புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

செப்டம்பர் 12, 2012

சீண்டிய கம்பெனியும், சிக்காத பதிவரும் ...


நேற்று காலை சுமார் பதினொரு மணி இருக்கும், ஒரு பொண்ணு போன் பண்ணி, யாரு அரசன் சாரா, சார் உங்களுக்கு ஒரு பரிசு ஒன்று விழுந்திருக்கு, எங்க ஆபிஸ் வந்து வாங்கிக்கோங்க என்றதும் எனக்கு என்ன பேசுவது என்று கூட புரியல, நான் இப்போ ட்ராபிக்ல இருக்கேன், கொஞ்ச நேரம் கழிச்சு பேசுறேன்னு சொல்லிட்டு வைச்சிட்டேன்....

கொஞ்ச நேரம் கழிச்சு என்னா விவரம்னு போன் பண்ணி கேட்டா, சார் நீங்க ஜனவரி மாசம் நடந்த புத்தக திருவிழாவில் எழுதி போட்ட கூப்பனுக்கு பரிசு விழுந்திருக்கு என்று சொல்லிச்சு, கூடவே நீங்க உங்க குடும்பத்தோட வந்து கலந்துகிட்டு பரிசை வாங்கி கொள்ளுங்க, இன்னைக்கு சாயந்திரம் நாலு மணிக்கு எங்க அலுவலகத்துக்கு வாங்க என்று அந்த பொண்ணு சொன்னாங்க...

இது என்னடா புது பஞ்சாயத்தா இருக்கே, நம்மளே இங்க தனி கட்டையா கிடந்து அல்லாடுறோம் இதுல எங்கிட்டு குடும்பத்த கூட்டியாறது, மேடம் நான் இங்க தனியா இருக்கேன் குடும்பம் எல்லாம் ஊர்ல இருக்கு என்று சொன்ன அடுத்த வினாடியே (ரொம்ப அனுபவம் போல) ஒன்னும் பிரச்சினை இல்லை சார் நீங்க நண்பர்களோ, உறவினர்களோ அவர்களின் குடும்பத்தோடு கலந்து கொண்டு வாங்கி கொள்ளலாம் என்று சொல்லுச்சு ரொம்ப பதுவுசா...

சரி என்னடா இந்த புள்ள இவ்வளவு பாசத்த கொட்டுதே என்று ஒவ்வொரு நண்பனா கேட்டா மாப்ள நான் இன்னைக்கு பிசி, தம்பி நான் பிசி என்றே பதில் வந்துச்சு, கடைசியா ஒரு நண்பர புடிச்சி விவரத்த சொல்லி வாங்கண்ணே போயிட்டு வருவோம் என்றதும் சரி தம்பி போகலாம், இது ஏதோ கோல்மால் குருப்பா இருக்கலாம் என்று தன் கருத்த சொன்னார், இல்லைண்ணே அந்த புள்ள பேசுனத வச்சி பாக்கும் போது நல்ல புள்ளையா தெரியுது (அம்புட்டு நல்லவனா நீ ), அப்படீல்லாம் இருக்காது என்று சொல்லி நான், அவர், அவரோட மனைவி மூணு பேரும் சொன்ன நேரத்துக்கு போனோம்...

