புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

பிப்ரவரி 21, 2013

மிரட்டும் அனுபவங்கள்...


அலுவலகத்திற்கும் எனது அறைக்கும் பெரிதான தூரமில்லை என்பதால் நடந்து செல்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளேன், பேருந்தில் சென்றால் எட்டு நிமிடத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் ஆகும், சில நேரங்களில் இருபது முப்பது நிமிடங்கள் கூட பிடிக்கும் போக்குவரத்து நெரிசலை பொருத்து இந்த பயண நேரம் மாறுபடும்! நடந்தால் ஏழு நிமிடம் தான் பிடிக்கும்! இத்தனை வருட நடை பயணத்தில்? கண்ட காட்சிகள் சில நொடிகளில் மறைந்து விடும், இல்லை ஒரு நாள் தான் அதிக பட்சம் அதனை தாண்டி மனதில் நின்றதில்லை! ஒரு சில நிகழ்வுகளே மனதுக்குள் பசுமரத்தாணியாய் பதிந்துள்ளது! அதை வேறு பதிவில் விரிவாக காண்போம்! இப்போ நான் சொல்ல வருவது என்னவென்றால் இரண்டு வார இடைவெளிக்குள் நான் சந்தித்த நிகழ்வுகளைத்தான்... 

சம்பவம் - 1:- 

மனசை எங்கோ பறிகொடுத்துவிட்டு, "எங்கே செல்லும் இந்த பாதை" என்ற பாடலை கேட்டுக்கொண்டு  சென்ற என்னை வம்படியாய் ஒருவர் வழி மறித்து ஒரு அஞ்சு நிமிடம் டைம் ஒதுக்க முடியுமா சார் ? என்றார் படு பவ்யமாய்! நம்மையும் மதித்து ஒருவர் கேட்கிறாரே என்று நின்றேன். சார் உங்க பெயர் என்றது ஒரு தேன் குரல், திரும்பினால் திவ்யமாய் ஒரு தேவதை. பெயர், எடை, உயரம் எல்லாம் நோட் பண்ணிக்கொண்டு கையில் ஒரு கருவியை கொடுத்து இப்படி நேரே பிடிங்க சார் என்று செய்து காட்ட நானும் அவ்வாறே செய்தேன்! சில மணித்துளிகளில் எதையோ கணக்கு பண்ணிவிட்டு, சார் உங்க உயரத்துக்கும் , வெயிட்டுக்கும்  கொழுப்பு கொஞ்சம் கூடுதலாக இருக்கு. நீங்க ஒன்னும் வருத்தப் படவேண்டாம், நாங்க கொடுக்குற மூலிகை டீ தொடர்ந்து ரெண்டுவாரம் குடிச்சா போதும் எல்லாம் சரியாகிரும், என்று ஒரு தொகையை சொல்லிச்சு பாருங்க, அப்படியே ஒரு எம்பது சம்பட்டி கொண்டு அடித்த மாதிரி பொறி கலங்கி நின்றேன்! என் ரெண்டு மாசத்து சாப்பாட்டு செலவை அந்த புள்ள ரெண்டு வார டீ செலவாக சொல்லுச்சி!  நம்மளை மடக்கிய ஆசாமியை தேடினேன், அவர் இன்னொருவரிடம் வலை வீசுவதில் மிகவும் தீவிரமாக இருந்தார், ஒருவழியா அந்த அம்மணியிடம் சமாளித்து வருவதற்குள் பெரும் சங்கடமா போச்சு!   நிறைய அழகிய அருவா இப்படி வீதிக்கு ஒன்று நிற்கலாம் , வம்படியா சென்று கழுத்த நீட்டாமல் சூதானமாக இருக்கும்படி உங்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் நண்பர்களே!சம்பவம் 2:-

ஒரு மாலை வேளையில் ஒரு இடத்தில் பயங்கர கூட்டம், முழுதும் இல்லத்தரசர்கள் தான் ஏதோ பெயருக்கு ஒன்றிரண்டு பெண்கள் கண்ணில் தென் பட்டனர். என்னவாக இருக்குமென்று அவசரமாக தலையை நீட்டி நோக்கினால் அங்கு வட இந்திய இளசுகள் இரண்டு, காய்கறி நறுக்கும் இயந்திரத்தை விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். பை நிறைய கொண்டு வந்திருந்த பழைய காய்கறிகளை நறுக்கி காட்டி விற்பனை வெகு மும்முரமாக சென்று கொண்டிருந்தது. வட்டம், சதுரம், முக்கோணம், பூகோளம் இப்படி புதுபுதுசா நறுக்குற சின்ன சின்ன எந்திரங்களை காட்டி  விலை  பேரம் நடத்திக்கொண்டிருந்தார்கள். இது நமக்கு ஒவ்வாத இடமென்று சாதூர்யமாக நழுவினேன், பிறகுதான் பொறி தட்டியது,  அம்புட்டு இல்லத்தரசர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்குவதின் மர்மம் விளங்கவில்லை? விபரம் தெரிந்த இல்லத்தரசர்கள் விளக்கினால் என்னை போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்....

