சென்னை வந்து சில, பல இடங்களை சுற்றிவிட்டு முடிவாக சாலிகிராமத்தில் மையம் கொண்டேன். சென்னை நோக்கிபடையெடுப்பவர்களின் முக்கிய பிரச்சினைகள், ஒன்று தங்க இடம், இன்னொன்று உண்ண உணவு! அடுத்துதான் வேலையெல்லாம்! போராட்டங்கள், அவமானங்கள் இப்படி சிலதுகளை கடந்து தான் சென்னையில் கால் ஊன்றினேன் என்று சொல்லும் பலரில் நானும் ஒருவன்!
நல்ல அறை கிடைத்தாயிற்று, அடுத்து நல்ல உணவகத்தை நோக்கி என் தேடும் படலம் தொடர்கையில் தான் அந்த சிறிய உணவகம் என் கண்ணில் பட்டது! நான்கே நான்கு மேசை கொண்ட உணவகம், ஊர்ப்புறங்களில் இருக்கும் உணவகங்கள் போல் இருந்தமையால் பார்த்த உடனே பிடித்துப் போனது, சாப்பிட்டு, பணம் கொடுத்ததும் இன்னும் பிடித்து போனது!
சில தினங்களில், மதுரைக்காரர் ஒருவர் பல வருடங்களாக இந்த உணவகத்தை நடத்தி வருகிறார் என்றும் இன்னும் பிற சங்கதிகளையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது!
என்னையும், என் பாக்கெட்டையும் பதம் பார்க்காமல் இருப்பதினால் கடந்த நான்கு வருடங்களாக இங்கு தான் பசியை போக்கி கொண்டிருக்கிறேன்! பல பெயர் போன (?!) உணவகங்களில் அடிக்கடி விலை ஏற்றப்படுவது போல் இங்கில்லை, கடந்த நான்கு வருடங்களில் மூன்றே முறை ஏற்றினாலும், பர்ஸை பதம் பார்த்ததில்லை!
கடையின் முதலாளி நல்ல மனிதர், என்ன ,முன் கோவக்காரர்! என் கோவத்தால் பலதுகளை இழக்க நேரிட்டிருக்கிறது என்று பலமுறை அவரே வருத்தப்பட்டு பாரம் சுமந்திருக்கிறார் என்னிடம்!
சொந்த கட்டிடம், கணவன் மனைவி இருவரும் காலையிலிருந்து இரவு வரை உழைக்கின்றார்கள்! இலாபம் சொல்லும்படி இருக்கிறது என்பார்! சப்ளை செய்ய ஒருத்தர், ஒரு மாஸ்டர்! இருவர்களில் ஒருவர் அடிக்கடி மாறிக்கொண்டே இருப்பார்கள்! காரணம் முதலாளியின் கோபம்!
ஒரு வருடமாக சிறுவனொருவன் சப்ளை செய்து கொண்டிருந்தான் எனக்கும் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. வயதுக்கு மீறி விளைந்த கோளாறினால் பையன் கம்பி நீட்டி இரண்டு மாதம் ஆகிறது! இரண்டு மாதமாக கடை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு அடிக்கடி கடை மூடியே இருக்கும்!
கடந்த இரண்டு வாரமாக கடை தொடர்ந்து இயங்கி வருவது என்போன்றோருக்கு பெரு மகிழ்வை தருகிறது! சென்னையின் பெரும்பான்மையான இடங்களில் நுழைந்த கொண்டிருக்கும் வட இந்திய காற்று இங்கும் நுழைந்திருக்கிறது! அதைப் பற்றிய ஒரு சிறு நிகழ்வை அடுத்த பதிவில் காண்போம்!
Tweet |
16 கருத்துரைகள்..:
// அவரே வருத்தப்பட்டு பாரம் சுமந்திருக்கிறார்// ஹா ஹா ஹா யோவ் உமக்கு என்னா நக்கலு
அவருடைய பேட்டி மற்றும் புகைபடம் எதுவுமே இல்லை இதுவா ஒரு பிரபல பதிவருக்கு அழகு... உமக்கு இதற்கெல்லாம் இன்னும் பயிற்சி வேண்டுமையா :-)
நல்ல ஓட்டலா இருந்தா அறிமுகப்படுத்தலாம். தவறில்லை.
இனி தானாக கோபம் குறைந்து விடலாம்...!
நல்லாவே அறிமுகப்படுத்திட்டு அப்புறம் அறிமுகம் இல்லேன்னா எப்படி? பகிர்வுக்கு நன்றி!
முதலாளிகள், தங்கள் கீழுள்ளோரிடம் கோபமாகத்தான் நடக்க வேண்டும் என்பது எழுதப் படாத சட்டம் போலும்
"சத்தியமா இது உணவகம் அறிமுகமில்லை...."
ஏன்? தாராளமா அறிமுகப்படுத்தலாம்..அடுத்து 'ராக்கம்மா இட்லி கடை' ன்னு ஒரு பதிவை எழுதுறீங்க..
இப்படியும் சில உணவகங்கள் இருக்கத்தான் செய்கின்றன! பெயரும் இடமும் குறிப்பிடலாமே! தவறில்லை!
இப்படியும் சில உணவகங்கள் இருக்கத்தான் செய்கின்றன! பெயரும் இடமும் குறிப்பிடலாமே! தவறில்லை!
சில இடங்களில் இப்படித்தான்...
அட்ரஸ் கொடுத்திருந்தால் நான் போய் சாப்பிட்டு ஒரு பதிவு எழுதியிருப்பேன்...
@ஸ்கூல் பையன் //அட்ரஸ் கொடுத்திருந்தால் நான் போய் சாப்பிட்டு ஒரு பதிவு எழுதியிருப்பேன்...// ஹா ஹா ஹா
கோபக்காரர்கள் ஹோட்டல் நடத்துவது என்பது பெரும் சவால்தான்...!
உணவகம் அனுபவம் னு வச்சிருக்கலாமே டைட்டில்
அந்த முதலாளி கிட்டே பர்மிசன் வாங்கி போட்டோ எடுத்து போட்டிருக்கலாம் அரசன்
எழுத்து நடை ரசித்தேன்
அறிமுகப்படுத்தாதுவிட்டாலும் நாங்கள் நல்ல உணவு சாப்பிட்டு விட்டோமே. :))
நல்ல உணவகம் - கோபக்கார உரிமையாளர் என எங்களுக்கு அறிமுகம் செய்தமைக்கு நன்றி. பலர் கோபத்தினால் தான் பலவற்றை இழக்கின்றார்கள்......
Tha. Ma. : 70 @ http://kaviyazhi.blogspot.in/2013/08/blog-post.html ஹா..... ஹா.....
நீங்களுமா...?!!!!!
கருத்துரையிடுக