நேற்று இரவு தொலைக்காட்சியில் புத்தக வாசிப்பு பற்றியும், பதிப்பகத்தின் இன்றைய நிலை, எதிர்காலம், பற்றியும் விவாதம் நடந்து நடந்துகொண்டிருந்தது, சானலை மாற்றுகையில் எதேச்சையாக காண நேரிட்டது. வந்திருந்த பிரபலங்கள் தெளிவாத்தான் பேசுனாங்க போல இருந்தது, ஆனால் எனக்குத்தான் ஒரு மண்ணும் விளங்கல. குறுகிய நேரம் தான் பார்த்தேன், கை தானாகவே அடுத்த சானலுக்கு மாற்றிவிட்டது!
வந்திருந்த பிரபலங்களில் சொன்ன சில கருத்துக்கள் பிடித்திருந்தது, சிலது சகிக்க கூட முடியவில்லை! பதிப்பகத்தின் தரம் மாறனும், வாசகர்களை எளிதில் சென்று சேரும் நல்ல விடயங்களை தாங்கிய புத்தகங்களை சிறப்பு கவனம் எடுத்து வெளியிட்டால் பாதிப்பு இருக்காது, எப்போதும் வாசிப்புக்கென்ற ஒரு வட்டம் இருக்கத்தான் செய்கிறது அவர்களை நாம் இழக்க கூடாது என்று பேசினார் ஒருவர்!
இன்னொருவர் அதெல்லாம் ஒன்னுமில்லைங்க, இலங்கை பிரச்சினையை வைத்து எந்த புத்தகம் போட்டாலும் விற்பனை தூள் கெளப்பும் என்கிற தோரணையில் வெளுத்து வாங்கினார்! இப்படியாக விவாதம் சூடு பிடிக்க, ஒரே அதகளம் தான்!
பணம் கொடுத்தால், எந்த குப்பையாக இருந்தாலும் புத்தகமாக அச்சிட்டு அதை வெளியிடும் பதிப்பகங்களுக்கு மத்தியில், தரமான புத்தகங்களை வழங்கும் சில நல்ல பதிப்பகங்களும் இருக்கத்தான் செய்கின்றன! இப்போ பிரச்சினை என்னவென்றால் இவர்களின் "என் தங்கம், என் உரிமை" மாதிரியான போராட்டத்தால் விளைவு இவர்களுக்கு தான் என்று உணர மாட்டார்கள் போல!
இணைய எழுச்சியினால் புத்தக விற்பனை சற்று தொய்வடைந்திருக்கும் இக்கால கட்டத்தில், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்காமல், இவர்கள் பங்காளி சண்டை போட்டுக்கொள்வது எனக்கு நல்லதாக தோன்றவில்லை! இது தமிழனுக்கே உரிய சிறப்பு போலும்! நல்ல படைப்புகள் சந்தைப்படுத்த தெரியாமல் இன்னும் அச்சகத்திலே முடங்கி கிடக்கின்றன! மேலும் நல்ல விடயங்கள் அச்சேறாமல் அடைப்பட்டு கிடக்கின்றன! அதை தேடி இனங்கண்டு, மக்களிடம் சேர்க்க தவறினால் இவர்கள் தமிழுக்கு இழைக்கும் அநீதியே!
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலம் சொன்னது போல், மாற்றம் வரவில்லையெனில் இன்னும் பத்து, பதினைந்து வருடங்களில் பதிப்பகங்கள் இருந்த தடம், இல்லாமல் போகும். புத்தகம் என்ற ஒன்று காட்சி பொருளாகும்!
Tweet |
26 கருத்துரைகள்..:
நல்ல படைப்புகள் என்னும் அதே நேரத்தில் அவை சாதாரணனின் வாங்கும் சக்திக்கேற்பவும் விலை அமையப் பெற்றிருக்க வேண்டும் அரசன்! முன்னணிப் பதிப்பகங்கள் பல அடக்க விலைக்கு மேல் மிகமிக அதிக விலை வைத்து கொள்ளை அடிக்கின்றன! என்போல ஆசாமிகளுக்கு புத்தகங்களில் உள்ள விஷயம்தான் முக்கியமே தவிர, பேப்பரின் குவாலிட்டி அல்ல! சாதாரணத் தாளில் அச்சிட்டு விலை குறைவாகக் கொடுத்தால் நல்ல புத்தகத்தை மக்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள். செய்யத்தான் சரியான பதிப்பகங்கள் இல்லை!
