புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

நவம்பர் 13, 2013

பதிவுலகம் அவ்வளவுதானா ?


முன்புபோல் பதிவெழுத நேரம் கிடைப்பதில்லை என்பது என்னவோ உண்மையாக இருந்தும், பெரும்பாலான நேரங்களில் விழும் இடைவெளிகளுக்கு காரணம், "என்னத்த எழுதி", "என்னத்த படித்து" என்கிற இலக்கிய சிந்தனைகள் தான். இதுபோன்ற  சிந்தனைகள் அடிக்கடி என்னை ஆட்கொண்டு  தொடர்ந்து இயங்கவிடாமல் செய்கிறது,

ஏதாவது ஒரு சித்தரை சந்தித்து கலந்தாலோசிக்க விருப்பமாய் இருக்கிறேன், அனுபவசாலிகள் சிறந்த சித்தரை சிபாரிசு செய்யவும்!

சில வருடங்களுக்கு முன்பெல்லாம் இளம்பெண்கள் நிறைந்த திருவிழா போல் எப்போதும் சுறு சுறுப்பாய் இயங்கிய பதிவுலகம் இப்போது பல்லுபோன கிழவி கணக்கா பெரும் அமைதி கொண்டுள்ளது. 

என்னடா நமக்கு வந்த சோதனை, இப்படி நித்தம் பதிவெழுதி கொல்லுகிறார்களே என்றெல்லாம் குமுறிய காலம் போய், அந்த இரக பதிவுகள் கூட வருவதில்லையே என்கிற கவலை மனசுக்குள் பாரமேற்றுகிறது! ஆண்டவரே அவர்களின் வருத்தங்களை நீக்கி, மீண்டும் பதிவு எழுதும்படி இரட்சியும்! பாவங்கள்  தொலையட்டும்?....!

நண்பர்களை சம்பாரித்தது தவிர்த்து இங்கு நான் எதையும் பெரிதாய் சாதித்துவிடவில்லை என்ற அலார மணி என் சிறு, பெரு மூளைகளின்? மடிப்புகளில் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருந்தாலும் நானும் ஒரு  பதிவன்? என்று சொல்லிக்கொள்(ல்லு)வதில் என்னவோ மனம் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறது.

சமீப காலமாக எவரும் புதிதாய் பதிவெழுத வந்தமாதிரி எனக்கு நினைவில்லை. நமக்குள்ளே தான் பம்பரம் சுற்றிக்கொண்டிருக்கிறோம். இந்நிலை நீடித்தால் சோர்ந்து கிடக்கும் பதிவுலகம் , இன்னும் சோர்ந்து தான் போகும். எத்தனை நாளைக்குத் தான் நம் சட்டைகளை நாமலே கிழித்துக்கொண்டு திரிவது ?

புதிதாய் வருபவர்களை ஊக்கப்படுத்தி, கரங்கொடுத்தால் தான் மேலும் புதியவர்கள் உள்நுழைய வாய்ப்பு உருவாகும். (எலேய் அரசா உம் பிரச்சினை என்னதான்னு சொல்லித்தொலையும் ). தெரிஞ்சாதான் சொல்ல மாட்டேமோ ? எதிலும் புது வருகை இல்லையெனில் அது  காலப்போக்கில் தானே அழிந்துவிடும் அபாயம் இருப்பதாக எங்கோ படித்த நியாபகம். 

எழுத வா வென யாரையும் கரம் பிடித்து இழுக்க முடியாது ? அவர்களாக வந்தால் தான் உண்டு என்கிற நிதர்சனமும் புரிகிற அதே வேளையில் தான்,  ஏன்? முன்பிருந்த பிளாக்கின் மோகம் இப்போதில்லை என்கிற பெருங்கேள்வி விஸ்வரூபம் எடுக்கிறது. உங்களுக்கு ?         


Post Comment

21 கருத்துரைகள்..:

Yaathoramani.blogspot.com சொன்னது…

அனைவருக்குமுள்ள ஆதங்கத்தை
அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்

நான் மாதம் பதினைந்துக்கு மிகாமல்
பத்துக்குக் குறையாமல் எழுதலாம் என்கிற
முடிவில் இயங்கிக் கொண்டிருக்கிறேன்
அந்தக் கணக்கில் எப்படியும் மூன்று நாளைக்குள்
ஒன்று எழுதவேண்டும் என என்னை நானே
கட்டாயப்படுத்திக் கொண்டதால்
தொடர்ந்த் எழுத முடிகிறது

இல்லையெனில் நானும் அம்பேல்தான்

நீங்கள் சொன்னபடி நம் சட்டையை நாமே
கிழித்துக் கொண்டிருந்தால் எத்தனை
சட்டையைத்தான் கிழிப்பது ?

அடுத்தவர்கள் சட்டைக்கு
ஆபத்து விளைவிக்க வேணும்
தொடர்ந்து எழுதுவோம்

வாழ்த்துக்களுடன்...

செங்கோவி சொன்னது…

ஃபேஸ்புக் ஒரு முக்கியக்காரணம் பாஸ். நம் மக்களின் எனர்ஜி அங்கேயே போய் விடுகிறது.

ezhil சொன்னது…

நினைத்ததை நினைத்தவுடன் கிறுக்கி முடிக்கும் முகநூல் பக்கம் ஒர் காரணம். இங்கு குறைந்த பட்சம் ஒரு பக்கமாவது எழுதணும்..சின்ன சின்ன விஷயங்களை உடனுக்குடன் பகிர முடிவதில்லை.. நான் மாதம் ஐந்து பதிவு என்பதையே செய்ய முடியவில்லை..ஒரே விஷயம் குறித்து தொடர்ந்து எழுதினால் போர் அடித்து விடும்..புதியவர்களை வரவேற்கலாம்...

aavee சொன்னது…

யோவ்.. மொதல்ல இருக்கிறவங்க பதிவுகள தொடர்ந்து போட்டா புதியவர்கள் நம்மள பார்த்து கண்டிப்பா வருவாங்க.. அதனால மாசம் ஒரு அஞ்சு பதிவாவது போடப் பாரும். ஒய்!!

