புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஆகஸ்ட் 16, 2013

நான்காம் தலைமுறை

சில நாட்களாகவே ஊரின் நினைவுகள் கொஞ்சம் எட்டிப் பார்க்கின்றன இந்த நகரத்து பின்னிரவுகளில்! திட்டமிடல் ஏதுமின்றி மனம் போன போக்கில் பொழுதுகளை கழித்துக் கொண்டிருந்த காலக் கட்டம் அது. பெரிதாய் கவலையில்லை, வறுமையும் சொல்லும்படி இல்லை. இளமை முறுக்கு, வாலிபச் செருக்கு என்று விதவிதமாய் திட்டுவாள்  முத்தம்மாள் பாட்டி! 





சுருக்கம் விழுந்த தேகம் , சுருள் சுருளாய் முடி. இரவிக்கை அணியாத உடல். மனசு இன்னும் சுறுசுறுப்பாய் தான் இருக்கிறது, உடல் தான் ஒத்துழைக்க மறுக்கிறது என்று சமீப காலமாக அடிக்கடி அவள் சொல்லி கேட்கமுடிகிறது! என்பது வயதை கடந்தவள் . சோறின்றி கூட இருந்து விடுவாள், பேச ஆளின்றி அவளால் இருக்க முடியாது! பறவைகளோடு, மனிதர்களும் இரைதேடும் அறுவடைக் காலங்களில் நின்று கூட பேச நேரமிருக்காது. அந்த அவசரக் காலங்களில் இவளுக்கு அடை காக்கும் கோழி தான் தோழி!

தலைகுளித்து, வெயிலில் உணர்த்தி, எண்ணெய் தடவி சிக்கெடுக்கும் விதம் அவ்வளவு அழகு! இவள் வெற்றிலை போடும் முறையை யாரேனும் புதிதாய் காண நேரிட்டால், அவர்களுக்கும் வாய் சிவக்கும்! அவ்வளவு நேர்த்தி! வாழ்க்கையை அனுபவித்து வாழ்கிறேன் என்று அடிக்கடி அவள் சொல்லுவாள், அர்த்தம் அறியாமல் பேரப்பிள்ளைகள் உதாசீனப் படுத்தாமல் இல்லை, இருந்தும் கோபப் படமாட்டாள் முத்தம்மாள் பாட்டி!

சிலமுறை கேட்டிமிருக்கிறேன் ஏம் பாட்டி உனக்கு கோவமே வராதா என்று? சின்ன புன்னகைதான் பதிலாக தருவாள்! தங்கைகள் பெரியவர்களானதும் பாட்டி அவர்களிடம் மட்டுமே அதிக நேரங்களை செலவிடுவாள், நிறைய சொல்லிக்கொண்டே இருப்பாள், என்ன சொல்கிறாள் என்று விளங்கவும் விளங்காது, தங்கைகள் சிக்கி கொண்டதை எண்ணி உள்ளூர கொண்டாடி இருக்கிறேன்! என்னதான் பேசுகிறாள்  என்று கேட்க மனம் விரும்பியதுமில்லை! இப்போ என்ன கிழவி பேசியிருப்பாள் என்று யூகிக்க முடிகிறது!


வேலைக்காக ஊரைவிட்டு கிளம்புகையில் எல்லோரும் சற்று மனம் கனத்து நிற்கையில் இவள் மட்டும் எல்லாரையும் ஒரு அதட்டு அதட்டிவிட்டு விபூதி வைத்து, போயிட்டு வாடா ராசா என்று வாய் நிறைய சிரித்து வழியனுப்பினாள்! எந்த சூழலையும் பதட்டமின்றி கையாளுவாள், எப்படியென்று கேட்டால், எல்லாம் உன் தாத்தா சொல்லிக்கொடுத்தது தான்டா என்பாள்! வேலை கிடைத்து நகரத்திலே தங்கும்படி ஆன சூழ்நிலையில் இது உன் முப்பாட்டன் காலத்துலிருந்தே இங்கதாண்டா இருக்கோம், மண்ணை மறந்துடாதடா என்பாள்!

