புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜனவரி 28, 2013

மீண்டுமொரு பயண வேதனை...சென்ற வாரம் ஊருக்கு செல்ல வேண்டி இருந்தது, இரயிலில் டிக்கட் கிடைக்காமல் போனதால் வேறு வழியின்றி பேருந்தை நோக்கியது என் கவனம்! கோயம்பேடு பேருந்து நிலையம் மாதிரி பெரியதும், சுகாதாரம் குறைந்ததும் இல்லை என்று சொல்வதில் தவறில்லை! பெரும்பாலும் எங்க ஊருக்கு செல்லும் பேருந்துகளை எத்தனை தொலைவில் இருந்தாலும் எளிதில் அடையாளம் காணலாம், அம்புட்டு அவ லட்சணமாய் தனியாக தெரியும்!
இந்த முறை அதே எண்ணத்தில் சென்ற எனக்கு பேரதிர்ச்சி, பளிச்சென்று கவர்ச்சி நடிகை போன்று காட்சி தந்து என்னை இன்பக்கடலில் ஆழ்த்தியது. இன்பக்கடலில் அப்படியே நீந்தி ஒருவழியாக பேருந்தில் ஏறினேன்! பிறகு தான் விளங்கியது இது அதே பழைய பல்லவிதானென்று! எம்பது வயசு கெழவிக்கு பட்டுப்பாவாடை கட்டி கூட்டிவந்த கணக்கா, வெளியே பவுசும் உள்ளே அதே பல்லு போன பழசும்! மண்டை கொஞ்சமாய் சூடேறியது! என்னா எழவுக்கு வெளிய மட்டும் பெயிண்ட் அடிச்சி ஊரை ஏமாத்தணும்! (என்னவோ போடா மாதவா?)

இருக்கையை தேடினால் கடைசி வரிசை தான் காலியாக இருந்தது, மற்ற இருக்கைகளில் பேக்குகள் இருந்தன, ஒரு இருக்கையில் காலண்டர் இருந்தது (தமிழண்டா!!!). எப்படி இடம் பிடிப்பதென்று பல்கலைகழகம் ஆரம்பிக்க தமிழன் ஒருவனுக்கே அந்த தகுதி இருக்கிறதுகடைசி வரிசையில் வலது புற சன்னல் ஓரம் என் பேக்கை வைத்து விட்டு, தண்ணீர் வாங்க சென்றேன்! இரண்டு பேருந்துகளுக்கு இடையில் ஒரு "குடிமகன்" வெகு அவசரமாக தாக சாந்தி நடத்திக்கொண்டிருந்தார்! (ம்ம்ம்ம் .. அவனவன் பிரச்சினை அவனவனுக்கு).

ஒருவழியாக பேருந்து கிளம்பியது நான் என்ன நடக்க கூடாது என்று எதிர்பார்த்தேனோ அதுதான் நடந்தேறியது, (என் எண்ணம் அம்புட்டு மோசமானது போல)அந்த குடிமகன் மிகச்சரியாய் என் அருகில் அமர்ந்து கொண்டார், அதன்பிறகு நான் பட்ட அவஸ்தை இருக்கே...... வேண்டாம் விடுங்க என் கஷ்டம் என்னோட போகட்டும்! அந்த சுக போக தருணத்தில் இன்னும் இனிமை கூட்டினார் நம் திடமான பதிவர், "போன் பண்ணியவர், யோவ் உனக்கா கால் வந்துடுச்சு சாரி, நான் அந்த புள்ளைக்கு தானே போட்டேன் எப்படி இவருக்கு வந்திருக்கும் என்று தானே பேசிக்கொண்டு கால் கட் செய்து களிப்பை? தந்தார் ".... (நீ நல்லா வருவைய்யா , நல்லா வருவ....)

இனி எந்தப்பேருந்தில் பின் வரிசை இருக்கைகளை கண்டால் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட்டம் பிடிச்சிர மாட்டேன்!

Post Comment

19 கருத்துரைகள்..:

சீனு சொன்னது…

//எம்பது வயசு கெழவிக்கு பட்டுப்பாவாடை கட்டி கூட்டிவந்த கணக்கா//
//வெளியே பவுசும் உள்ளே அதே பல்லு போன பழசும்!//
செம ஹா ஹா ஹா

//சன்னல் ஓரம் என் பேக்கை வைத்து விட்டு,// உன்னை சொல்லி குற்றமில்லை என்னை சொல்லி குற்றமில்லை

சீனு சொன்னது…//நம் திடமான பதிவர், "போன் பண்ணியவர், யோவ் உனக்கா கால் வந்துடுச்சு சாரி, நான் அந்த புள்ளைக்கு தானே போட்டேன் எப்படி இவருக்கு வந்திருக்கும் என்று தானே பேசிக்கொண்டு கால் கட் செய்து களிப்பை? தந்தார் "....//

அடங்கோய்யாள... ஏதோ கிசு கிசு எழுதிறமாதிரி எழுத வேண்டியது... யோவ் மனசாட்சி ன்னு ஒன்னு இருந்தா அத அஞ்சலிகிட்டயா அடகு வைக்கிறது... கர்தூ....

r.v.saravanan சொன்னது…

கடைசி சீட் கொடுமை கொஞ்சம் கொடியது தான் அதயும் படிக்கும் விதத்தில் சுவாரஸ்யமாக தந்தது தங்கள் எழுத்து

நீங்க நல்லா வருவீங்க அரசன்

எம்பது வயசு கெழவிக்கு பட்டுப்பாவாடை கட்டி கூட்டிவந்த கணக்கா, வெளியே பவுசும் உள்ளே அதே பல்லு போன பழசும்!

