புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

டிசம்பர் 07, 2013

வாழக் கற்றுக் கொடுங்கள் ....

ரு புள்ளியில் துவங்கி அதே புள்ளியில் வந்து முடிந்துவிடுகின்றன பெரும்பாலான சிக்கல்கள், வேடிக்கையாக சிலதுகள் மட்டும் வளைவு நெளிவுகளோடு ஒழுங்கற்ற வேதாளமாய் பயணித்து வேதனையில் முடித்து வைக்கும். தாய் திட்டியதால் மகள் தற்கொலை, மனைவியுடன் சண்டை கணவர் கால்வாயில் குதித்து தற்கொலை இப்படி எண்ணற்ற கொலைகளை ஒவ்வொரு நாளும் சர்வசாதரணமாக நாம் கடக்க வேண்டி இருக்கிறது. மறுபக்கத்தில் தற்கொலைக்கு முயன்று மரணத்தின் மடியில் தவழ்ந்து கொண்டிருக்கும் இன்னொரு சாராரையும் பார்த்துவிட்டு நகர்ந்து கொண்டு தான் இருக்கிறோம்! சொற்ப எண்ணிக்கையிலான நிகழ்வுகளும் அதன் பின்னணிகளும் தான்  நம்மை உலுக்கி சில இரவுகளை தூக்க மிழக்கவும்  செய்யும்!

எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாமல் ஏமாற்றத்தை பரிசளிக்கையில், ஏற்படும் வெறுமையை விரட்ட  பலரும் தற்கொலை என்கிற நிவாரணியை கையில் எடுக்கின்றனர். அதிலும் சமகால தலைமுறைகள் இப்பட்டியலில் முதலிடம் வகிக்கின்றனர்கள்! ஆசிரியர் கண்டித்ததினால் மாணவி தீக்குளிப்பு என்கிற தகவலுக்கு பின் ஒளிந்திருக்கிறது இந்தக் கால சந்ததிகளின் மன தைரியமும், அவர்களின் தன்னம்பிக்கையும். 

நான் பட்ட அவமானத்தை, துன்பத்தை என் பிள்ளைகள் படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் பெற்றோர்கள் தான்  இப்படி ஒரு பலவீனமான விதைகளை நாளைய சமுதாயத்துக்கு கொடுத்திருக்கிறார்கள்! கொடுத்துக் கொண்டும் இருக்கிறார்கள். பக்குவப் படுத்தி பிள்ளை வளர்ப்பதை தவிர்த்து பலகீனப் படுத்தி வளர்ப்பதினால் யாருக்கு என்ன பலன்? பாவம் பிள்ளைகளின் வாழ்க்கை தான். 

புத்தகப் பொதியேற்றி அனுப்பி வைக்கும் நமக்கு, அவர்களுக்கு வாழ்க்கைப் பொதியையும் சுமக்க கற்று தர வேண்டிய கடமை இருக்கிறது. அதை கவனத்தில் கொண்டு இயங்கும் பெற்றோர்கள் நம்முள் எத்தனை பேர் இருக்கிறோம் என்பது தான் நம்முன் எழுப்பபடும் வினா? நமக்கு பிரச்சினைகள் வராத வரை அதை ஒரு செய்தியாக கூட மதிக்காத சமூகத்தில் இருந்துகொண்டு நாளைய  சமுதாயம் நன்றாக இருக்கும் என்று எண்ணுவது வெறும் பகல் கனவு போலத்தான், ஒரு நாளும் நனவாகாது!

நாங்கள் அந்த காலத்தில் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டோம் தெரியுமா ? என்று என் முன் சந்ததியினர் யாராவது ஆரம்பித்தால் அவரை பாவமாய் பார்த்திருக்கிறேன். காது கொடுத்து கேட்டதுகூட இல்லை . இப்போது அவர்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுக்க தோன்றுகிறது. எந்த மாதிரியான கட்டுப்பாடுகளையும், எவ்வளவு சிரமங்களையும் கடந்து வந்திருப்பார்கள் என்று நினைக்கையில் மதிப்பு சற்று உயரவே செய்கிறது. எட்டணாவுக்கும், ஒரு ரூபாய்க்கும் நாள் முழுக்க வரப்பில் முள் பொருக்கி இருக்கியிருக்கிறேன் என்று எனது மாமா கருணாகரசு சொல்லும்போதெல்லாம் பட்டறிவின் வீரியத்தை உணர முடிகிறது!

உங்களைப் பின்தொடரும் சந்ததிகளுக்கு வாழ்க்கையை சுகமாக்கி கொடுங்கள் அது உங்களது உரிமை, கடமை கூடவே வாழ்க்கையை வாழவும் கற்று கொடுங்கள்! ஒரு தலைமுறை சொத்தையானால் மீள்வது மிகக் கடினம்! போடும் பாதை உறுதியாக இருப்பின் வண்டிகளின் பயணம் பாதுகாப்பாக இருக்கும்! 


Post Comment

23 கருத்துரைகள்..:

வெற்றிவேல் சொன்னது…

உண்மை தான் அண்ணா.. அனைவரும் யோசிக்க வேண்டியது...

