நன்றி!

r.v.saravanan சொன்னது…

இவர்களின் கைரேகை
மறைய, மறைய
உயர்கிறது
வறுமை கோட்டின்
வளர்ச்சி ரேகை!

குழந்தை தொழிலாளர் கொடுமையை வலிமையாய் உணர்த்தும் வரிகள் அரசன்

உழவன் சொன்னது…

உண்மையிலேயே இது பாவிகளின் பூமி தான்...அண்ணே..

வலி மிகுந்த வரிகள் ..அண்ணே...

உழவன் சொன்னது…

//இளந்தென்றல் இவர்கள்
சேமித்த சில்லறைகளில்
கேட்கின்றது எதிர்கால
இந்தியாவின் அழுகை
குரல்!//

ஒரு நிமிடம் யோசிக்க வச்சிடிங்க அண்ணா...

நந்தினி மருதம் சொன்னது…

நல்ல கவிதை.
எளிமையான சொற்கள்
எரிக்கின்ற சொற்கள்
வலி துளைக்கும் வரிகள்
மனம் வருத்தும் செய்தி.
------------------------------
நந்தினி மருதம், நியூயாரக், 2012-07-01

Athisaya சொன்னது…

முதல் வரியே அத்தனை வலியையும் சொல்லிவிட்தே..முத்துகள்.அருமை சொந்தமே வாழ்த்துக்கள்

அன்புடன் அதிசயா
காதல் இங்கும் ஒளிந்திருக்கும்..!!!!

arasan சொன்னது…

"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
//இளந்தென்றல் இவர்கள்
சேமித்த சில்லறைகளில்
கேட்கின்றது எதிர்கால
இந்தியாவின் அழுகை
குரல்!
//

வலி மிகுந்த வரிகள்//

உங்களின் உணர்வுக்கு நன்றி...

arasan சொன்னது…

"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
குழந்தை தொழிலாளர் முறை என்று ஒழியுமோ அன்றுதான் இந்தியா வல்லரசாகும்//

கண்டிப்பாக

arasan சொன்னது…

வரலாற்று சுவடுகள் கூறியது...
அரசியல் வாதிகள் மட்டுமே இவர்களது நிலைமைக்கு காரணம் இல்லை.,//

அவர்களும் ஒரு காரணம் என்று தான் சொல்றேன்.. மிகுந்த நன்றிகள்

arasan சொன்னது…

செய்தாலி கூறியது...
எழுதப்பட்ட விதி
மாற்றுவோம் சொல்லில் மட்டுமே//

நிதர்சன கருத்து நண்பரே .. நன்றி நண்பா

arasan சொன்னது…

PREM.S கூறியது...
//இவர்களின் கைரேகை
மறைய, மறைய
உயர்கிறது
வறுமை கோட்டின்
வளர்ச்சி ரேகை!//உண்மை அன்பரே நல்ல கவிதை//

மிகுந்த நன்றிகள் அன்பரே

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
இவர்களது நிலை மாறட்டும்...//

மாறும் என்ற நம்பிக்கையில் ..நன்றிங்க சார்

arasan சொன்னது…

Sasi Kala கூறியது...
அரசியல் முரடர்களே,
இனியும் சொல்லாதிர்
நாளைய இந்தியா
இளைஞர்கள்
கையிலென்று!
சாட்டையடி வரிகள் உணருவார்களா?//

கருத்துக்கு நன்றிங்க மேடம் ..

arasan சொன்னது…

சத்ரியன் கூறியது...
//இவர்களின் கைரேகை
மறைய, மறைய
உயர்கிறது
வறுமை கோட்டின்
வளர்ச்சி ரேகை!//

நன்கு வளரட்டும். மக்கள் புரட்சி வெடிக்கட்டும்.//

புரட்சி வெடித்தால் நல்லது நடக்கும் அண்ணே .. அந்த அளவுக்கு மக்கள் ஒற்றுமையுடன் இல்லை என்பது தான் உண்மை அண்ணே..
கருத்துக்கு என் நன்றிகள் அண்ணே

arasan சொன்னது…

Seshadri e.s. கூறியது...
பட்டாம்பூச்சியின் தலையில்

பாரம் சுமத்திய

பாவிகளின் பூமியிது!

வலியுணர்த்தும் வரிகள்!
இதய்ங்கவர்ந்த பதிவுக்கு நன்றி!//

அன்புக்கு நன்றிங்க தோழரே

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
இவர்களின் கைரேகை
மறைய, மறைய
உயர்கிறது
வறுமை கோட்டின்
வளர்ச்சி ரேகை!

குழந்தை தொழிலாளர் கொடுமையை வலிமையாய் உணர்த்தும் வரிகள் அரசன்
//

மிகுந்த நன்றிகள் சார்

arasan சொன்னது…

Uzhavan Raja கூறியது...
உண்மையிலேயே இது பாவிகளின் பூமி தான்...அண்ணே..

வலி மிகுந்த வரிகள் ..அண்ணே...//

நன்றி தம்பி

arasan சொன்னது…

Uzhavan Raja கூறியது...
//இளந்தென்றல் இவர்கள்
சேமித்த சில்லறைகளில்
கேட்கின்றது எதிர்கால
இந்தியாவின் அழுகை
குரல்!//

ஒரு நிமிடம் யோசிக்க வச்சிடிங்க அண்ணா...//
நல்லா யோசிங்க தம்பி ...

arasan சொன்னது…

நந்தினி மருதம் கூறியது...
நல்ல கவிதை.
எளிமையான சொற்கள்
எரிக்கின்ற சொற்கள்
வலி துளைக்கும் வரிகள்
மனம் வருத்தும் செய்தி.
------------------------------
நந்தினி மருதம், நியூயாரக், 2012-07-01//

உங்களின் முதல் வருகைக்கும் அன்பு கருத்துக்கும் என் நன்றிகள்

arasan சொன்னது…

Athisaya கூறியது...
முதல் வரியே அத்தனை வலியையும் சொல்லிவிட்தே..முத்துகள்.அருமை சொந்தமே வாழ்த்துக்கள்

அன்புடன் அதிசயா//

அன்பு கருத்துக்கு என் நன்றிகள் அதிசயா