புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

நவம்பர் 01, 2012

களவு போன கடவுள் ...


சுமை கூடியதால் 
வழக்கத்திற்கு மாறாக 
புகை கக்கியபடி நகர்கிறது 
நகரப்பேருந்து!

ங்கிலத்தில் உரையாடி 
ஆர்ப்பாட்டமாய் கடக்கிறது  
முகங்களை மூடிய 
இளம்பெண்கள் கூட்டமொன்று!

குடித்த தேநீருக்கு 
காசு கொடுக்காமல் சென்றவனை 
வசை பாடிக்கொண்டே 
பாலில் தண்ணீர் கலந்து 
கொண்டிருந்தார் கடைக்காரர்!

விரைந்து வரும் வாகனங்களை  
சில மணித்துளிகள் 
ஆசுவாச படுத்த 
நேரம் கொடுத்துக்கொண்டிருந்தார்  
போக்குவரத்து காவலர்!

முகம் மறைத்த தாடியுடன் 
எங்கேயோ பார்த்து 
ஏதோ பேசிக்கொண்டிருந்தார் 
ஒரு முதியவர்!

டுங்கிய குரலில் 
நான்கு வரிகள் பாட,
விழுந்த சில்லறைகளை 
தடவி எண்ணினாள்
பார்வையிழந்த சிறுமி!

வசரமாய் சென்ற ஆம்புலன்சில் 
அடிபட்டு இறந்த 
நாயை வட்டமிடுகின்றன 
அதன் குட்டிகள் பசியுடன்!

றுப்புகளை உருவகப்படுத்தும் 
உடையணிந்த மங்கையை 
மானபங்க படுத்திக்கொண்டிருந்தன 
சில மன்மத பார்வைகள்!

கேட்டதும் வாங்கி கொடுக்கவில்லையென்று 
முகத்தை இறுக்கமாய்
வைத்துக்கொண்டு வேறங்கோ
நோட்டமிட்டது,
தாயிடம் கோபித்துக்கொண்ட 
குழந்தை!


த்தனை நிகழ்வுகளையும் 
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த 
கடவுள், 
சற்றுமுன் 
களவு போனாராம்!

Post Comment

25 கருத்துரைகள்..:

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சிறப்போ சிறப்பு! அன்றாடம் காணக்கிடைக்கும் காட்சிகளிலிருந்து அற்புதமான கவிதை படைத்த தங்களுக்கு பாராட்டுக்கள்!

செய்தாலி சொன்னது…

ம்ம்ம் ...அழகிய காட்சிகள்
சொல்லிலும் பொருளிலும் யதார்த்தம் அருமை

மாதேவி சொன்னது…

கவிதை மூலம் காட்சிகள் விரிகின்றன.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமையாக முடித்தது சிறப்பு... வாழ்த்துக்கள்...

நன்றி...
tm2

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

காட்சிகளின் பதிவாய் கவிதை அருமை.

Prem S சொன்னது…

//இத்தனை நிகழ்வுகளையும்
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த
கடவுள்,
சற்றுமுன்
களவு போனாராம்!
//

இதான் கலக்கல்

Tamilthotil சொன்னது…

அருமையான விவரணை நண்பரே...

*anishj* சொன்னது…

சூப்பர் தல...! ஒரு சாலையில் பயணித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது கவிதை...!
கலக்கல்...!
வாழ்த்துகள் தல...!!!

- இப்படிக்கு அனீஷ் ஜெ...

பால கணேஷ் சொன்னது…

கண்ணில் படுவதை நன்றாய் அவதானித்து அழகான கவிதையாகப் புனைந்திருக்கிறீர்கள். நன்று. மிக ரசித்தேன்.

குறையொன்றுமில்லை. சொன்னது…

கடவுள் களவு போனாரா கானாமல் போனாரா?

arasan சொன்னது…

s suresh கூறியது...
சிறப்போ சிறப்பு! அன்றாடம் காணக்கிடைக்கும் காட்சிகளிலிருந்து அற்புதமான கவிதை படைத்த தங்களுக்கு பாராட்டுக்கள்!//

மிகுந்த நன்றிகள சார்

arasan சொன்னது…

செய்தாலி கூறியது...
ம்ம்ம் ...அழகிய காட்சிகள்
சொல்லிலும் பொருளிலும் யதார்த்தம் அருமை//

உணர்ந்து படித்தமைக்கு என் நன்றிகள நண்பா

arasan சொன்னது…

மாதேவி கூறியது...
கவிதை மூலம் காட்சிகள் விரிகின்றன.//

மிகுந்த நன்றிகள் மேடம்

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
அருமையாக முடித்தது சிறப்பு... வாழ்த்துக்கள்...

நன்றி...
tm2//

நன்றிங்க தனபாலன் சார்

arasan சொன்னது…

முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
காட்சிகளின் பதிவாய் கவிதை அருமை.//

என் நன்றிகள் முனைவரே

arasan சொன்னது…

Prem Kumar.s கூறியது...
//இத்தனை நிகழ்வுகளையும்
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த
கடவுள்,
சற்றுமுன்
களவு போனாராம்!
//

இதான் கலக்கல்//

ரொம்ப நேரம் யோசித்து எழுதிய முடிவு அன்பரே .. இதுதான் சரியாக இருக்கும் என்று நம்பினேன் ... என் நன்றிகள் அன்பரே

arasan சொன்னது…

Tamilraja k கூறியது...
அருமையான விவரணை நண்பரே...//

மிகுந்த நன்றிகள் நண்பா

arasan சொன்னது…

*anishj* கூறியது...
சூப்பர் தல...! ஒரு சாலையில் பயணித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது கவிதை...!
கலக்கல்...!
வாழ்த்துகள் தல...!!!//

வாங்க தல வணக்கம் , நெடு நாட்களாய் முயற்சித்து இன்றுதான் முடிக்க பெற்றது .. என் நன்றிகள் தல

arasan சொன்னது…

பால கணேஷ் கூறியது...
கண்ணில் படுவதை நன்றாய் அவதானித்து அழகான கவிதையாகப் புனைந்திருக்கிறீர்கள். நன்று. மிக ரசித்தேன்.//

மிகுந்த நன்றிகள கணேஷ் சார் ...

arasan சொன்னது…

Lakshmi கூறியது...
கடவுள் களவு போனாரா கானாமல் போனாரா?//

அது படித்து எடுத்துக்கொள்கிறவர்களின் மன நிலையை பொருத்ததுங்க அம்மா

ezhil சொன்னது…

யதார்த்தமான நிகழ்வுகளுக்கு கவிதைச் சுவையை ஏற்றி அருமையான படைப்பாக்கியுள்ளீர். வாழ்த்துகள்

Thozhirkalam Channel சொன்னது…

உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

http://otti.makkalsanthai.com/upcoming.php

பயன்படுத்தி பாருங்கள் தமிழ் உறவுகளே,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

உழவன் சொன்னது…

தினசரி வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளின் காட்சிகளை வலியுள்ள அழகான வரிகளில் பதிவாக்கியது சிறப்பு அண்ணே...

arasan சொன்னது…

தொழிற்களம் குழு கூறியது...
உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

http://otti.makkalsanthai.com/upcoming.php

பயன்படுத்தி பாருங்கள் தமிழ் உறவுகளே,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,//

பயன் படுத்தி பார்கிறேன் தோழரே

arasan சொன்னது…

Uzhavan Raja கூறியது...
தினசரி வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளின் காட்சிகளை வலியுள்ள அழகான வரிகளில் பதிவாக்கியது சிறப்பு அண்ணே...//

நன்றி தம்பி