புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஆகஸ்ட் 01, 2012

சேனல்களின் சேட்டைகள்...

இந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும் பல வருசத்துக்கு என்னால மறக்க முடியாது ... அப்படி யொரு அனுபவம், அதை உங்ககிட்ட பகிர்ந்து கொள்கிறேன் தோழமைகளே... (நான் பட்ட அவஸ்தை கொஞ்சமாய் உங்களுக்கும் ... )

ஆசையா ஒரு சேனல் வைத்தேன் அதுல குழந்தைகளுக்கான நடன போட்டி நடுவரா ரெண்டு தடியன்கள் இருந்தானுங்க குழந்தைகள் எல்லாம் காட்டுத்தனமா ஆட்டம் போடுதுக, அதுல மேக்கப் வேறு பார்க்கவே பயங்கர டெரரா இருந்துச்சி , ஒரு குழந்தை பொண்ணு வெஸ்டர்ன் டான்ஸ் ஆடுச்சி அதை பார்த்துட்டு நடுவனா வந்த தடியன் கம்மென்ட் சொல்றான் இவ தான் என் அடுத்த படத்தோட ஹீரோயின் என்று, அட நாறப்பயலே அது குழந்தைடா? அது கூடவா உனக்கு தெரியல, சரி இதுதான் இப்படி மண்டைய சூடு ஏத்துதே என்று காமெடி பார்க்கலாம் என்று இன்னொரு சேனலுக்கு மாற்றினேன் அதுல நேரலை போயிட்டுருக்கு போன் பண்ணி பேசுபவர்களை வித்தியாசமா சிரிச்சி காட்டுங்க என்று அந்த நிகழ்ச்சி தொகுப்பாளினி இன்னும் சூடு ஏத்த போன் பண்ணி பேசும் பதறுகளும் வெட்கமே இல்லாம சிரிச்சி சிரிச்சி என் பல்ஸ் பதம் பார்க்க, அடக்கருமமே என்று இன்னொரு சேனலுக்கு தாவினேன் ,(விடவா முடியும்)

அங்க இதைவிட கொடுமையா ஒரு வெள்ளைக்காரனும், வெள்ளைக்காரியும் அரை நிர்வாணமா நின்றுகொண்டு தமிழ்ல ஏவாரம் பண்ணுதுக, ஒரு நாளைக்கு ஒரு டீ குடிச்சா போதும் ஒரு வாரத்துல ஒன்பது இன்ச் உங்க இடுப்பு குறையும், இதோட விலை வெறும் 1800/- தான் ,என்று வெள்ளைக்காரி வெறுப்பேத்த, வெள்ளைக்காரன் அறுக்கிறது, நறுக்குறது, கூட்டுறது, ஒரே மெசின் போதும் ஒரு மணி நேரத்தில் 1000 கலோரிகளை குறைக்கின்றது என்று அவன் குரைத்துக்கொண்டிருக்க, இன்னைக்கு விதி சதி பண்ணுதே என்று இன்னொன்னுக்கு தாவினேன்..(மறுபடியும் தான்)

அதுல ஒரு அதிமேதாவி நடுவர், பேச வந்தவங்கள ரெண்டு குருப்பா பிரிச்சி உட்கார வைச்சுட்டு அவரே எல்லாத்தையும் பேசிட்டு இருந்தார், நம்பி வந்தவங்க மானத்தை வாங்கிட்டு இருந்தார் போதுமடா சாமி ன்னு உடனே தாவினேன் (விடமுடியுமா) அங்கிட்டு ஒரு பொம்பள கிட்ட தன் புருசன போட்டு மிதி மிதின்னு மிதிச்சிகிட்டே தன்னோட பாரத்தை எறக்கி வைக்குது ஒரு பொண்டாட்டி, ஏதோ அதுதான் ஒட்டுமொத்த குடும்ப பிரச்சினைகளை தீர்க்க வந்த தெய்வம் மாதிரி... எவன் செஞ்ச சதி இன்னைக்கு நம்மள இப்படி கொல்லுராயிங்களே ன்னு இன்னொன்னுக்கு தாவினேன் (மறுபடியுமா?)

