புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

டிசம்பர் 22, 2012

சிவராத்திரி கொண்டாடிய பதிவர் ...



முக்கிய பணி நிமித்தமாக என் சொந்த ஊருக்கு செல்ல வேண்டி இருந்தமையால் அவசர அவரமாக எனது வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு சென்று ஒரு வாரத்திற்கு தேவையான துணிகளை அள்ளிக்கொண்டு கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி சீறியது என் பயணம் ... சாப்பிட கூட நேரமில்லை. திடீரென்று எடுத்த முடிவு .



ஒருவழியாக கோயம்பேடு வந்து சேர்கையில் இரவு 10 மணி, இறங்கி எங்க ஊருக்கு செல்லும் பேருந்துகள் நிற்கும் நடைமேடை நோக்கி விரைந்தேன், வெறிச்சோடி கிடந்தது, இன்னைக்கு ஊருக்கு போனது மாதிரி தான் என்று எரிச்சலில் அருகில் ஏதோ கேட்க வந்த முதியவரிடம் கூட சரியாக பதில் சொல்லவில்லை. (இல்லைனா மட்டும்). 

சரியாக 11 மணிக்கு ஒரு தகரடப்பா பேருந்து இருமிக்கொண்டு உள்ளே நுழைந்தது வரும்போதே ஏகப்பட்ட நெரிசல். இங்கு நிறுத்தி பயணிகளை ஏற்ற வேண்டிய பேருந்து வரும்போதே மூச்சடைக்கும் அளவுக்கு கூட்டத்தோடு வந்தது மேலும் எரிச்சலூட்டினாலும் இதை விட்டால் இனி காலையில் தான் அடுத்த பேருந்து என்ற நினைவு எப்படியோ ஏறி ஊர் செல்லவேண்டும் என்று எச்சரித்தது. உள்ளே சென்று பார்த்தால், சென்னையின் மொத்த குப்பையும் இங்கு தான் கொட்டியிருப்பது போன்ற உணர்வை தந்தது.

என்ன செய்ய இன்னைக்கு நாம இப்படித்தான் ஊருக்கு போகணும் என்று இருக்கு என்று நொந்துகொண்டே இருக்கையை தேடினேன், பேருந்தின் கடைசி இருக்கையில் ஒரு இடம் காலியாக இருந்தது, கொஞ்சம் தயக்கம் இருந்தும் எதையும் யோசிக்காமல் சென்று அமர்ந்து கொண்டேன். பேருந்து நகர ஆரம்பித்தது. நடத்துனர் பயணச்சீட்டு கொடுக்க ஆரம்பித்தார் அவரின் செய்கையும் பேச்சும் மிகவும் கீழ்த்தரமாக இருந்தது. பைல்ஸ் வந்தவர் போல அடிக்கடி பயணிகளிடம் எரிந்து விழுந்தார். எல்லாத்துக்கும் போராட்டம் நடத்தும் தொழிற்சங்கங்கள் இதையும் கொஞ்சம் கவனித்தால் நலம். 

சரி சதி செய்யும் விதியை என்ன செய்வது என்று நொந்து கொண்டே சரி சற்று நேரம் கண்ணை மூடலாம் என்று எத்தனிக்கையில் "அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்" என்று வீரிட்டது சீனா தயாரிப்பு கைப்பேசி ஒன்று, இன்னொரு பக்கம் "அடிடா அவளை" என்று கதறியது. இந்த பெருத்த இம்சைகளுக்கு மத்தியில் எப்படி உறங்குவது விடிய விடிய சிவராத்திரி தான். 

தன் சந்தோஷம் தான் முக்கியம் என்று அடுத்தவன பற்றி கவலை படாத சமூகத்திற்கு நாம் மாறிவிட்டோம், இதை எண்ணினால் எவ்வளவு வெட்கமாக இருக்கிறது, வருகிற ஒவ்வொரு அரசாங்கமும் மக்கள் நலனில் அக்கறை கொண்டது மாதிரியான நாடங்களை நடத்திவிட்டு, நான்கு இலவசங்களை திணித்து விட்டு முன்னேற்றம் பற்றி சிந்திக்காமல் செல்லுகையில் எப்படி உருப்படும், உருப்பெறும்!   