போனதுக்கு அப்புறம் தான் தெரியுது, அது ஒரு நூதன மார்க்கட்டிங் என்று. வந்த அஞ்சு நிமசத்துல பரிசு வாங்கிட்டு நீங்க கெளம்பலாம் சொன்ன அந்த புள்ளைய காணோம் (ஏமாந்தியா?) எவனோ ஒருத்தன் இருந்தான், சார் ஒரு மணி நேர ப்ரோகிராம் இருக்கு , அரை மணி நேர  ப்ரோகிராம் இருக்கு நீங்க எத செலக்ட் பண்றீங்க என்றான், சார் நான் வந்தது பரிசு வாங்க உங்க பாடத்த கேட்க இல்ல என்றேன், இல்ல சார் உங்களுக்கு பரிசு தரும் முன்னர் இந்த நிகழ்ச்சிய கட்டாயம் அட்டன் பண்ணனும் என்றான், (சிக்கிட்டோம் டா ) சரி என்று அரை மணி நேரத்தை செலக்ட் பண்ணி உள்ளே போனா, சார் உங்க பேர் என்ன, என்ன பண்றீங்க, வயசு என்ன, உயரம் என்ன? குளிச்சிங்களா?, சாப்பிட்டிங்களா, சாப்ட்ட கைய கழுவிநிங்களா? என்ற ரேஞ்சுக்கு கேள்வி மேல கேள்வி கேட்டு கொன்னான், இத பாருங்க நான் வந்தது இதுக்கு இல்ல, பரிசு வாங்க (செவ்வாழை இன்னுமாடா நம்புற இவனுங்கள) என்றதும், சார் இந்த மாதிரி ப்ரோக்ராம் அட்டன் பண்ணினா தான் பரிசு தருவோம் என்றான், (அட மாடுமுட்டிகளா எதுக்கோ கூப்புட்டு இப்படி ஒருத்தன கொன்னா என்னடா உங்க நியாயம்?) அந்த மாதிரி பரிசு மண்ணாங்கட்டி பரிசு எனக்கு வேணாம் ஆளை விடுடா என்று கெளம்பினோம்.

உடனே ஓடி வந்து சார் இருங்க என்று அந்த பரிசு கூப்பன் கொடுத்தான், என்னனு பார்த்தா ஏழு பேரு மூணு நாளுக்கு கோவா வுல தங்குற ஹோட்டல் கிப்ட் வவுச்சர், அட பதறுகளா இதோ இருக்குற என்வீட்டுக்கு போயிட்டு வரவே லீவ் கிடைக்காம அல்லாடுறேன், இதுல எங்கிட்டு கோவா.. கூட நண்பரும் , அவர் மனைவியும் என் முகத்த பார்த்து சிரிச்ச சிரிப்பு இருக்கே (அசிங்கபட்டான் அரசன் ) .. அது வேறு கதை ..  பர்மிசன் போட்டு வந்ததும் இல்லாம பாவம் அவரோட பிஸ்னஸ் யும் கெடுத்து எம்புட்டு வேஸ்ட்.. (நீயெல்லாம் நல்லா வருவடா)

மூணு கூட்டு களவாணிக பண்ணுன அழிச்சாட்டியம், ஒன்னு பில்டிங் கட்டுற கம்பெனி, இன்னொன்னு ஏதோ ஒரு மார்க்கட்டிங் கம்பெனி, இன்னொன்னு இதை ஆர்கனைஸ் பண்ணின ஒரு டூர் கம்பெனி... எப்படில்லாம் அலையுரானுங்க அடுத்தவன் காசை ஆட்டைய போடுறதுக்கு... இந்த மாதிரி கிறுக்குத்தனமா யோசிக்கிறதுக்கு உக்காந்து நல்ல வழியில யோசிங்க அறிவு கொழுந்துகளா, உங்க ஏவாரம் பிச்சிகிட்டு போகும், அதை வுட்டுட்டு இப்படி குறுக்கு வழியில எந்த பய சிக்குவான் நம்ம வயிற நெரப்புலாம்னு அலையாதீக...

ஆகவே நண்பர்களே இது போன்ற அழைப்பு வந்தா நாக்க புடுங்கிட்டு சாகுற மாதிரி நாலு கேள்வி கேட்டுட்டு போனை வச்சிடுங்க, இல்லை "யாம் பெற்ற இன்பம்" தான் உங்களுக்கும்...

திரும்பி வருகையில் நண்பர் சொன்ன வாக்கியம் தான் நெஞ்சில் இன்னும் நிற்கிறது

ஆட்டை அப்படியே வெட்டுவாங்க - முதல் ரகம் 
சில பேர் மாலை மரியாதை பண்ணி தண்ணி தெளிச்சி வெட்டுவாங்க - ரெண்டாவது ரகம் ..

