இன்றோடு சரியாக
ஆறாவது முறையாக பார்க்கிறேன்!
அவளுடன் மேலும்
சில பெண்கள்
தோழிகளாக இருக்க கூடும்!
கரு நீலமும் , வெண்மையும்
கலந்த நிறத்தில் உடை ,
முடியை மிக கவனமாக
ஒழுங்கு செய்திருந்தாள்,
மை பூசியிருப்பதை
புருவங்கள் உணர்த்துகின்றன!
ஒவ்வொரு முறையும்
கண்களை கவனிக்க முற்பட்டு
விலகிய துப்பட்டாவிடம்
வீழ்ந்து தொலைக்கிறேன்!
இன்றாவது திருத்தமாய்
இருப்பாளென நானும்,
திருந்தியிருப்பானா? என்று அவளும்
அப்படியே தான் தொடர்கிறது
ஏழு, எட்டு... என்று!
பண்பற்ற போட்டியினால்
மழுங்கடிக்கபடுகிறது
மரபும், மாண்பும்!
பல்லிளிக்கிறது
பக்குவமற்றப் பாங்கு!
Tweet |
34 கருத்துரைகள்..:
இன்றாவது திருத்தமாய்
இருப்பாளென நானும்,
திருந்தியிருப்பானா? என்று அவளும்
இவ் வரிகள் கவிதைக்கு இன்னும் அழகை தருகின்றன அரசன்
புதுமையான பார்வை அண்ணா.. நான் கவிதையைச் சொன்னேன்...
நல்லாருக்குன்னா..
ஒவ்வொரு முறையும்
கண்களை கவனிக்க முற்பட்டு
விலகிய துப்பட்டாவிடம்
வீழ்ந்து தொலைக்கிறேன்!// வயசு மாப்ள வயசு....
அருமையான கவிதை.. பாராட்டுகள்..
ஓ அங்கேயும் அப்படித்தானா?
அருமையான கவிதை...
கொஞ்சம் சீரியஸ்தான்
/////இன்றாவது திருத்தமாய்
இருப்பாளென நானும்,
திருந்தியிருப்பானா? என்று அவளும்
அப்படியே தான் தொடர்கிறது
ஏழு, எட்டு... என்று!//////
என்ன ஒரு யதார்த்தம்.. !
அப்படியே இயற்கையான வாழ்வியல் போக்கை கவிதையில காட்டியிருகீங்க....
வாழ்த்துகள் அரசன்..!!!!
ஆண் மனதை ஆணியடித்து சொன்ன கவிதை! சிறப்பான ஒன்று! வாழ்த்துக்கள்!
நல்ல கவிதை. உண்மையைச் சொல்லிட்டீங்க போல!
அன்பின் அர்சன் - கவிதை நன்று - இளைஞர்களீன் இயல்பான செயல் - திருத்தமாக இருப்பாளா என இவனும் திருந்தி இருப்பானா என் அவளும் இப்படியே தொடர்வதும் இயல்பான செயல் தான் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
//இன்றாவது திருத்தமாய்
இருப்பாளென நானும்,
திருந்தியிருப்பானா? என்று அவளும்
அப்படியே தான் தொடர்கிறது // ஹா ஹா ஹா அருமை
இளிகிறதும் இளிச்சுட்டு என்னய்யா பேச்சு
கவிதையா எழுதிட்டா மட்டும் கன்னிப் பெண்ணை குறுகுறுவென பார்க்கும் உம்முடைய காமப் பார்வையை சரியென்று ஏற்றுக் கொள்ள முடியாது..
(விட்டுட்டு விட்டுட்டு போயிட வேண்டியது. அப்புறம் எப்படி சப்போர்ட் பண்றதாம்?)
அழகான உண்மை வரிகள்
விலகிய துப்பட்டாவிடம் வீழ்ந்து தொலைக்கிறேன்!"
>>
என் தம்பி நல்லவன்ன்ன்ன்ன்ன்ன்ன்னு நம்பிட்டேனே!!
r.v.saravanan கூறியது...
இன்றாவது திருத்தமாய்
இருப்பாளென நானும்,
திருந்தியிருப்பானா? என்று அவளும்
இவ் வரிகள் கவிதைக்கு இன்னும் அழகை தருகின்றன அரசன்//
நன்றிங்க சார்
வெற்றிவேல் கூறியது...
புதுமையான பார்வை அண்ணா.. நான் கவிதையைச் சொன்னேன்...
