புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

டிசம்பர் 29, 2013

ஊர்ப்பேச்சு # 12 ( Oor Pechu # 12)


நாலஞ்சி மாசமா காஞ்ச சருக தின்னு நாக்கு வறண்டு கெடந்த மாடுகளுக்கு இனி கும்மாளம் தான். இன்னும் அஞ்சாறு மாசத்துக்கு வெசனமின்றி பசும்புல்லா தின்னு கொழுக்கும். அதிலயும் இந்த கம்மம் புல்லுக்கு இருக்குற மவுசே தனிதான்!

தீனி பாப்பது ஒரு கலை, எல்லாத்துக்கும் அவ்வளவு லேசுல பில்லு சேராது. சேக்குற வெதத்துல சேத்தா தான் பில்லு சேரும். இதுல நம்ம ஆளு கில்லாடி, போறது தெரியாது, வாறது தெரியாது . நெஞ்சு கனக்க ஒரு கட்டு வூட்டு முன்னாடி கெடக்கும்.

இரத்தினம் தான் புல்லு அறுத்ததுன்னு, அறுத்த எடத்த வைச்சே சொல்லிபுடலாம் அம்புட்டு சுத்தமா இருக்கும். ஒன்ன விட்டு வைக்க மாட்டார். முள்ளு பூண்டா இருந்தாலும் அறுத்து கறம்புல தனியா போட்டு வைச்சிடுவார். நூலு புடிச்சி அறுத்த மாதிரி அளவா அறுத்து எடுப்பதில் இவரை அடிச்சிக்க ஆளில்ல!

அருவா தவுத்து உழவாரம் போட்டு செத்துனாலும் சாணம் மொழுவுன தரையாட்டும் பளிச்சுன்னு கண்ண பறிக்கும். புல்லு சேக்குறது எம்புட்டு முக்கியமோ அம்புட்டு முக்கியம் அதை கட்டுவது, எத்தனை மைலு நடந்தாலும் தல உள்ள வாங்காது ரத்தினம் கட்டின புல்லு கட்டு.

பச்ச புல்லு திங்குறதுல ஒரு செரமம் இருக்கு என்னன்னா காலயில , கட்டுத்தறிய அம்புட்டு லேசுல சுத்தம் பண்ண முடியாது. தொள தொளன்னு கழிய ஆரம்பிச்சிடுங்க, அதுலயும் இந்த பசுங்க பாடு தான் பெரும்பாடு, காளைக கூட இதுக அளவுக்கு பண்ணாது! பாவம் அதுங்க என்னா பண்ணும் எல்லாம், அதுகளோட உடல் வாகு அப்படி. பத்து நாள் கழிஞ்சி தான் பொறவு சரியாவும்.

கோட்டுவா கூட கழுவாம கட்டுத்தறிய சுத்தம் பண்றது தான் ரத்தினத்தோட மொவன் பண்ற மொத வேலை.ரெண்டு நிமிசத்துல கட்டுத்தறிய சுத்தம் பண்ணிடுவான், இன்னைக்கு அரை மணி நேரமா வழிச்சிக்கிட்டு கெடக்கான். சுத்தம் பண்ணிட்டு தான் பள்ளிக்கூடம் கெளம்புவான், வேலை அதிகம் வைக்குறது ன்னு மூஞ்சிய தூக்கி கிட்டே சாணக்கூடைய தூக்கி விட அம்மாவ கூப்புடுறான்.

வாய் நடுங்கும், இந்த  குளிர்லயும் ரெண்டு நாளா ஊறிட்டிருக்கும் கம்மஞ்சோத்து உருண்டையில ரெண்ட எடுத்து போட்டு கரைச்சி குடிச்சிட்டு கெளம்பிட்டார் அறுத்துபோட்ட சோள தட்டைவோள கத்தையா கட்டி குத்தி வைக்க ....

டீத்தண்ணி குடிச்சிட்டு போலாம், கொல்லை போயி ரெண்டு கன்னாம்பு கட்டி குத்துறத்துக்குள்ளே பசி குடல இழுக்கும் அதான் இப்படி. கம்மஞ்சோறு குடிச்சிட்டு போனா அரைக்காணி தட்டையை அனாமத்தா கட்டி குத்திட்டு கண்ணு குட்டிகளுக்கு கம்மம் புல்லு பார்த்துட்டு வந்துடலாம் என்பது ரத்தினத்தோட நெனைப்பு ....

இன்னைக்காவது என்னை சீண்டமாட்டாளா ன்னு ஒட்டுமேல பல்ல இளிச்சிட்டு கெடக்கு போன வாரம் பொறுக்கியாந்த பூவம் வெளக்குமாறு சீவு... சீக்கிரம் பபயலுக்கு சோறு கொடுத்து அனுப்பனுமேன்னு சக்கரமா சொழலுரா நாலு தப்படி வூட்டுக்குள்ள ...

Post Comment

9 கருத்துரைகள்..:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரத்தினத்தோட நெனைப்பு நடக்கட்டும்...!

Unknown சொன்னது…

படிக்கும்போதே சாண நாற்றம் உணர்ற மாதிரி நல்ல வர்ணனைகள் !
+1

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பகிர்வு......

கிராமத்து வாசனை வீசுகிறது பதிவில்!

vimal சொன்னது…

எழுத்தில் கிராமிய வாசம் வீசுகிறது தொடருங்கள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

கிராமத்து எழுத்தோவியம்....
வளமான நிலம்...
வளமான கதைக் களம்....

த. ம. +1

aavee சொன்னது…

//இன்னைக்காவது என்னை சீண்டமாட்டாளா ன்னு //

அண்ணன் ஊருக்கு வரும் போது யாருன்னு சொல்லுப்பா.. சட்டு புட்டுன்னு பேசி முடிச்சுடுவோம்!!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

கிராமிய மனம் கமழும் பதிவு

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

த.ம.6

கோகுல் சொன்னது…

தாத்தா வீட்டுக்கு போய்ட்டு வந்த மாதிரி இருக்கு.,