அகம் மகிழ்ந்த,
ஆடி
பதினெட்டும்,
உள்ளம் கரைத்த
கார்த்திகை
ஒளிக்கற்றையும்,
நெஞ்சோடு மஞ்சம்
கொண்ட
மார்கழி குளிரும்,
வண்ணம் நிறைத்த
தைப்
பொங்கலும்,
அதன் வடிவம்
மாறாமல் அப்படியே
தான் இருக்கின்றன,
நடப்பில் அல்ல
என் மனக்கிடப்பில்...
Tweet |
27 கருத்துரைகள்..:
எளிமையான வரிகளில் ரசனையான கவிதை! நன்று!
நடப்பில் மாறி விட்டலும் நம் உள்ளக் கிடக்கையில் அப்படியே தான் இருக்கின்றன அத்தனையும்
நடப்பில் அல்ல என் மனக்கிடப்பில்! அழகான வார்த்தை விளையாடல்! அருமையான கவிதை! நன்றி
அதன் வடிவம்
மாறாமல் அப்படியே
தான் இருக்கின்றன,//
மனதில் மாறாமல் இருப்பது மகிழ்ச்சி.
ம்ம்ம்.... ரசனையான கவிதை
சந்தோசம் தழைத்திட சில சோகங்கள் கலைந்திட என்றும் எம் வாழ்விலே எதிர் பார்க்கிறோம் நாட்களில் நல்ல மாற்றங்கள் உண்டாக வேண்டும் என்று.அந்த மாற்றங்கள் மாறாதிருப்பதும் மன வேதனையே !.....பொன்னான நாள் எல்லோரது வாழ்விலும் மலர வேண்டும் .இதமான இக் கவிதை வரிகளுக்கு என் பாராட்டுகள் சகோ .
நடப்பில் அல்ல
என் மனக்கிடப்பில்... //
அருமை
நல்லதொரு கவிதை...பாராட்டுகள்...
உண்மையான கருத்து!
எளிமை! இனிமை! அருமை!
யோவ் ராசா காதல் கவிதை எங்கையா போச்சு.... சும்மா தை மார்கழி ன்னு சொல்லிக்கிட்டு.....
ம்ம்ம்ம்ம் நானும் பொங்கலை தேடிக் கொண்டு தான் உள்ளேன் .. கண்டுபிடித்து தாரும்
நடப்பில் எல்லாமே மாறி விட்டதே....
மனதில் உள்ளதை நினைத்து ரசிக்கத் தான் முடிகிறது.....
நல்ல வார்த்தைப் பிரயோகங்கள்
நினைவுகளை நெஞ்சம் மறப்பதில்லை.
பால கணேஷ் கூறியது...
எளிமையான வரிகளில் ரசனையான கவிதை! நன்று!//
நன்றிங்க சார்
r.v.saravanan கூறியது...
நடப்பில் மாறி விட்டலும் நம் உள்ளக் கிடக்கையில் அப்படியே தான் இருக்கின்றன அத்தனையும்//
அனைவரிடத்திலும் இல்லை என்பதும் ஒரு வலி தான் சார்
s suresh கூறியது...
நடப்பில் அல்ல என் மனக்கிடப்பில்! அழகான வார்த்தை விளையாடல்! அருமையான கவிதை! நன்றி//
நன்றிங்க சார்
கோமதி அரசு கூறியது...
அதன் வடிவம்
மாறாமல் அப்படியே
தான் இருக்கின்றன,//
மனதில் மாறாமல் இருப்பது மகிழ்ச்சி.//
நன்றிங்க மேடம்
செய்தாலி கூறியது...
ம்ம்ம்.... ரசனையான கவிதை//
நன்றிங்க நண்பா
அம்பாளடியாள் கூறியது...
சந்தோசம் தழைத்திட சில சோகங்கள் கலைந்திட என்றும் எம் வாழ்விலே எதிர் பார்க்கிறோம் நாட்களில் நல்ல மாற்றங்கள் உண்டாக வேண்டும் என்று.அந்த மாற்றங்கள் மாறாதிருப்பதும் மன வேதனையே !.....பொன்னான நாள் எல்லோரது வாழ்விலும் மலர வேண்டும் .இதமான இக் கவிதை வரிகளுக்கு என் பாராட்டுகள் சகோ .//
நன்றிங்க சகோ .. உங்களின் கருத்துக்கு
கவியாழி கண்ணதாசன் கூறியது...
நடப்பில் அல்ல
என் மனக்கிடப்பில்... //
அருமை//
நன்றிங்க சார்
ரெவெரி கூறியது...
நல்லதொரு கவிதை...பாராட்டுகள்...//
நன்றிங்க
அருணா செல்வம் கூறியது...
உண்மையான கருத்து!//
நன்றிங் மேடம்
புலவர் சா இராமாநுசம் கூறியது...
எளிமை! இனிமை! அருமை!//
நன்றிங் அய்யா //
சீனு கூறியது...
யோவ் ராசா காதல் கவிதை எங்கையா போச்சு.... சும்மா தை மார்கழி ன்னு சொல்லிக்கிட்டு.....
ம்ம்ம்ம்ம் நானும் பொங்கலை தேடிக் கொண்டு தான் உள்ளேன் .. கண்டுபிடித்து தாரும்//
காதல் தானே ,,, வரும் சீனு...
கொஞ்ச நாள் விடுப்பு கொடுத்துருக்கேன் ...
முக்கு முனியாண்டி பவன் ல வாங்கி வைச்சிருக்கேன் வந்து வாங்கி கொள்ளவும் பொங்கலை ...
வெங்கட் நாகராஜ் கூறியது...
நடப்பில் எல்லாமே மாறி விட்டதே....
மனதில் உள்ளதை நினைத்து ரசிக்கத் தான் முடிகிறது.....//
உண்மைதான் சார்
T.N.MURALIDHARAN கூறியது...
நல்ல வார்த்தைப் பிரயோகங்கள்
நினைவுகளை நெஞ்சம் மறப்பதில்லை.//
எப்பொழுதுமே சார்
ஒரு ஓரமான சோகம் புரிகிறது.. பழைய வாழ்க்கையின் மிச்சங்கள்....
கருத்துரையிடுக