புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

அக்டோபர் 30, 2012

விரும்பி சொன்னவைகள்.(சத்தியமா அரசியல் அல்ல)


நீதிமன்றத்திற்கு தலைவணங்கி நித்தியானவந்தாவை நீக்கினேன் : 
அருணகிரி அதிரடி பேட்டி//


வர வர இந்த ஆளும் நாராயணி மாதிரி பேசுறாரே ...(இந்த ஈரவெங்கயாம் இங்க வேகாது நீங்க முன்னாடி பேசினது எல்லாத்தையும் நாங்க மறக்கல ஆதீனமே)


ப.சிதம்பரம் வெற்றிக்கு எதிரான வழக்கு: சாட்சி விசாரணையை நடத்தும்படி ஐகோர்ட் உத்தரவு// 
மாண்புமிகு நீதிபதி அவர்களே சற்று பொறுங்கள் இன்னும் ஒரு வருடம் தான் இருக்கிறது இவரின் பதவி காலம் முடிய,, பிறகு மனுவை பற்றிய விசாரணை வைத்துக்கொள்ளலாம் ..(இந்த கருமம் எல்லாம் இந்தியாவில் மட்டும் சாத்தியம் )

விஜயகாந்த் இனி எங்கு நின்றாலும் டெபாசிட் கூட கிடைக்காது: ஓ.பன்னீர்செல்வம்// 
எதுத்தாப்புல இருக்குற டீ கடையில நின்னாலுமா தலைவரே

நான் பிரபலமாவது சிலருக்கு பிடிக்கவில்லை: பவர் ஸ்டார் சீனிவாசன் வருத்தம் 
......................................//

இதுக்கு மேலையும் நீங்க பிரபலம் ஆகணுமா தலைவா ?


தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தொகுதியில் சுகாதார சீர்கேடு! டெங்கு காய்ச்சலில் மாணவி பலி!//

அங்க மட்டுமா நாறுது, தமிழ் நாடே நாறுது ...


ஆசிரியர் திட்டியதால் தீ குளித்த மாணவன் சாவு//

ஏதோ டீ குடிக்கிற மாதிரி தீ குளிக்கிறது நல்லதுக்கு அல்ல ..

படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர் பலி : 
கும்பகோணத்தில் சாலை மறியல்//

பையன் இறந்ததுக்காக சாலை மறியல் செய்யும் மக்கள் 
படியில் தொங்கி பயணம் செய்யும் போதும் கண்டனம் செய்வது நலம் ...



(இதில் வேறு உள்குத்தும் இல்ல, சும்மா என் கருத்தை இதில் பதிவு செய்கிறேன் அட சத்தியமா நம்புங்க நான் வாக்கு கேட்டு உங்களை எல்லாம் தொந்தரவு பண்ணமாட்டேன் , முக்கியமா விலையில்லா பொருள் தருவேன் என்றும் சொல்ல மாட்டேன்)

Post Comment

9 கருத்துரைகள்..:

செய்தாலி சொன்னது…

ம்ம்ம் நல்ல கருத்துள்ள பதிவு நண்பா

ezhil சொன்னது…

#
(இதில் வேறு உள்குத்தும் இல்ல, சும்மா என் கருத்தை இதில் பதிவு செய்கிறேன் அட சத்தியமா நம்புங்க நான் வாக்கு கேட்டு உங்களை எல்லாம் தொந்தரவு பண்ணமாட்டேன் , முக்கியமா விலையில்லா பொருள் தருவேன் என்றும் சொல்ல மாட்டேன்)#
இது நல்லா இருக்கே

ஆத்மா சொன்னது…

நல்ல கருத்துக்கள்
உண்மையில் இந்தியாவில் அதுவும் தமிழ் நாட்டில் தீக்குளிப்பு என்பது சாதாரண ஒன்றாகிவிட்டது
கவலைக்குறிய விடயம்...:(

*anishj* சொன்னது…

//விஜயகாந்த் இனி எங்கு நின்றாலும் டெபாசிட் கூட கிடைக்காது: ஓ.பன்னீர்செல்வம்//
எதுத்தாப்புல இருக்குற டீ கடையில நின்னாலுமா தலைவரே//
ஹாஹா... சூப்பர் தல... நல்ல கேள்வி... :)

- இப்படிக்கு அனீஷ் ஜெ...

வெற்றிவேல் சொன்னது…

அரசியலில் கலக்கப் போகும் தலைவா!!! வாழ்த்துகள்

Prem S சொன்னது…

அரசியலும் உங்களுக்கு சகஜமா வருதே கலக்குங்க

Easy (EZ) Editorial Calendar சொன்னது…

நல்ல பதிவு.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

r.v.saravanan சொன்னது…

நான் பிரபலமாவது சிலருக்கு பிடிக்கவில்லை: பவர் ஸ்டார் சீனிவாசன் வருத்தம்
......................................//
இதுக்கு மேலையும் நீங்க பிரபலம் ஆகணுமா தலைவா ?

ஹாஹா

Seeni சொன்னது…

nalla sinthanai !

sonthame...