புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

அக்டோபர் 29, 2012

ஊர்ப்பேச்சு # 5 ( Oor Pechu)





என்ன ரத்தினம் எப்படி இருக்கே, பாத்து ஒரு வாரம் ஆச்சே, என்ன வேலை நடக்குது என்று கேட்டுக்கொண்டே கையில புடிச்சிருந்த கன்னுக்குட்டிய பக்கத்துல இருந்த புளியங்கண்ணுல கட்டினார் கனகசபை.



என் கதைய ஏன் கேக்குற கனகசபை, பொழப்பு சிரிப்பா சிரிக்குது, வெளிநாட்டுல இருந்து வந்த மூணு வாரம் நல்லா இருந்தா, இப்ப சட்டி போட்டு கடைஞ்சி தள்ளுறா என் பொஞ்சாதி.

என்னாச்சி ரத்தினம்? மதியழகி அப்படி ஏதும் பண்ணாதே, நீ ஏதாவது வம்பு வளத்துருப்ப, அதான் எதாச்சும் சொல்லிருக்கும். நீ வந்தும் மூணு மாசம் ஆச்சு, சும்மா வீட்டுல இருக்குறதுனால அப்படி எதாவதும் பேசி இருக்கும் 
இதுக்கெல்லாம் எதுக்கு மனச போட்டு கொழப்பிக்கிற...

நீ சொல்றதும் வாஸ்தவம் தான் கனகசபை, வெளிநாட்டுல இருக்குறத குடிச்சோமோ, வேலைய பார்த்தோமான்னு பொழப்பு ஓடுச்சி, சரி வாழ்நாளுல பாதிய அங்க கெடந்தே கழிஞ்சி போச்சு, மீதி நாளையாவது நம்ம மண்ணோட, மக்களோட இருக்கலாம்னு இங்க வந்தா நெலமை தலை கீழா இருக்குது.

நீயும் புள்ள, பொஞ்சாதிய விட்டுட்டு பாதி வாழ்க்கைய அந்நிய மண்ணுலையே கழிச்சி புட்ட, இனி அதெல்லாம் வேண்டாம் இருக்குறத வைச்சி ஏதாவது கடை வைச்சி பொழப்ப பாரு ரத்தினம்.

நானும் அதை நெனச்சிகிட்டு தான் இருக்கேன் கனகசபை, ஆனா மதியழகியோட தங்கச்சி புருஷன் வெளிநாடு போயிட்டு வந்துட்டு இப்ப பைனான்ஸ் பண்ணிட்டு இருக்காராம் , அதையே என்னையும் பண்ண சொல்லி தொந்தரவு பண்றா, அதான் பிரச்சினையே!

என்ன ரத்தினம் போயும் போயி அந்த வட்டிக்கு விடுற வேலைய எவனாவது பண்ணுவானா, ஆளு இருக்குறவன், மிதமிஞ்சிய பணம் இருக்குறவன், கொஞ்சம் அரசியல் செல்வாக்கு இருக்குறவன், உடம்பு வளையாம நோகாம சம்பாதிக்க நினைக்கறவன் தான் அத பண்ணுவான், உனக்கு இது சரி பட்டு வராதுன்னு எனக்கு தோணுதுப்பா. 
இதுல கொடிகட்டி பரந்தவங்க எல்லாம் இன்னைக்கு இருக்குற எடம் தெரியாம போயிட்டாக, இது கொஞ்சம் வெவகாரம் புடிச்ச தொழில்.நான் வேணுமுன்னா மதியழகி கிட்ட இதை பத்தி பேசுறேன். சரி ரத்தினம் மாடுக மேய்ச்சலுக்கு போகணும், அப்புறம் சந்திப்போம்!

சரி கனகசபை போயிட்டு வா, நேரம் கெடைச்சா இதை பத்தி அவகிட்ட கொஞ்சம் எடுத்து சொல்லு.... 

Post Comment

14 கருத்துரைகள்..:

ஆத்மா சொன்னது…

வட்டி பற்றி கணக சபை சரியாக ச் சொல்லியிருக்கிறார்....

r.v.saravanan சொன்னது…

ஆளு இருக்குறவன், மிதமிஞ்சிய பணம் இருக்குறவன், கொஞ்சம் அரசியல் செல்வாக்கு இருக்குறவன், உடம்பு வளையாம நோகாம சம்பாதிக்க நினைக்கறவன் தான் அத பண்ணுவான்,

