வெளிநாட்டிலிருந்த வந்திருந்த
என்னை அழைத்து
நலம் விசாரித்துக் கொண்டிருந்தார்
உன் அப்பா!
உன்னை தேடிய என் கண்கள்
கதவிடுக்கில் சிக்கிகொண்டன,
பின்புறம் நின்று கொண்டிருந்தாய்!
பிறகு
கோயிலிலும், கொல்லைப்புறத்திலும்
கோயிலிலும், கொல்லைப்புறத்திலும்
நான்கைந்து வார்த்தைகள்
பேசியிருப்போம்!
உள்ளத்து ஆசைகள்
உன்னை சுழன்றாலும்
வறுமை தொலைக்க
வனவாசம் சென்றேன்!
மீண்டு வந்து காண்கையில்
கனவுகளில் கல்லெறிந்த
உன் அம்மா சொன்னாள்
போன பங்குனியில தான்
புள்ளைய கட்டிக்கொடுத்தொமென்று!
இருந்தும் கதவிடுக்கில் தேடும்
கண்களை கட்டுப்படுத்த
முடியவில்லை...
Tweet |
35 கருத்துரைகள்..:
மனம் அழும வலி உலகறியாது....!
மனம் வலிக்கும் கவிதை, அல்ல உண்மை இது...!
உணர்வுப் போராட்டத்தை அழகாகப் பதிவுசெய்துள்ளீர்கள்.
கவிஞரையா நீர்.... கதவிடுக்கில் தேடும் கண்களுக்கும் கரை சேர அலைகளுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என்ன? வனவாசம் சென்னை நோக்கி வந்த காரணமா ?
மனசு வலித்தது கவிதையால். நிழற்படத்தின் கண்ணில் கவிதை வரிகள் பிரதிபலித்தது.
இந்தக் கொடுமையை நீங்களும் அனுபவித்து விட்டீர்களா...?
கல்யாணம் கனவு ஆகலாம்... காதல் மாறுவதில்லை...
உள்ள உணர்வுகளை படம் காட்டிவிடுகிறது.
நல்ல கவிதை அரசன்
அரசன்,
பிரிவைப் பாடும் கவிதைகள் தான் படிப்பவரின் மனதோடு ஒட்டிக்கொண்டு சுகராகம் மீட்டும் தன்மை வாய்ந்தவை.
அரசன்,
பிரிவைப் பாடும் கவிதைகள் தான் படிப்பவரின் மனதோடு ஒட்டிக்கொண்டு சுகராகம் மீட்டும் தன்மை வாய்ந்தவை.
பிழைப்புக்காக வெளிநாடு சென்ற பலருக்கு இந்த கவிதை நிஜ வாழ்க்கையில் நடந்திருக்க வாய்ப்பு உண்டு
இன்று
Web Development Language- களை இலவசமாக படிக்க சிறந்த இணையத் தளங்கள் ...!
ஆஹா! எவ்ளோ அழகா வலியை சொல்லிருக்கீங்க, அருமையோ அருமை. இதுபோல் தொடருங்கள். இதோ! உங்களை பின்தொடர்ந்து வருகிறேன்.
மனம் கவர்ந்தவள் எங்கிருந்தாலும் எப்படியிருந்தாலும் கண்கள் அவளை காண மறுப்பது கிடையாது
// இருந்தும் கதவிடுக்கில் தேடும்
கண்களை கட்டுப்படுத்த
முடியவில்லை...//
இவ் வரிகள்கள் இக் கவிதையின் உயிர் நாடி! அருமை!
ஏன் இந்த சோகம் கவிதை அருமை அந்த கண்களை போல ...
இதுதான் காதலின் சக்தி !
கதவிடுக்கில் செலுத்தும் பார்வை...
அருமையாக உள்ளது அண்ணா... முடிவு சூப்பர்...
ஆழ்ந்த உணர்வுகளின்
உணர்ச்சிப் பார்வை சகோதரே...
அருமையான வரிகள்...
அழகான கவிதை...
உணர்ச்சிகளின் விளையாடலில்
வார்த்தைகள் கோர்க்கப்பட்ட விதம்
மிக மிக அருமை...
என்னைப் பார்த்து
நீ மண்ணைப் பார்த்த
காலமதில் அங்கே
மண் சிவந்து போனது.....
இன்றோ நீ பார்த்த மண்
என் நெஞ்சத்தில்
குருதிக்கசிவை
தானாக ஏற்படுத்தி
மெய்யை சிவப்பாக்கிப் போனது.....
