புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

செப்டம்பர் 07, 2012

ஊர்ப்பேச்சு # 3



என்ன ரத்தினம் எப்படி இருக்கே, பார்த்து ஒரு வாரம் ஆச்சே என்று கேட்டுக்கொண்டே கையில வச்சிருந்த காஞ்ச பூவம் வெளக்கமாற முள்ளு கழியிறதுக்காக கள்ளியில தட்டிகிட்டே கேட்டார் கனகசபை... 

ம்ம் இருக்கேன் கனகசபை, ஏய் என்னப்பா இந்த வெளக்கமாறு தான் இப்பவும் உங்க வீட்ல பயன்படுத்துறதா?

ஆமா ரத்தினம் இது வீட்ட சுத்தம் பண்ண , கட்டுத்தறிய சுத்தம் பண்ண தென்னம் வெளக்கமாறு...
அதுசரி இன்னைக்காவது கண்ணுல பாக்க முடிஞ்சதே. என்னைக்கோ என்வீட்ல இது காணாம போய்டுச்சு, ஆமா அன்னைக்கு மாவு அரைக்க மில்லுக்கு போறேன்னு சொன்னியே என்ன மாவு அரைச்சியா, கரண்டு இருந்துச்சா?

அன்னைக்கு எப்படியோ ஒருவழியா அரைச்சிட்டு வூடு வந்து சேர்ந்தேன் ரத்தினம்!

அப்புறம் காட்டுல கள கொத்தி முடிச்சாச்சா? 

அதையும் ஒரு வழியா கொத்தி முடிச்சதும் தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு ரத்தினம், ஏதோ நித்தம் மழை கூட கொஞ்சம் தூவானம் போட்டு ரெட்டிப்பா ஆக்குதுப்பா ..

கவலைய விடு கனகசபை ரெண்டோருநாளுல மழை பெய்யும் பாரு. சரி அன்னைக்கு ஏதோ ஒரு சங்கதி சொல்றேன்னு சொன்னியே அதை சொல்லுய்யா...

ஒ அதுவா ? இப்பெல்லாம் நம்ம ஊரு சனம் எது முன்ன மாதிரி சுறுசுறுப்பா காலையில எழுந்திருச்சி வேலைக்கு போவுதுங்க, எல்லாம் சோம்பேறி சனமா போச்சுங்க...

என்ன கனகசபை என்ன சொல்ற ?

அட ஆமா ரத்தினம் என்னைக்கு இந்த பாழா போன நூறு நாளு வேல வாய்ப்பு திட்டம் னு ஒன்னு வந்துச்சோ அன்னைக்கு புடிச்ச சனி தான் இன்னும் தெளியில எவனுக்கும்... 

நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டமா ? அந்த வேலைய யார் கொடுக்கறது ?

அது வந்து இதுக்கு பெயர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டமாம் .. இது மத்திய அரசாங்கத்தோட ஒரு திட்டமையா. இதுல வருசத்துக்கு நூறு நாள் கட்டாய வேலை கொடுத்து அதுக்கும் ஏதுவா சம்பளமும் கொடுக்குது ...

எவ்வளவு கொடுக்காறங்க..கனகசபை 

நூறு ரூவா ஆணுக்கும் , பொண்ணுக்கும் பாகுபாடு ஏதுமில்ல...வேலையும் ஊர் மக்கள் இருக்குற அஞ்சு கிலோமீட்டருக்குள்ள வேலை கொடுக்கணும் னு கட்டாயம் வேற! சும்மாவே நம்ம ஆளுங்க ஆடுவாங்க சொல்லவா வேணும் இப்ப சலங்கை கட்டி ஆடுராயிங்க!

இதுல என்னப்பா இருக்கு நல்ல திட்டம் தானே கனகசபை, பாவம் வருசத்துக்கு நூறு நாள்தானே , கூலி வேலை கிடைக்காத ஓஞ்ச நாளுல போனா வருமானம் வருமில்ல ... 

நீ சொல்றது வாஸ்தவம் தான் ரத்தினம், ஆனா இது தான் இப்ப விவசாயத்த கெடுக்க வந்த சனியனா எனக்கு தெரியுது .

எதை வச்சி அப்படி சொல்ற கனகசபை, 

இதை சொல்லணும் னா ஒரு நா போதாது, இப்ப கொஞ்சம் அவசரமா நான் வெளிய கெளம்பனும், நாம இன்னொரு நா சந்திப்போம் ரத்தினம்... 

சரி கனகசபை போயிட்டு வா நாம சாவகாசமா பேசுவோம் இதை பத்தி ..

Post Comment

26 கருத்துரைகள்..:

சீனு சொன்னது…

நல்ல கருத்தை கூற வருகிறீகள்.. விளக்கமாகவே உங்கள் அடுத்த பதிவில் கூறுங்கள்... எதார்த்தமான கிராமத்து வாழ்வை கண்முன் நிறுத்தி விடீர்கள்

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

ரைட்டு நடத்துங்க...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வித்தியாசமான உரையாடல்...

என்னவென்று சொல்லாமல் விட்டு விட்டீர்களே... Waiting...