Post Comment

20 கருத்துரைகள்..:

MARI The Great சொன்னது…

ஊரு போய் சேர்ந்தீங்கலான்னு சொல்லலையே? :-)

”தளிர் சுரேஷ்” சொன்னது…

நல்ல அனுபவம்தான்! துன்பத்தையும் நகைச்சுவையாக பகிர்ந்த விதம் சிறப்பு!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

ப்ரேக் டவுன் ஆகாம போய் சேந்திங்களா? அதுக்கு சந்தோஷப் படுங்க!

சீனு சொன்னது…

சுவாரஸ்யமான பதிவு ராசா... தமிழக பேருந்தும் தமிழகமும் தள்ளாடத் தான் செய்கிறது
அருமையான எழுத்து நடையுள்ள பதிவு

Robert சொன்னது…

தமிழ் நாட்டுல இருந்துகிட்டு இதுக்கெல்லாம் கவலைப்பட்டா எப்படி நண்பா???!!!

Unknown சொன்னது…

நான் கூட சிவரதிரின்னு என்னமோ நெனச்சிட்டேன் போங்கோ ஹிஹிஹி

குறையொன்றுமில்லை. சொன்னது…

வீட்ல போயி நல்லா தூங்கினீங்களா?

r.v.saravanan சொன்னது…

தன் சந்தோஷம் தான் முக்கியம் என்று அடுத்தவன பற்றி கவலை படாத சமூகத்திற்கு நாம் மாறிவிட்டோம், முன்னேற்றம் பற்றி சிந்திக்காமல் செல்லுகையில் எப்படி உருப்படும், உருப்பெறும்!

yes arasan

ezhil சொன்னது…

கரெக்ட்தான் அரசன். இனி அவர்கள் அப்படித்தான் எனும் மனோபாவத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும் இல்லையெனில் இச் சமூகத்தில் வாழத் தகுதியில்லாதவராவோம்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கிறிஸ்துமஸ் + புத்தாண்டு வாழ்த்துக்கள்...

arasan சொன்னது…

வரலாற்று சுவடுகள் கூறியது...
ஊரு போய் சேர்ந்தீங்கலான்னு சொல்லலையே? :-)//

சேர்ந்தாச்சு தலைவா

arasan சொன்னது…

s suresh கூறியது...
நல்ல அனுபவம்தான்! துன்பத்தையும் நகைச்சுவையாக பகிர்ந்த விதம் சிறப்பு!//

என்ன பண்ணுவது சார் ...

arasan சொன்னது…

T.N.MURALIDHARAN கூறியது...
ப்ரேக் டவுன் ஆகாம போய் சேந்திங்களா? அதுக்கு சந்தோஷப் படுங்க!//

அப்படி பழகி போச்சு நம் மனசு சார்

arasan சொன்னது…

சீனு கூறியது...
சுவாரஸ்யமான பதிவு ராசா... தமிழக பேருந்தும் தமிழகமும் தள்ளாடத் தான் செய்கிறது
அருமையான எழுத்து நடையுள்ள பதிவு //

நன்றி சீனு

arasan சொன்னது…

Robert கூறியது...
தமிழ் நாட்டுல இருந்துகிட்டு இதுக்கெல்லாம் கவலைப்பட்டா எப்படி நண்பா???!!!//

ஹா ஹா .. என்ன பண்றது நண்பா

arasan சொன்னது…

சக்கர கட்டி கூறியது...
நான் கூட சிவரதிரின்னு என்னமோ நெனச்சிட்டேன் போங்கோ ஹிஹிஹி//

புரியுது பாஸ்

arasan சொன்னது…

Lakshmi கூறியது...
வீட்ல போயி நல்லா தூங்கினீங்களா?//

மறுநாள் இரவு தான் தூக்கம் .. அன்று முழுக்க வேலை தான் அம்மா

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
தன் சந்தோஷம் தான் முக்கியம் என்று அடுத்தவன பற்றி கவலை படாத சமூகத்திற்கு நாம் மாறிவிட்டோம், முன்னேற்றம் பற்றி சிந்திக்காமல் செல்லுகையில் எப்படி உருப்படும், உருப்பெறும்!
//

உண்மைதானே சார்

arasan சொன்னது…

ezhil கூறியது...
கரெக்ட்தான் அரசன். இனி அவர்கள் அப்படித்தான் எனும் மனோபாவத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும் இல்லையெனில் இச் சமூகத்தில் வாழத் தகுதியில்லாதவராவோம்.//

என்ன ஒரு மாற்றம் பாருங்க

arasan சொன்னது…

இராஜராஜேஸ்வரி கூறியது...
கிறிஸ்துமஸ் + புத்தாண்டு வாழ்த்துக்கள்...//

உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்