புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மார்ச் 10, 2014

ஒன்பது ரூபாய் நோட்டு - சினிமா அல்ல வாழ்க்கை ....


தமிழ் மக்களின் வாழ்வியலை, அவர்களின் வாழ்வியல் சூழலோடு துளி கூட மாறுபடாமல், பவுடர் பூசாத வெள்ளந்தி மனிதர்களின் வாழ்வியல் நெறியை ஒளிப் பிம்பமாய் வழங்கும் வெகு சில திரைப் படைப்பாளிகளில் மிக முக்கியமானவர் திரு. தங்கர் பச்சான்.



சராசரி மனிதர்களின் அன்றாட வாழ்க்கை, சமூகம் சார்ந்த, அவர்களின் தொழில் சார்ந்த பார்வையோடு நுணுக்கமாய் திரைப்படமாய் சேகரித்து வருபவர். ஆடம்பரமற்ற சினிமாவையே பெரிதும் நேசிப்பவர். இவரது படைப்புகள் பெரும்பாலும் மண் சார்ந்த மக்களின் சினிமாவாகத்தான் இருக்கிறது. 

தான் வாழ்ந்த, இரசித்த கிராமத்து வாழ்வியலை பதிவு செய்வதில் பெரும் ஆர்வம் உள்ளவர் என்றாலும் சில நேரங்களில் அதுவே அவருக்கு ஆபத்தாக அமைந்திருக்கிறது. சம விகிதத்தில் கொடுக்க முடியாமல் சொதப்பிய கதையும் இவரிடம் நிறைய இருக்கிறது.

தமிழ் சினிமாவில் தன் பெயரை சற்று அழுத்தமாக பதிவு செய்துவிட்டார் திரு, தங்கர். அனைவரையும் திருப்தி படுத்துகிற மாதிரி சினிமா எடுக்கத் தெரியாதவர் அல்ல, எடுக்க விரும்பாதவர் என்று சொல்லலாம். நிச்சயம் இவர் தயாரிப்பாளரின் இயக்குனர் அல்ல. கதைக்கான இயக்குனர். அதனால் தான் வணிக ரீதியான மாபெரும் வெற்றியை பதிவு செய்யாமல் இருக்கிறார். 

சொல்ல மறந்த கதை, அழகி , ஒன்பது ரூபாய் நோட்டு இம்மூன்றும் வெவ்வேறு கிளைக்கதை என்றாலும் இணைத்திருப்பது என்னவோ மண்வாசம் நிறைந்த மக்களின் மொழிதான். பலரும் சொல்லத் துணியாத கதைகளையே சொல்லுவார்.



இதில் நான் பெரிதும் இரசித்தது ஒன்பது ரூபாய் நோட்டு தான். சாதாரண விவசாயக் குடும்பத்தையும், அக்குடும்பம் சார்ந்த விவசாயத் தொழிலையும், அக்குடும்பம் பின்னர் எந்த நிலைக்கு சென்று திரும்பியது என்பதை  இவ்வளவு நுணுக்கமாக பதிவு செய்த தமிழ் சினிமாவை நான் பார்த்ததில்லை.

 இசையும், பாடல் வரிகளும் கதையோடு தான் பயணிக்கும். சின்ன சின்ன விசயங்களை கூட முக்கியத்துவம் கொடுத்து பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக வசனங்கள் ஒவ்வொன்றும் மிக எளிமையான சொற்களை  அடங்கிய வலிமையான ஆயுதங்கள்.

இன்று உலக சினிமா உலக சினிமா என்று கொண்டாடும் பெரும்பாலான சினிமாக்கள் அந்தந்த சூழல் சார்ந்த மனிதர்களின் வாழ்க்கை நெறி முறைகளை சார்ந்தே வெளி வருகின்றன! உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து பதிவு செய்யப்படும் எந்த மொழி சினிமாவும் அது எனக்கு உலக சினிமா தான்.

ஒன்பது ரூபாய் நோட்டில் சில குறைகள் இருந்தாலும் அதை பின்னுக்கு தள்ளுவது எளிய மனிதனின் உணர்வின் வெளிப்பாடு. ஆகவே இந்த ஒன்பது ரூபாய் நோட்டு என்னைப் பொறுத்தவரை அது சினிமா அல்ல வாழ்க்கை தான் .....  

Post Comment

16 கருத்துரைகள்..:

காந்திமதி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ராஜி சொன்னது…

எனக்கு மிகவும் பிடித்தமான படம். நிறைய இடங்களில் அழுதிருக்கிறேன். மார்கழியில் குளிச்சுப் பாரு பாட்டும் என் ஃபேவரிட் பாட்டு

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பல இடங்களிலும் மனதை கலங்கடித்த படம்... சத்யராஜ் அவர்களுக்கு சரியான தீனி போட்ட படமும்...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

நல்லதொரு திரைப்படம்! வெளிவந்த புதிதில் பார்த்து ரசித்திருக்கிறேன்! அருமையான விமர்சனம்! நன்றி!

