புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

பிப்ரவரி 04, 2013

உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு ....


நெடு நாட்களாய் அந்த மாதிரி வாசகங்களை நான் நிறைய பார்த்துக்கொண்டு வந்தாலும் பெரியதாய் எடுத்துக்கொண்டதில்லை. பேருந்தில் தான் அதிகம் இதை அதிகம் கண்டிருக்கிறேன்! அப்புறம் மாநகர தெருக்களில் பாடாவதியாய் நின்றுகொண்டு பிரசுரம் பண்ணிக்கொண்டு இருப்பார்கள், மேலதிக விபரம் கேட்டால் எனக்கு தெரியாதுங்க இதை கொடுத்தா சம்பளம் தரேன்னு சொன்னாங்க அதனால் இதை கொடுக்குறேன், உங்களுக்கு அதிகம் தகவ ல் வேண்டுமென்றால் குறிப்பிட்டிருக்கும் எண்ணில் தொடர்பு கொண்டு கேளுங்க என்று பதில் வரும்! அதன்பிறகு கொடுத்தாலும் வாங்குவதில்லை!

சில நாட்களுக்கு முன்பு இதே போன்ற ஒரு விளம்பரத்தை அரியலூர் பேருந்து நிலையத்தில் கண்டேன், பொழுது போகாமல் இருந்த தருணம் வேறு, 
!!!பிரபல நிறுவனத்தில் பணி  புரிய உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!!!.
பகுதி நேரம் 8000/- முழுநேரம் 12000/- சண்டே மட்டும் 4000/- வீட்டில் இருந்த படியே நீங்கள் சம்பாதிக்கலாம்! இல்லத்தரசிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன் பெற ஒரு சந்தர்ப்பம்! என்று அடங்கிய சுவரொட்டி! வேறு எந்த விபரமும் இல்லை இரண்டு அலைபேசி எண்கள் மட்டும் இருந்தன! சரி என்னதான் சொல்லுவாங்க கேட்போமே என்று முதலில் இருந்த எண்ணுக்கு அழைத்தேன் பதிலில்லை, அடுத்த எண்ணுக்கு அழைத்தேன் கானக்குரல் கவனத்தை ஈர்த்தது! 

நான் ஒரு கல்லூரி மாணவர் என்று அறிமுகபடுத்திக்கொண்டு வேலையை பற்றிய சந்தேகங்களை கேட்க ஆரம்பித்தேன், என்னைப்பற்றியும் சில கேள்விகளை கேட்டு அறிந்து கொண்ட அம்மணி, நேர்ல வாங்க சார் பேசுவோம், போன்ல சொன்னா உங்களுக்கு சரியா புரியாது, என்று கொக்கி போட ஆரம்பித்தது அந்த அம்மணி! கெஞ்சி கதறி கேட்டுக்கொண்டதற்கு இனங்கி எங்க நிறுவனத்துல நீங்க சேருவதற்கு இரண்டு தகுதி வேண்டும்.
 1) 10,000/- நீங்கள் எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யணும், 2) நீங்கள் சொந்தமாக கணினி வைத்திருக்க வேண்டும் (இணைய இணைப்புடன்) மேலும் விருப்பம் இருப்பின் கோவையில் உள்ள ஒரு ஹோட்டலின் முகவரியை சொல்லி நேரில் வரும்படி சொல்லி இணைப்பை துண்டித்தது!

நிச்சயம் இது ஒரு மன்னாரன் வகையை சேர்ந்த கம்பெனியாகத்தான் இருக்கும் என்பது விளம்பரத்தை பார்க்கும் போதே அறிந்து கொண்டேன்! மாநகரங்களில் இவர்களின் பருப்பு வேகவில்லை என்று தெரிந்ததும் மாவட்டங்களை குறி வைத்துள்ளனர். பெரும்பாலும் மாணவர்கள், இல்லத்தரசிகள் இவர்களின் இலக்கு! இவர்களுக்கு மாதம் நான்கு, ஐந்து ஆடுகள் சிக்கினாலே போதும் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள் போலும்! ஆகவே நண்பர்களே, சிக்காமல் இருந்து சிக்கலை எடுத்து சொல்லுங்கள் உங்களுக்கு தெரிந்தவர்களிடம், சிக்கியவர்கள் வெட்கத்தை உதிர்த்து சிலரிடம் விழிப்பு கொடுங்கள்! 

Post Comment

20 கருத்துரைகள்..:

சீனு சொன்னது…

//பாடாவதியாய் நின்றுகொண்டு பிரசுரம் பண்ணிக்கொண்டு // உங்களுக்குப் பின் ஒளிவட்டம் தெரிகிறது திருவாளர் ராசா ....

பிள்ள எடுத்த உமக்கு காந்தக் குரலா... இருக்கட்டும்யா இருக்கட்டும்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தெருக்களில் மட்டுமா...? எல்லா புகைவண்டி / பேருந்து கழிப்பறை சுவர்களிலும்...

ஆடுகளை அடித்து சாப்பிட்டு விடுவார்கள்... ஜாக்கிரதை...

r.v.saravanan சொன்னது…

பொது மக்கள் இதை கண்டு ஏமாற கூடாது

நல்லதொரு சமூக சேவை நோக்கம் கொண்ட பதிவு அரசன் வாழ்த்துக்கள்

”தளிர் சுரேஷ்” சொன்னது…

மன்னார் அண்ட் கம்பெனிகள் இப்போது தென் மாவட்டங்களை குறிவைத்துள்ளதா? உஷாரா இருங்க மக்கா! விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி!

