மனசு ஒரு குரங்கு மாதிரி என்று சொல்ல கேள்விபட்டிருக்கிறேன், ஆனால் என்னோட மனசை எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறேன். எப்போதும் ஒரு நிலையில் இருந்ததில்லை. ஏதாவது ஒன்று ரொம்ப பிடிக்கும், கொஞ்ச நேரத்தில் நேரெதிராக வெறுக்கவும் செய்வேன். கிட்டத்தட்ட நீங்க நெனைக்கிற அதே தான் என்று நினைக்கிறேன் நானும்.
பயணங்களில் பாடல் கேட்கப் பிடிக்குமென்று சொல்ல முடியாது, பழக்கி கொண்டேன். எனது இசை பெட்டகத்தில் நிறைய பாடல்களை சேமித்து வைத்திருக்கிறேன். வகை தொகை கிடையாது, பல்வேறு இரசனைகளில் வகைப்படுத்தி இருக்கும். ஒப்பாரி பாடல்களும் வைத்திருந்தேன். எந்த பாடலை கேட்கிறேனோ அந்த மன நிலைக்கு மாறுவேன், சில நேரங்களில் எதிர் மன நிலையில் கூட இருந்திருக்கிறேன். இன்னும் சில நேரங்களில் பாடல் மட்டும் கத்திக் கொண்டிருக்கும், நானோ விகடன் டைம் பாஸின் அந்நிய தேசத்து முரட்டு அழகிகளை கண்டு வாய் வேர்த்துக் கொண்டு இருந்திருக்கிறேன். அந்நியப் புறாக்கள் போரடித்துவிட்டால் தெருவோர கழுதைகள் காகிதம் உண்பதை கண்டு இரசித்திருக்கிறேன். என் இரசனை கடிவாளமற்ற குதிரை போன்றது, கட்டுப்பாடு ஒன்றுமில்லை. அதுவாக நிற்கும், அதுவாக ஓடும்.
இரயில் பயணங்களில் எதிர் எதிர் இருக்கைகளில் அமர்ந்திருந்தாலும் பெரும்பாலும் தமிழக அழகிகளை நான் கண்டு கொள்வதில்லை, (அதற்காக அவர்கள் அழகில்லை என்று அர்த்தமில்லை) காரணம் வெட்கமாக இருக்கலாம், இல்லை நம்மளை எப்படி எடுத்துக் கொள்வாள் என்ற தயக்கமாக இருக்கலாம், இல்லை இவளிடம் பேச என்ன இருக்கிறது என்று கூட இருக்கலாம். இப்படி என்ன கருமத்தை போட்டும் நிரப்பிக் கொள்ளலாம், ஆனால் "பிடிக்காது" என்று பச்சையாக பொய் சொல்ல விரும்பவில்லை. இன்னொன்றை சொல்ல மறந்துவிட்டேன் இரயில் பயணமென்றால் எனது பெட்டியில் ஏறுவதற்கு முன் பயணிகளின் அட்டவணையில் இருக்கும் கன்னிகளின் பெயர்களை மனதிலேற்றிக் கொண்டு, "........தா" வாக இருப்பாளோ, "....லை"யாக இருப்பாளோ? ".....சி" யாக இருப்பாளோ? என்று, ஒவ்வொரு அழகியையும் இரகசியமாய் "சைட்டும்" சைக்கோ என்று கூட பெருமையாக சொல்லலாம்.
பள்ளிக்கூடத்திலிருந்து இந்த நோய் என்னை தொடர்கிறது என்று குறிப்பிடுவது சரியாக இருக்கும் என்று நம்புகிறேன். எனக்கும் அழகிகளுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் தான். ஒரு வகையில் நல்லது என்று எண்ணினாலும் தனிமையின் கொடுமைக்கு, அழகிகளின் கொடுமை எவ்வளவோ மேல் என்று அடிக்கடி தோன்றுகிறது. பார்ப்போம் எந்த அழகிக்கு நேரம் சரியில்லையென்று.
என்னோட ஞானத்தின் உச்ச நிலையை நீங்கள் கண் குளிர இரசிக்க வேண்டுமெனில் என்னோடு ஒரு அரைமணி நேரம் டிவி பாருங்கள், அப்புறம் நீங்களே உணர்வீர்கள் எந்த நிலையில் இருக்கிறேன் என்று. முன்பு போலில்லை இப்பொழுது டிவி காண்பது குறைந்து விட்டது என்றாலும் ஒரு நாளைக்கு சுமாராக மூன்று மணி நேரம் பார்க்கிறேன். மூன்று மணி நேரத்தில் கையிலிருக்கும் "ரிமோட்" கதறும் கதறலை காதிருந்தால் கரண்ட்டும் கண்ணீர் வடிக்கலாம், யாருக்கும் தெரியும்? தொடர்ந்து டிவி பார்ப்பதினால் ஒரு நன்மை ஏற்பட்டிருக்கிறது, அது என்னவெனில், என்னைவிடவும் "முற்றிய" பைத்தியங்கள் நிறைய இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டேன்.
