புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

செப்டம்பர் 26, 2012

உருக்கமான காதல் கதை

மச்சி உன் ஆளு வருதுடா...

எங்கடா மாப்ள? 

அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா..

ஆமாண்டா, என்னையே முறைச்சி பார்த்துகிட்டு வரா மச்சி ...

அவ எங்க பார்த்தாலும் உன்னையே பார்ப்பதா சொல்லுவ, ஆளை விடு நான் கெளம்புறேன்.

இரு மச்சி இப்ப போய் என்னா பண்ண போற, இருடா ..

நீயுந்தான் மூணு மாசமா, நாய் மாதிரி சுத்துற, என்னைக்காவது உன்ன பார்த்து சின்னதா சிரிச்சிருக்காளா?

அடப்போடா, போன வாரம் அவ வீட்டுக்கே போயிட்டு வந்துட்டேன்.

என்னடா மாப்ள சொல்ற...

அட ஆமாண்டா, போன வாரம் அவங்க வீட்டுல கொலு வச்சிருந்தாங்க, எங்களையும் கூப்பிட்டிருந்தாங்க, நானும், எங்க அம்மாவும் போயிருந்தோம்டா,

டேய் மச்சி கலக்குறடா.

சொல்றத கேளு மச்சி, இவள மாதிரி இல்லடா இவளோட அப்பா, எப்படி பேசினார் தெரியுமா, அவ்வளவு அன்பா பேசுனார் மச்சி .

உன் விஷயம் தெரியாது, தெரிஞ்சிருந்தா உன் காது அவர் கையில் இருந்திருக்கும்.

எதையும் நல்லதாவே யோசிக்க மாட்டியாடா?

சரி விடு மச்சி, உன் ஆளு உன்கிட்ட அன்னைக்காவது பேசுச்சா.?

மச்சி சிவப்பு கலர் ட்ரெஸ்ல சும்மா ஏஞ்சல் மாதிரி இருந்தாடா.. என் அஞ்சலை மச்சி அவ என் அஞ்சலை டா.

டேய் பேசினியா இல்லையா, அதை கேட்டா எததையோ உளறுற .

எங்க மச்சி வழக்கம் போலவே தான், பார்த்தா, போய்ட்டா..

நீ இப்படியே ஓரமா நின்னு வேடிக்கை பார்க்க தான் மச்சி லாயக்கு..என்னைக்கு தான் தைரியமா பேச போறியோ?

நீ வேணா பாரு மாப்ள, 
நாலாப்பு முடிச்சி அஞ்சாப்பு போறதுக்குள்ள என் காதலை அவகிட்ட சொல்றேனா இல்லையானு பாருடா.. இது இந்த கணக்கு புத்தகத்து மேல சத்தியம்டா.....

(நாங்கெல்லாம் அப்பவே அப்படி, இப்ப சொல்லவா வேணும், இந்த கதைக்கும் நம்ம திடங்கொண்டு போராடு  சீனுவுக்கும் சத்தியமா எந்த சம்பந்தமுமில்லை)

Post Comment

செப்டம்பர் 25, 2012

ஒருத்தியின் இறுதி வரிகள் ...