இன்னும் பழைய பாணியில் சென்று கொண்டிருக்கும் பதிப்பகத்தார் காலத்துக்கும் வளர்ந்துவரும் புதிய தொழில்நுட்பத்துக்கும் ஏற்ப தங்களை கொஞ்சமேனும் மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் காசுக்கு புத்தகம் அச்சடிக்கும் வெறும் அச்சகங்கள் மட்டுமே பிற்காலத்தில் இருக்கும்.... நன்றி...
சந்தைப் படுத்த தெரிந்தவர்கள் தான், அதனால் தான் கொள்ளை விலைக்கு விற்கிறார்கள் ராசா, இவர்கள் மனித மனத்தைப் புரிந்து கொள்ள தெரியாதவர்கள் .....
உயிர்மை புத்தக விலையை குறைத்தால் அவர்கள் புத்தகங்கள் எவ்வளவோ பேரை சென்று சேரும்
mmm...!
nalla vidayam...
தரமான எழுத்துகள் என்றால் இப்பவும் வாங்கிப் படிக்கதான் செய்கிறார்கள் ஆனாலும் இணையதள எழுச்சியில் புத்தகங்கள் மந்தகதியில்தான் இருக்கின்றன என்பதும் மறுபதற்கு இல்லை.
புத்தகம் படிப்பது குறைந்து கொண்டுதான் இருக்கிறது..பள்ளிகளில் வாசிப்பதற்கு சிறிதளவேனும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்..பிள்ளைகளைத் தரமான புத்தகங்கள் படிக்க ஊக்குவிக்க வேண்டும்..எந்நேரமும் தொலைக்காட்சிமுன் அமராமல் வாசிப்பதை பழக்கப் படுத்துவது நல்லது..
ஆங்கிலத்தில் வரும் நூல்களையும் தமிழில் வரும் நூல்களையும் தயாரிப்புத் தரத்தில் ஒப்பிட்டுப் பாருங்கள். அச்சுப்பிழைகள் இன்றி, தரமான தாளில், உறுதியான பைண்டிங்குடன் வெளிவரும் நூல்கள் தான் இனி நிலைத்திருக்க முடியும். எந்த மொழியாயினும் சரியே. கட்டிட வாடகை உயர்ந்துவரும் நிலையில், மக்கள் புழங்கி வாங்கக்கூடிய இடத்தில் புத்தகக்கடை நடத்துபவர்கள் பதிப்பாளர்களிடமிருந்து அதிக டிஸ்கவுண்ட்டை எதிர்பார்க்கும்போது புத்தக விலை குறைய வழியில்லை. அந்தக் காலத்திலிருந்தே புத்தகவிலைக்கும் சாப்பாட்டுக்கும் ஒரு தொடர்பு உண்டு. அதாவது, ஒரு நல்ல ஓட்டலில், மதிய சாப்பாட்டுக்கு எவ்வளவு தரவேண்டுமோ, அது தான் ஒரு நல்ல நூலுக்குரிய விலை. இன்று நூறு முதல் 150 ரூபாய்க்குக் குறைந்து சென்னையில் சரவணபவனில் நல்ல சாப்பாடு கிடைக்கிறதா? துரதிர்ஷ்டம் என்னவென்றால், எழுத்தாளனுக்கு எதுவும் போய்ச்சேருவதில்லை என்பது தான்.
உண்மைதான் அரசன் தங்கள் சொல்வது!
அப்படியா ?நல்ல புத்தங்கள் நல்ல எழுத்துகளும் உருவாகட்டும் நல்ல எழுத்தளார்கள் எல்லாம் இன்று அரிதாகத்தான் ஆகிவிட்டது எதோ காமாசோம என்று புத்தகங்கள் மனம் அழம்வரை சென்று சேராமல்
வருங்காலத்தில் காகிதம் கிடைப்பதே அரிதாகிப் போகப் போகிறதும் உண்மை...
புத்தகங்கள் படிப்பது, அதுவும் விலைக்கு வாங்கிப் படிப்பது என்பது மிகவும் குறைந்து வருகிறது. நிச்சயம் பதிப்பாளர்கள் எதாவது செய்தே தீர வேண்டிய நிலை.
சமீபத்தில் மின் புத்தகங்கள் பற்றிய ஒரு presentation பார்த்தேன். மின் புத்தகங்களுக்கு வரும் காலத்தில் வரவேற்பு இருக்குமெனத் தோன்றுகிறது.
நல்ல புத்தகங்கள் வரவேண்டும் என்பது தான் எனது ஆசையும்....