இதுல நீ ரெண்டாவது ரகம் என்றதுதான் பசுமரத்தாணியா பதிஞ்சு போச்சு ... வேற என்ன பண்றது ... என்ன கொடுமை சார் இது..


Post Comment

49 கருத்துரைகள்..:

r.v.saravanan சொன்னது…

புதுசா இந்த மாதிரி கிளம்பியிருக்கானுங்க

செய்தாலி சொன்னது…

இவ்வளவு வெகுளியா நீங்க
அவங்கள சுமாவா விடீங்க நண்பா
நாலு சாத்து சாத்தாம வந்துண்டீன்களே

சரி சரி போகட்டும்
அனுபவம் ''குரு" ம்(:

காரஞ்சன் சிந்தனைகள் சொன்னது…

சமீப காலங்களில் இது போன்ற மோசடி அதிகரித்து வருகிறது!
பகிர்விற்கு நன்றி!
-காரஞ்சன்(சேஷ்)

காப்பிகாரன் சொன்னது…

ஹிஹிஹிஹி பல்பு வாங்கலையோ பல்பு அவ்வ்வவ்வ்வ்வ்

முத்து குமரன் சொன்னது…

இதுல என்ன ஆச்சரியம்னா, வந்து போன எல்லாருக்குமே பரிசு கிடைக்குது.நான் போய் வர எல்லா கண்காட்சியிலயும் எனக்கு பரிசு கிடைக்குது. அது ஏன் குடும்பத்தோட வர சொல்றானுங்கன்னு புரியல. குறைந்தபட்சம் பக்கத்த்து வீட்டு குடும்பத்தோடயாச்சும் வர சொல்றானுங்க.அதாலயே அவனுங்க வரச் சொன்னாலும் நான் போறதில்லை.

பட்டிகாட்டான் Jey சொன்னது…

// எப்படில்லாம் அலையுரானுங்க அடுத்தவன் காசை ஆட்டைய போடுறதுக்கு... //

படுவா ஓசில ஏதோ குட்உக்குறாய்ங்கனு சொல்லி...ஓடிப்போய் பல்பு வாங்கிட்டு.... அவனுகள திட்டுறதப்பாரு.

ஆனா இதுல உண்மையான பலியாடு யாரு தெரியுமா அரசா????????

உன்னோட அந்த அப்பாவி நண்பனும், அவர்வூட்டம்மனியும்தான். இனிமே எதுக்கும் போய் கூப்ட்டிராத... மவனே பொங்க வச்சிரப்போராங்க.. :-))))

பால கணேஷ் சொன்னது…

புத்தகத் திருவிழாவுக்குப் போனா புத்தகம்தான் வாங்கணும். ஏதாச்சும் கூப்பன் கொடுத்தா பில்லப் பண்ணித் தரக் கூடாதுங்கறது தெளிவாப் புரிஞ்சுது அரசன் வாங்கின பல்பினால. ங்ஙொய்யால... அடிக்காம வந்திங்களே அவங்களை!

CS. Mohan Kumar சொன்னது…

தம்பி இது பற்றி எனக்கும் கால் வந்தது. நல்ல வேளை நான் போகலை. முகநூல் புத்தகத்தில் சென்று வந்த ஒருவர் இது பற்றி எழுதியிருந்தார். இத்தகைய போன் கால்கள் வந்தால் போயிடாதீங்க என சில வாரம் முன் நான் நம்ம ப்ளாகிலும் எழுதியிருந்தேன். பெண்கள் இருந்தால் தான் வாங்க வாய்ப்பு அதிகம் என பெண்களை அவசியம் அழைத்து வர சொல்கிறார்கள்

மகேந்திரன் சொன்னது…

வணக்கம் சகோதரரே...
இதுபோல ஒருமுறை நானும் மாட்டியிருக்கேன்...
இப்போதான் தெரியுது (நீங்களும் நம் இனம் என்று)
...............

