என்னை விட பல பதிவுலக தோழமைகள் பதிவர் திருவிழாவை வெகு சிறப்பாய் எழுதி விட்டார்கள், என் பங்கிற்கு கொஞ்சமாய்! எதிர்பார்த்ததை விட பதிவர் திருவிழா வெகு சிறப்பாகவே நடைபெற்றதில் மன நிறைவை அடைய செய்தது.ஒளி, ஒலி அமைப்பு தான் கொஞ்சம் காலை வாரிவிட்டது மற்றபடி விழாவிலோ , திட்டமிடுதலிலோ எந்த குறையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை!
(சுய அறிமுகம் செய்து கொள்ளும் காட்சி)
மற்றபடி இதுவரை நேரில் சந்திக்காத உறவுகளை அன்று சந்தித்து உறவாடியதில் உள்ளம் நிறைந்தது!மூத்த பதிவர்கள் என்கிற இளம் எழுத்தாளர்களின் பாராட்டை காண்கையில் கொஞ்சம் பொறாமை எட்டி பார்த்தது, இந்த வயதில் நம்மால் எழுத முடியுமா? குறிப்பாக மதிப்பிற்குரிய அய்யா புலவர் சா. ராமானுசம் என்கிற இளைஞரின்
பேச்சில் நான் கரைந்து போனேன்!
இது தான் முதல் மேடை என்பதினால் சுய அறிமுகம் என்னை சோதித்து தான் பார்த்தது, மனதில் பதிந்த வார்த்தைகள் அனைத்தும் மேடை ஏறியதும் முற்றிலுமாய் மறந்து என்ன பேசுவது என்று தெரியாமல் எதையோ உளறி விடை பெற்றேன்!
அப்புறம் கவியரங்கம், கொஞ்சம் நடுக்கமாகதான் இருந்தது இருந்தும் ஒருவழியாக சமாளித்து கவிதை பாடி முடித்தேன்! அன்றைய பொழுது ஏதோ ஒரு புதிய உலகத்தில் இருந்தது போலதான் இருந்தது! நெகிழ்வான நாட்களில் இந்த திருவிழாவும் நிச்சயம் இடம் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை!
(கவிதை வாசிக்கும் காட்சி)
மிகவும் ஆர்வமுடன் விழாவில் கலந்து கொண்ட குடந்தையூர் தளம் திரு. ஆர். வி. சரவணன் சார் முகத்தில் கண்ட மகிழ்வை என்னால் இங்கு வார்த்தையில் விவரிக்க இயலவில்லை அப்படியொரு சந்தோஷம் எனக்கும் இருந்தது!
மற்றபடி இந்த மாபெரும் திருவிழாவிற்கு வித்திட்டு அதை வெற்றிகரமாக செய்து முடிக்க துணையாய் நின்ற அனைத்து நண்பர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும், நன்றிகளும்!
இது போன்ற நிகழ்வு வருடம் ஒரு முறை நடந்தால் நட்பின் வலிமை கூடும் , பதிவர்களின் தோழமை சிறக்கும், பதிவுலகம் மென்மேலும் வளரும் என்று கூறிக்கொண்டு விடைபெறுகிறேன்! நன்றி
Tweet |
30 கருத்துரைகள்..:
அந்த கவிதையை பதிவிடுங்கள் அன்பரே
சந்திப்பு வெற்றி பெற்றதுக்கு வாழ்த்துக்கள்
இந்த விழா மூலம் எனக்கு கிடைத்த நல்ல நண்பர்களில் நீங்களும் ஒருவர். அதிகம் பேசாவிடினும் உங்களை மனதுக்கு நெருக்கமான நண்பராக உணர்ந்தேன்; நான் உங்களை எடுத்த போட்டோ தெளிவாய் இருக்கு ஓரிரு நாளில் வெளியாகும்
பதிவர் சந்திப்பில் பங்கேற்றது ஒரு மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும்! வாழ்த்துக்கள்!
-காரஞ்சன்(சேஷ்)
அற்புதமான அனுபவம் பலபேர் எழுதினாலும் ஒவ்வொருவருடையதும் வெவ்வேறு கோணங்களில் வெளிப்படும்
பகிர்வுக்கு நன்றி.
kalakkal
சிம்பிள் சாம்பிள் (TM 5)
வணக்கம் சகோதரரே...