இனிய வணக்கம் சகோதரரே..
உங்களின் ஆதங்கம் விளங்குகிறது...
நண்பர் பாலகணேஷ் அவர்களின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்...
அதுவும் போக இன்றைய தலைமுறையினரிடம் வாசிக்கும்
பழக்கம் குறைந்துகொண்டே வருகிறது...என்பது உண்மை.
புத்தகங்கள் உற்ற நண்பன் என்று படிப்பதோடு சரி...
நல்ல புத்தகங்கள் வாசிப்பதை சிரமேற்கொள்ள வேண்டும்...
அதற்கான விழிப்புணர்வு பெற்றோர் வாயிலாகவும் ஆசிரியர்கள்
வாயிலாகவும் திணிக்கப்பட வேண்டும்...
உண்மைதான்,நம்மில் பலரும் மறந்துதானே வலைக்கு வந்துவிடுகிறோம்
பால கணேஷ் கூறியது...
நல்ல படைப்புகள் என்னும் அதே நேரத்தில் அவை சாதாரணனின் வாங்கும் சக்திக்கேற்பவும் விலை அமையப் பெற்றிருக்க வேண்டும் அரசன்! முன்னணிப் பதிப்பகங்கள் பல அடக்க விலைக்கு மேல் மிகமிக அதிக விலை வைத்து கொள்ளை அடிக்கின்றன! என்போல ஆசாமிகளுக்கு புத்தகங்களில் உள்ள விஷயம்தான் முக்கியமே தவிர, பேப்பரின் குவாலிட்டி அல்ல! சாதாரணத் தாளில் அச்சிட்டு விலை குறைவாகக் கொடுத்தால் நல்ல புத்தகத்தை மக்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள். செய்யத்தான் சரியான பதிப்பகங்கள் இல்லை!//
நம் கவலைகளை அவர்கள் உணர்ந்ததாய் தெரியவில்லை
ஸ்கூல் பையன் கூறியது...
இன்னும் பழைய பாணியில் சென்று கொண்டிருக்கும் பதிப்பகத்தார் காலத்துக்கும் வளர்ந்துவரும் புதிய தொழில்நுட்பத்துக்கும் ஏற்ப தங்களை கொஞ்சமேனும் மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் காசுக்கு புத்தகம் அச்சடிக்கும் வெறும் அச்சகங்கள் மட்டுமே பிற்காலத்தில் இருக்கும்.... நன்றி...//
உண்மைதான் அண்ணே
சீனு கூறியது...
சந்தைப் படுத்த தெரிந்தவர்கள் தான், அதனால் தான் கொள்ளை விலைக்கு விற்கிறார்கள் ராசா, இவர்கள் மனித மனத்தைப் புரிந்து கொள்ள தெரியாதவர்கள் .....
உயிர்மை புத்தக விலையை குறைத்தால் அவர்கள் புத்தகங்கள் எவ்வளவோ பேரை சென்று சேரும் //
உண்மைதான் .. உயிர்மை பற்றி சொல்லவே வேண்டாம் தலைவரே
Seeni கூறியது...
mmm...!
nalla vidayam..//
nanri boss
MANO நாஞ்சில் மனோ கூறியது...
தரமான எழுத்துகள் என்றால் இப்பவும் வாங்கிப் படிக்கதான் செய்கிறார்கள் ஆனாலும் இணையதள எழுச்சியில் புத்தகங்கள் மந்தகதியில்தான் இருக்கின்றன என்பதும் மறுபதற்கு இல்லை.//
உணர வேண்டும் பதிப்பகங்களும் கூடவே படைப்பாளிகளும்
கிரேஸ் கூறியது...
புத்தகம் படிப்பது குறைந்து கொண்டுதான் இருக்கிறது..பள்ளிகளில் வாசிப்பதற்கு சிறிதளவேனும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்..பிள்ளைகளைத் தரமான புத்தகங்கள் படிக்க ஊக்குவிக்க வேண்டும்..எந்நேரமும் தொலைக்காட்சிமுன் அமராமல் வாசிப்பதை பழக்கப் படுத்துவது நல்லது..//
நாம் தான் இனி வரும் சமுதாயத்தை கொஞ்சம் பழக்க படுத்தனும்
Chellappa Yagyaswamy கூறியது...