நல்லாருக்குன்னா.//
நன்றி வெற்றி
ரசித்தேன்
தம்பி நல்லவர் நம்பலாம்!
வேடந்தாங்கல் - கருண் கூறியது...
ஒவ்வொரு முறையும்
கண்களை கவனிக்க முற்பட்டு
விலகிய துப்பட்டாவிடம்
வீழ்ந்து தொலைக்கிறேன்!// வயசு மாப்ள வயசு....
அருமையான கவிதை.. பாராட்டுகள்..//
ஆம்மாம் மாம்ஸ் ... வயசுதான் மாம்ஸ் காரணமா இருக்கும்
கும்மாச்சி கூறியது...
ஓ அங்கேயும் அப்படித்தானா?//
அப்படித்தான் தல ...
திண்டுக்கல் தனபாலன் கூறியது...
அருமையான கவிதை...//
நன்றிங்க சார்
T.N.MURALIDHARAN கூறியது...
கொஞ்சம் சீரியஸ்தான்//
அப்படிங்களா சார்
தங்கம் பழனி கூறியது...
/////இன்றாவது திருத்தமாய்
இருப்பாளென நானும்,
திருந்தியிருப்பானா? என்று அவளும்
அப்படியே தான் தொடர்கிறது
ஏழு, எட்டு... என்று!//////
என்ன ஒரு யதார்த்தம்.. !
அப்படியே இயற்கையான வாழ்வியல் போக்கை கவிதையில காட்டியிருகீங்க....
வாழ்த்துகள் அரசன்..!!!!//
நன்றிங்க நண்பா
s suresh கூறியது...
ஆண் மனதை ஆணியடித்து சொன்ன கவிதை! சிறப்பான ஒன்று! வாழ்த்துக்கள்!//
நன்றிங்க அண்ணே
வெங்கட் நாகராஜ் கூறியது...
நல்ல கவிதை. உண்மையைச் சொல்லிட்டீங்க போல!//
உண்மையே தான் சார்
cheena (சீனா) கூறியது...
அன்பின் அர்சன் - கவிதை நன்று - இளைஞர்களீன் இயல்பான செயல் - திருத்தமாக இருப்பாளா என இவனும் திருந்தி இருப்பானா என் அவளும் இப்படியே தொடர்வதும் இயல்பான செயல் தான் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//
நன்றிங்க அய்யா
சீனு கூறியது...
//இன்றாவது திருத்தமாய்
இருப்பாளென நானும்,
திருந்தியிருப்பானா? என்று அவளும்
அப்படியே தான் தொடர்கிறது // ஹா ஹா ஹா அருமை
இளிகிறதும் இளிச்சுட்டு என்னய்யா பேச்சு//
யோவ் பப்ளிக் பப்ளிக்
கோவை ஆவி கூறியது...
கவிதையா எழுதிட்டா மட்டும் கன்னிப் பெண்ணை குறுகுறுவென பார்க்கும் உம்முடைய காமப் பார்வையை சரியென்று ஏற்றுக் கொள்ள முடியாது..
(விட்டுட்டு விட்டுட்டு போயிட வேண்டியது. அப்புறம் எப்படி சப்போர்ட் பண்றதாம்?)//
புரிகிறது மிஸ்டர் ஆவி ... மனசில் வைத்துக் கொள்கிறேன்
ரூபக் ராம் கூறியது...
அழகான உண்மை வரிகள்//
நன்றி ரூபக்
2008rupan கூறியது...
வணக்கம்
இன்று வலைச்சர அறிமுகத்திற்கு எனது வாழ்த்துக்கள் சென்று பாருங்கள்http://blogintamil.blogspot.com/2013/09/6.html?showComment=1379804682537#c2030230268890817041
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//
தகவலுக்கு நன்றி ரூபன்
ராஜி கூறியது...
விலகிய துப்பட்டாவிடம் வீழ்ந்து தொலைக்கிறேன்!"
>>
என் தம்பி நல்லவன்ன்ன்ன்ன்ன்ன்ன்னு நம்பிட்டேனே!!//
இப்பவும் நான் நல்லவன் தான் அக்கா ...
MF Niroshan கூறியது...
ரசித்தேன்//
நன்றிங்க நண்பா ...
புலவர் இராமாநுசம் கூறியது...
தம்பி நல்லவர் நம்பலாம்!//
நன்றிங்க அய்யா ...
mmmmm....
கருத்துரையிடுக