நமது பதிவர்களின் பாசம் ஒருபுறம் இருந்தாலும், மனங்கவர் நாயகன் நடித்து வெளிவந்திருக்கும் முதல் படம் என்பதால் மனம், சனி காலையிலிருந்தே உட்லண்ஸ் திரை அரங்கையே வட்டமிட ஆரம்பித்தது! வேறு எந்த படத்திற்கும் இல்லாத எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு மிகையாகி , என் நாடியை சோதிக்க ஆரம்பித்தது.
யாரும் ஆப்சென்ட் ஆகாமல் சொன்ன மாதிரியே எல்லோரும் கச்சிதமாய் வந்து நெஞ்சில் பிஸ்லரி வார்த்தனர்! தலைவனோடு முடியாமல் போன வருத்தத்தை அவரின் கொரில்லா போஸ்டரோடு நின்று போட்டோ எடுத்து மனதை தேற்றிக்கொண்டு, அரங்கை ஆக்கிரமித்தோம்!
திரையுலகில் இருக்கும் அத்தனை நடிகர்களும் இந்த படத்தில் தலை காட்ட தவறவில்லை. பொண்டு பொடிசு எல்லோரும் இப்படத்தில் ஆஜர்! அதையும் மீறி நாயகன் தான் ஏற்ற பாத்திரத்துக்கு பங்கம் வராமல் ஒரு படி மேலே போய் நடித்து, என் பிறவிப்பயனை அடையச் செய்துவிட்டார்!
படத்தை பற்றி மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் நமது நண்பர்கள் உங்களுக்கு புரியும் வண்ணம் எதை எதையோ போட்டு விளக்கிய காரணத்தினால் இத்தோடு முடித்துக் கொண்டு, வேறொரு சப்ஜக்ட்க்கு தாவுகிறேன்!
சனிக்கிழமை படம் பார்த்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்குள் தலைவனும், தலைவிகளும் நேற்று தொலைக்காட்சியின் மூலம் வந்து என்னை இன்பக்கடலில் ஆழ்த்திவிட்டனர். திரையில் தலைவனை காண்கையில் எந்த மன நிலையில் இருந்தேனோ அதே நிலையில் இருந்து நிகழ்ச்சி முடியும் வரை வேறு எங்கும் என் கவனத்தை சிதற விடாமல் பார்த்து முடித்தேன்! தலைவனின் பேச்சும், தலைவிகளின் பொங்கு தமிழும் என்னை அலேக்கா தூக்கி கொண்டு போய் அரைமணி நேரம் நயாகராவில் நீராட்டியது போல ஒரு பேரானந்தத்தை தந்தது என்றால் மிகையில்லை!
நிகழ்ச்சி "நேரலை" என்பதால், இரசிக கண்மணிகள் போன் பண்ணி தங்களது உணர்ச்சியை கட்டுபடுத்தாமல் பொங்கியது கண்டு நெஞ்சுருகிப் போனேன்! அதிலும் தலைவி தேவயாணி தனது கொஞ்சும் குரலில் ஒரு ரசிக பக்தனிடம், கண்டிப்பாக குடும்பத்தோடு படத்தை பார்க்கவும் என்று சொல்லவும், தலைவன் அதை ஆமோதித்ததையும் காண கண்கள் நூறு வேண்டும்!
ஒரு ரசிகன் பரபரத்த குரலில் தலைவனிடம், இதுவரை நான்கு முறை பார்த்துவிட்டேன், இன்னைக்கு ஈவ்னிங் ஷோ போலாம்னு இருக்கேன் என்று என்னை சூடாக்க நானும், தலிவனிடம் நாலு வார்த்தையாவது பேசிடனும் என்று வெறி கொண்டு போன் செய்தேன்.. செய்தேன்... செய்தேன்... நிகழ்ச்சி முடியும் வரை லைனே கிடைக்கவில்லை! உடைந்த மனதோடு டிவியை நிறுத்தியது போல், இந்தப் பதிவையும் இத்தோடு முடித்துக் கொள்கிறேன்!
Tweet |
12 கருத்துரைகள்..:
உங்க மன தைரியத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லை...
ஒரே ஒருத்தரின் விமர்சனம் மிஸ்ஸிங் என்று நினைத்திருந்தேன்... ஆனால் விமர்சனமாக வரவில்லை... நன்றி... நேரலை வேறா...? ஐயோ சாமீ...! சுருக்கத்துடன் முடித்ததற்கு மறுபடியும் நன்றி...
சுருக் நறுக் விமர்சனம்...
நீங்களுமா படத்தை ஹிட்டோ ஹிட் ஆகிடீவீங்க போலருக்கே இப்படியே மாறி மாறி விமர்சனம் படம் புகையை தந்ததோ இல்லையோ நீங்கள் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து களித்து அதை பகிர்ந்து ......................................
உங்க மன தைரியத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லை...
அடுத்த பவர் ஸ்டார் ரெடியோ
அரசன் !!!!!
இந்த படத்தை வெளிநாடுகளில் யாரும் ரிலீஸ் செயவில்லையா ஆ ஆ ??
உங்களை பாராட்ட வார்த்தை வரவில்லை..எனக்காக மற்றும் எங்கள் குடும்பம் சார்பாகவும் இன்னொருமுறை படத்தை பார்த்திடுங்க .
:))
படத்தை இதுவரை நாலு தடவை பார்த்திட்டதா ஒரு ரசிகர் நேரலையில சொன்னாரா அரசன்? பேரு, ஊரைக் குறிச்சு வெச்சுக்கலையா நீங்க? அந்தத் தியாகிக்கு அவருக்கு முட்டியளவுக்காவது ஒரு பித்தளைச் சிலையாவது செஞ்சு நடுவீதியிலயாவது வெச்சு (அ)கெளரவம் பண்ணியாக வேண்டியது நம்ம சமுதாயக் கடமையாச்சுதே...!
nallaa anuavachideenga pola...
ஹா....ஹா வரிகளில் நகைச்சுவை நகைக்க வைக்கிறது அரசன்
இப்படியும் விமர்சனம் எழுதலாமா?
ஒரு படையா போய் இந்தப் படத்தைப் பார்த்து விமர்சனம் எழுதும் உங்க எல்லோருடைய தைரியத்தினை என்ன சொல்வது.....
உங்கள் எல்லோருடைய பொறுமை குணத்திற்கு நான் தலைவணங்குகிறேன்! :)
படம் பார்த்ததில் இன்னும் யாரு விமர்சனம் எழுதல!
ஹா ஹா ஹா இதை எல்லாம் பார்த்துத் தொலைக்க வேண்டும் என்பது உமது தலைவிதி
கருத்துரையிடுக