தோழிகளில் எவளோ ஒருத்தி 
செய்து வைத்த அறிமுகம்
ஆரம்பத்தில் அதிகம் நாட்டமில்லை
பிறகொரு பொழுதில்
என்னதான் இருக்குமென்று 
உள் நுழைந்தேன்!
அடுக்கடுக்காய் அதீத 
இன்பத்தில் அகம் மகிழ்ந்தேன்!
மனமது மாறியது!
குலுங்க குலுங்க கை குலுக்கினேன்,
எவரென்று தெரியாது 
இருப்பினும் உறவாடினோம்!
எத்தனை இரவுகள் 
எத்தனை பகல்கள், 
வேண்டுமென்றே தொலைத்திருப்பேன்!
வேண்டாமென்று 
புத்தியுள்ளவர்கள் கூறுகையில் 
உமக்கென்ன தெரியும் என்று சாடினேன்!
என்னை கொண்டாடுகையில் 
ஏதோ நானும் சாதித்துவிட்ட பெரும் நிறைவு!
நான் நானாகவே உலாவினேன்,
என்னை சுற்றிய முகங்களனைத்தும்
முகமூடி என்பதை அறியாமல்!
அருகிலிருந்த உறவை உதறினேன் 
எங்கோ இருந்த பதறுகளை நம்பி!
திரைக்கு முன்னாடி அமர்ந்து 
எண்ணியதை எழுதினேன் ஏளனம் கொண்டு!
நொடியில் நூறு விருப்பங்கள் சேருகையில் 
கயிரறுந்த காளையானது மனசு!
காலம் கொடியது, 
காட்சிகள் மாறியது,
என்னின் ஒற்றை புகைப்படம் கொண்டு 
என் வாழ்வை திசை மாற்றினான்
நயவஞ்சக நண்பன்!
எல்லாம் அறிகையில் 
ஆயிரம் நண்பர்களும்,
இருந்த இடத்தில் இருந்தே ஆறுதல் "குறி"
நெஞ்சில் ஏறிய பாரம் 
புத்தியில் உரைத்தது 
நானும் பெண் தானென்று!
போதும், 
இதோ இதுதான் 
என் பயணத்தின் முற்றுபுள்ளி 
என்னை நேசித்த உறவுகளிடம் 
இதையும் சேர்த்து விடும் 
இந்த "அரட்டை குழுமம்"
முகம் தொலைத்தவளின் 
இந்த முகவரி அற்ற கடிதம் 
இன்னொருவளின் திசையை 
சீராக்கினால் போதும் 
நான் சாந்தி அடைவேன்!

(இதை கவிதை என்றோ, இல்லை கடிதம் என்றோ எடுத்துக்கொள்வது அவரவர் மனநிலையை பொருத்தது, எனக்கும் இனங்காண தெரியவில்லை)

Post Comment

செப்டம்பர் 24, 2012

ஓராயிரம் இடிகள் ...




நீண்ட யோசனைக்குப் பின் 
ஒரு வழியாக 
விரலிடுக்கில் சிறைவைக்கப்பட்டிருந்த 
வண்ணத்துப்பூச்சி விடுதலையானது!

விரலில் ஒட்டியிருந்த வண்ணத்துகள்,
உயிரின் புரிதலையும்,
சுதந்திர சுவாசத்தின் 
அவசியத்தையும் வெளிச்சமிட்டு 
ஓராயிரம் இடிகளை 
ஒருசேர என்னுள் இறக்கியது .
நன்றி : கூகுள் 

Post Comment

செப்டம்பர் 22, 2012

செம்மண் தேவதை # 4





அரிதாரமின்றி 
ஆடம்பர அழகு அவளுக்கு!

கசங்கிய உடைதான் 
கவனமாய் உடுத்தி 
என்னை கலவரப்படுத்தும் 
கன்னித்தேவதை அவள்!

நகப்பூச்சு இல்லை 
நறுமணமுமில்லை
எனக்குள் நுழைந்த 
மழைச்சாரல் அவள்!

என் வெற்றுத்தாளில் 
ஒற்றை பார்வையில் 
செம்மாந்து கவி நிரப்பிச்செல்லும் 
செல்ல இராட்சசியும் அவளே!

Post Comment

செப்டம்பர் 20, 2012

இதுக்கு பேரு என்னங்க ....




கருப்பனாருக்கு 
ஊர்க்கூடி கறி
படையலிடுகையில்
அவளும் வருவாளென்று 
காத்திருக்கையில் 
அந்த பக்கமாய் 
வந்த வடிவு சொன்னாள்,  
அவளுக்கு இரத்த நெடி 
பிடிக்காதென்று!
அந்த நொடியிலிருந்து
அடித்துக் கொள்கிறது 
மனம்,
ரத்தத்தில் 
எழுதியதாய் கூறி 
சாயத்தில் 
எழுதிய கடிதத்தை 
இனங்கண்டு கொள்(ல்)வாளோ?
என்று!!!

பட உதவி : கூகுள் 

Post Comment

செப்டம்பர் 18, 2012

ஓர் கார்கால இரவில் ...