Unknown சொன்னது…



அடுத்த பிதிவு எப்போ! காரணம் அடிய ஆவல்!

r.v.saravanan சொன்னது…

நூறு நாள் வேலை திட்டம் என்பது விவசாயத்திற்கு வில்லன் போல் தான்
எழுத்து நடை நல்லாருக்கு அரசன் வாழ்த்துக்கள்

பேச்சை இன்னும் கொஞ்சம் நீளமாக்கவும்

கவி அழகன் சொன்னது…

Kanakasapai nalla peyar
Nalla uraiyaadal

MARI The Great சொன்னது…

சுவாரஸ்யமா முடிச்சிபுட்டீங்க.. அடுத்த பாகத்தை எதிர்பார்த்து!

”தளிர் சுரேஷ்” சொன்னது…

கிராமிய பாணியில் சிறந்த பகிர்வு! நன்றி!

இன்று என் தளத்தில்
காசியும் ராமேஸ்வரமும்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_7.html
உலகின் மிகச்சிறிய பைக்கும் கடவுள் நம்பிக்கையும்
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_4275.html

குறையொன்றுமில்லை. சொன்னது…

நல்லா சொல்லி இருக்கீங்க அடுத்தபதிவை எதிர்பார்க்கவச்சிட்டீங்க.

பெயரில்லா சொன்னது…

அட பேச்சு உடன முடிஞ்சுதே

ஆனாலும் சூப்பர்ர்ர்ர்ர்

உழவன் சொன்னது…

நல்ல எழுத்து நடை அண்ணா..ஒவ்வொரு பதிவின் ஆரம்பத்திலும் நாம் உபயோகிக்கும் பொருளின் பெயரை அழகாக கூறிவருகிறீர்கள்..அண்ணா..இது தொடரட்டும்..அடுத்த பாகத்தை எதிபார்த்து!

குட்டன்ஜி சொன்னது…

சாவகாசமாப் பேசட்டும்;கேப்போம்!
த.ம.8

ஆத்மா சொன்னது…

ஊர் பேச்சு 3 போச்சா...
மற்றய இரண்டையும் படிச்சிட்டு வாரேன்

arasan சொன்னது…

சீனு கூறியது...
நல்ல கருத்தை கூற வருகிறீகள்.. விளக்கமாகவே உங்கள் அடுத்த பதிவில் கூறுங்கள்... எதார்த்தமான கிராமத்து வாழ்வை கண்முன் நிறுத்தி விடீர்கள்//

நன்றி சீனு... அடுத்த பதிவில் அதை பற்றி கூறி விடுகிறேன்

arasan சொன்னது…

கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
ரைட்டு நடத்துங்க..//

நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
வித்தியாசமான உரையாடல்...

என்னவென்று சொல்லாமல் விட்டு விட்டீர்களே... Waiting...//

சொல்லிடுறேன் சார் நன்றி

arasan சொன்னது…

புலவர் சா இராமாநுசம் கூறியது...


அடுத்த பிதிவு எப்போ! காரணம் அடிய ஆவல்!//

வரும் வெள்ளியன்று பதிவேற்றுவேன் அய்யா .. நன்றிகளும் வணக்கங்களும் அய்யா

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
நூறு நாள் வேலை திட்டம் என்பது விவசாயத்திற்கு வில்லன் போல் தான்
எழுத்து நடை நல்லாருக்கு அரசன் வாழ்த்துக்கள்

பேச்சை இன்னும் கொஞ்சம் நீளமாக்கவும் //

முயற்சிக்கிறேன் சார் நன்றி

arasan சொன்னது…

கவி அழகன் கூறியது...
Kanakasapai nalla peyar
Nalla uraiyaadal//

நன்றிங்க நண்பா

arasan சொன்னது…

வரலாற்று சுவடுகள் கூறியது...
சுவாரஸ்யமா முடிச்சிபுட்டீங்க.. அடுத்த பாகத்தை எதிர்பார்த்து!//

கட்டயாம் நண்பரே அடுத்த பதிவில் சொல்லிவிடுகிறேன்

arasan சொன்னது…


s suresh கூறியது...
கிராமிய பாணியில் சிறந்த பகிர்வு! நன்றி!
//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

Lakshmi கூறியது...
நல்லா சொல்லி இருக்கீங்க அடுத்தபதிவை எதிர்பார்க்கவச்சிட்டீங்க.//

நன்றிங்க அம்மா

arasan சொன்னது…

esther sabi கூறியது...
அட பேச்சு உடன முடிஞ்சுதே

ஆனாலும் சூப்பர்ர்ர்ர்ர்//

நன்றிங்க எஸ்தர் சபி

arasan சொன்னது…


Uzhavan Raja கூறியது...
நல்ல எழுத்து நடை அண்ணா..ஒவ்வொரு பதிவின் ஆரம்பத்திலும் நாம் உபயோகிக்கும் பொருளின் பெயரை அழகாக கூறிவருகிறீர்கள்..அண்ணா..இது தொடரட்டும்..அடுத்த பாகத்தை எதிபார்த்து!//

உன்னிப்பாக கவனிக்கும் உனக்கு என் நன்றிகள் தம்பி

arasan சொன்னது…

குட்டன் கூறியது...
சாவகாசமாப் பேசட்டும்;கேப்போம்!//

நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

சிட்டுக்குருவி கூறியது...
ஊர் பேச்சு 3 போச்சா...
மற்றய இரண்டையும் படிச்சிட்டு வாரேன்//

மற்றதையும் படிச்சிட்டு வாங்க சிட்டுகுருவி