சீனு சொன்னது…

என்ன தல.. பீலிங்க்ஸ் பொங்குது.. வீட்ல பொண்ணு பார்த்துடாங்களா

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பகிர்வு....

சீனுவின் கமெண்ட்! ரசித்தேன்...

த.ம. 2

aavee சொன்னது…

வெள்ளை யானையில் ஏற முயற்சி நடப்பதாய் தெரிகிறது?

ஜீவன் சுப்பு சொன்னது…

என்னமோ போங்க ஜி ...!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எழுத்தில் மனதார சிந்தித்த முதிர்ச்சி தெரிகிறது...

அனைவரும் உணர வேண்டிய கருத்துக்கள் (சொத்தையான பின்பு - இன்றைய நிலை...!)... பாராட்டுக்கள்...

Unknown சொன்னது…










நன்றாகச் சொன்னீர்கள் ,நேற்றைய என் பதிவையும் பாருங்கள் ...ஒரு தாய்எட்டு வயது மகளுக்கு திருடக் கற்றுகொடுத்து இருக்கிறாள் >>>
http://jokkaali.blogspot.com/2013/12/blog-post_1230.html
த .ம 6






அம்பாளடியாள் சொன்னது…

சிறப்பான பகிர்வு .வாழ்த்துக்கள் சகோதரா மேலும் சிறப்பாகத் தொடரட்டும் .

மாதேவி சொன்னது…

"வாழ்க்கையை வாழவும் கற்று கொடுங்கள்"

நல்ல பகிர்வு.

ராஜி சொன்னது…

இப்போது அவர்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுக்க தோன்றுகிறது.
>>
ஒருவேளை உங்களுக்கு வயசாகிட்டுதோ!!

Yaathoramani.blogspot.com சொன்னது…

உங்களைப் பின்தொடரும் சந்ததிகளுக்கு வாழ்க்கையை சுகமாக்கி கொடுங்கள் அது உங்களது உரிமை, கடமை கூடவே வாழ்க்கையை வாழவும் கற்று கொடுங்கள்! ஒரு தலைமுறை சொத்தையானால் மீள்வது மிகக் கடினம்! போடும் பாதை உறுதியாக இருப்பின் வண்டிகளின் பயணம் பாதுகாப்பாக இருக்கும்!//

அழுத்தமாகச் சொல்லப்பட்ட
அருமையான அவசியமான கருத்து
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

பெற்றோர் உணர வேண்டிய வரிகள்
நன்றிஐயா

Vijayan Durai சொன்னது…

:/ அட ஆமாம் அரசன் அண்ணா! சந்தியில் இருக்கும் தீ சட்டைக்கு வரும் வரும் வரைக்கும் சட்டை செய்யாத சமூகத்தில் நீங்களும் ,நானும் ,எல்லோரும் வாழ வேண்டி இருக்கிறது, இச்சமூகத்தின் மேலான பிடிப்பை இழக்கும் ஒரு சாரார் தற்கொலைக்கு நகர்கின்றனர், இன்னொரு சாரார் கொலை,கொள்ளை.. என இறங்குகின்றனர் ! துளியாய் மாறத் தயாராய் சில துளிகள் கிட்டுமாயின் வெள்ளத்தை எதிர்பார்க்கலாம் !மாற்றத்தை எதிர்பார்க்கலாம். நாளைகளின் மீதெனக்கு நம்பிக்கை உண்டு.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…


துன்பங்களைத் தாங்கவும் விடுபடவும் கற்றக் கொள்ள மூத்தோரின் துயரங்களை கேட்டாலே போதும். நமக்கு ஏற்பட்ட துயரம் எவ்வளவு குறைவானது என்பது தெரிந்து விடும்.

ஆத்மா சொன்னது…

ஒவ்வொரு சொல்லும் முத்துக்கள் தல...

மகேந்திரன் சொன்னது…

மிகச் சரியாகச் சொன்னீர்கள் தம்பி...
ஒரு தலைமுறை வாழ்வின் நிதர்சனத்தின் பாதையில் தவறினால்
திரும்ப எழுவதற்கு காலம் பல பிடிக்கும்.
ஏற்றுக்கொள்ள வேண்டிய அறிவுரைகள்.
நல்ல பதிவு.

arasan சொன்னது…

@ வெற்றி

நன்றி

arasan சொன்னது…

@ சீனு

இதுக்கும் பொண்ணு பாக்குறதுக்கும் என்னய்யா சம்பந்தம் ...?

arasan சொன்னது…

@ வெங்கட்

நன்றிங்க சார்

arasan சொன்னது…

@ ஆவி

யோவ் இது என்னவோய் வெள்ளை யானை ? புதுசா இருக்கே ...

arasan சொன்னது…

@ ஜீவன் சுப்பு

என்ன ஜி ? பலமா யோசனை போல ..

arasan சொன்னது…

@ DD

நன்றிங்க சார் ..

arasan சொன்னது…

@ பகவான்ஜி
நன்றிங்கோ