ஓர் கார்கால இரவில் 
கொஞ்சமாய் விலகியிருந்த 
சன்னலிடுக்கில் 
நுழைந்திருந்த
இரண்டு மின்மினிகளின் 
வெளிச்சத்தில் தொடங்குகிறது  
எங்களின்  
போர்க்கால முதலிரவு....


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஹைக்கூ # 6

எந்திர கலப்பை 
கிழித்த வடு 
காளையின் முகத்தில்... 

Post Comment

செப்டம்பர் 13, 2012

ஏதோ என்னால முடிஞ்சது...

அதிபுத்திசாலி எவனோ ஒருத்தன் பண்ணிய வேலை இது .



கல்லணைய சுற்றி பார்க்க வந்திருக்கும் மாடுகள் ..


மிச்ச வைக்காம தின்ற மாடு...நகரத்தில் பாவம் எங்கிட்டு புல் கிடைக்கும் (அந்த கட்சிக்கும் எனக்கும் துளியும் சம்பந்தமில்லை னு சொன்னா நம்பவா போறீங்க) 


முகம் தொலைந்து வரும் கடுதாசி பொட்டிகள்


மாமன்னன் கல்லணையை பார்வையிடுகிறார் போலும்..


இப்புடி தான் சிலையாய் போனார்கள் நடப்பு விவசாயிகளும் ..


லட்ச ரூவா கொடுத்து நகை வாங்கினா ஒத்த ரூவா குபேர லட்சமி படம் இலவசமாம் (அட்சய திருதியை பரிசாம்)


இதெல்லாம் நம்ம தமிழ்நாட்டுல தான் சாத்தியம் 


அழகாய் போஸ் கொடுக்கும் நம் முன்னவர் ..


கடைசியா ஒன்னே ஒன்னு ..


கடைசி பட உதவி : கூகுள் 


Post Comment

செப்டம்பர் 12, 2012

சீண்டிய கம்பெனியும், சிக்காத பதிவரும் ...


நேற்று காலை சுமார் பதினொரு மணி இருக்கும், ஒரு பொண்ணு போன் பண்ணி, யாரு அரசன் சாரா, சார் உங்களுக்கு ஒரு பரிசு ஒன்று விழுந்திருக்கு, எங்க ஆபிஸ் வந்து வாங்கிக்கோங்க என்றதும் எனக்கு என்ன பேசுவது என்று கூட புரியல, நான் இப்போ ட்ராபிக்ல இருக்கேன், கொஞ்ச நேரம் கழிச்சு பேசுறேன்னு சொல்லிட்டு வைச்சிட்டேன்....

கொஞ்ச நேரம் கழிச்சு என்னா விவரம்னு போன் பண்ணி கேட்டா, சார் நீங்க ஜனவரி மாசம் நடந்த புத்தக திருவிழாவில் எழுதி போட்ட கூப்பனுக்கு பரிசு விழுந்திருக்கு என்று சொல்லிச்சு, கூடவே நீங்க உங்க குடும்பத்தோட வந்து கலந்துகிட்டு பரிசை வாங்கி கொள்ளுங்க, இன்னைக்கு சாயந்திரம் நாலு மணிக்கு எங்க அலுவலகத்துக்கு வாங்க என்று அந்த பொண்ணு சொன்னாங்க...

இது என்னடா புது பஞ்சாயத்தா இருக்கே, நம்மளே இங்க தனி கட்டையா கிடந்து அல்லாடுறோம் இதுல எங்கிட்டு குடும்பத்த கூட்டியாறது, மேடம் நான் இங்க தனியா இருக்கேன் குடும்பம் எல்லாம் ஊர்ல இருக்கு என்று சொன்ன அடுத்த வினாடியே (ரொம்ப அனுபவம் போல) ஒன்னும் பிரச்சினை இல்லை சார் நீங்க நண்பர்களோ, உறவினர்களோ அவர்களின் குடும்பத்தோடு கலந்து கொண்டு வாங்கி கொள்ளலாம் என்று சொல்லுச்சு ரொம்ப பதுவுசா...