ஹா ஹா


rajamelaiyur சொன்னது…

பாஸ் நாங்கெல்லாம் 15 வருஷமா இது போல அவஸ்தையுடன் தான் பஸ்ல போறேன் ..

rajamelaiyur சொன்னது…

இன்று
விஸ்வருபம் தடை சரியா ? தவறா ? மாபெரும் கருத்து கணிப்பு

சதீஷ் செல்லதுரை சொன்னது…

ஐயோ தலிவரே அந்த கடைசி போனுக்கு பின்னும் திடங்கொண்டு பதிவு போட்டிங்க பாருங்க....நீங்க வசுவை போல இடிதாங்கி....

Seeni சொன்னது…

athu sari .....

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அவதி தான்.... :(

ezhil சொன்னது…

நகைச்சுவைப் பதிவு போல் இருந்தது உங்கள் அனுபவப் பதிவு(என்னோட கஷ்டம் உங்களுக்கு சந்தோஷமான்னு கேக்கறது காதுல விழுது :))

பால கணேஷ் சொன்னது…

சுவாரஸ்யமா உங்க சொ(நொ)ந்த அனுபவத்தை பகிர்ந்திருக்கீங்க அரசன்! திடங்கொண்ட நண்பருக்கு கேர்ள் ஃப்ரண்ட்ஸ் உண்டுங்கற விஷயம் இப்பத்தான் புரியுது. தம்பி சொல்லவே இல்லியே...!

arasan சொன்னது…


சீனு கூறியது...
//எம்பது வயசு கெழவிக்கு பட்டுப்பாவாடை கட்டி கூட்டிவந்த கணக்கா//
//வெளியே பவுசும் உள்ளே அதே பல்லு போன பழசும்!//
செம ஹா ஹா ஹா

//சன்னல் ஓரம் என் பேக்கை வைத்து விட்டு,// உன்னை சொல்லி குற்றமில்லை என்னை சொல்லி குற்றமில்லை//

நன்றி சீனு

arasan சொன்னது…

சீனு கூறியது...


//நம் திடமான பதிவர், "போன் பண்ணியவர், யோவ் உனக்கா கால் வந்துடுச்சு சாரி, நான் அந்த புள்ளைக்கு தானே போட்டேன் எப்படி இவருக்கு வந்திருக்கும் என்று தானே பேசிக்கொண்டு கால் கட் செய்து களிப்பை? தந்தார் "....//

அடங்கோய்யாள... ஏதோ கிசு கிசு எழுதிறமாதிரி எழுத வேண்டியது... யோவ் மனசாட்சி ன்னு ஒன்னு இருந்தா அத அஞ்சலிகிட்டயா அடகு வைக்கிறது... கர்தூ....//

அஞ்சலி கிட்ட வைக்குற அளவுக்கு என் கிட்ட மனசாட்சி கொட்டிகிடக்கவில்லை என்பதை அடக்கத்துடன் அறிவித்து கொள்கிறேன் மிஸ்டர் சீனு ..

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
கடைசி சீட் கொடுமை கொஞ்சம் கொடியது தான் அதயும் படிக்கும் விதத்தில் சுவாரஸ்யமாக தந்தது தங்கள் எழுத்து

நீங்க நல்லா வருவீங்க அரசன்

எம்பது வயசு கெழவிக்கு பட்டுப்பாவாடை கட்டி கூட்டிவந்த கணக்கா, வெளியே பவுசும் உள்ளே அதே பல்லு போன பழசும்!

ஹா ஹா //

நன்றிங் சார்

arasan சொன்னது…

என் ராஜபாட்டை : ராஜா கூறியது...
பாஸ் நாங்கெல்லாம் 15 வருஷமா இது போல அவஸ்தையுடன் தான் பஸ்ல போறேன் ..//

சென்னை டு அரியலூர் மாதிரி ஊருக்கெல்லாம் பின்வரிசை பயணம் கொடியது வாத்யாரே

arasan சொன்னது…

சதீஷ் செல்லதுரை கூறியது...
ஐயோ தலிவரே அந்த கடைசி போனுக்கு பின்னும் திடங்கொண்டு பதிவு போட்டிங்க பாருங்க....நீங்க வசுவை போல இடிதாங்கி....//

பாராட்டிய உங்களுக்கு என் பணிவான வணக்கங்கள் தலீவா

arasan சொன்னது…

Seeni கூறியது...
athu sari .....//

kodumai thalaivare

arasan சொன்னது…

வெங்கட் நாகராஜ் கூறியது...
அவதி தான்.... :(//

உண்மைதாங்க

arasan சொன்னது…

ezhil கூறியது...
நகைச்சுவைப் பதிவு போல் இருந்தது உங்கள் அனுபவப் பதிவு(என்னோட கஷ்டம் உங்களுக்கு சந்தோஷமான்னு கேக்கறது காதுல விழுது :))//

புரிந்து கொண்ட உங்களுக்கு என் நன்றிகள் ஹி ஹி

arasan சொன்னது…

பால கணேஷ் கூறியது...
சுவாரஸ்யமா உங்க சொ(நொ)ந்த அனுபவத்தை பகிர்ந்திருக்கீங்க அரசன்! திடங்கொண்ட நண்பருக்கு கேர்ள் ஃப்ரண்ட்ஸ் உண்டுங்கற விஷயம் இப்பத்தான் புரியுது. தம்பி சொல்லவே இல்லியே...!//

தம்பிக்கு நிறைய பொண்ணுங்க நண்பிகளா இருக்காங்க .. விடாம மிரட்டி கேளுங்க .. சொல்லுவாப்ள சார்