ஊருக்கு செல்லும் குறுகிய நாட்களிலும் பாட்டியிடம் முடிந்தவரை நிறைய நேரம் செலவிட ஆரம்பித்தேன்! வீரியமான ஆலமரம் போலிருந்தவள் சின்ன காய்ச்சலென்று படுத்த நான்கு நாட்களில் மூச்சை நிறுத்திக்கொண்டாள்! அடித்துப்பிடித்து ஓடி பார்க்கிறேன் கண்ணாடி  பெட்டிக்குள் உறங்கும் பாட்டி அப்போதும் அழகாகவே இருந்தாள், பாட்டி இறந்துவிட்டாள் என்று சில மணித்துளிகள் கழித்தே புத்திக்குள் உரைத்தது!

எத்தனை வலிகளையும், ஏமாற்றங்களையும், இன்பத்தையும், துன்பத்தையும் பார்த்தவள் இப்படி ஒடுங்கி கிடக்கிறாள்! மூன்று தலைமுறைகளை கண்டவள் இன்று கண்மூடி படுத்திருக்கிறாள்! சடங்கு முடித்து, சிதைக்கு தீ வைத்து விட்டு திரும்பாமல் நடக்கிறார்கள்! மனதுக்குள் எண்ணற்ற கேள்விகள் எழும்பி அடங்குகின்றன, முன்னோக்கி தான் நடந்துகொண்டே பின்னோக்கி பயணிக்கிறேன்! 


வீடு சேர்ந்ததும்  அவளின் பழைய படமொன்றை காண்கையில்  "உனது மன வலிமையில் பாதியளவு கொடு" பாட்டி என்று கத்த வேண்டும் போலிருந்தது !

  

Post Comment

23 கருத்துரைகள்..:

வெற்றிவேல் சொன்னது…

எல்லாருக்கும் இப்படியொரு பாட்டி இருப்பாங்க அண்ணா... இந்தப் பிரிவை அனைவரும் தாங்கியே ஆக வேண்டும்...

வீடு சேர்ந்ததும் அவளின் பழைய படமொன்றை காண்கையில் "உனது மன வலிமையில் பாதியளவு கொடு" பாட்டி என்று கத்த வேண்டும் போலிருந்தது!!!
/// பாதி இல்லை முழுவதும் அவர் தங்களுக்கே கொடுத்திருப்பார்... அவர் ஆசி தங்களுக்கு எப்போதும் உண்டு....

சிறப்பான பதிவு அண்ணா... பாராட்டுகள். எனது அம்மாயி மீனாட்சியின் நினைவும் வந்து செல்கிறது...

மாதேவி சொன்னது…

உங்கள் பாட்டி எங்கள் மனங்களிலும் நிலைத்து நிற்கின்றார்.

எத்தனை பொறுப்புகளை தாங்கியிருப்பார்கள்.

பாட்டி மனவலிமையைத் தரட்டும்.

மகேந்திரன் சொன்னது…

மனம் கனத்து விட்டது தம்பி...
சத்தமே இல்லாமல் பல சாம்ராஜ்யங்களை
ஆண்டவர்கள் , பாட்டியைப் போன்ற
பெரியவர்கள்...
சிறு பார்வைக்கும் சிறு பேச்சுக்கும்
ஆயிரம் பொருள் கற்பிப்பவர்கள்...

ராஜி சொன்னது…

பட்டப்படிப்புகள் தராத தெளிவும், தைரியமும் அனுபவம் தந்திருக்கு அந்த கால மனிதர்களுக்கு. அத்னாலதான், அவங்க இக்கட்டான சூழலில் கூட உறுதியாய் நின்னு இருக்காங்க. ஆனா, நாம?! சின்ன தலைவலிக்கு உதிர்ந்து காத்துல காணாம போய்டுறோம்.

கீதமஞ்சரி சொன்னது…

வாசித்து முடிக்கையில் என் கண்ணோரம் நீர்த்துளிகள். என் அம்மாச்சியை நினைத்துக்கொண்டேன். வெற்றிலை போடும் அழகை எழுத்தில் வடித்தவிதம் அருமை. எனக்கும் அதுபோன்ற அனுபவமுண்டு என்பதால் எழுத்தோடு ஒன்றமுடிகிறது.

ஒவ்வொரு வீட்டையும் தூண்களிலொன்றாய் தூக்கிநிறுத்திக்கொண்டிருந்தார்கள் அவர்கள். தூண்களின் பலத்தை அவை உலுத்துப்போனபின்பே உணர்கிறோம் நாம். மனத்தில் ஆழமாய் இறங்கிய பகிர்வு.

