இந்த வருடத்திற்கான பதிவர் சந்திப்புக்கான துவக்கபுள்ளி மிக தாமதமாக போடப்பட்டாலும், ஆயத்தப் பணிகள் என்னவோ வெகு வேகமாக நடந்து, இதோ இன்னும் சில நாட்களில் வடபழனியை ஆக்கிரமிக்கப் போகிறது பதிவர்களின் புயல்! இறுதி கட்டப் பணிகள் மிக துல்லியமாக நடைபெற்று வருகிறது! குறிப்பாக வெளியூர் பதிவர்கள் தங்குமிடம், அவர்களை அழைத்து வரும் பொறுப்பு இப்படி சரியான திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் விழா ஒருங்கிணைப்பு தோழர்கள்! விழாவின் பிரமாண்ட வெற்றிக்கான அறிகுறி இப்போதே தென்பட ஆரம்பித்து விட்டது.
இரண்டு சிறப்பு அழைப்பாளர்கள் வருகை தந்து உரை ஆற்ற இருக்கின்றார்கள்! திரு. பாமரன், திரு. கண்மணி குணசேகரன் இவர்களின் எழுத்து பலருக்கும் பரிச்சயமாயிருக்கும், உரையை கேட்டு மகிழ்வோம் வாருங்கள்! அடுத்ததாய் பதிவர்களின் தனித்திறன் நிகழ்ச்சி இவ்வருடம் புதியதாய் இடம் பெற்றிக்கிறது! எழுத்தில் மின்னும் இவர்கள், மற்ற திறமைகளையும் வெளிக்கொணர வாய்ப்பாய் இருக்கும் என்று நம்புகிறேன்! கலந்து கொண்டு சிறப்பிக்க? போகும் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
சென்ற வருடம் போல் இந்த வருடமும் புத்தக அரங்கு அமைத்து பல முன்னணி பதிப்பகத்தாரின் புத்தகங்களை நமக்கு சிறப்பு விலையில் வழங்க இருக்கும் பதிவர்களின் வேடந்தாங்கல் அண்ணன் வேடியப்பன் அவர்களுக்கு என் நன்றிகள்! புத்தகங்களை ஆன்லைனில் வாங்க இங்கு செல்லுங்கள்!
அடுத்து சக பதிவர்களின் புத்தக வெளியீடும் இருக்கிறது, அவர்களுக்கு நம் மனங்கனிந்த வாழ்த்துக்களைக் கூறிக்கொள்வோம்! அதைப்பற்றிய விரிவான தகவல்களை மெட்ராஸ் பவனில் பாருங்கள்!
இதுவரை வருகையை உறுதி செய்தவர்களின் பட்டியலை காண இங்கே செல்லுங்கள்! சென்ற வருட பதிவர் சந்திப்பின் வெற்றி இந்த வருடத்தின் பட்டியலை பார்த்தாலே தெரிகிறது! இதுவரை வருகையை உறுதி செய்யாத தோழர்கள் விரைவில் உங்களின் வருகையை உறுதி செய்யுங்கள்! அதனை வைத்து தான் தங்குமிடம், உணவு போன்றவற்றை தயார் செய்ய முடியும்! வருகையை உறுதி செய்ய கீழுள்ள நண்பர்களை தொடர்பு கொள்ளவும்!

மதுமதி – kavimadhumathi@gmail.com 9894124021
பட்டிகாட்டான் ஜெய் – pattikattaan@gmail.com 9094969686
சிவக்குமார் – madrasminnal@gmail.com 9841611301
ஆரூர்மூனா.செந்தில்குமார் – senthilkkum@gmail.com 8883072993
அஞ்சாசிங்கம் செல்வின் – selwin76@gmail.com 9444125010
பாலகணேஷ் – bganesh55@gmail.com
சசிகலா - sasikala2010eni@gmail.com
Tweet |
9 கருத்துரைகள்..:
செப்டம்பர் முதல் தேதி பதிவர் திருவிழா முதல் தரமாய் முத்திரை பதிக்க வாழ்த்துக்கள்
செப்.1 சென்னை குலுங்க போகுது. சிறப்பு நிகழ்சி பற்றி ஒரு பதிவு போட்டுள்ளேன் பாருங்க.
வெற்றி பெற வாழ்த்துக்கள்...
இந்த வெற்றிக்காகப் பாடுபடும் அனைவரையும் வாழ்த்துகிறேன்...
http://rajamelaiyur.blogspot.com/2013/08/just-for-
fun.html
சுருக்கமாக ஆயினும் அனைத்து விவரங்களும்
சொல்லிப்பொகும் தங்கள் பதிவு அருமை
சந்திப்பில் சந்திப்போம்,,,வாழ்த்துக்களுடன்
சென்னையில் சந்திப்போமுங்க,
சந்திப்போம் !! :)
பலன் கருதா தங்களைப் போன்றவரின் உழைப்பை போற்றுகிறேன்!
விழா சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
கருத்துரையிடுக