சன்னல் பக்கம் அமர்ந்திருந்தவனின்,
தோளில்
தலை சாய்த்து உறங்குகிறது
வதங்கிய செம்பருத்தியுடன்
நீல நிற தாவணியொன்று!
கனத்த மல்லிகை
கரம் பற்றி
கதை அளந்த காட்சிகள் நிழலாட,
ஏறியவுடன் இறங்கிவிட்டேன்.
நடத்துனர் முறைக்க,
நகர்கிறது பேருந்து.
சுமை ஏற்றியவள்
ஏனோ விலகிவிட்டாள்,
ஏறிய பாரத்தை இறக்க முடிவதில்லை
எட்டுவருடங்களாகியும்!....
Tweet |
15 கருத்துரைகள்..:
இந்த பாரத்தை எத்தனை வருடமானாலும் இறக்கி வைக்க முடியாது...
பாரம் சுமக்கத்தானே பிறக்கிறோம்! அருமை! நன்றி!
சுமையைச் சொன்னவிதம் அருமை
குறிப்பாக அழுத்தம் கொடுத்த அந்த இறுதி வரி
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்
Sokamthaan....
இறக்கி வைக்க இயலாதுதான்
த.ம.4
வணக்கம்
என்ன கவிதை... அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இது சுகமான சுமையாச்சே !
த ம 5
கடினம்தான்..
கவிதை அருமை.
வதங்கின செம்பருத்தியையே சுமக்க முடியலைன்னா அப்புறம் எப்படி குடும்ப பாரத்தை சுமக்க போறே!?
எட்டு வருடங்கள் இல்லை. என்பது வருடங்கள் ஆனாலும் இறக்கிட இயலாத சுமை அது... ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா...
இறக்க முடியாத பாரம்.....
ரசித்தேன்.
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-4-part2.html) சென்று பார்க்கவும்... நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கதம்ப உணர்வுகள்
வலைச்சர தள இணைப்பு : அன்பின் பூ - நான்காம் நாள்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/02/blog-post_20.html#comment-form
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கருத்துரையிடுக