அதுல தான் நான் ஆப் ஆனேன், ஆட்டம் போடுற நிகழ்ச்சி, பாவம் பொண்ணுங்களும், பசங்களும் உயிரை கொடுத்து ஆடுச்சிங்க, என்னமோ இவங்க தான் நடனத்த கண்டுபுடிச்ச நங்கை மாதிரி அந்த நடுவர் அம்மா கருத்து சொல்லி சும்மா கிழி கிழி ன்னு அவங்கள கிழிக்க, ஒரே ஓட்டம். (கொஞ்சம் நேரம் இருந்தா நம்மளையும் கிழிச்சிடுவாங்களோ என்ற பயம்தான்) இன்னொன்னுல கல்யாண வரவேற்பு கொடுத்து கல்லா கட்டிட்டாங்க, நெசமா கல்யாணம் பண்ணிகிட்ட சோடிகளுக்கு கூட இப்படி வரவேற்பு இருக்காது போல அந்த ரேஞ்சுக்கு அலப்பர... 

இப்படி கொடுத்த இவனுங்க கொடுத்த தொல்லைய சமாளிக்க முடியாம டிவிய ஆப் பண்ணிட்டேன்.(அவிங்க ஆப் பண்ண வைச்சுடாயிங்க) எங்கோ கிராமத்துல இதுல எந்த ஒன்னையோ சரோசா அக்காவும், வெள்ளையம்மா அக்காவும் வச்ச கண் வாங்க பாத்து ரசிச்சுகிட்டு இருக்கும் என்பதில் சந்தேகமே இல்ல .. மொத்த தமிழ்நாட்டுல சொச்ச பேரு தவிர்த்து எல்லாமே பார்த்தா என்ன ஆகும் எதிர்காலம். எப்படில்லாம் யோசிக்கிதுக அடிமையாக்க துடிக்கும் மூளைகள், நம்மை மழுங்கடிக்கவே இந்த நிகழ்ச்சிகள் என்பதை உணரும் நிலையில் இல்லை என்பதே கசப்பான உண்மை!

கொஞ்சமா ஆரம்பிச்ச முடி உதிர்தல் இன்னைக்கு முழு தலையும் மொழுக்கட்டின்னு ஆன கணக்கா எப்படி இருந்த சேனல்கள் எல்லாம் இன்னைக்கு இப்படி இருக்குதுக, மொட்டதலையிலும் நம்ம ஆளுங்க சடை பிண்ணி பூவு வைக்க ஆசை படுதுக... வெளங்கிரும் அய்யா வெளங்கிரும் ... 

நாம, நம்மோட ரசனை  மாறினால் தான் சேனல்களும் மாறும் என்பதை என்னைக்கு இந்த தமிழ் சாதி உணருதோ அன்னைக்கு எல்லாமே மாறும்...      

Post Comment

46 கருத்துரைகள்..:

அன்புடன் நான் சொன்னது…

சேட்டை சரியான சாட்டை!

அன்புடன் நான் சொன்னது…

உன்னோட நடை மாறியது போல உள்ளதே?

அன்புடன் நான் சொன்னது…

தரமாக கட்டுரை... பட்டறிவு(அனுபவம்) கற்றுதரும் நல்ல பாடம்.

பட்டிகாட்டான் Jey சொன்னது…

ஒவ்வொரு சானலா மாத்திகிட்டே கடைசிலே கரைசேந்துட்டீகபோல...கோட் பாய்...

சிகரம் பாரதி சொன்னது…

அருமையான பதிவு. உண்மையும் கூட.
நம்ம தளத்துக்கும் கொஞ்சம் வாங்க தலைவா?
http://newsigaram.blogspot.com/2012/07/01.html#.UBj6VWEe65w

Seeni சொன்னது…

sir!

namma makkalum!
Avanungalum--......


hum....
maarave maattaanunga....

MURUGANANDAM சொன்னது…

Channels should have moral responsibility. Leave about the Dance shows, talk shows, useless tv serials, etc. atleast the channels can try to give some kind of moral and useful education for viewers, daily for half an hour.

கவி அழகன் சொன்னது…

Iya kiramsthila irukkiravankalukku 1008 poluthu pokku 1008 velai. Sarosakka madfukku pullu vedda poyiruppa. Vellayamma vellama seiya poyiruppa. Nakarathan than tv ku munnukku ukkarurathu.nenkale oru chaneloda nikkama 10 chanel mathidinka.