மௌனம் பேசிவந்த தங்கள் கவிதை
மிக அழகாக இருந்தது...
நேரமின்மையால் என்னால் பதிவு போடமுடியவில்லை..
விரைவில் பதிவிடுகிறேன்...
தங்களைப் போல எனக்கும் நிறைய தோழமைகளை
சந்தித்ததில் பெருமகிழ்ச்சி...
ராஜா, வாசித்த கவிதை எங்கே? அதன் காணொளி எங்கெ?... அதை மட்டும் வெட்டி ஒட்டி உங்கள் தலத்தில் போட்டு உங்கள் ரசிகர்களுக்கு விருந்தளிக்கவும் :)
//ஒருவழியாக சமாளித்து கவிதை பாடி முடித்தேன்! //
அண்ணே சீக்கிரம் அந்த கவிதையை பதிவிடுங்கள்...
உங்களை சந்தித்தலில் மிக்க மகிழ்ச்சி...
நன்றி கபில் சார்...
வருடா வருடம் விழா தொடரும்... (TM 10)
டி.என். முரளிதரன் அவர்கள் சொன்னது போல் ஒவ்வொருவர் அனுபவமும் ஒவ்வொரு விதத்தில் ரசிக்கத்தக்கதாய் உள்ளது. உளப்பகிர்வுக்கு நன்றி அரசன்.நண்பரகள் பலரின் வேண்டுகோளுக்கிணங்க, விரைவில் நீங்கள் அங்கு வாசித்தக் கவிதையையும் வெளியிடவும். ரசிக்கக் காத்திருக்கிறோம்.
மாபெரும் திருவிழாவிற்கு வித்திட்டு அதை வெற்றிகரமாக செய்து முடிக்க துணையாய் நின்ற அனைத்து நண்பர்களுக்கும் நன்றி
kalakkal arasan
அண்ணே உங்க போட்டோ சூப்பரு
மிகவும் ஆர்வமுடன் விழாவில் கலந்து கொண்ட குடந்தையூர் தளம் திரு. ஆர். வி. சரவணன் சார் முகத்தில் கண்ட மகிழ்வை என்னால் இங்கு வார்த்தையில் விவரிக்க இயலவில்லை அப்படியொரு சந்தோஷம் எனக்கும் இருந்தது!
உண்மை தான் அரசன் அத்தனை நட்புக்களையும் ஓரிடத்தில் பார்த்ததால் வந்த உற்சாகம் அது
Prem Kumar.s கூறியது...
அந்த கவிதையை பதிவிடுங்கள் அன்பரே
சந்திப்பு வெற்றி பெற்றதுக்கு வாழ்த்துக்கள்//
முன்னரே நான் வெளியிட்ட கவிதைதான் நண்பரே ..
மீண்டும் ஒருமுறை வெளியிடுகிறேன்
மோகன் குமார் கூறியது...
இந்த விழா மூலம் எனக்கு கிடைத்த நல்ல நண்பர்களில் நீங்களும் ஒருவர். அதிகம் பேசாவிடினும் உங்களை மனதுக்கு நெருக்கமான நண்பராக உணர்ந்தேன்; நான் உங்களை எடுத்த போட்டோ தெளிவாய் இருக்கு ஓரிரு நாளில் வெளியாகும்//
அண்ணே நாம் இருவரும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை எனினும் நீங்கள் கூறியது போல் நெருக்கம் அதிகமாய் உணர்கிறேன் ..
உங்கள் போன்ற உறவு கிடைத்தமைக்கு பெரும் மகிழ்வு அடைகிறேன் ..
பகிருங்கள் நான் பார்த்து மகிழ்கிறேன்
Seshadri e.s. கூறியது...
பதிவர் சந்திப்பில் பங்கேற்றது ஒரு மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும்! வாழ்த்துக்கள்!
-காரஞ்சன்(சேஷ்)//
உண்மைதான் சார் ... ரொம்ப நெகிழ்வான தருணங்கள் அவை ..
T.N.MURALIDHARAN கூறியது...
அற்புதமான அனுபவம் பலபேர் எழுதினாலும் ஒவ்வொருவருடையதும் வெவ்வேறு கோணங்களில் வெளிப்படும்
பகிர்வுக்கு நன்றி.//
ஆம் உண்மைதான் சார்
வேடந்தாங்கல் - கருண் கூறியது...
kalakkal//
நன்றிங்க ஆசிரியர் அண்ணே
வரலாற்று சுவடுகள் கூறியது...