Angel சொன்னது…

மிக முக்கியம் ...பொருட்காட்சி /கண்காட்சி மற்றும் எந்த விற்பனை நடைபெறும் இடங்களிலும் வாசலிலேயே ஒரு க்ரூப் நிறைய காகிதங்களை கொடுத்து நிரப்ப சொல்றாங்க ..அப்ப நாம் அட்ரஸ் அல்லது மொபைல் எண் அவர்களுக்கு தரவே கூடாது .

இதைப்பற்றி நிறைய பேருக்கு சொல்லி அலெர்ட் செய்யணும்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

அந்த கம்பனி பேரு அபிநயா கன்ஸ்ட்ரக்ஷன் தானே! பலமுறை எனக்கும் பொன் பண்ணாங்க! நான் மட்டும் தனியா வர்றதா இருந்தா வரேன் இல்லன்னா வரலேன்னு சொல்லிட்டேன்.நான் மட்டும் வர்றதுக்கு அவங்க ஒத்துக்கல.இப்பவும் அப்பப்ப போன் வரும்.நானும் அதயே சொல்லிக்கிட்டிருப்பேன்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

இதுமாதிரி நிறைய பேரு கிளம்பியிருக்காங்க! எனக்கு கூட ஒரு போன் வந்தது! கட் பண்ணிட்டேன்! கிராமத்துல எல்லாம் வீடு வீடா வந்து ஒரு கூப்பன் தந்து உங்களுக்கு பிரைஸ் அடிச்சிருக்கு 3000 ரூபா மிக்சியை 1000 ரூபாவுக்கு தர்ரோம்னு ஒரு கும்பல் உலாவி வருது! நாம அசந்தோம்னா கோவனத்தை கூட உருவிடுவானுங்க!

இன்று என் தளத்தில்
ரேசன் கார்டில் பெயர் சேர்த்தகதை!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_12.html

கீதமஞ்சரி சொன்னது…

நல்லதொரு எச்சரிக்கைப் பதிவு. பலருக்கும் உங்கள் அனுபவம் பயன்படும். நன்றி அரசன்.

MARI The Great சொன்னது…

ஆட்டையை போட தினுசு தினுசா கிளம்புரானுகளே! :)

thanks for sharing!

Admin சொன்னது…

போன வருசமே போயிட்டு வந்திட்டேன் நண்பா..

குட்டன்ஜி சொன்னது…

எனக்கும் இந்த மாதிரி போன் வந்தது.ஆனால் நான் போகவில்லை!

ஆத்மா சொன்னது…

ஆஹா செமயா மாட்டியிருக்கிறீங்க சார்
ஆனாலும் உங்க நல்ல உள்ளம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு

அனுபவத்த வெட்கப்படாம மத்தவங்களுக்கும் பிரயோசனமா பதிவிட்டிருக்கிறீங்க...

பலருக்கு உபயோகப்படும் அனுபவப் பகிர்வு

உழவன் சொன்னது…

நல்ல எச்சரிக்கை பதிவு..பகிர்வுக்கு நன்றி அண்ணா..

ஹேமா சொன்னது…

கவனமாயிருக்கவேணும்.பணமரம் இருக்குமா என்கிற ஆராய்ச்சியில் உலகம் !

சீனு சொன்னது…

ஹா ஹா ஹா நல்ல ரசனையோடு எழுதி உள்ளீர்கள் .. இந்த மாதிரி போன் வந்தாலே நான் கேட்கும் முதல்
கேள்வி

ஹல்லோ யாரு தன்ராஜா

ஹா ஹா ஹா

Sivakumar சொன்னது…


// சார் உங்க பேர் என்ன, என்ன பண்றீங்க, வயசு என்ன, உயரம் என்ன? குளிச்சிங்களா?, சாப்பிட்டிங்களா, சாப்ட்ட கைய கழுவிநிங்களா? என்ற ரேஞ்சுக்கு கேள்வி மேல கேள்வி கேட்டு கொன்னான்//

ரெண்டு பேரை நமிதா, குசுப்பு மாதிரி ஆபரேஷன் பண்ணி அனுப்பி இருக்காங்களாம். பாத்துக்கங்க..