மாநகரப் பேருந்தில் பயணம் செய்வது ஒரு இனிமை. காரணம், சொல்ல நிறைய இருக்கிறது, இருந்தும் இங்கு சொல்லும் அளவுக்கு முக்கியமில்லை என்பதினால் கடந்து விடுவது உசிதம். கிராமம், நகரங்களில் பயணித்துப் பாருங்கள் புரியும் வாழ்வின் சொர்க்கம். எங்கள் ஊரில் ஒருவர் இருக்கிறார் நித்தம் ஐந்து கிலோ மீட்டராவது பேருந்தில் பயணிக்காமல் அவருக்கு உறக்கம் வராது. இத்தனைக்கும் அவர் எந்த வேலையும் செய்யவில்லை. அடிக்கடி பார்த்து புன்னகைப்பேன் ஆனால் பேசியதில்லை, பேசியிருந்தால் காரணத்தை கேட்டிருப்பேன், உங்களுக்கும் சொல்லி இருப்பேன்.
மாநகரத்து "ஸ்மால் பஸ்களை" போல் இலை வரையவில்லை என்றாலும் அதை மினி பஸ் என்றோ , சிற்றுந்து என்றோ அழைக்கிறார்கள் எங்கள் பகுதி வாசிகள், டீசல் இல்லாமல் நகர்ந்தாலும் நகரலாம் இளையராசா இசை இல்லாமல் நகராது என்பது என்னோட ஒரு குருட்டு நம்பிக்கை. இங்கு பயணிக்கும் "கிளிகள்" ரொம்ப அழகாக இருக்குமென்று "சீனு" அண்ணனும், ஆவி அண்ணனும் அன்றொரு நாள் பேசிக்கொண்டிருந்ததை கேட்கும் பாக்கியம் பெற்றேன். அவர்களுக்கு கிளிகள் என்றால், என்னைப் போன்ற பாலகனுக்கு குயிலாவது கிட்டுமென்ற நம்பிக்கையில் தொடர்கிறது இந்த நம்பிக்கையற்ற பயணம்....
Tweet |
17 கருத்துரைகள்..:
ஏதாவது ஒன்று ரொம்ப பிடிக்கும், கொஞ்ச நேரத்தில் நேரெதிராக வெறுக்கவும் செய்வேன். கிட்டத்தட்ட நீங்க நெனைக்கிற அதே தான் என்று நினைக்கிறேன் நானும்.//
ஒரு நல்ல டாக்குடர போயி பாருங்க அரசன் ..
இரயில் பயணங்களில் எதிர் எதிர் இருக்கைகளில் அமர்ந்திருந்தாலும் பெரும்பாலும் தமிழக அழகிகளை நான் கண்டு கொள்வதில்லை, (அதற்காக அவர்கள் அழகில்லை என்று அர்த்தமில்லை) காரணம் வெட்கமாக இருக்கலாம்///
அரசர் வெட்கப்படுவாரோ
"........தா" வாக இருப்பாளோ, "....லை"யாக இருப்பாளோ? ".....சி" யாக இருப்பாளோ? என்று, ஒவ்வொரு அழகியையும் இரகசியமாய் "சைட்டும்" சைக்கோ என்று கூட பெருமையாக சொல்லலாம்./
கோடிட்ட இடத்தை யாரு நிரப்புரதாம் ...அரசன் இதுல உள்குத்து வெளிக் குத்து இல்லை ல ....
பள்ளிக்கூடத்திலிருந்து இந்த நோய் என்னை தொடர்கிறது என்று குறிப்பிடுவது சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்///
பிஞ்சிலேயே நல்லா தான் வெளஞ்சி வந்திருக்கு ....உங்களை எல்லாம் அப்போவே தலைல நாளு கொட்டு கொட்டி வளர்த்து இருக்கோணும்
பார்ப்போம் எந்த அழகிக்கு நேரம் சரியில்லையென்று.///
அரக்கி எப்போ அழகி ஆனாங்க அரசன் ...