சிம்பிள் சாம்பிள் (TM 5)//
நன்றிங்க
மகேந்திரன் கூறியது...
வணக்கம் சகோதரரே...
மௌனம் பேசிவந்த தங்கள் கவிதை
மிக அழகாக இருந்தது...
நேரமின்மையால் என்னால் பதிவு போடமுடியவில்லை..
விரைவில் பதிவிடுகிறேன்...
தங்களைப் போல எனக்கும் நிறைய தோழமைகளை
சந்தித்ததில் பெருமகிழ்ச்சி...//
நேரம் கிடைக்கையில் பதிவிடுங்கள் அண்ணே //. ரொம்ப மகிழ்ச்சி தங்களை சந்தித்து உரையாடியதில்
பட்டிகாட்டான் Jey கூறியது...
ராஜா, வாசித்த கவிதை எங்கே? அதன் காணொளி எங்கெ?... அதை மட்டும் வெட்டி ஒட்டி உங்கள் தலத்தில் போட்டு உங்கள் ரசிகர்களுக்கு விருந்தளிக்கவும் :)//
இன்னும் எடுக்கவில்லை .. கவிதை முன்னரே பதிந்த கவிதை தான் மீண்டும் பகிர்கிறேன் அண்ணே
Uzhavan Raja கூறியது...
//ஒருவழியாக சமாளித்து கவிதை பாடி முடித்தேன்! //
அண்ணே சீக்கிரம் அந்த கவிதையை பதிவிடுங்கள்...//
சரி தம்பி
திண்டுக்கல் தனபாலன் கூறியது...
உங்களை சந்தித்தலில் மிக்க மகிழ்ச்சி...
நன்றி கபில் சார்...
வருடா வருடம் விழா தொடரும்... (TM 10)//
நன்றிங்க சார்
கீதமஞ்சரி கூறியது...
டி.என். முரளிதரன் அவர்கள் சொன்னது போல் ஒவ்வொருவர் அனுபவமும் ஒவ்வொரு விதத்தில் ரசிக்கத்தக்கதாய் உள்ளது. உளப்பகிர்வுக்கு நன்றி அரசன்.நண்பரகள் பலரின் வேண்டுகோளுக்கிணங்க, விரைவில் நீங்கள் அங்கு வாசித்தக் கவிதையையும் வெளியிடவும். ரசிக்கக் காத்திருக்கிறோம்.//
உண்மைதான் அக்கா .. விரைவில் வெளியிடுகிறேன்
r.v.saravanan கூறியது...
மாபெரும் திருவிழாவிற்கு வித்திட்டு அதை வெற்றிகரமாக செய்து முடிக்க துணையாய் நின்ற அனைத்து நண்பர்களுக்கும் நன்றி
kalakkal arasan//
நன்றிங்க சார்
சீனு கூறியது...
அண்ணே உங்க போட்டோ சூப்பரு//
நன்றிங்க சீனு
r.v.saravanan கூறியது...
மிகவும் ஆர்வமுடன் விழாவில் கலந்து கொண்ட குடந்தையூர் தளம் திரு. ஆர். வி. சரவணன் சார் முகத்தில் கண்ட மகிழ்வை என்னால் இங்கு வார்த்தையில் விவரிக்க இயலவில்லை அப்படியொரு சந்தோஷம் எனக்கும் இருந்தது!
உண்மை தான் அரசன் அத்தனை நட்புக்களையும் ஓரிடத்தில் பார்த்ததால் வந்த உற்சாகம் அது//
எனக்கும் சார் அதே உணர்வு...
சிறப்பான விழாவில் பல புதிய அறிமுகங்கள்!தொடரட்டும் தொடர்பு!
தடுமாற்றம் இல்லாமல் நன்றாய்தான் கவிதை வாசித்தீர்கள். கலந்துக்க முடியவில்லைஎன்றாலும் நேரலையில் கம்யூ்ட்டரில் அனைவரையும் சந்தித்தேன். கவியரங்கில் வாசித்த கவிதையை பதிவிடுங்கள் விரைவில்.
கருத்துரையிடுக