CS. Mohan Kumar சொன்னது…

இம்புட்டு அக்கிரமமா நடக்குது. ஹும் :(

Angel சொன்னது…

அரசன் நல்லசாட்டையடி .மக்களை யோசிக்கவிடாம பண்ணிட்டாங்க .
சமீபத்தில் என் கவனத்துக்கு வந்த ஒரு விஷயம் ...கான்சர் நோய் என்று பொய்சொல்லி ஒரு லேடி பழி வாங்குதாம் அப்புறம்இன்னோர் சீரியலில் அதே நோயை சொல்லி வில்லிங்களுக்கு சப்போர்ட் செய்தாம் ஒரு லேடி .அந்த நோயின் கொடுமை அறிந்தவங்க /அதனால் பாடுபடுபவங்க மனசு எவ்ளோ பாடுபடும் .இதை எல்லாம் யாருமே தட்டி கேக்க மாட்டாங்களா ??

சிவரதி சொன்னது…

நாம, நம்மோட ரசனை மாறினால் தான் சேனல்களும் மாறும் என்பதை என்னைக்கு இந்த தமிழ் சாதி உணருதோ அன்னைக்கு எல்லாமே மாறும்.
நிச்சயமாக நாளைய தலைமுறை நல் வழி நடக்க நல்ல படைப்புக்களை.
நாமே உருவாக்கின் நாம்மவர் கைகளில் சம்ர்ப்பிப்பின் அநாகரிகங்களை.
அடியோடு நீக்களாம் நாமே.இனிய சமுதாயம் இன்றைய இளைஞர் கைகளில்.

Unknown சொன்னது…

ஹா ஹா ஹா சேம் பீலிங் பாஸ்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இப்படியெல்லாமா நடக்குது... ?

நன்றி...
(த.ம. 7)

உழவன் சொன்னது…

அண்ணே சூப்பர்..சரியான சாட்டையடி..

சென்னை பித்தன் சொன்னது…

தொல்லைக் காட்சிதான்!

Prem S சொன்னது…

படாத பாடு பட்டீங்க போல உண்மை தான் நீங்கள் சொல்வது ..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இந்த எளவுக்குதான் நான் இப்பிடிபட்ட புரோக்ராம்களை பார்ப்பதே இல்லை, அதே வேளையில் கோடீஸ்வரன் நிகழ்ச்சியும் டுபாகூர்தான், தொல்லையோ தொல்லை முடியல கொய்யால...!

ஹேமா சொன்னது…

பெயர் சொல்லாம எல்லாரையும் கடிச்சு வச்சிட்டீங்க அரசன்.நல்ல பாட்டுகள் மட்டுமே ரசனை இப்போதைக்கு !

கீதமஞ்சரி சொன்னது…

நம் மக்களைச் சொல்லணும். எந்நேரமும் மூளையை மழுங்கடிக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்துப் பார்த்து சுய சிந்தனையே பல சமயம் செயல்படாமல் போய்விடுது. நாட்டுக்கு மிகவும் தேவையான பகிர்வு. நன்றி அரசன்.

பால கணேஷ் சொன்னது…

இந்த எளவுக்குத்தான் நான் டிவியே பாக்குறதில்லன்னு வெச்சிருக்கேன். நானும் முன்ன ஒரு சமயம் இதெல்லாம் பாத்துட்டு நொந்து போய் ஆப் பண்ணினவன்தான். நிறையப் பேர்களோட சார்பா அருமையா எழுதிருக்கீங்க அரசன்.

சிவா சொன்னது…

உங்கள் கஷ்டத்தில் பங்கு கொள்ள வந்திருக்கும் புது தோழன் நான்....

r.v.saravanan சொன்னது…

சேனலின் சேட்டைக்கு நீங்கள் கொடுத்த சாட்டை அடி இது

arasan சொன்னது…

சி.கருணாகரசு கூறியது...
சேட்டை சரியான சாட்டை!//

மிகுந்த நன்றிங்க மாமா

arasan சொன்னது…

சி.கருணாகரசு கூறியது...
உன்னோட நடை மாறியது போல உள்ளதே?//

ஒரு மாறுதலுக்காக மாமா .. மீண்டும் பழையபடி திரும்புகிறேன்

arasan சொன்னது…

சி.கருணாகரசு கூறியது...
தரமாக கட்டுரை... பட்டறிவு(அனுபவம்) கற்றுதரும் நல்ல பாடம்.//

உள்ளம் நிறைந்த நன்றிகள் மாமா ..