Unknown சொன்னது…


அடக் கடவுளே!
இப்படியும் நடக்குதா...!?

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
புதுசா இந்த மாதிரி கிளம்பியிருக்கானுங்க//

ஆமா சார்

arasan சொன்னது…

செய்தாலி கூறியது...
இவ்வளவு வெகுளியா நீங்க
அவங்கள சுமாவா விடீங்க நண்பா
நாலு சாத்து சாத்தாம வந்துண்டீன்களே

சரி சரி போகட்டும்
அனுபவம் ''குரு" ம்(://

எல்லாம் ஒரு பாடம் தான்

arasan சொன்னது…

Seshadri e.s. கூறியது...
சமீப காலங்களில் இது போன்ற மோசடி அதிகரித்து வருகிறது!
பகிர்விற்கு நன்றி!
-காரஞ்சன்(சேஷ்)//

நெறையவே கிளம்பி இருக்கனுங்க போல ..

arasan சொன்னது…

காப்பிகாரன் கூறியது...
ஹிஹிஹிஹி பல்பு வாங்கலையோ பல்பு அவ்வ்வவ்வ்வ்வ்//

அதான் வாங்கியாச்சே இனி எங்கிட்டு வாங்க

arasan சொன்னது…

முத்து குமரன் கூறியது...
இதுல என்ன ஆச்சரியம்னா, வந்து போன எல்லாருக்குமே பரிசு கிடைக்குது.நான் போய் வர எல்லா கண்காட்சியிலயும் எனக்கு பரிசு கிடைக்குது. அது ஏன் குடும்பத்தோட வர சொல்றானுங்கன்னு புரியல. குறைந்தபட்சம் பக்கத்த்து வீட்டு குடும்பத்தோடயாச்சும் வர சொல்றானுங்க.அதாலயே அவனுங்க வரச் சொன்னாலும் நான் போறதில்லை.//

கொடுமை சார் .. இப்ப என்ன பண்றது சார் போயிட்டு வந்தாச்சுல்ல அனுபவம் தான்

arasan சொன்னது…

படுவா ஓசில ஏதோ குட்உக்குறாய்ங்கனு சொல்லி...ஓடிப்போய் பல்பு வாங்கிட்டு.... அவனுகள திட்டுறதப்பாரு.

ஆனா இதுல உண்மையான பலியாடு யாரு தெரியுமா அரசா????????

உன்னோட அந்த அப்பாவி நண்பனும், அவர்வூட்டம்மனியும்தான். இனிமே எதுக்கும் போய் கூப்ட்டிராத... மவனே பொங்க வச்சிரப்போராங்க.. :-))))//

அண்ணே ஓசின்னு போகல அண்ணே எனக்கு அதிர்ஷ்டம் அடிச்சிருக்கு போல அதான் பரிசு கொடுக்குராயிங்க என்று நம்பி போனேன் அந்த புள்ளை வேறு ரொம்ப குழைஞ்சு பேசுச்சா கொஞ்சம் மயங்கிட்டேன் ...

ஆம்மாம் அண்ணே பாவம் நண்பரும் அவரோட மனைவியும் தான் ரொம்ப நொந்து போய்ட்டாங்க

indrayavanam.blogspot.com சொன்னது…

நல்ல பதிவு

arasan சொன்னது…

பால கணேஷ் கூறியது...
புத்தகத் திருவிழாவுக்குப் போனா புத்தகம்தான் வாங்கணும். ஏதாச்சும் கூப்பன் கொடுத்தா பில்லப் பண்ணித் தரக் கூடாதுங்கறது தெளிவாப் புரிஞ்சுது அரசன் வாங்கின பல்பினால. ங்ஙொய்யால... அடிக்காம வந்திங்களே அவங்களை!//