Unknown சொன்னது…



விழிப்புணர்வு தேவை! விளக்கம் நன்று!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இது போல எத்தனை பேர் ஏமாற்றுவதை தொடர்கிறார்கள்....

ஏமாற மக்கள் தயாராக இருக்கும் வரை இது தொடரத்தான் செய்யும்.....

அருணா செல்வம் சொன்னது…

நல்ல விழிப்புணர்வு பதிவு.
நன்றி.

பால கணேஷ் சொன்னது…

இந்த மாதிரி விளம்பரங்களை நானும் கவனிச்சு, இதுக்குப் பின்னால ஏதோ இருக்கணும்னு மட்டும் மனசுல நினைச்சதுண்டு. இப்டில்லாம் தூண்டில் போடுறாய்ங்களா...? 10 ஆடுகள் சிக்கினாலே ஒரு லட்சம் தேறிடுதே! யப்பா...! நல்லா ஊதியிருக்கீங்க எச்சரிக்கை சங்கு!

புரட்சி தமிழன் சொன்னது…

இப்படி வெளிப்படையாக விளம்பரம் செய்து ஏமாற்றுபவர்களை காவல்துறை ஏன் விசாரிப்பதில்லை.

புரட்சி தமிழன் சொன்னது…

குறைந்த பட்சம் பேருந்து தொடர்வண்டி ஆகிவைகளில் அனுமதி இன்றி விளம்பரம் செய்வதர்காகவாவது இவர்களை தண்டிக்கலாம். இது மட்டுமல்ல பைல்ஸ் பிஸ்துளா மூலம் எனவும் விளம்பரங்கள்.

arasan சொன்னது…

சீனு கூறியது...
//பாடாவதியாய் நின்றுகொண்டு பிரசுரம் பண்ணிக்கொண்டு // உங்களுக்குப் பின் ஒளிவட்டம் தெரிகிறது திருவாளர் ராசா ....

பிள்ள எடுத்த உமக்கு காந்தக் குரலா... இருக்கட்டும்யா இருக்கட்டும்//

ஒளிவட்டத்தை உருவாக்கியவரே நீர்தானய்யா

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
தெருக்களில் மட்டுமா...? எல்லா புகைவண்டி / பேருந்து கழிப்பறை சுவர்களிலும்...

ஆடுகளை அடித்து சாப்பிட்டு விடுவார்கள்... ஜாக்கிரதை...//

ஆம் சார்

arasan சொன்னது…

s suresh கூறியது...
மன்னார் அண்ட் கம்பெனிகள் இப்போது தென் மாவட்டங்களை குறிவைத்துள்ளதா? உஷாரா இருங்க மக்கா! விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி!//

இருந்தால் நல்லது

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
பொது மக்கள் இதை கண்டு ஏமாற கூடாது

நல்லதொரு சமூக சேவை நோக்கம் கொண்ட பதிவு அரசன் வாழ்த்துக்கள் //

நன்றிங்க சார்

arasan சொன்னது…

புலவர் சா இராமாநுசம் கூறியது...


விழிப்புணர்வு தேவை! விளக்கம் நன்று!//

நன்றிங்க அய்யா

arasan சொன்னது…

வெங்கட் நாகராஜ் கூறியது...
இது போல எத்தனை பேர் ஏமாற்றுவதை தொடர்கிறார்கள்....

ஏமாற மக்கள் தயாராக இருக்கும் வரை இது தொடரத்தான் செய்யும்....//

பலர் அறியாமலே ஏமாறும் வாய்ப்பு இருப்பதினால் விழிப்புணர்வு அவசியம் தானே சார் ...

arasan சொன்னது…

அருணா செல்வம் கூறியது...
நல்ல விழிப்புணர்வு பதிவு.
நன்றி.//

நன்றிங்க மேடம்

arasan சொன்னது…

பால கணேஷ் கூறியது...
இந்த மாதிரி விளம்பரங்களை நானும் கவனிச்சு, இதுக்குப் பின்னால ஏதோ இருக்கணும்னு மட்டும் மனசுல நினைச்சதுண்டு. இப்டில்லாம் தூண்டில் போடுறாய்ங்களா...? 10 ஆடுகள் சிக்கினாலே ஒரு லட்சம் தேறிடுதே! யப்பா...! நல்லா ஊதியிருக்கீங்க எச்சரிக்கை சங்கு!//

ஆம் சார் ... அவர்களுக்கு 10 பேர் சிக்கிட்டா பெருந்தீனி தான் ...

arasan சொன்னது…

புரட்சி தமிழன் கூறியது...
இப்படி வெளிப்படையாக விளம்பரம் செய்து ஏமாற்றுபவர்களை காவல்துறை ஏன் விசாரிப்பதில்லை.//

ஏமாறுபவர்கள் ஒருவேளை புகார் கொடுக்காமல் இருக்கலாம்

arasan சொன்னது…

புரட்சி தமிழன் கூறியது...
குறைந்த பட்சம் பேருந்து தொடர்வண்டி ஆகிவைகளில் அனுமதி இன்றி விளம்பரம் செய்வதர்காகவாவது இவர்களை தண்டிக்கலாம். இது மட்டுமல்ல பைல்ஸ் பிஸ்துளா மூலம் எனவும் விளம்பரங்கள்.//

நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆட்கள் கவனிக்கணும் .. எங்கிட்டு அவங்களுக்கே ஏது நேரம் சார்