arasan சொன்னது…

Jey கூறியது...
ஒவ்வொரு சானலா மாத்திகிட்டே கடைசிலே கரைசேந்துட்டீகபோல...கோட் பாய்...//

ஹா ஹா .. வெறுத்து ஓடி வந்துட்டேன்...சார்

arasan சொன்னது…

sigaram bharathi கூறியது...
அருமையான பதிவு. உண்மையும் கூட.
நம்ம தளத்துக்கும் கொஞ்சம் வாங்க தலைவா?
http://newsigaram.blogspot.com/2012/07/01.html#.UBj6VWEe65w//

வருகிறேன் தலைவரே ...
கருத்துக்கு என் நன்றிகள்

arasan சொன்னது…

Seeni கூறியது...
sir!

namma makkalum!
Avanungalum--......


hum....
maarave maattaanunga....//

மாறனும் என்று தான் ஆசை .. என்னைக்கு நடக்குமோ .. தெரியலையே சார்

arasan சொன்னது…

MURUGANANDAM கூறியது...
Channels should have moral responsibility. Leave about the Dance shows, talk shows, useless tv serials, etc. atleast the channels can try to give some kind of moral and useful education for viewers, daily for half an hour.//

உண்மைதான் சார் .. ஏதாவது ஒரு வகையில் ஒரு நாளைக்கு குறைந்த பட்ச நேரத்தையாவது நல்ல நிகழ்சிகளுக்கு செலவிடலாம் ,.. உங்களின் கருத்துக்கு என் நன்றிகள் சர்

arasan சொன்னது…

கவி அழகன் கூறியது...
Iya kiramsthila irukkiravankalukku 1008 poluthu pokku 1008 velai. Sarosakka madfukku pullu vedda poyiruppa. Vellayamma vellama seiya poyiruppa. Nakarathan than tv ku munnukku ukkarurathu.nenkale oru chaneloda nikkama 10 chanel mathidinka.//

இல்லை நண்பரே .. இப்போ கிராமத்திலும் டிவி க்கு அடிமை நிறையா இருக்குதுக ..
நானே கண்டிருக்கிறேன் ..

arasan சொன்னது…

மோகன் குமார் கூறியது...
இம்புட்டு அக்கிரமமா நடக்குது. ஹும் :(//

ஆமா சார்

arasan சொன்னது…

angelin கூறியது...
அரசன் நல்லசாட்டையடி .மக்களை யோசிக்கவிடாம பண்ணிட்டாங்க .
சமீபத்தில் என் கவனத்துக்கு வந்த ஒரு விஷயம் ...கான்சர் நோய் என்று பொய்சொல்லி ஒரு லேடி பழி வாங்குதாம் அப்புறம்இன்னோர் சீரியலில் அதே நோயை சொல்லி வில்லிங்களுக்கு சப்போர்ட் செய்தாம் ஒரு லேடி .அந்த நோயின் கொடுமை அறிந்தவங்க /அதனால் பாடுபடுபவங்க மனசு எவ்ளோ பாடுபடும் .இதை எல்லாம் யாருமே தட்டி கேக்க //

செம கொடுமை அக்கா .. நினைத்து பார்க்கவே நெஞ்சம் கொதிக்கின்றது .. வரையறை இல்லாம இருக்கு...
உங்களின் கருத்துக்கு என் நன்றிகள்

arasan சொன்னது…

சிவரதி கூறியது...
நாம, நம்மோட ரசனை மாறினால் தான் சேனல்களும் மாறும் என்பதை என்னைக்கு இந்த தமிழ் சாதி உணருதோ அன்னைக்கு எல்லாமே மாறும்.
நிச்சயமாக நாளைய தலைமுறை நல் வழி நடக்க நல்ல படைப்புக்களை.
நாமே உருவாக்கின் நாம்மவர் கைகளில் சம்ர்ப்பிப்பின் அநாகரிகங்களை.
அடியோடு நீக்களாம் நாமே.இனிய சமுதாயம் இன்றைய இளைஞர் கைகளில்.//

மீட்டெடுக்க முயற்சி செய்வோம் .. கருத்துக்கு என் நன்றிகள்

arasan சொன்னது…

இரவு வானம் கூறியது...
ஹா ஹா ஹா சேம் பீலிங் பாஸ்//

நன்றிங்க பாஸ்

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
இப்படியெல்லாமா நடக்குது... ?