மாநகரப் பேருந்தில் பயணம் செய்வது ஒரு இனிமை. காரணம், சொல்ல நிறைய இருக்கிறது, இருந்தும் இங்கு சொல்லும் அளவுக்கு முக்கியமில்லை என்பதினால் கடந்து விடுவது உசிதம்///
ராக்கிங் ல உங்கள தான் புடிச்சி முதல்ல உள்ள போடணும்...ஒருப் பொண்ணு பஸ் ல நிம்மதியா போயிட்டு வர முடியுதா
சீனு" அண்ணனும், ஆவி அண்ணனும் அன்றொரு நாள் பேசிக்கொண்டிருந்ததை கேட்கும் பாக்கியம் பெற்றேன். அவர்களுக்கு கிளிகள் என்றால், என்னைப் போன்ற பாலகனுக்கு குயிலாவது கிட்டுமென்ற நம்பிக்கையில் தொடர்கிறது இந்த நம்பிக்கையற்ற பயணம்....///
நல்ல குரூப் யா தான்யா சுற்றிரிங்க ..முதல்ல உங்க தலைவர் அ தூக்கணும்.... அந்த அப்பாவி ஆவிகுள்ள இப்படி ஒரு ஆவியா ....
இப்படி எல்லாம் இல்லை என்றால் எப்படி...? (அதுவும் சென்னையில் இருந்து கொண்டு) ஆனாலும் கால் கட்டு விரைவில் போட்டால் எல்லாம் சரியாகி விடும்... காதல் மன்னன் சீனு : கொஞ்சம் கவனிப்பா... ஹிஹி...
//அந்த அப்பாவி ஆவிகுள்ள இப்படி ஒரு ஆவியா ....//
அப்பாவிங்கிற வார்த்தைக்குள்ள ஆவி இருக்கே, தெரியலையாங்க..
//"சீனு" அண்ணனும், ஆவி அண்ணனும் அன்றொரு நாள் பேசிக்கொண்டிருந்ததை கேட்கும் //
ஒட்டுக் கேட்டதே தப்பு.. அதுவும் சபையில கோர்த்து விடறது அத விட தப்பு "அரசன்" அண்ணே!!
என்னாச்சு அரசன்.... :))))
ஒரே ஒரு விஷயம் - இந்த கிராமத்து மினி பஸ் பயணம் நிஜமாகவே ஸ்வாரசியமானது தான்! ஒரு முறை திருச்சியின் சில கிராமங்கள் வழியாக பயணித்திருக்கிறேன். - அந்த நினைவுகள் பசுமையாக இருக்கின்றன. அடுத்த முறையும் இது போன்ற மினி பேருந்தில் பயணம் செய்ய ஆசை வந்துவிட்டது!
//ஒரு நல்ல டாக்குடர போயி பாருங்க அரசன் ..//
:)
ஒவ்வொரு அழகியையும் இரகசியமாய் "சைட்டும்" சைக்கோ என்று கூட பெருமையாக சொல்லலாம்.
>>
என் வீட்டுக்காரர், பசங்கக்கிட்ட மட்டும் இல்லாம புதுசா பழகும் பெண் பதிவர்களிக்கிட்டலாம் சொல்வேன் நான் சேர்ந்திருக்கும் களவாணி க்ரூப்ஸ் பசங்கலாம் நல்ல பசங்க. நம்பி பழகலாம்ன்னு. உங்க யோக்கியதைலாம் இப்படி பதிவாய் போட்டு நாறடிச்சுட்டியே!
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : சீனு என்ற ஸ்ரீனிவாசன் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : திடங்கொண்டு போராடு
வலைச்சர தள இணைப்பு : வழிகாட்டிகள்
மாநகரத்து "ஸ்மால் பஸ்களை" போல் இலை வரையவில்லை என்றாலும் அதை மினி பஸ் என்றோ , சிற்றுந்து என்றோ அழைக்கிறார்கள் எங்கள் பகுதி வாசிகள், டீசல் இல்லாமல் நகர்ந்தாலும் நகரலாம் இளையராசா இசை இல்லாமல் நகராது என்பது என்னோட ஒரு குருட்டு நம்பிக்கை.
பேருந்து பயணங்கள் ஒரு தனி அனுபவம் அதுவும் இளையராஜா இசை என்னும் போது எக்ஸ்ட்ரா போனஸ் அரசன்
எப்போதும் ஒரு நிலையில் இருந்ததில்லை. ஏதாவது ஒன்று ரொம்ப பிடிக்கும், கொஞ்ச நேரத்தில் நேரெதிராக வெறுக்கவும் செய்வேன். கிட்டத்தட்ட நீங்க நெனைக்கிற அதே தான் என்று நினைக்கிறேன் நானும்.
same blood
அட்டவணையில் இருக்கும் கன்னிகளின் பெயர்களை மனதிலேற்றிக் கொண்டு, "........தா" வாக இருப்பாளோ, "....லை"யாக இருப்பாளோ? ".....சி" யாக இருப்பாளோ? என்று//
பார்ப்போம் எந்த அழகிக்கு நேரம் சரியில்லையென்று.//
ரசித்தோம்! சிற்றுந்து கிராமங்களின் வழி பயனம் அனுபவிக்க வேண்டிய ஒன்று!! இடுகையை மொத்தத்த்டில் மிகவும் ரசித்தோம்!
கருத்துரையிடுக