சரி என்னடா இந்த புள்ள இவ்வளவு பாசத்த கொட்டுதே என்று ஒவ்வொரு நண்பனா கேட்டா மாப்ள நான் இன்னைக்கு பிசி, தம்பி நான் பிசி என்றே பதில் வந்துச்சு, கடைசியா ஒரு நண்பர புடிச்சி விவரத்த சொல்லி வாங்கண்ணே போயிட்டு வருவோம் என்றதும் சரி தம்பி போகலாம், இது ஏதோ கோல்மால் குருப்பா இருக்கலாம் என்று தன் கருத்த சொன்னார், இல்லைண்ணே அந்த புள்ள பேசுனத வச்சி பாக்கும் போது நல்ல புள்ளையா தெரியுது (அம்புட்டு நல்லவனா நீ ), அப்படீல்லாம் இருக்காது என்று சொல்லி நான், அவர், அவரோட மனைவி மூணு பேரும் சொன்ன நேரத்துக்கு போனோம்...

போனதுக்கு அப்புறம் தான் தெரியுது, அது ஒரு நூதன மார்க்கட்டிங் என்று. வந்த அஞ்சு நிமசத்துல பரிசு வாங்கிட்டு நீங்க கெளம்பலாம் சொன்ன அந்த புள்ளைய காணோம் (ஏமாந்தியா?) எவனோ ஒருத்தன் இருந்தான், சார் ஒரு மணி நேர ப்ரோகிராம் இருக்கு , அரை மணி நேர  ப்ரோகிராம் இருக்கு நீங்க எத செலக்ட் பண்றீங்க என்றான், சார் நான் வந்தது பரிசு வாங்க உங்க பாடத்த கேட்க இல்ல என்றேன், இல்ல சார் உங்களுக்கு பரிசு தரும் முன்னர் இந்த நிகழ்ச்சிய கட்டாயம் அட்டன் பண்ணனும் என்றான், (சிக்கிட்டோம் டா ) சரி என்று அரை மணி நேரத்தை செலக்ட் பண்ணி உள்ளே போனா, சார் உங்க பேர் என்ன, என்ன பண்றீங்க, வயசு என்ன, உயரம் என்ன? குளிச்சிங்களா?, சாப்பிட்டிங்களா, சாப்ட்ட கைய கழுவிநிங்களா? என்ற ரேஞ்சுக்கு கேள்வி மேல கேள்வி கேட்டு கொன்னான், இத பாருங்க நான் வந்தது இதுக்கு இல்ல, பரிசு வாங்க (செவ்வாழை இன்னுமாடா நம்புற இவனுங்கள) என்றதும், சார் இந்த மாதிரி ப்ரோக்ராம் அட்டன் பண்ணினா தான் பரிசு தருவோம் என்றான், (அட மாடுமுட்டிகளா எதுக்கோ கூப்புட்டு இப்படி ஒருத்தன கொன்னா என்னடா உங்க நியாயம்?) அந்த மாதிரி பரிசு மண்ணாங்கட்டி பரிசு எனக்கு வேணாம் ஆளை விடுடா என்று கெளம்பினோம்.

உடனே ஓடி வந்து சார் இருங்க என்று அந்த பரிசு கூப்பன் கொடுத்தான், என்னனு பார்த்தா ஏழு பேரு மூணு நாளுக்கு கோவா வுல தங்குற ஹோட்டல் கிப்ட் வவுச்சர், அட பதறுகளா இதோ இருக்குற என்வீட்டுக்கு போயிட்டு வரவே லீவ் கிடைக்காம அல்லாடுறேன், இதுல எங்கிட்டு கோவா.. கூட நண்பரும் , அவர் மனைவியும் என் முகத்த பார்த்து சிரிச்ச சிரிப்பு இருக்கே (அசிங்கபட்டான் அரசன் ) .. அது வேறு கதை ..  பர்மிசன் போட்டு வந்ததும் இல்லாம பாவம் அவரோட பிஸ்னஸ் யும் கெடுத்து எம்புட்டு வேஸ்ட்.. (நீயெல்லாம் நல்லா வருவடா)