ஆனால் உன் கண்கள்
மட்டும் என்னுள்
பிம்பமாக....
MANO நாஞ்சில் மனோ கூறியது...
மனம் அழும வலி உலகறியாது....!
மனம் வலிக்கும் கவிதை, அல்ல உண்மை இது...!//
உண்மைதான் அண்ணே .. பலரின் உள்ள வலி ...
முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
உணர்வுப் போராட்டத்தை அழகாகப் பதிவுசெய்துள்ளீர்கள்.//
நன்றிங்க முனைவரே
சீனு கூறியது...
கவிஞரையா நீர்.... கதவிடுக்கில் தேடும் கண்களுக்கும் கரை சேர அலைகளுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என்ன? வனவாசம் சென்னை நோக்கி வந்த காரணமா ?//
யோவ் இப்படி கேட்டா எப்படி சொல்லுவேன் ..
நாம் சந்திக்கையில் கேட்டால் சொல்லுவேன் ..
ezhil கூறியது...
மனசு வலித்தது கவிதையால். நிழற்படத்தின் கண்ணில் கவிதை வரிகள் பிரதிபலித்தது.//
நன்றிங்க மேடம்
திண்டுக்கல் தனபாலன் கூறியது...
இந்தக் கொடுமையை நீங்களும் அனுபவித்து விட்டீர்களா...?
கல்யாணம் கனவு ஆகலாம்... காதல் மாறுவதில்லை...//
உண்மைதானே சார்
Sasi Kala கூறியது...
உள்ள உணர்வுகளை படம் காட்டிவிடுகிறது//
நன்றிங்க அக்கா
T.N.MURALIDHARAN கூறியது...
நல்ல கவிதை அரசன்//
நன்றிங்க சார்
சத்ரியன் கூறியது...
அரசன்,
பிரிவைப் பாடும் கவிதைகள் தான் படிப்பவரின் மனதோடு ஒட்டிக்கொண்டு சுகராகம் மீட்டும் தன்மை வாய்ந்தவை.//
உண்மைதான் அண்ணே
"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
பிழைப்புக்காக வெளிநாடு சென்ற பலருக்கு இந்த கவிதை நிஜ வாழ்க்கையில் நடந்திருக்க வாய்ப்பு உண்டு//
பெரும்பால வெளிநாட்டு பறவைகளின் ஏக்கம் இதுவாக இருக்கும்
Semmalai Akash! கூறியது...
ஆஹா! எவ்ளோ அழகா வலியை சொல்லிருக்கீங்க, அருமையோ அருமை. இதுபோல் தொடருங்கள். இதோ! உங்களை பின்தொடர்ந்து வருகிறேன்//
நன்றிங்க நண்பரே
சிட்டுக்குருவி கூறியது...
மனம் கவர்ந்தவள் எங்கிருந்தாலும் எப்படியிருந்தாலும் கண்கள் அவளை காண மறுப்பது கிடையாது//
மிகச்சரியாக சொன்னீர் நண்பா
புலவர் சா இராமாநுசம் கூறியது...
// இருந்தும் கதவிடுக்கில் தேடும்
கண்களை கட்டுப்படுத்த
முடியவில்லை...//
இவ் வரிகள்கள் இக் கவிதையின் உயிர் நாடி! அருமை!//
மிகுந்த நன்றிகள் அய்யா
Prem Kumar.s கூறியது...
ஏன் இந்த சோகம் கவிதை அருமை அந்த கண்களை போல ...//
சும்மா ஒரு மாறுதலுக்காக சோகத்தையும் சுவைத்து பார்த்தேன்
ஹேமா கூறியது...
இதுதான் காதலின் சக்தி !//
உண்மைதான் அக்கா
இரவின் புன்னகை கூறியது...
கதவிடுக்கில் செலுத்தும் பார்வை...
அருமையாக உள்ளது அண்ணா... முடிவு சூப்பர்...//
நன்றிங்க தம்பி
மகேந்திரன் கூறியது...
ஆழ்ந்த உணர்வுகளின்
உணர்ச்சிப் பார்வை சகோதரே...
அருமையான வரிகள்...
அழகான கவிதை...
உணர்ச்சிகளின் விளையாடலில்
வார்த்தைகள் கோர்க்கப்பட்ட விதம்
மிக மிக அருமை...//
மிகுந்த நன்றிகள் அண்ணே
வறுமை தொலைக்க வனவாசம் சென்றேன்!
அருமை அரசன்
கதவிடுக்கில் மாட்டிய கண்கள் போல் மன அடுக்கில் சிக்கி கொண்ட கவிதை இது வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக