புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூலை 19, 2013

செல்ல இராட்சசி பவிக்கு (திடங்கொண்டு போராடு காதல் கடிதம் போட்டி)


                                                                                                                                         29 மே 2007


செல்ல இராட்சசி பவிக்கு,                 

ஒரே ஊரில், அடுத்தடுத்த தெருவில் இருப்பதால் பல முறை பார்த்தும், சில முறை பேசியும் இருக்கிறோம்! அவை வெறும் சம்பிரதாய பேச்சுக்கள் மட்டுமே! பிறகொரு ஊர் திருமணத்தில் கலந்து கொண்டு ஒரே பேருந்தில் வீடு திரும்புகையில் முன் பக்கம் நீ, பின்பக்கம் நான்! எதேச்சையாய் பார்ப்பது போல் அடிக்கடி ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம்! இரண்டு நாள் கழித்து நடந்த ஊர்த்திருவிழாவில் எவரும் அறியாவண்ணம் என் கைக்குள் நீ வைத்தது போக மீதி விபூதியை,  என் கைக்குள் திணித்துவிட்டு எதுவும் பேசாமல் சென்றவள் தான் சரியாக இரண்டு மாதம் கழித்து தான் மீண்டும் உன்னை காண முடிந்தது! அறுபது நாட்களும் என் அரை ஆயுளை விழுங்கி விட்டன.  காதல் மெல்ல என்னுள் வேர் விட ஆரம்பித்ததும் அந்த இரண்டு மாதத்தில் தான்!

ஆறு மாதம் வெற்று பார்வைகளாகவே கழிந்தன, எப்போதா அதிசயமாய் சிரிப்பாய், பேச துணிந்து அருகில் நெருங்குகையில் உன் தோழி அரை கிறுக்கி கவிதா என்னை பார்வையால் மென்றே விடுவாள், தெரிந்தும் சிறு சிரிப்புடன் விலகி நடப்பாய், சில நேரங்களில் அதுவும் இருக்காது! அந்த நேரங்களில் நான் நானாகவே இருந்ததில்லை! சட்டென்று கொட்டிச்செல்லும் கோடைமழை போல் தான் நீயும் , உன் நினைவுகளும்.  அடைமழையாய் இருப்பாய் என்று நிறைய முறை ஏமாந்திருக்கிறேன்!  

இவளுக்கு நம்மை பிடிக்குமா? பிடிக்காதா? என்று அறிந்து கொள்ள எப்படி முயற்சித்தும் முடியாமல் தான் போனது. மழை பெய்யும் மாலை வேளையில், மழைக்கு ஒதுங்கியபடி நான் நின்றுகொண்டிருக்க, நீயும், உன் தோழியும் குடையுடன் சென்றவள், என்னைக்கண்டதும் தோழி குடைக்குள் புகுந்து கொண்டு, உன் குடையை என்னருகே வைத்து விட்டு நகர்ந்தாய் , நான் பொத்துக்கொண்டு நனைந்தேன்!

ஒரு வழியாக சமாளித்து, உன்னிடம் பேச துடித்து  , பின் உன்னைக் கண்டதும் வார்த்தைகளற்று தவிப்பது வாடிக்கையாகிப் போனதால், கடிதம் எழுத அமர்ந்து விட்டேன்! நான்குவரிகள் கூட கோர்வையாய் சேராமல், பொறுமையை நாடிபிடித்து பார்க்கின்றன. எங்கோ வெறித்து, எதையோ சிந்திக்க ஏதோ மனதில் உதிக்க, இப்படி சில நிலைகளை கடந்து தான்  உன் கரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கிறது இக்கடிதம்! சிரிக்காதே பவி, இந்த தெத்துப் பல் தான் என் சமீபத்திய தூக்கங்களை தின்று கொண்டிருக்கின்றது!தெருவில் கடந்து செல்லும் ஒவ்வொரு இளம்பெண்களும், உன்னையே எனக்கு நினைவுப் படுத்தி செல்கின்றனர், சில நேரங்களில் எதிர்வீட்டு குழந்தைகளும். உன்னைப் பற்றிய சிந்தனைகள் சிறுக, சிறுக சேர்ந்து இன்று கரை நிரம்பிய ஏரி போல் உணர்கிறேன் பவி! எங்கேனும்,  யாரேனும்  உன் பெயரை உச்சரித்தால் நீயேதான் நிரம்பி வழிகிறாய் என்னுள்! சில நாட்களாக என்னுள் நிகழும் மாற்றங்கள் புதிராக இருந்தாலும் புத்துணர்ச்சியாகத்தான் இருக்கிறது!

உன்னை அடிக்கடி பார்க்கவேண்டும், உன் கூட பேசவேண்டும் என்று மனம் உந்திக்கொண்டே இருக்கிறது! உன்னை, உன் செய்கைகளை கவனிப்பது போல் இவ்வளவு உன்னிப்பாய் வேறு எதையும் கவனித்ததில்லை. சின்ன சின்ன நிகழ்வுகளையும் மனதிற்குள் பத்திரப்படுத்திக்கொண்டு வருகிறேன்! பலமுறை சுற்றிய அதே பழைய  தெரு , இன்று என்னவோ அழகாய் காட்சியளிக்கிறது! 

இயல்பாய் நீ செய்யும் , ஒவ்வொரு செய்கையும் விநோதமாய் தான் இருக்கிறது எனக்கு! பெருங்கனவுகளோடு வலம் வருகிறேன்! நான் செல்லும் திசையெல்லாம் நீயாகவே வியாபித்து இருப்பதாய் உணர்கிறேன்! 
நல்லாத்தானடா இருந்தே! என்று நண்பர்கள் கேட்கையில் உன் திசையை நோக்கித்தான் சுட்டுகிறது என் ஆட்காட்டி விரல்! என் இயல்பை, இறுக்கத்தை சன்னமாய் உடைத்தெறிந்தது உன் இதழோர மென் புன்னகை!
அளவான இசை எழுத்துக்களாய் உன் பேச்சு, சலனமற்ற பார்வை இவையிரண்டும்  எத்தனை என் இரவுகளை தின்று செமித்திருக்கும்! என் தனிமைகளுக்கு அமுதம் ஊட்டிக்கொண்டிருக்கின்றன உன் அழகியல் காட்சிகள்!

வாய் திறந்து பேசுவதைவிட, விழி உருட்டி பேசும் வினோதா நீ, சில முறை புரிந்தும், பல முறை புரியாமல் விழித்திருக்கிறேன்!

புரிபடாத வசனங்கள், கவிதைகள் அனைத்தும் விரும்பி படிக்கிறேன்! மொழி புரியாத சினிமா காதலை விரும்பி பார்க்கிறேன்! காதலர்களை அவர்களுக்காக பிரார்த்திக்கிறேன் என்றால் பாரேன்! 
என் செய்கைகளை கண்டு தங்கை சிரிக்கிறாள், அம்மா திட்டி தீர்க்கிறாள்!

முன்பு போல் இல்லை பவி, நீயும் சில நேரங்களில் எனக்காக நிற்கிறாய் என்னிடம் பேசுவதற்காகத்தான்! நான் தவிப்பதை கண்டு மெல்லமாய் நகர்ந்து விடுகிறாய்! இனி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்! 

இன்னும் இரண்டு நாளில் திருவிழா வருகிறது, அன்று இரவு சில நொடிகள் ஏதாவது பொய் சொல்லிவிட்டு வா,ஏரிக்கரையோர விழுது இறங்கிய ஆலமரத்தடியில் நின்று நட்சத்திரங்களை நலம் விசாரித்து, நிலவிடம் அறிமுகப் படுத்திக்கொண்டு வருவோம் !    


காத்திருப்புகளுடன்...

அரசன்

Post Comment

41 கருத்துரைகள்..:

சத்ரியன் சொன்னது…

தம்பி அரசா,

அசத்தியிருக்கிறாய்!

(ஆடிவெள்ளி திருவிழாவிற்கு என்னை அழைக்காததற்கான காரணம் இதுதானா?)

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

காதல் பொங்கும்.... பொத்துக்கொண்டு மனதில் நிரம்பி வரும்.... அழகான உணர்வும் அருமை....

மற்றவற்றை நிலாவிடம் அறிகிறேன்... ஹிஹி...

போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

வெற்றிவேல் சொன்னது…

அசத்திட்டீங்க அரசன் அண்ணா... ஆடி திரு விழா வருது... ஏரிக்கரை அரச மரத்தடில என்ஜாய் பண்ணுங்க...

வாழ்த்துகள்...

சீனு சொன்னது…

//
சட்டென்று கொட்டிச்செல்லும் கோடைமழை போல் தான் நீயும் , உன் நினைவுகளும். அடைமழையாய் இருப்பாய் என்று நிறைய முறை ஏமாந்திருக்கிறேன்! // செம செம

//பொறுமையை நாடிபிடித்து பார்க்கின்றன.// ஹா ஹா ஹா அற்புதம்

அருமையான கடிதம் அரசன், பொறுமையாய் காலம் தாழ்த்தி எழுதி இருந்தாலும் அற்புதமாக எழுதி இருக்கீங்க....

காதல் வந்து விட்டால் அவளை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கி விடுகிறோம் எத்தனை சத்தியமான வார்த்தைகள்... ரசித்துப் படித்தேன் ராசா...

சதீஷ் செல்லதுரை சொன்னது…

காதல் கலை கட்டுகிறது .கவிதைகள் சேர்த்து வந்திருந்தார் இன்னும் ரசிச்சிருப்பேன்....ஆனாலும் கடிதத்தில் நல்லாத்தான் இருக்குதுய்யா...வாழ்த்துக்கள் .....நமக்கு ஒரு ஆறுதல் பரிச கூட வாங்க விட்டிடாதிங்க...ம் ம் ம்

சசிகலா சொன்னது…

ஆமாங்க (தம்பிக்கு) ராசாவுக்கு காதல் வந்திருக்கு சொன்னா யாராவது நம்பினா தான... இப்ப தெரியுதா ?

r.v.saravanan சொன்னது…

குடையுடன் சென்றவள், என்னைக்கண்டதும் தோழி குடைக்குள் புகுந்து கொண்டு, உன் குடையை என்னருகே வைத்து விட்டு நகர்ந்தாய் , நான் பொத்துக்கொண்டு நனைந்தேன்!

இந்த வரிகளில் நனைகிறோம் நாங்கள்.

காதல் கடிதத்தில் பொங்கி வழிகிறது அரசன்

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

ராஜி சொன்னது…

எல்லாம் போச்சு! அப்படி இப்படின்னு யோசிச்சு காதலனுக்கு ராட்சசா!ன்னு பேர் வச்சு கடிதம் எழுதிக்கிட்டே இங்க வந்து பார்த்தா ராட்சசி வந்து நிக்குறா! இனி நான் போய் காதலன் பேரை தேடனும் :-(

ராஜி சொன்னது…

குடையுடன் சென்றவள், என்னைக்கண்டதும் தோழி குடைக்குள் புகுந்து கொண்டு, உன் குடையை என்னருகே வைத்து விட்டு நகர்ந்தாய்
>>
ச்சே! உங்களுக்கு காதல் பண்ணவே தெரியலை தம்பி! ரெண்டு பேரும் ஒரே குடையில போயிருந்தால் அப்படி இப்படின்னு ரொமான்ஸ் நடந்திருக்குமில்ல!!

cheena (சீனா) சொன்னது…

அன்பின் அரசன் - போட்டிக்குத் தாமதமாக எழுதி அனுப்பப் பட்ட காதல் கடிதம் அருமை - இயல்பான சொற்களைச் சேர்த்து - வெகு இயல்பாக எழுதப் பட்ட காதல் கடிதம் - அனுப்பியாச்சு - வெற்றி பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Prem S சொன்னது…

//சட்டென்று கொட்டிச்செல்லும் கோடைமழை போல் தான் நீயும் , உன் நினைவுகளும். அடைமழையாய் இருப்பாய் என்று நிறைய முறை ஏமாந்திருக்கிறேன்! //


பொழியும் அடைமழை ஓர் நாள்//புரிபடாத வசனங்கள், கவிதைகள் அனைத்தும் விரும்பி படிக்கிறேன்! மொழி புரியாத சினிமா காதலை விரும்பி பார்க்கிறேன்! காதலர்களை அவர்களுக்காக பிரார்த்திக்கிறேன்//
மொழி புரியா விட்டாலும் காதல் புரியுமே அருமை வெற்றி பெற வாழ்த்துகள்

அருணா செல்வம் சொன்னது…

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் அரசன்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

உணர்வுகளை படம் பிடித்துக் காட்டிய கடிதம். அருமையா வந்திருக்கு அரசன்.

வெற்றி பெற வாழ்த்துகள்.....

Tamizhmuhil Prakasam சொன்னது…

"சட்டென்று கொட்டிச்செல்லும் கோடைமழை போல் தான் நீயும் , உன் நினைவுகளும். அடைமழையாய் இருப்பாய் என்று நிறைய முறை ஏமாந்திருக்கிறேன்! "

அழகான வரிகள்.மிகவும் இரசித்தேன்.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

அனைவருக்கும் அன்பு  சொன்னது…

உன் குடையை
என்னருகே வைத்து விட்டு நகர்ந்தாய் ,
நான் பொத்துக்கொண்டு நனைந்தேன்!

காதல் உடைப்பெடுத்து வந்த தருணம் ரசிபிற்குரியது

காதல் வந்தாலே இயல்புகள் அனைத்தும் விநோதமாமாகதான் தெரியும்
ரசனைமிக்க வரிகளில் காதல் நிறைந்து இருகிறது ..............வாழ்த்துக்கள்

ரூபக் ராம் சொன்னது…

நல்ல கடிதம்.... வெற்றி பெற வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். சொன்னது…

காதல் மழையில் நனைந்தபடி படித்தபோது கடைசிவ(ரி)ரையிலும் கவிதை.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/2_24.html) சென்று பார்க்கவும்... நன்றி...

arasan சொன்னது…

சத்ரியன் கூறியது...
தம்பி அரசா,

அசத்தியிருக்கிறாய்!

(ஆடிவெள்ளி திருவிழாவிற்கு என்னை அழைக்காததற்கான காரணம் இதுதானா?)//

உங்களை கட்டாயம் அடுத்த திருவிழாவிற்கு அழைத்து செல்கிறேன் ... வாழ்த்தியமைக்கு நன்றி அண்ணே

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
காதல் பொங்கும்.... பொத்துக்கொண்டு மனதில் நிரம்பி வரும்.... அழகான உணர்வும் அருமை....

மற்றவற்றை நிலாவிடம் அறிகிறேன்... ஹிஹி...

போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...//

சொன்னா கேட்டுக்கோங்க தனபாலன் சார் .,.. ஹி ஹி ..

arasan சொன்னது…

இரவின் புன்னகை கூறியது...
அசத்திட்டீங்க அரசன் அண்ணா... ஆடி திரு விழா வருது... ஏரிக்கரை அரச மரத்தடில என்ஜாய் பண்ணுங்க...

வாழ்த்துகள்...//

நன்றி வெற்றி

arasan சொன்னது…

சீனு கூறியது...
//
சட்டென்று கொட்டிச்செல்லும் கோடைமழை போல் தான் நீயும் , உன் நினைவுகளும். அடைமழையாய் இருப்பாய் என்று நிறைய முறை ஏமாந்திருக்கிறேன்! // செம செம

//பொறுமையை நாடிபிடித்து பார்க்கின்றன.// ஹா ஹா ஹா அற்புதம்

அருமையான கடிதம் அரசன், பொறுமையாய் காலம் தாழ்த்தி எழுதி இருந்தாலும் அற்புதமாக எழுதி இருக்கீங்க....

காதல் வந்து விட்டால் அவளை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கி விடுகிறோம் எத்தனை சத்தியமான வார்த்தைகள்... ரசித்துப் படித்தேன் ராசா...//

யோவ் சீனு தனியா உமக்கு பெரிய விருந்தே இருக்கு ...

arasan சொன்னது…

சதீஷ் செல்லதுரை கூறியது...
காதல் கலை கட்டுகிறது .கவிதைகள் சேர்த்து வந்திருந்தார் இன்னும் ரசிச்சிருப்பேன்....ஆனாலும் கடிதத்தில் நல்லாத்தான் இருக்குதுய்யா...வாழ்த்துக்கள் .....நமக்கு ஒரு ஆறுதல் பரிச கூட வாங்க விட்டிடாதிங்க...ம் ம் ம்//

அண்ணே கவிதை போடுவதில் விருப்பம் இல்லை அதான் தவிர்த்து விட்டேன் ...
எங்க ? எல்லாப் பரிசுகளையும் பெண்மணிகள் வசப்படுத்தி விடுவார்கள் என்று தோன்றியதை சொன்ன உங்க நேர்மையை கண்டு வியக்கிறேன் அண்ணாச்சி

arasan சொன்னது…

Sasi Kala கூறியது...
ஆமாங்க (தம்பிக்கு) ராசாவுக்கு காதல் வந்திருக்கு சொன்னா யாராவது நம்பினா தான... இப்ப தெரியுதா ?//

அக்கா இது கற்பனை காதல் ... நிஜக்காதலிக்கு இப்படி அனுப்பினா அன்னைக்கே காதல் காணாமப் போனாலும் போய்டும்

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
குடையுடன் சென்றவள், என்னைக்கண்டதும் தோழி குடைக்குள் புகுந்து கொண்டு, உன் குடையை என்னருகே வைத்து விட்டு நகர்ந்தாய் , நான் பொத்துக்கொண்டு நனைந்தேன்!

இந்த வரிகளில் நனைகிறோம் நாங்கள்.

காதல் கடிதத்தில் பொங்கி வழிகிறது அரசன்

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

ராஜி கூறியது...
எல்லாம் போச்சு! அப்படி இப்படின்னு யோசிச்சு காதலனுக்கு ராட்சசா!ன்னு பேர் வச்சு கடிதம் எழுதிக்கிட்டே இங்க வந்து பார்த்தா ராட்சசி வந்து நிக்குறா! இனி நான் போய் காதலன் பேரை தேடனும் :-(//

முன்னாடியே சொல்லிருந்தா நான் மாத்திருப்பேன் அக்கா

arasan சொன்னது…

ராஜி கூறியது...
குடையுடன் சென்றவள், என்னைக்கண்டதும் தோழி குடைக்குள் புகுந்து கொண்டு, உன் குடையை என்னருகே வைத்து விட்டு நகர்ந்தாய்
>>
ச்சே! உங்களுக்கு காதல் பண்ணவே தெரியலை தம்பி! ரெண்டு பேரும் ஒரே குடையில போயிருந்தால் அப்படி இப்படின்னு ரொமான்ஸ் நடந்திருக்குமில்ல!!கிட்ட நெருங்கவே பயமா இருக்கு .. இதுல ஒரே குடையிலையாம் ...போங்க அக்கா

arasan சொன்னது…


பிளாகர் cheena (சீனா) கூறியது...
அன்பின் அரசன் - போட்டிக்குத் தாமதமாக எழுதி அனுப்பப் பட்ட காதல் கடிதம் அருமை - இயல்பான சொற்களைச் சேர்த்து - வெகு இயல்பாக எழுதப் பட்ட காதல் கடிதம் - அனுப்பியாச்சு - வெற்றி பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

நன்றிங்க அய்யா

arasan சொன்னது…

Prem s கூறியது...
//சட்டென்று கொட்டிச்செல்லும் கோடைமழை போல் தான் நீயும் , உன் நினைவுகளும். அடைமழையாய் இருப்பாய் என்று நிறைய முறை ஏமாந்திருக்கிறேன்! //


பொழியும் அடைமழை ஓர் நாள்
//

நன்றிங்க அன்பரே

arasan சொன்னது…

அருணா செல்வம் கூறியது...
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் அரசன்.//

நன்றிங்க மேடம்

arasan சொன்னது…

வெங்கட் நாகராஜ் கூறியது...
உணர்வுகளை படம் பிடித்துக் காட்டிய கடிதம். அருமையா வந்திருக்கு அரசன்.

வெற்றி பெற வாழ்த்துகள்.....//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

பிளாகர் Tamizhmuhil Prakasam கூறியது...
"சட்டென்று கொட்டிச்செல்லும் கோடைமழை போல் தான் நீயும் , உன் நினைவுகளும். அடைமழையாய் இருப்பாய் என்று நிறைய முறை ஏமாந்திருக்கிறேன்! "

அழகான வரிகள்.மிகவும் இரசித்தேன்.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.//

வாழ்த்துக்கு நன்றிங்க சார்

arasan சொன்னது…

கோவை மு சரளா கூறியது...
உன் குடையை
என்னருகே வைத்து விட்டு நகர்ந்தாய் ,
நான் பொத்துக்கொண்டு நனைந்தேன்!

காதல் உடைப்பெடுத்து வந்த தருணம் ரசிபிற்குரியது

காதல் வந்தாலே இயல்புகள் அனைத்தும் விநோதமாமாகதான் தெரியும்
ரசனைமிக்க வரிகளில் காதல் நிறைந்து இருகிறது ..............வாழ்த்துக்கள்//

வாழ்த்துக்கு மிகுந்த நன்றிகள்

arasan சொன்னது…

ரூபக் ராம் கூறியது...
நல்ல கடிதம்.... வெற்றி பெற வாழ்த்துக்கள்//

நன்றிங்க ரூபக்

arasan சொன்னது…

ஸ்ரீராம். கூறியது...
காதல் மழையில் நனைந்தபடி படித்தபோது கடைசிவ(ரி)ரையிலும் கவிதை.//

மிகுந்த நன்றிகள் சார்

arasan சொன்னது…

பிளாகர் திண்டுக்கல் தனபாலன் கூறியது...
வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/2_24.html) சென்று பார்க்கவும்... நன்றி...//

தகவலுக்கு நன்றிங்க சார்

Manimaran சொன்னது…

பவிக்கு எழுதிய கவித்துவமான கடிதம் கலக்கல்.

Ranjani Narayanan சொன்னது…

உங்களது காதல் மழையில் எல்லோரையும் நனைய வைத்துவிட்டீர்கள், அரசன்!
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

அப்பாதுரை சொன்னது…

பல இடங்களில் நயம் சொக்க வைக்கிறது. பாராட்டுக்கள்.

ஜீவன் சுப்பு சொன்னது…

பொத்துக்கொண்டு நனைந்தேன் உங்கள் காதல் கடிதத்தில் ...! அழகு...!

பெயரில்லா சொன்னது…

வணக்கம்

இன்றுவலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/08/blog-post_14.html?showComment=1376480761754#c8206585614008425317

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-