நன்றி 

Post Comment

19 கருத்துரைகள்..:

சீனு சொன்னது…

அதான பாத்தேன், அழகான புள்ளனா சம்பவ இடத்துல நிக்குறதும் இந்திக் காரப் பயளுவனா மதிகாமப் போறதும் நமக்கு கை வந்த "'கலை'" தான... :-)

யோவ் கத்து வச்சிகோயா சம்பவம் இரண்டு பின்னாடி உதவும்

arasan சொன்னது…

வணக்கம் சீனு ...
இந்த அடைப்புக்குறி போட்டு கருத்திடுவதில் பெரும் வித்தகர் அய்யா நீர் ..
நான் கற்றுக்கொண்டு உமக்கும் சொல்லி தருகிறேன் உமக்கும் தேவைப்படும் ..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இவை (2) மட்டுமல்ல... இன்னும் நிறைய தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்...!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

'விசேச அழைப்பிதழ்' என்று வரும்...?

உழவன் சொன்னது…

//சம்பவம் - 1:- //
எப்படி அண்ணே உங்கள குறிவச்சே தாக்குராங்க!!!

//சம்பவம் 2:-//
அண்ணே நான் இல்லத்தரசர் அல்ல..அதனால் அது பற்றிய விவரம் எனக்கும் தெரியாது..நீங்கள் கற்றுக்கொண்டு பிறகு எனக்கு சொல்லித்தாருங்கள்...

Philosophy Prabhakaran சொன்னது…

அந்த கிளாஸுல பச்சையா என்னவோ இருக்கே... அது என்ன பாஸு...

அருணா செல்வம் சொன்னது…

1. இதுக்கெல்லாம் பயப்படுவதா...?
2. அனேகமாக அந்தக் காய்கறிகளைப் பார்த்துக்கொண்டு நின்றிருப்பார்கள்.

(இது கூடவா நம்மூர் ஆண்களுக்குத் தெரியாது... ஈசியாக வெட்டுவது எப்படி என்று தான்...)

Admin சொன்னது…

இரண்டு சம்பவங்களையும் கூறிய விதம் அருமை அரசனே..

'அழகிய அருவா' சொல்லாட்சி சிறப்பு..

”தளிர் சுரேஷ்” சொன்னது…

வித்தியாசமான அனுபவம்தான்! நான் கூட இந்த மாதிரி காய் நறுக்கிற இயந்திரம் வாங்கி ஏமாந்து இருக்கேன்! ஒரு பத்து வருசம் முன்னாலே!

குட்டன்ஜி சொன்னது…

வீட்டுல காய்கறி நறுக்கற வேலை ரங்கமணி களுடையதுதானே!அதுதான்!

மாதேவி சொன்னது…

1. மயங்காமல் பர்ஸ் தப்பியது :))

2.இந்த நிலை இன்னும் வரவில்லை என்கிறீர்கள். விரைவில் வரலாம் :))

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
இவை (2) மட்டுமல்ல... இன்னும் நிறைய தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்...!//

பெரியவங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் ...
விசேச அழைப்பிதழ் இன்னும் ரெடியாக கொஞ்ச காலம் பிடிக்கும் சார்

arasan சொன்னது…

@ Uzhavan raja

தம்பி நம்ம முக ராசி அப்படியா இருக்கும் என்று நினைக்கிறேன் ..
ரெண்டாவது தானே பார்த்துக்கலாம் ..

arasan சொன்னது…

Philosophy Prabhakaran கூறியது...
அந்த கிளாஸுல பச்சையா என்னவோ இருக்கே... அது என்ன பாஸு..//

பாஸ் அது மூலிகை டீ

arasan சொன்னது…

அருணா செல்வம் கூறியது...
1. இதுக்கெல்லாம் பயப்படுவதா...?
2. அனேகமாக அந்தக் காய்கறிகளைப் பார்த்துக்கொண்டு நின்றிருப்பார்கள்.

(இது கூடவா நம்மூர் ஆண்களுக்குத் தெரியாது... ஈசியாக வெட்டுவது எப்படி என்று தான்...)//

பயமில்லை மேடம் .. நமக்குன்னே வந்து வாய்க்குதே என்ற கோவம் தான் ...

arasan சொன்னது…

Madhu Mathi கூறியது...
இரண்டு சம்பவங்களையும் கூறிய விதம் அருமை அரசனே..

'அழகிய அருவா' சொல்லாட்சி சிறப்பு..//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

s suresh கூறியது...
வித்தியாசமான அனுபவம்தான்! நான் கூட இந்த மாதிரி காய் நறுக்கிற இயந்திரம் வாங்கி ஏமாந்து இருக்கேன்! ஒரு பத்து வருசம் முன்னாலே!//

முன்னரே நீங்களும் பதிந்து இருக்கலாம் உங்களை தொடர்பவர்களை காப்பற்றாலாம் .. சார்

arasan சொன்னது…

குட்டன் கூறியது...
வீட்டுல காய்கறி நறுக்கற வேலை ரங்கமணி களுடையதுதானே!அதுதான்!//

அண்ணே அப்படியா சமாச்சாரம் ..

arasan சொன்னது…

மாதேவி கூறியது...
1. மயங்காமல் பர்ஸ் தப்பியது :))

2.இந்த நிலை இன்னும் வரவில்லை என்கிறீர்கள். விரைவில் வரலாம் :))//

ஏங்க இப்படி மீ பாவம்