வட்டி தொழில் பற்றி அருமையா சொன்னார் கூடவே மனிதாபிமானம் இல்லாதவங்க னு இதையும் சேர்த்துக்குங்க ஏன்னா நீ என்ன கஷ்டபட்டா எனக்கென்ன எனக்கு தேவை வட்டி பணம் இந்த மன நிலையில் தான் இருக்காங்க

ezhil சொன்னது…

#ஆளு இருக்குறவன், மிதமிஞ்சிய பணம் இருக்குறவன், கொஞ்சம் அரசியல் செல்வாக்கு இருக்குறவன், உடம்பு வளையாம நோகாம சம்பாதிக்க நினைக்கறவன் தான் அத பண்ணுவான், உனக்கு இது சரி பட்டு வராதுன்னு எனக்கு தோணுதுப்பா.#
இந்தக் கருத்து உண்மைதான்

ராஜி சொன்னது…

ஆளு இருக்குறவன், மிதமிஞ்சிய பணம் இருக்குறவன், கொஞ்சம் அரசியல் செல்வாக்கு இருக்குறவன், உடம்பு வளையாம நோகாம சம்பாதிக்க நினைக்கறவன் தான் அத பண்ணுவான்
>>
நிஜம்தான் சகோ நம்ம கிட்ட கைமாத்தா 100 ரூபா வாங்குறவன் ஒழுங்கா திருப்பி தர மாட்டான். ஆனா, ஆள்பலம், நாக்குல நரம்பில்லாம பேசுறவனை தேடி ஆயிரக்கணக்குல வட்டியா மட்டும் கொண்டு போய் குடுத்துட்டு வருவான்.

Seeni சொன்னது…

vatti "
vivakaatam nallaa irukku...

சீனு சொன்னது…

வட்டிக்கு விடுவது தப்பு என்பதை நேர்த்தியாக சொன்ன விதம் அருமை ராசா.... கடுகுக்குள் இருக்கும் காரம்

arasan சொன்னது…

சிட்டுக்குருவி கூறியது...
வட்டி பற்றி கணக சபை சரியாக ச் சொல்லியிருக்கிறார்....//

மிகுந்த நன்றிகள் நண்பரே

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
ஆளு இருக்குறவன், மிதமிஞ்சிய பணம் இருக்குறவன், கொஞ்சம் அரசியல் செல்வாக்கு இருக்குறவன், உடம்பு வளையாம நோகாம சம்பாதிக்க நினைக்கறவன் தான் அத பண்ணுவான்,

வட்டி தொழில் பற்றி அருமையா சொன்னார் கூடவே மனிதாபிமானம் இல்லாதவங்க னு இதையும் சேர்த்துக்குங்க ஏன்னா நீ என்ன கஷ்டபட்டா எனக்கென்ன எனக்கு தேவை வட்டி பணம் இந்த மன நிலையில் தான் இருக்காங்க //

உண்மைதான் சார்

arasan சொன்னது…

ezhil கூறியது...
#ஆளு இருக்குறவன், மிதமிஞ்சிய பணம் இருக்குறவன், கொஞ்சம் அரசியல் செல்வாக்கு இருக்குறவன், உடம்பு வளையாம நோகாம சம்பாதிக்க நினைக்கறவன் தான் அத பண்ணுவான், உனக்கு இது சரி பட்டு வராதுன்னு எனக்கு தோணுதுப்பா.#
இந்தக் கருத்து உண்மைதான்//

மிகுந்த நன்றிகள் மேடம்

arasan சொன்னது…

ராஜி கூறியது...
ஆளு இருக்குறவன், மிதமிஞ்சிய பணம் இருக்குறவன், கொஞ்சம் அரசியல் செல்வாக்கு இருக்குறவன், உடம்பு வளையாம நோகாம சம்பாதிக்க நினைக்கறவன் தான் அத பண்ணுவான்
>>
நிஜம்தான் சகோ நம்ம கிட்ட கைமாத்தா 100 ரூபா வாங்குறவன் ஒழுங்கா திருப்பி தர மாட்டான். ஆனா, ஆள்பலம், நாக்குல நரம்பில்லாம பேசுறவனை தேடி ஆயிரக்கணக்குல வட்டியா மட்டும் கொண்டு போய் குடுத்துட்டு வருவான்.//

அப்படிதான் நிறைய பேரு இங்க இருக்காங்க .. என்னத்த சொல்ல அக்கா ..

arasan சொன்னது…

Seeni கூறியது...
vatti "
vivakaatam nallaa irukku...//

Thank u boss

arasan சொன்னது…

சீனு கூறியது...
வட்டிக்கு விடுவது தப்பு என்பதை நேர்த்தியாக சொன்ன விதம் அருமை ராசா.... கடுகுக்குள் இருக்கும் காரம்//

மிகுந்த நன்றிகள் சீனு

காரஞ்சன் சிந்தனைகள் சொன்னது…

வட்டிக்கு வாங்கி
அடைக்கமுடியாமல்
அணைந்தவர் பலபேர்!

நல்ல பதிவு! நன்றி!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இதில் மூழ்கியவர்கள் பல பேர்...