Unknown சொன்னது…

தங்கர் பச்சான் சரியாகத்தான் படம் எடுக்கிறார் .தமிழ்ப் பட ரசிகர்கள்தான் இன்னும் இதை ரசிக்கும் அளவிற்கு வளர்ச்சி அடையவில்லை ..மசாலா மயக்கம் தெளியவில்லை !
த ம 5

தனிமரம் சொன்னது…

அருமையான படம் சத்யராஜ் நடிப்பு மிக இயல்பு!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமையான படம்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

தங்கர்பச்சான் ஒரு அருமையான படைப்பாளி! வித்தியாசமான படைப்பாளியும் கூட! பல சமயங்களில் ஏதாவது சொல்லி பலர் வாயில் சிக்குபவரும் கூட! சினிமாத் துறை ஆட்களும் சரி மக்களும் சரி அவரது படைப்புகளை மட்டும் வேறு படுத்தி பார்த்து புரிந்து கொள்ளும் அளவு வரவில்லையோ என்று தோன்றுகிறது!

இந்தப் படம் வெகு அருமையாகச் சொல்லப்பட்ட படம்! மனதைத் தொட்டு, கண்ணில் னீர் கசிந்தாலும் ரசித்துப் பார்த்த படம்! சத்தியராஜின் திரைபபட வாழ்வில் இது ஒரு மைல் கல் எனலாம்!

தங்களது விமர்சனத்தை மிகவும் ரசித்தோம்! நல்ல தமிழ் நடையில் விமர்சித்துள்ளீர்கள்!

சீனு சொன்னது…

//தமிழ் மக்களின் வாழ்வியலை, அவர்களின் வாழ்வியல் சூழலோடு துளி கூட மாறுபடாமல், பவுடர் பூசாத வெள்ளந்தி மனிதர்களின் வாழ்வியல் நெறியை ஒளிப் பிம்பமாய் வழங்கும் வெகு சில திரைப் படைப்பாளிகளில் மிக முக்கியமானவர் திரு. தங்கர் பச்சான்.//

தலைவரே ஒரு சின்ன திருத்தம்... வாழ்வியல் இந்த வார்த்த ஒரே வரியில மூணு முறை வருது.. ஒரே வார்த்தை ஒரு தடவைக்கு மேல வரும்னா அதுக்கு இணையான வார்த்தை என்னன்னு யோசிச்சு அத உபயோகம் செய்யுங்க.. நீங்க பண்ணினது குறையா தெரியல... ஆனால் ஒருவேளை உங்களை அறியாம பதிவு முழுவதும் தொடர்ந்தா ஒரு சலிப்பு வந்தரும்

//தமிழ் மக்களின் வாழ்வியலை, பவுடர் பூசாத வெள்ளந்தி மனிதர்களின் வாழ்க்கைநெறியை, அவர்களின் வாழ்வியலோடு துளி கூட மாறுபடாமல், ஒளிப் பிம்பமாய் வழங்கும் வெகு சில திரைப் படைப்பாளிகளில் மிக முக்கியமானவர் திரு. தங்கர் பச்சான்.// ஒரு சின்ன திருத்தம் பண்ணிருக்கேன்.. இப்ப வாசிச்சு பாருங்க

சீனு சொன்னது…

தங்கர் படங்கள் பிடிக்கும்.. இயல்பை இயல்பாய் படமெடுக்கக் கூடியவர்... ஒன்பது ரூபாய் நோட்டு பார்த்ததில்லை.. பார்க்கவேண்டும்..

எழுத்தில் வெகுவான முன்னேற்றம்.. இதே போல் தொடரவும்


aavee சொன்னது…

நானும் ரொம்ப பீல் பண்ணி பார்த்த படம்..ரொம்ப நல்ல படம். சத்தியராஜ் நடிச்சதில் எனக்கு மிகவும் பிடித்த படம் இது..

Unknown சொன்னது…

எனக்குப் மிகவும் பிடித்த படம்!

அம்பாளடியாள் சொன்னது…

இதுவரை நான் பார்க்காத படம் இருப்பினும் இன்றைய தங்களின் ஆக்கத்தையும் அதில் உள்ள நற் கருத்துக்களையும் பார்த்த பின் இன்றே பார்க்க எண்ணியுள்ளேன்
கணணித் தெய்வம் கை கொடுத்தால்
நானும் ரசிப்பேன் .சிறப்பான இப் பகிர்வுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .

அருணா செல்வம் சொன்னது…

இந்தப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் துர்ண்டுகிறது உங்களின் இந்த பதிவு அரசன்.

பெயரில்லா சொன்னது…

/சீனு சொன்னது… தங்கர் படங்கள் பிடிக்கும்.. இயல்பை இயல்பாய் படமெடுக்கக் கூடியவர்... ஒன்பது ரூபாய் நோட்டு பார்த்ததில்லை.. பார்க்கவேண்டும்../

யோவ் சீனு. 9 ரூபா நோட்டை யாருமே பாத்தது இல்ல. பார்க்க வேண்டும்னா என்ன அர்த்தம்? அரசன் 9 ரூபா நோட் அடிச்சி சிக்கனும்னு ஆசையா? ஏன்யா இப்படி?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல படம். நான் ரசித்த படமும் கூட.....