புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

பிப்ரவரி 26, 2013

எங்கே போகிறது இந்த சமூகம் ...

கரட்டுப் பாதையில் 
சிறு கல் இடறி,
தடுமாறியவள் 
முன் சென்ற 
என் தோளைப் பற்ற,
நடை பிசகி 
கிழே விழுந்தோம்.
நொடியில் எழுந்து 
விலகிய ஆடைகளை 
சரி செய்கையில்,  
ஏளனமாய் கடந்தன  
சில கோரப் பார்வைகள்!
அவர்களை தொடர்ந்து 
சென்ற நாயொன்று 
நின்று, தலையை தூக்கி 
முகத்துக்கு முகம் பார்த்துவிட்டு 
பின் 
மௌனமாய் நகர்கிறது ....


Post Comment

25 கருத்துரைகள்..:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நறுக்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இன்றைய சமூகத்தை அழகாக சொன்னீங்க...

நல்லதொரு நறுக் கவிதை

T.N.MURALIDHARAN சொன்னது…

சூழ்நிலை அப்படித்தான் இருக்கு.

பால கணேஷ் சொன்னது…

நம்ம சமூகம் மாற ரொம்ப நாளாகும் அரச்‌ன். கீழ விழுந்த ஒரு பெண்ணை கைதூக்கி விடறதுன்னா கூட யோசிக்க வேண்டியிருக்கு. ‘இதே ஒரு ஆம்பளையோ, கிழவனோ விழுந்திருந்தா இப்டி தூக்கிவிட வருவியா’ன்னு சுத்தி இருக்கறவங்க.. ஏன் அந்தப் பெண்ணே சொல்லக் கூடும்னு ஒரு பயமும் உள்ள ஓடுது இல்லியா?

Prem s சொன்னது…

நாயுடன் ஒப்பீடு கலக்கல்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சமூகத்தின் இன்றைய நிலையை படம் பிடித்துக் காட்டியது கவிதை!

ஸ்கூல் பையன் சொன்னது…

ada......

Uzhavan Raja சொன்னது…

அண்ணே சூழ்நிலையால்தான் மாறுகிறது ஒவ்வொருவரின் மனநிலைமையும்..

Seeni சொன்னது…

mmmm.....

naayai vida mosam intha samookam athaithaane solreenga....


s suresh சொன்னது…

மனிதர்கள் மிருகமாகி வருகிறார்கள்! மிருகங்கள் மனிதனாகி வருகின்றன! சிறந்த கவிதை! நன்றி!

அரசன் சே சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
நறுக்...//

நன்றி

அரசன் சே சொன்னது…

கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
இன்றைய சமூகத்தை அழகாக சொன்னீங்க...

நல்லதொரு நறுக் கவிதை//

புரிதலுக்கு என் நன்றி

அரசன் சே சொன்னது…

T.N.MURALIDHARAN கூறியது...
சூழ்நிலை அப்படித்தான் இருக்கு.//

உண்மைதான்

அரசன் சே சொன்னது…

பால கணேஷ் கூறியது...
நம்ம சமூகம் மாற ரொம்ப நாளாகும் அரச்‌ன். கீழ விழுந்த ஒரு பெண்ணை கைதூக்கி விடறதுன்னா கூட யோசிக்க வேண்டியிருக்கு. ‘இதே ஒரு ஆம்பளையோ, கிழவனோ விழுந்திருந்தா இப்டி தூக்கிவிட வருவியா’ன்னு சுத்தி இருக்கறவங்க.. ஏன் அந்தப் பெண்ணே சொல்லக் கூடும்னு ஒரு பயமும் உள்ள ஓடுது இல்லியா?//

சத்தியமாக அந்த எண்ணம் தான் மனசில் ஓடுகிறது சார்

அரசன் சே சொன்னது…

Prem s கூறியது...
நாயுடன் ஒப்பீடு கலக்கல்//

நன்றி அன்பரே

அரசன் சே சொன்னது…

வெங்கட் நாகராஜ் கூறியது...
சமூகத்தின் இன்றைய நிலையை படம் பிடித்துக் காட்டியது கவிதை!//

நன்றிங்க

அரசன் சே சொன்னது…

ஸ்கூல் பையன் கூறியது...
ada......//

என்ன அதிர்ச்சியா? அதிர்ச்சிக்கு என் நன்றி

அரசன் சே சொன்னது…

Uzhavan Raja கூறியது...
அண்ணே சூழ்நிலையால்தான் மாறுகிறது ஒவ்வொருவரின் மனநிலைமையும்..//

சூழலை உணர்வோடு எதிர்கொள்ளாத வரை யாரும் இங்கு மனிதர்களாக இருக்க போவதில்லை

அரசன் சே சொன்னது…

Seeni கூறியது...
mmmm.....

naayai vida mosam intha samookam athaithaane solreenga....//

புரிந்து கொண்டமைக்கு என் நன்றி நண்பா

அரசன் சே சொன்னது…

s suresh கூறியது...
மனிதர்கள் மிருகமாகி வருகிறார்கள்! மிருகங்கள் மனிதனாகி வருகின்றன! சிறந்த கவிதை! நன்றி!//

உங்க புரிதலுக்கு என் நன்றிகள் சார்

r.v.saravanan சொன்னது…

சமூகத்தின் இன்றைய நிலை

சாடும் கவிதை சமூகம் மாறுவது எப்போது ?

மாதேவி சொன்னது…

வாவ்! கலக்கல்.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் அர்சன் - ஏளனமாய்க் கடந்த கோரப் பார்வைகள்ளை விட முகத்துக்கு முகம் பார்த்த நாயின் அன்புப் பார்வை சிறந்தது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

கிரேஸ் சொன்னது…

மாறவேண்டும் இச்சமூகச் சூழல்! பொறி தட்டியதற்கு நன்றி!

புலவர் இராமாநுசம் சொன்னது…


வெறி நாய்கள் முன்னே சென்றன!