தனிமரம் சொன்னது…

இது பலரின் ஆதங்கம் அரசன் அண்ணாச்சி புதியவர்கள் வரவேண்டும் என்பதே என் பிரார்த்தனையும் !

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

புதிய பதிவர்கள் அதிகம் வரவேண்டும்...
எனது ஆசையும் அதே!

காமக்கிழத்தன் சொன்னது…

புதுசுகள் வரலேன்னாலும் பழசுகளிடமிருந்து புதுசு புதுசா, தினுசு தினுசா பதிவுகள் வருதான்னு பாருங்க; வந்தா திருப்திபட்டுக்கலாம்.

ப.கந்தசாமி சொன்னது…

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தங்களின் ஆதங்கம் புரிகிறது.
வேலைப் பளு ஒரு முக்கிய காரணம் என்று நினைக்கின்றேன். பதிவுலகில் எழுதிவரும் அனைவருமே, அதிக வேளைப்பளு உள்ளவர்கள்தான்.

முகநூல் இதற்கு ஒரு காரணமாகத் தோன்றவில்லை.
இந்நிலை மாறும் நண்பரே. கவலை வேண்டாம்
புத்துணர்ச்சியோடு புறப்படுங்கள்

cheena (சீனா) சொன்னது…

Dear Friends - No tamil font - Sorry - Face book consumes most of my time. Of course i dont write any thing - but comment on all posts - status messages - Photos etc etc etc - Time Consumption is not the only reason for not writing in BLOGS. The habit of writing in Blogs is just getting reduced - what to do ? - - Regards - Cheena

பெயரில்லா சொன்னது…

முகப்புத்தகமும், கீச்சுமே வலைப்பதிவு எழுதுதலில் தடங்கல் வர முக்கியக் காரணம். எழுதக் கூடிய பலரும் அங்கு நேரத்தை வீண் செய்கின்றனர். அடுத்த காரணம் செல்பேசி ஊடாக பதிவை பதிய வாய்ப்புக் குறைவு, குறிப்பாக ப்ளாக்கர் புதிய செயலிகளை அறிமுகம் செய்ய வேண்டும். அதே போல தமிழ்மணம் போன்ற திரட்டிகள், தமிழ் சமூகமும் பதிவு எழுதுவோரை ஊக்குவிக்கவும் வேண்டும். முகநூலில் எழுதுவது காலத்தில் கரைந்து விடும், வலைப்பதிவுகள் இணையம் உள்ளவரை நீடித்திருக்கும், பலருக்கும் பயன் தரும்..

Unknown சொன்னது…


உண்மைதான் அரசன்! காரணம் பல!
குழுமனப்பான்மை! ஓட்டு சேகரிக்க சிலர்
செய்யும் செயல்கள்! ஒன்றுக்கு மேற்பட்ட
கணக்குகள் வைத்திருப்பது! இப்படி இன்னும் பல வேண்டாம்! வம்பு!

ரிஷபன் சொன்னது…

என்னடா நமக்கு வந்த சோதனை, இப்படி நித்தம் பதிவெழுதி கொல்லுகிறார்களே என்றெல்லாம் குமுறிய காலம் போய்//

வரட்டும் புதியவர்களும் புது சிந்தனைகளும்

மாதேவி சொன்னது…

புதியவர்களை வரவேற்போம்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

புதியவர்கள் வருகை குறைந்துதான் போய்விட்டது! தினமும் ஒரு பதிவு எழுத நிறைய மெனக்கெட வேண்டியுள்ளது. எழுதியதை சுவாரஸ்யமாக பகிர்வது ஒரு கலை! அது ஒருசிலருக்குத்தான் கைகூடுகிறது! நன்றி!

r.v.saravanan சொன்னது…

எழுதி கொண்டிருப்பவர்கள் வாரம் ஒரு பதிவாவது வெளியிட முன் வர வேண்டும் புதிவர்கள் எழுத முன் வர வேண்டும் அவர்களை எல்லோரும் ஊக்கபடுத்த வேண்டும்

Admin சொன்னது…

Facebook! :)

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

முகநூலுக்கு அடிமைகள் அதிகம் ஆகிக் கொண்டிருப்பதால்....!----->(பதிவர்கள்)

From Friend's L.Top...!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

புதியவர்கள் வரவேண்டும். ஆனால் புதியவர்கள் பலரும் முகப்புத்தகம் பக்கமே அதிகம் செல்கிறார்கள்......

ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறோம். அதுவே தொடருமோ தெரியவில்லை. என்றைக்கு தோன்றுகிறதோ அன்று விட்டு விலக வேண்டியது தான்!

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

முகநூல் என்று நினைக்கிறேன். எழுதி என்ன பையன் என்ற நினைப்பும் கூட இருக்கலாம்..எனக்கும் அந்த நினைப்பு அவ்வப்போது வருகிறது..ஆனாலும் தள்ளிவிட்டு எழுதிக் கொண்டிருக்கிறேன்.

Unknown சொன்னது…

தமிழ் மணம் திரட்டியில் புதியவர்கள் இணைய முடியவில்லையாம்..தேக்கத்திற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ?
த.ம 11


'