கட்டயாமா எவன் கூப்பன் கொடுக்குரானோ அவனை தான் முதலில் கொல்லனும் ,\சார் ..
இனி இந்த தப்பை பண்ணமாட்டேன்

arasan சொன்னது…

மோகன் குமார் கூறியது...
தம்பி இது பற்றி எனக்கும் கால் வந்தது. நல்ல வேளை நான் போகலை. முகநூல் புத்தகத்தில் சென்று வந்த ஒருவர் இது பற்றி எழுதியிருந்தார். இத்தகைய போன் கால்கள் வந்தால் போயிடாதீங்க என சில வாரம் முன் நான் நம்ம ப்ளாகிலும் எழுதியிருந்தேன். பெண்கள் இருந்தால் தான் வாங்க வாய்ப்பு அதிகம் என பெண்களை அவசியம் அழைத்து வர சொல்கிறார்கள்.//

நான் உங்க அந்த பதிவை படிக்க தவறிட்டேன் போலும் .. படித்திருந்தால் நான் உசாரா இருந்திருப்பேன் ..
இனி சிக்க மாட்டேன் அண்ணே ...

arasan சொன்னது…

மகேந்திரன் கூறியது...
வணக்கம் சகோதரரே...
இதுபோல ஒருமுறை நானும் மாட்டியிருக்கேன்...
இப்போதான் தெரியுது (நீங்களும் நம் இனம் என்று)//

சீயர்ஸ் அண்ணே ...

arasan சொன்னது…

angelin கூறியது...
மிக முக்கியம் ...பொருட்காட்சி /கண்காட்சி மற்றும் எந்த விற்பனை நடைபெறும் இடங்களிலும் வாசலிலேயே ஒரு க்ரூப் நிறைய காகிதங்களை கொடுத்து நிரப்ப சொல்றாங்க ..அப்ப நாம் அட்ரஸ் அல்லது மொபைல் எண் அவர்களுக்கு தரவே கூடாது .

இதைப்பற்றி நிறைய பேருக்கு சொல்லி அலெர்ட் செய்யணும்//

அலர்ட் பண்ணவே இந்த பதிவு சகோ...

arasan சொன்னது…

T.N.MURALIDHARAN கூறியது...
அந்த கம்பனி பேரு அபிநயா கன்ஸ்ட்ரக்ஷன் தானே! பலமுறை எனக்கும் பொன் பண்ணாங்க! நான் மட்டும் தனியா வர்றதா இருந்தா வரேன் இல்லன்னா வரலேன்னு சொல்லிட்டேன்.நான் மட்டும் வர்றதுக்கு அவங்க ஒத்துக்கல.இப்பவும் அப்பப்ப போன் வரும்.நானும் அதயே சொல்லிக்கிட்டிருப்பேன்.//

நீங்க இதை பற்றி எழுதி இருக்கலாம் சார் .. அதே அபிநயா என்கிற நாதாரி கம்பெனி தான் சார் ..

arasan சொன்னது…

s suresh கூறியது...
இதுமாதிரி நிறைய பேரு கிளம்பியிருக்காங்க! எனக்கு கூட ஒரு போன் வந்தது! கட் பண்ணிட்டேன்! கிராமத்துல எல்லாம் வீடு வீடா வந்து ஒரு கூப்பன் தந்து உங்களுக்கு பிரைஸ் அடிச்சிருக்கு 3000 ரூபா மிக்சியை 1000 ரூபாவுக்கு தர்ரோம்னு ஒரு கும்பல் உலாவி வருது! நாம அசந்தோம்னா கோவனத்தை கூட உருவிடுவானுங்க!
//

கண்டிப்பாக சார் ...கொஞ்சம் அசந்தா போதும் எல்லாத்தையும் உருவிடும் அபாயம் இருக்கு ...

arasan சொன்னது…


கீதமஞ்சரி கூறியது...
நல்லதொரு எச்சரிக்கைப் பதிவு. பலருக்கும் உங்கள் அனுபவம் பயன்படும். நன்றி அரசன்//

நன்றிங்க அக்கா ..