அம்பாளடியாள் சொன்னது…

கவலையை மறந்து வாழுங்கள்
சகோ .முதுமை அவர்களைக் கரை சேர்த்துள்ளது .கண்ணியமாக அந்த ஆன்மா இப்போது தூங்கிக் கொண்டு தான் இருக்கிறது .அவர்கள் சொன்ன அனுபவப்
பாடங்களில் இதுவும் ஒன்றே .மனம் கவர்ந்த பாட்டியின் நினைவுகள் மனதில் ஒட்டிக் கொண்டது மலர்ந்திருக்கும் சிறப்பான தங்கள் ஆக்கத்தைப் போல !

Unknown சொன்னது…

பாட்டி என்ற ஒரு ஜீவனை கண்ணாடி சட்டத்திற்குள் அடங்கிய கருப்பு வெள்ளை படமாய் தான் பார்த்திருக்கிறேன்..இதை படிக்கும் பொழுது எதோ ஒன்று என்னுள் அசைந்து அடங்கியது.என் வாழ்விலும் அப்படி ஒரு ஜீவன் கடந்திருக்கலாமோ என்று எண்ண தோன்றுகிறது..//"வீடு சேர்ந்ததும் அவளின் பழைய படமொன்றை காண்கையில் "உனது மன வலிமையில் பாதியளவு கொடு" பாட்டி என்று கத்த வேண்டும் போலிருந்தது !" // முடித்த விதம் அழகா இருக்கு முழுமையானதாகவும் இருக்கு...

Seeni சொன்னது…

unmainga....

கோமதி அரசு சொன்னது…

"உனது மன வலிமையில் பாதியளவு கொடு" பாட்டி என்று கத்த வேண்டும் போலிருந்தது !//

பாட்டியின் நினைவுகள் மனதை நெகிழவைத்தன்.
பாட்டியின் மனவலிமை கண்டிப்பாய் நமக்கு தேவைதான்.
பாட்டி தெய்வமாய் இருந்து வழி நடத்தி செல்வார்கள்.

arasan சொன்னது…

வெற்றிவேல் கூறியது...
எல்லாருக்கும் இப்படியொரு பாட்டி இருப்பாங்க அண்ணா... இந்தப் பிரிவை அனைவரும் தாங்கியே ஆக வேண்டும்...//

நன்றி வெற்றி

arasan சொன்னது…

மாதேவி கூறியது...
உங்கள் பாட்டி எங்கள் மனங்களிலும் நிலைத்து நிற்கின்றார்.

எத்தனை பொறுப்புகளை தாங்கியிருப்பார்கள்.

பாட்டி மனவலிமையைத் தரட்டும்.//

நன்றிங்க மேடம்

arasan சொன்னது…

பிளாகர் மகேந்திரன் கூறியது...
மனம் கனத்து விட்டது தம்பி...
சத்தமே இல்லாமல் பல சாம்ராஜ்யங்களை
ஆண்டவர்கள் , பாட்டியைப் போன்ற
பெரியவர்கள்...
சிறு பார்வைக்கும் சிறு பேச்சுக்கும்
ஆயிரம் பொருள் கற்பிப்பவர்கள்...//

நன்றிங்க அண்ணா

arasan சொன்னது…

ராஜி கூறியது...
பட்டப்படிப்புகள் தராத தெளிவும், தைரியமும் அனுபவம் தந்திருக்கு அந்த கால மனிதர்களுக்கு. அத்னாலதான், அவங்க இக்கட்டான சூழலில் கூட உறுதியாய் நின்னு இருக்காங்க. ஆனா, நாம?! சின்ன தலைவலிக்கு உதிர்ந்து காத்துல காணாம போய்டுறோம்.//

அவர்களின் மன வலிமையையும், உறுதியும் நமக்கு கொஞ்சம் இருந்தாலே போதும் அக்கா

arasan சொன்னது…

கீத மஞ்சரி கூறியது...
வாசித்து முடிக்கையில் என் கண்ணோரம் நீர்த்துளிகள். என் அம்மாச்சியை நினைத்துக்கொண்டேன். வெற்றிலை போடும் அழகை எழுத்தில் வடித்தவிதம் அருமை. எனக்கும் அதுபோன்ற அனுபவமுண்டு என்பதால் எழுத்தோடு ஒன்றமுடிகிறது.

