புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜனவரி 10, 2013

நடைவண்டி...எனக்கு 
என் மாமியார் கொடுத்தது,
அவருக்கு அவங்க மாமியார் 
கொடுத்ததாம் என்று அடிக்கடி 
பெருமை கொள்வாள் அம்மா!

இரண்டு தலைமுறையோடு 
உறவாடிய 
மூன்று சக்கர நடைவண்டி
மூலையில் புழுதியண்டி கிடக்கிறது!

ஒன்னரை வயது என் மகன் 
சுழலும் நவீன வண்டியில் 
சுற்றிவருகிறான் நளினமாக!

இதுபோன்று எத்தனைகளை 
இழந்திருக்கிறோமென்று 
அசைபோடுகையில், 
இருநூறு இடிகள் 
ஒருங்கே இறங்குகிறது  
என்னுள்!Post Comment

14 கருத்துரைகள்..:

ezhil சொன்னது…

உண்மைதான் அரசன் .எங்கள் வீட்டில் ஒரு ஆடும் இரும்பு சேர் (அதனை எப்படி சொல்வதென்று தெரியவில்லை) இருந்தது. நானும் என் அண்ணங்களும் விளையாடியது. என் பிள்ளையும் அண்ணன் குழந்தைகளும் விளையாடினர். ஒரு சமயத்தில் அதன் பாகங்கள் தேய்ந்து கிழிக்க ஆரம்பித்ததும் அம்மா அதனை எடைக்குப் போட்ட போது ஏனோ மனசுக்கு வருத்தமாக இருந்தது. (ஒருவேளை என் பேரக் குழந்தைக்கு வேண்டும் என நினைத்தேனோ)

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

தொலைந்த நம் மரபுகளை எண்ணிப்பார்க்கும் போது வருத்தமாக உள்ளது நண்பா.

இதோ..
பிள்ளைத் தமிழ் (பருவங்கள் - படங்களுடன்)


http://www.gunathamizh.com/2011/01/blog-post_12.html

T.N.MURALIDHARAN சொன்னது…

இழந்ததே தெரியாமல் இருப்பது இன்னும் வேதனை

தமிழ்த்தோட்டம் சொன்னது…

கலக்குறீங்க தல

புலவர் சா இராமாநுசம் சொன்னது…இப்படி நாம் இழந்தன பல அரசன்!

r.v.saravanan சொன்னது…

நடை வண்டி கவிதை நடையில் படிக்கும் நமக்குள் நடை பழகுகிறது அரசன் பொங்கல் நல் வாழ்த்துக்கள் அரசன்

ezhil சொன்னது…

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்

அரசன் சே சொன்னது…

ezhil சொன்னது…
உண்மைதான் அரசன் .எங்கள் வீட்டில் ஒரு ஆடும் இரும்பு சேர் (அதனை எப்படி சொல்வதென்று தெரியவில்லை) இருந்தது. நானும் என் அண்ணங்களும் விளையாடியது. என் பிள்ளையும் அண்ணன் குழந்தைகளும் விளையாடினர். ஒரு சமயத்தில் அதன் பாகங்கள் தேய்ந்து கிழிக்க ஆரம்பித்ததும் அம்மா அதனை எடைக்குப் போட்ட போது ஏனோ மனசுக்கு வருத்தமாக இருந்தது. (ஒருவேளை என் பேரக் குழந்தைக்கு வேண்டும் என நினைத்தேனோ)//

ஒன்றை இழக்கும்போதுதான் அதன் வலி புரிகிறது ...
உங்கள் மனம் அப்படித்தான் எண்ணியிருக்கும்

அரசன் சே சொன்னது…

முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
தொலைந்த நம் மரபுகளை எண்ணிப்பார்க்கும் போது வருத்தமாக உள்ளது நண்பா.

இதோ..
பிள்ளைத் தமிழ் (பருவங்கள் - படங்களுடன்)
//

உண்மைதான் முனைவரே

அரசன் சே சொன்னது…

T.N.MURALIDHARAN கூறியது...
இழந்ததே தெரியாமல் இருப்பது இன்னும் வேதனை//

மிகப்பெரிய வேதனை

அரசன் சே சொன்னது…

தமிழ்த்தோட்டம் கூறியது...
கலக்குறீங்க தல//

நன்றிங்க புது மாப்பிள்ளை

அரசன் சே சொன்னது…

புலவர் சா இராமாநுசம் கூறியது...


இப்படி நாம் இழந்தன பல அரசன்!//

உண்மைதான் அய்யா

அரசன் சே சொன்னது…

r.v.saravanan கூறியது...
நடை வண்டி கவிதை நடையில் படிக்கும் நமக்குள் நடை பழகுகிறது அரசன் பொங்கல் நல் வாழ்த்துக்கள் அரசன்.//

நன்றிங்க சார் ... உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

அரசன் சே சொன்னது…

ezhil கூறியது...
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்//

எனதினிய பொங்கல் நல வாழ்த்துக்கள் உங்களுக்கும் , குடும்பத்தாருக்கும்