நன்றி...
(த.ம. 7)//

இன்னும் நெறையா நடக்குதுக சார்

arasan சொன்னது…

Uzhavan Raja கூறியது...
அண்ணே சூப்பர்..சரியான சாட்டையடி..//

நன்றி தம்பி

arasan சொன்னது…

சென்னை பித்தன் கூறியது...
தொல்லைக் காட்சிதான்!//

சரியான உண்மை சார்

arasan சொன்னது…

பிரேம் குமார் .சி கூறியது...
படாத பாடு பட்டீங்க போல உண்மை தான் நீங்கள் சொல்வது ..//

ரொம்ப ரொம்ப அன்பரே

arasan சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
இந்த எளவுக்குதான் நான் இப்பிடிபட்ட புரோக்ராம்களை பார்ப்பதே இல்லை, அதே வேளையில் கோடீஸ்வரன் நிகழ்ச்சியும் டுபாகூர்தான், தொல்லையோ தொல்லை முடியல கொய்யால...!//

எல்லா எழவும் இப்படி தான் அண்ணே .. எல்லாமே போலிகள் தான்

arasan சொன்னது…

ஹேமா கூறியது...
பெயர் சொல்லாம எல்லாரையும் கடிச்சு வச்சிட்டீங்க அரசன்.நல்ல பாட்டுகள் மட்டுமே ரசனை இப்போதைக்கு !//

இதுக்கீல்லாம் பெயர் சொல்ல வேண்டிய அவசியம் இல்லைங்க அக்கா ... உங்களின் கருத்துக்கு என் நன்றிகள்

arasan சொன்னது…

கீதமஞ்சரி கூறியது...
நம் மக்களைச் சொல்லணும். எந்நேரமும் மூளையை மழுங்கடிக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்துப் பார்த்து சுய சிந்தனையே பல சமயம் செயல்படாமல் போய்விடுது. நாட்டுக்கு மிகவும் தேவையான பகிர்வு. நன்றி அரசன்.//

உங்களின் ஆழ்ந்த வாசிப்பிற்கு என் வணக்கங்கள் மஞ்சரி அக்கா

arasan சொன்னது…

பால கணேஷ் கூறியது...
இந்த எளவுக்குத்தான் நான் டிவியே பாக்குறதில்லன்னு வெச்சிருக்கேன். நானும் முன்ன ஒரு சமயம் இதெல்லாம் பாத்துட்டு நொந்து போய் ஆப் பண்ணினவன்தான். நிறையப் பேர்களோட சார்பா அருமையா எழுதிருக்கீங்க அரசன்.//

என் நன்றிகள் சார் ...

arasan சொன்னது…

சிவா கூறியது...
உங்கள் கஷ்டத்தில் பங்கு கொள்ள வந்திருக்கும் புது தோழன் நான்...//

உங்களின் தோழமைக்கு என் நன்றிகள்...

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
சேனலின் சேட்டைக்கு நீங்கள் கொடுத்த சாட்டை அடி இது//

மிகுந்த நன்றிகள் சார்

பெயரில்லா சொன்னது…

3 சேனல்களில் 3 அம்மாக்கள் கொடுக்கும் தீர்ப்புகள்.
ஒரு படத்தயாரிப்பாளர் அம்மா ஒரு தீர்ப்பு தருகிறார் பாருங்கள்.
ஒரு பெண் ஒரு பையனுடன் தவறு செய்து விடுகிறாள்.அவனுடன்தான் வாழ்வேன் என்கிறது அந்த பெண்.அம்மா சொல்கிறார்.அவனுடன் எப்படி வாழ்வாய்.அவன் 20 வயது.என்ன வேலை,என்ன காசு இருக்கிறது அவனுக்கு.அதனால் உன் பெற்றோருடன் போ என்கிறார்.தவறு செய்து விட்டேன் இனி அவன்தான் என் கணவன் என்று சொல்லும் அந்த பெண்ணை,காசுள்ள,சம்பாதிக்கும் ஒருவனை கல்யாணம் செய்து கொள் என்று தீர்ப்பு சொல்லி நம் பண்பாட்டை காப்பாற்றினார்.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

//மொத்த தமிழ்நாட்டுல சொச்ச பேரு தவிர்த்து எல்லாமே பார்த்தா என்ன ஆகும் எதிர்காலம்.// நியாயமான கேள்வி என் மனதிலும் ஓடும் கேள்வி.