மூணு கூட்டு களவாணிக பண்ணுன அழிச்சாட்டியம், ஒன்னு பில்டிங் கட்டுற கம்பெனி, இன்னொன்னு ஏதோ ஒரு மார்க்கட்டிங் கம்பெனி, இன்னொன்னு இதை ஆர்கனைஸ் பண்ணின ஒரு டூர் கம்பெனி... எப்படில்லாம் அலையுரானுங்க அடுத்தவன் காசை ஆட்டைய போடுறதுக்கு... இந்த மாதிரி கிறுக்குத்தனமா யோசிக்கிறதுக்கு உக்காந்து நல்ல வழியில யோசிங்க அறிவு கொழுந்துகளா, உங்க ஏவாரம் பிச்சிகிட்டு போகும், அதை வுட்டுட்டு இப்படி குறுக்கு வழியில எந்த பய சிக்குவான் நம்ம வயிற நெரப்புலாம்னு அலையாதீக...

ஆகவே நண்பர்களே இது போன்ற அழைப்பு வந்தா நாக்க புடுங்கிட்டு சாகுற மாதிரி நாலு கேள்வி கேட்டுட்டு போனை வச்சிடுங்க, இல்லை "யாம் பெற்ற இன்பம்" தான் உங்களுக்கும்...

திரும்பி வருகையில் நண்பர் சொன்ன வாக்கியம் தான் நெஞ்சில் இன்னும் நிற்கிறது

ஆட்டை அப்படியே வெட்டுவாங்க - முதல் ரகம் 
சில பேர் மாலை மரியாதை பண்ணி தண்ணி தெளிச்சி வெட்டுவாங்க - ரெண்டாவது ரகம் ..

இதுல நீ ரெண்டாவது ரகம் என்றதுதான் பசுமரத்தாணியா பதிஞ்சு போச்சு ... வேற என்ன பண்றது ... என்ன கொடுமை சார் இது..






Post Comment

செப்டம்பர் 10, 2012

விடுமுறையாகிறது...



எதுவும் இதுவரை 
அவளிடம் பேசியதில்லை!
அவளும் 
என்னுடன் பேச 
முயன்றதில்லை!
ஏனோ அவள் 
வராத பள்ளி நாட்கள் 
எனக்கும் 
"விடுமுறையாகிறது"


பட உதவி : கூகுள் இணையம் 

Post Comment

செப்டம்பர் 07, 2012

ஊர்ப்பேச்சு # 3



என்ன ரத்தினம் எப்படி இருக்கே, பார்த்து ஒரு வாரம் ஆச்சே என்று கேட்டுக்கொண்டே கையில வச்சிருந்த காஞ்ச பூவம் வெளக்கமாற முள்ளு கழியிறதுக்காக கள்ளியில தட்டிகிட்டே கேட்டார் கனகசபை... 

ம்ம் இருக்கேன் கனகசபை, ஏய் என்னப்பா இந்த வெளக்கமாறு தான் இப்பவும் உங்க வீட்ல பயன்படுத்துறதா?

ஆமா ரத்தினம் இது வீட்ட சுத்தம் பண்ண , கட்டுத்தறிய சுத்தம் பண்ண தென்னம் வெளக்கமாறு...
அதுசரி இன்னைக்காவது கண்ணுல பாக்க முடிஞ்சதே. என்னைக்கோ என்வீட்ல இது காணாம போய்டுச்சு, ஆமா அன்னைக்கு மாவு அரைக்க மில்லுக்கு போறேன்னு சொன்னியே என்ன மாவு அரைச்சியா, கரண்டு இருந்துச்சா?

அன்னைக்கு எப்படியோ ஒருவழியா அரைச்சிட்டு வூடு வந்து சேர்ந்தேன் ரத்தினம்!

அப்புறம் காட்டுல கள கொத்தி முடிச்சாச்சா? 

அதையும் ஒரு வழியா கொத்தி முடிச்சதும் தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு ரத்தினம், ஏதோ நித்தம் மழை கூட கொஞ்சம் தூவானம் போட்டு ரெட்டிப்பா ஆக்குதுப்பா ..

கவலைய விடு கனகசபை ரெண்டோருநாளுல மழை பெய்யும் பாரு. சரி அன்னைக்கு ஏதோ ஒரு சங்கதி சொல்றேன்னு சொன்னியே அதை சொல்லுய்யா...