arasan சொன்னது…

வரலாற்று சுவடுகள் கூறியது...
ஆட்டையை போட தினுசு தினுசா கிளம்புரானுகளே! :)

thanks for sharing!//

நன்றிங்க நண்பா

arasan சொன்னது…

மதுமதி கூறியது...
போன வருசமே போயிட்டு வந்திட்டேன் நண்பா..//

சீனியரா ? நன்றி நன்றி

arasan சொன்னது…

குட்டன் கூறியது...
எனக்கும் இந்த மாதிரி போன் வந்தது.ஆனால் நான் போகவில்லை!//

நீங்க தப்பிசிட்டிங்க நான் சிக்கிட்டேன்

arasan சொன்னது…

சிட்டுக்குருவி கூறியது...
ஆஹா செமயா மாட்டியிருக்கிறீங்க சார்
ஆனாலும் உங்க நல்ல உள்ளம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு

அனுபவத்த வெட்கப்படாம மத்தவங்களுக்கும் பிரயோசனமா பதிவிட்டிருக்கிறீங்க...

பலருக்கு உபயோகப்படும் அனுபவப் பகிர்வு//

இதுல என்ன இருக்கு வெட்கப்பட ..
எல்லாமே அனுபவம் தானே...
நன்றி நண்பா

arasan சொன்னது…

Uzhavan Raja கூறியது...
நல்ல எச்சரிக்கை பதிவு..பகிர்வுக்கு நன்றி அண்ணா..//

நன்றி தம்பி

arasan சொன்னது…

ஹேமா கூறியது...
கவனமாயிருக்கவேணும்.பணமரம் இருக்குமா என்கிற ஆராய்ச்சியில் உலகம் !//

உண்மைதான் அக்கா ...

arasan சொன்னது…

சீனு கூறியது...
ஹா ஹா ஹா நல்ல ரசனையோடு எழுதி உள்ளீர்கள் .. இந்த மாதிரி போன் வந்தாலே நான் கேட்கும் முதல்
கேள்வி

ஹல்லோ யாரு தன்ராஜா

ஹா ஹா ஹா //


என்ன சீனு நான் கோவத்துல எழுதியத ரசனையோடு எழுதி இருக்கீங்க என்று சொல்லிட்டிங்களே..

arasan சொன்னது…

! சிவகுமார் ! கூறியது...

// சார் உங்க பேர் என்ன, என்ன பண்றீங்க, வயசு என்ன, உயரம் என்ன? குளிச்சிங்களா?, சாப்பிட்டிங்களா, சாப்ட்ட கைய கழுவிநிங்களா? என்ற ரேஞ்சுக்கு கேள்வி மேல கேள்வி கேட்டு கொன்னான்//

ரெண்டு பேரை நமிதா, குசுப்பு மாதிரி ஆபரேஷன் பண்ணி அனுப்பி இருக்காங்களாம். பாத்துக்கங்க.. //


அப்பேற்பட்ட ஆசாமிகள் இந்த பக்கம் வந்தால் சரியான வெகுமதி கொடுக்கப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்

arasan சொன்னது…

புலவர் சா இராமாநுசம் கூறியது...

அடக் கடவுளே!
இப்படியும் நடக்குதா...!?//

ஆம் அய்யா ..
இப்படி தான் நான் ஏமாந்தேன் ..
நன்றிங்க ஐயா

arasan சொன்னது…

indrayavanam.blogspot.com கூறியது...
நல்ல பதிவு//

என்னங்க மூச்ச கட்டி எழுதி இருக்கேன் டெம்ப்ளட் கம்மென்ட் மாதிரி சொல்லிட்டு போய்ட்டிங்க

Prem S சொன்னது…

பாஸ் உங்கள செமையா கலாய்ச்சுருக்காங்க போல ஹா ஹா

வெற்றிவேல் சொன்னது…

ஹ ஹ ஹ ஹா ஹா ஹா ஹாஆஆஆஆஆஆ

அசிங்கப் பட்டதையும் இவ்வளவு அழகா சொல்றீங்க, உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு...

Seeni சொன்னது…

haa haaa