புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

டிசம்பர் 30, 2013

சிறு துளை நீராய்...


பெருத்த சண்டையில்லை,
வெறுக்கும் வார்த்தைகளுமில்லை,
சின்ன கருத்து முறிவு தான் 
சிதைந்தது கூடு ... 

நிரம்பிய பாத்திரத்தின் 
சிறு துளை நீராய் 
வெளியேறிக்கொண்டிருக்கிறது 
அவனும், அவனின் நினைவுகளும்!

அவனுக்கு நான் 
எப்படியோ ?

பால்யத்திலிருந்து நண்பனவன்,
என் வளர்ச்சி கண்டு 
அவனுக்கு மன வெதுமை,
உறுதியானது 
நிகழ்வொன்றில்!

தெரிந்து தான் விலகுகிறேன் 
இனி தேவையில்லை அவன்,
அவன் 
அவனாகவே இருக்கட்டும்,
நான் 
அவனுக்கு எதிரியாகி கொள்கிறேன்!

சின்ன சின்னதாய் 
உடைவதை விட ,
ஒரே முறை உடைத்துவிடுவதில் 
பெரு விருப்பமாயிருக்கிறேன்!

உடைபட்ட கூடுகள் ஒன்றிணைந்து 
"பிழைக்கத் தெரியாதவனென்று"
ஏளனம் செய்தாலும், 

நடிக்கத் தெரியாதவனென்று 
ஆறுதல் படுத்திக் கொள்கிறேன் 
"என்னை"

Post Comment

13 கருத்துரைகள்..:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நடிக்கத் தேவையில்லை என்றால் சரி தான்...

Unknown சொன்னது…

கவிதை அருமை நண்பரே!

Seeni சொன்னது…

Ada..

Kavithai sirappu..

கார்த்திக் சரவணன் சொன்னது…

எனக்கும் அப்படித்தான், பிடிக்கலைன்னா விலகிடறது நல்லது... ரெண்டு நாள் கஷ்டமா இருக்கும், அப்புறம் பழகிடும்...

இராய செல்லப்பா சொன்னது…

ஒவ்வொருவன் வாழ்விலும் நீங்கள் சொல்லும் 'அந்த' மாதிரி தருணங்கள் வரத்தான் செய்கின்றன. "சின்ன சின்னதாய் உடைவதை விட ,ஒரே முறை உடைத்துவிடுவதே " நல்லது. ஆமோதிக்கிறேன்!

aavee சொன்னது…

அவன்?

சீனு சொன்னது…

//சின்ன சின்னதாய்
உடைவதை விட ,
ஒரே முறை உடைத்துவிடுவதில்
பெரு விருப்பமாயிருக்கிறேன்!//

இந்த வரி மட்டுமே பல காதல் கவிதைகள் பேசுகின்றன உயர்திரு ராசா

//நடிக்கத் தெரியாதவனென்று
ஆறுதல் படுத்திக் கொள்கிறேன்
"என்னை"//

இதுக்கு தான் ஓவரா சிம்பு படம் பார்க்கக் கூடாதுன்னு சொல்றது

சீனு சொன்னது…

@ ஆவி பாஸ்

ஏன்யா யோவ் ஒருத்தன் நட்பின் முறிவை கவிதையாக எழுத கூடாதா... எப்போதுமே காதல் தோல்வி கவிதை தான் எழுதணுமா

அப்படின்னு நான் கேட்கல.. ராசா தான் போன் போட்டு ஒரு மணி நேரம் அழுது அடம் புடிச்சி கேட்க சொன்னாரு :-)

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிறு வயதில் இப்படி சில நட்புகள் இருந்ததுண்டு - உடைக்க முடியாது நான் இன்னும் அவஸ்தைப் படுகிறேன் அரசன்.....

நல்ல கவிதை.

காரஞ்சன் சிந்தனைகள் சொன்னது…

நல்ல கவிதை! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ராஜி சொன்னது…

நல்ல கவிதை. இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் அரசா!

Ranjani Narayanan சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், அரச ன்

Unknown சொன்னது…

அலைகள் கரை சேர்ந்துவிட்டன !
த.ம 7