ஒ அதுவா ? இப்பெல்லாம் நம்ம ஊரு சனம் எது முன்ன மாதிரி சுறுசுறுப்பா காலையில எழுந்திருச்சி வேலைக்கு போவுதுங்க, எல்லாம் சோம்பேறி சனமா போச்சுங்க...

என்ன கனகசபை என்ன சொல்ற ?

அட ஆமா ரத்தினம் என்னைக்கு இந்த பாழா போன நூறு நாளு வேல வாய்ப்பு திட்டம் னு ஒன்னு வந்துச்சோ அன்னைக்கு புடிச்ச சனி தான் இன்னும் தெளியில எவனுக்கும்... 

நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டமா ? அந்த வேலைய யார் கொடுக்கறது ?

அது வந்து இதுக்கு பெயர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டமாம் .. இது மத்திய அரசாங்கத்தோட ஒரு திட்டமையா. இதுல வருசத்துக்கு நூறு நாள் கட்டாய வேலை கொடுத்து அதுக்கும் ஏதுவா சம்பளமும் கொடுக்குது ...

எவ்வளவு கொடுக்காறங்க..கனகசபை 

நூறு ரூவா ஆணுக்கும் , பொண்ணுக்கும் பாகுபாடு ஏதுமில்ல...வேலையும் ஊர் மக்கள் இருக்குற அஞ்சு கிலோமீட்டருக்குள்ள வேலை கொடுக்கணும் னு கட்டாயம் வேற! சும்மாவே நம்ம ஆளுங்க ஆடுவாங்க சொல்லவா வேணும் இப்ப சலங்கை கட்டி ஆடுராயிங்க!

இதுல என்னப்பா இருக்கு நல்ல திட்டம் தானே கனகசபை, பாவம் வருசத்துக்கு நூறு நாள்தானே , கூலி வேலை கிடைக்காத ஓஞ்ச நாளுல போனா வருமானம் வருமில்ல ... 

நீ சொல்றது வாஸ்தவம் தான் ரத்தினம், ஆனா இது தான் இப்ப விவசாயத்த கெடுக்க வந்த சனியனா எனக்கு தெரியுது .

எதை வச்சி அப்படி சொல்ற கனகசபை, 

இதை சொல்லணும் னா ஒரு நா போதாது, இப்ப கொஞ்சம் அவசரமா நான் வெளிய கெளம்பனும், நாம இன்னொரு நா சந்திப்போம் ரத்தினம்... 

சரி கனகசபை போயிட்டு வா நாம சாவகாசமா பேசுவோம் இதை பத்தி ..

Post Comment

செப்டம்பர் 05, 2012

தரங்கெட்ட தனி மரம் ...



வரும் என்னை 
திணிக்கவில்லை!
விரும்பி நுழைந்தேன், 
ஒற்றை அறிமுகத்தில் 
இருளில் இருந்த 
நான்,
நட்சத்திரம் ஆனேன்!

தசை காட்டினேன் 
திசை மாறியது!
ஒவ்வொரு நாக்கும் 
வெவ்வேறு பெயரை 
உச்சரித்து - என் பெயர்
முகவரி தொலைத்தது!

காட்சியில் "கண்"காட்சி 
நான்!
வாழ்க்கையில் 
பிழைக்காட்சி ஆனேன்!

மின்னொளியில் 
ஜொலித்தாலும்,
கடந்த பாதைகள் 
அனைத்தும் 
கருமைதான்!

நேசக்கரங்கள் 
நிலையாய் 
பற்றியதில்லை,
பற்றுவதுமில்லை!

நீண்டு பயணித்த 
என் வாழ்வுதனில் 
தடங்கள் ஏதுமற்ற, 
தரங்கெட்ட,
தனி மரமானேன்.

Post Comment

செப்டம்பர் 03, 2012

முத்தச்சண்டை...



உன்னிடம் தொடங்கிய 
சண்டை 
ஒரு முத்தத்தில் 
முடிகையில், 
ஏனோ மீண்டும் 
சண்டையிட தூண்டுதடி 
"மனசு"

படஉதவி: கூகுள் இணையம் 

Post Comment