ஆங்கிலத்தில் வரும் நூல்களையும் தமிழில் வரும் நூல்களையும் தயாரிப்புத் தரத்தில் ஒப்பிட்டுப் பாருங்கள். அச்சுப்பிழைகள் இன்றி, தரமான தாளில், உறுதியான பைண்டிங்குடன் வெளிவரும் நூல்கள் தான் இனி நிலைத்திருக்க முடியும். எந்த மொழியாயினும் சரியே. கட்டிட வாடகை உயர்ந்துவரும் நிலையில், மக்கள் புழங்கி வாங்கக்கூடிய இடத்தில் புத்தகக்கடை நடத்துபவர்கள் பதிப்பாளர்களிடமிருந்து அதிக டிஸ்கவுண்ட்டை எதிர்பார்க்கும்போது புத்தக விலை குறைய வழியில்லை. அந்தக் காலத்திலிருந்தே புத்தகவிலைக்கும் சாப்பாட்டுக்கும் ஒரு தொடர்பு உண்டு. அதாவது, ஒரு நல்ல ஓட்டலில், மதிய சாப்பாட்டுக்கு எவ்வளவு தரவேண்டுமோ, அது தான் ஒரு நல்ல நூலுக்குரிய விலை. இன்று நூறு முதல் 150 ரூபாய்க்குக் குறைந்து சென்னையில் சரவணபவனில் நல்ல சாப்பாடு கிடைக்கிறதா? துரதிர்ஷ்டம் என்னவென்றால், எழுத்தாளனுக்கு எதுவும் போய்ச்சேருவதில்லை என்பது தான்.//
எங்கும் எதிலும் அரசியல் இல்லாமலில்லை .சார் .. அந்த நிலை மாறனும் ...
புலவர் இராமாநுசம் கூறியது...
உண்மைதான் அரசன் தங்கள் சொல்வது!//
நன்றிங்க அய்யா
poovizi கூறியது...
அப்படியா ?நல்ல புத்தங்கள் நல்ல எழுத்துகளும் உருவாகட்டும் நல்ல எழுத்தளார்கள் எல்லாம் இன்று அரிதாகத்தான் ஆகிவிட்டது எதோ காமாசோம என்று புத்தகங்கள் மனம் அழம்வரை சென்று சேராமல்//
நிலை மாற இல்லை மாற்ற முயற்சிப்போம்
திண்டுக்கல் தனபாலன் கூறியது...
வருங்காலத்தில் காகிதம் கிடைப்பதே அரிதாகிப் போகப் போகிறதும் உண்மை...//
உண்மைதான் சார்
வெங்கட் நாகராஜ் கூறியது...
புத்தகங்கள் படிப்பது, அதுவும் விலைக்கு வாங்கிப் படிப்பது என்பது மிகவும் குறைந்து வருகிறது. நிச்சயம் பதிப்பாளர்கள் எதாவது செய்தே தீர வேண்டிய நிலை.
சமீபத்தில் மின் புத்தகங்கள் பற்றிய ஒரு presentation பார்த்தேன். மின் புத்தகங்களுக்கு வரும் காலத்தில் வரவேற்பு இருக்குமெனத் தோன்றுகிறது.
நல்ல புத்தகங்கள் வரவேண்டும் என்பது தான் எனது ஆசையும்....//
அனைவரின் ஆசையும் அதுதான் சார்
மகேந்திரன் கூறியது...
இனிய வணக்கம் சகோதரரே..
உங்களின் ஆதங்கம் விளங்குகிறது...
நண்பர் பாலகணேஷ் அவர்களின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்...
அதுவும் போக இன்றைய தலைமுறையினரிடம் வாசிக்கும்
பழக்கம் குறைந்துகொண்டே வருகிறது...என்பது உண்மை.
புத்தகங்கள் உற்ற நண்பன் என்று படிப்பதோடு சரி...
நல்ல புத்தகங்கள் வாசிப்பதை சிரமேற்கொள்ள வேண்டும்...
அதற்கான விழிப்புணர்வு பெற்றோர் வாயிலாகவும் ஆசிரியர்கள்
வாயிலாகவும் திணிக்கப்பட வேண்டும்...//
வணக்கம் அண்ணே ...
நாம் தான் வரும் தலைமுறைகளுக்கு சொல்லித்தர வண்டும்
கவியாழி கண்ணதாசன் கூறியது...
உண்மைதான்,நம்மில் பலரும் மறந்துதானே வலைக்கு வந்துவிடுகிறோம்//
எல்லோரும் அப்படி இல்லை என்றாலும் சிலர் அப்படித்தான் என்று சொல்லலாம்
கருத்துரையிடுக