ஒவ்வொரு வீட்டையும் தூண்களிலொன்றாய் தூக்கிநிறுத்திக்கொண்டிருந்தார்கள் அவர்கள். தூண்களின் பலத்தை அவை உலுத்துப்போனபின்பே உணர்கிறோம் நாம். மனத்தில் ஆழமாய் இறங்கிய பகிர்வு.//

ஆழமாய் உள்வாங்கி தந்திருக்கும் கருத்துக்கு என் பணிவான நன்றிகள் அக்கா

arasan சொன்னது…

பிளாகர் Ambal adiyal கூறியது...
கவலையை மறந்து வாழுங்கள்
சகோ .முதுமை அவர்களைக் கரை சேர்த்துள்ளது .கண்ணியமாக அந்த ஆன்மா இப்போது தூங்கிக் கொண்டு தான் இருக்கிறது .அவர்கள் சொன்ன அனுபவப்
பாடங்களில் இதுவும் ஒன்றே .மனம் கவர்ந்த பாட்டியின் நினைவுகள் மனதில் ஒட்டிக் கொண்டது மலர்ந்திருக்கும் சிறப்பான தங்கள் ஆக்கத்தைப் போல !//

நன்றிங்க மேடம்

arasan சொன்னது…

Ilamathi muthu கூறியது...
பாட்டி என்ற ஒரு ஜீவனை கண்ணாடி சட்டத்திற்குள் அடங்கிய கருப்பு வெள்ளை படமாய் தான் பார்த்திருக்கிறேன்..இதை படிக்கும் பொழுது எதோ ஒன்று என்னுள் அசைந்து அடங்கியது.என் வாழ்விலும் அப்படி ஒரு ஜீவன் கடந்திருக்கலாமோ என்று எண்ண தோன்றுகிறது..//"வீடு சேர்ந்ததும் அவளின் பழைய படமொன்றை காண்கையில் "உனது மன வலிமையில் பாதியளவு கொடு" பாட்டி என்று கத்த வேண்டும் போலிருந்தது !" // முடித்த விதம் அழகா இருக்கு முழுமையானதாகவும் இருக்கு...//

ஆழ்ந்து வாசித்து உணர்வாய் கருத்திட்ட உங்களுக்கு என் பணிவான வணக்கங்களும் நன்றிகளும் இளமதி

arasan சொன்னது…

பிளாகர் Seeni கூறியது...
unmainga....// nandri nanbaa'

arasan சொன்னது…

கோமதி அரசு கூறியது...
"உனது மன வலிமையில் பாதியளவு கொடு" பாட்டி என்று கத்த வேண்டும் போலிருந்தது !//

பாட்டியின் நினைவுகள் மனதை நெகிழவைத்தன்.
பாட்டியின் மனவலிமை கண்டிப்பாய் நமக்கு தேவைதான்.
பாட்டி தெய்வமாய் இருந்து வழி நடத்தி செல்வார்கள்.//

miguantha nandrigal madam

சீனு சொன்னது…

அருமையான பதிவு அரசன்.. பதிவை இன்னும் கொஞ்சம் வளர்த்திருந்தால் இன்னும் கொஞ்சம் பெருந்தீனி கிடைத்திருக்குமோ என்று தோன்றியது... எல்லார் வாழ்விலும் தாத்தா பாட்டிகளின் வாழ்க்கை முக்கியாமான அத்தியாயங்கள்...

இதைப் படித்ததும் என் பாட்டி பற்றியும் ஒரு பதிவு எழுதலாமா என்று தோன்றுகிறது பார்க்கலாம்

Muruganandan M.K. சொன்னது…

எனது பாட்டிகளின் நினுவுகளில் மூழ்க வைத்தீர்கள். உங்கள் அருமையான பதிவின் ஊடாக

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
இன்று வலைச்சர அறிமுகத்திற்கு எனது வாழ்த்துக்கள்
http://blogintamil.blogspot.com/2013/09/blog-post_12.html?showComment=1378981093122#c3253265906579873749

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
இன்று வலைச்சர அறிமுகத்திற்கு எனது வாழ்த்துக்கள்
http://blogintamil.blogspot.com/2013/09/blog-post_12.html?showComment=1378981093122#c3253265906579873749

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தேன் நிலா சொன்னது…

முத்தம்மாள் பாட்டியின் "மனவலிமை"யும்... தங்களின் "மனவேதனை"யும் உணர முடிந்தது..
படித்து முடித்ததும் ஒரு சில வினாடிகள் மனம் ஸ்தம்பித்தது என்னவோ உண்மை..!

எனது வலைத்தளத்தில்: குறைந்த விலை பிராண்டட் செல்போன்களின் பட்டியல்

வாசித்துப் பயன்பெறுங்கள்..