புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஏப்ரல் 23, 2014

காமங்கொண்ட எழுத்தாளர் ...


காமம் மிகப் புனிதமானது என்று சொல்லிக்கொண்டு திரியும் பலரின் பார்வைகள் மிகவும் மோசமானவையாகத்தான் இருக்கின்றன. (நான் சொல்ல வந்த பார்வை அவர்களின் எண்ண ஓட்டங்களை தான், வேறு எதையாவது என்று நீங்கள் எடுத்துக் கொண்டால் நிர்வாகம் பொறுப்பல்ல ). உதாரணத்துக்கு வேறு எந்த அந்நிய கிரகத்துக்கும் செல்லவேண்டாம், இருக்கவே இருக்கிறது இணைய எழுத்துலகம் ... பார்ப்பதற்கு வேண்டுமானால் படு சாந்தமாக இருப்பதாக தெரியலாம், ஆனால் இதன் மறுபக்கம் மகா கொடூரமானது.

புரட்சி பேசும் பலரின் எண்ணங்களில் கழுவ முடியாத அழுக்கு மண்டிக்கிடக்கிறது என்பது தான் பெருங்கவலையான ஒன்று. சென்ற ஆண்டில் ஒரு புத்தக வெளியீட்டுக்கு சென்று இருந்தேன். வாழ்த்திப் பேச நிறைய நண்பர்கள் வந்திருந்தார்கள். சிலர் எதார்த்தம் பிறழாமல் பேசினர். பலரின் பேச்சில் மசாலா நெடி தூக்கலாக இருந்தது. அதில் ஒரு தோழர் சும்மா சரவெடியாக வெடித்து தள்ளினார். பெண்ணியம் சிறக்க, தழைக்க, மேலோங்க, இப்படியாக அப்படியாக அடுக்கு மொழியில் அமிர்தமாய் பேசி முடித்தார். என்னுள் பெருந்தீயை மூட்டியது அவரின் பேச்சு ... 

ச்சே , எ மா ச வாழ்ந்து கொண்டிருக்கிறோம், பெண்ணியம் இன்னும் தழைத்தோங்க நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என்று உறுதி மொழி எடுத்தவன் தான், வருஷம் ஒண்ணாச்சி, என்ன செய்திருக்கிறேன் என்று திரும்பி பார்த்தால் அவமானமாக இருக்கிறது. சரி விடுங்கள் சென்ற வாரம் உயிர்ந்தெழுந்த இயேசு பிரான் பாவ மன்னிப்பு வழங்குவார் என்று நம்புகிறேன். பின்னே சின்ன குழந்தையை வன்புணர்ந்து கொன்றவனின் பாவத்தை கழுவும் போது, எதுவுமே செய்யாத என் பாவத்தை போக்க மாட்டாரா ? போக்குவார் என்று நம்புகிறேன். நம்பினோர் கைவிடப்படுவதில்லை என்று படித்த நினைவு...

என்னைய மாதிரி ஒரு மங்குனிய எங்கையும் பார்க்க முடியாது, நான் எதையோ சொல்ல வந்து வேற எதையோ உளறிகிட்டு இருக்கேன் பாருங்க.  அன்னைக்கு ஒருத்தர் என்னுள் பெருந்தீயை மூட்டினார் னு சொன்னேன் அல்லவா ? அந்த அண்ணாத்தைப் பற்றி அரசல் புரசலாக சில செய்திகளை கேள்வி பட்டேன் ஆனால் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் "அண்ணார்" ஒரு அலையும் பெருச்சாளி என்பதை சம்பந்தப்பட்டவரே சொன்னதும் சற்று மிரட்சி யடைந்தேன். சரி நமக்கேன் கவலை என்று நழுவினேன், காரணம் சம்பந்த பட்டவங்களே சாந்தமாக இருக்கையில் நாம என்ன .*&#கு பொங்கணும் ? அப்படின்னு வந்துட்டேன்.

சமீபத்தில் கில்மா அண்ணாத்தின் ஒரு கட்டுரையை படிக்கும் சோதனை நேரிட்டது, பெண்ணியம் பற்றி அவ்வளவு நேர்த்தியான கட்டுரை. சரி ஆயிரம் தான் ஆள் "அப்படி இப்படி" என்றாலும் எழுத்தில் இவரொரு சூரியன் தான். என்னதான் படைப்பைத்தான் பார்க்கணும், படைப்பாளியின் தனிப்பட்ட வாழ்க்கையை அல்ல என்று சொன்னாலும், யோக்கியமான எழுத்தை பார்க்கும் போதும் அயோக்கியத்தனமான செய்கைகள் வந்து போவதை தவிர்க்க முடிவதில்லை. 

அந்த பெருச்சாளியின் பெயரை அறிந்து கொள்ளும் ஆவலில் கருத்துப் பெட்டியில் கேட்பவர்களுக்கு இப்பவே பதிலளித்து விடுகிறேன், அவர் ஒருத்தர் மட்டுமல்ல, அந்த வகையறா ஆட்கள் நம்முள் நிறைய பேர் இருக்கின்றனர். ஆகையால் அவரின் பெயரை குறிப்பிடவில்லை. ஆகவே நண்பர்களே பெயரை அறிந்து கொள்ளும் ஆவலை விட்டொழித்து விட்டு, தான் அடக்கமாக இல்லாதவரை தன்னடக்கம் பற்றி எழுத தகுதியில்லை என்று எழுதப் பழகுங்கள். வாழ்வோம் வளமுடன் ....     

Post Comment

9 கருத்துரைகள்..:

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

//தான் அடக்கமாக இல்லாதவரை தன்னடக்கம் பற்றி எழுத தகுதியில்லை// நல்ல கருத்து.

ராஜி சொன்னது…

என்னதான் பசுத்தோல் போர்த்தி இருந்தாலும் ஒருநாள் புலியின் குணம் தெரிய வரும்.

பால கணேஷ் சொன்னது…

மிகமிகத் தெளிவாக எனக்குப் புரிகிறது அரசன் நீங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர்கள் என்று. அந்தப் பேச்சைக் கேட்கும் பொன்னான தருணம் வாய்க்கப் பெற்ற (அ)பாக்கியவான்களில் நானும் ஒருவனல்லவா..? நான் மனதில் கணித்து வைத்திருந்தது மிகமிகச் சரியானது என்பதை உன் இந்த ஆதங்கப் பகிர்வு நிரூபித்து விட்டது. இத்தகைய ஆசாமிகளைப் புறந்தள்ளுங்கள்...

உஷா அன்பரசு சொன்னது…

எனக்கும் புரிஞ்சிடுச்சி நீங்க யாரை சொல்லியிருக்கீங்கன்னு...

rajamelaiyur சொன்னது…

சத்தியமா எனக்கு புரியல ... அரசன் அது யாருன்னு சொல்லுங்க .. நாங்களும் ஜாக்கிரதையா இருப்போம்ல ...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சுய ஒழுக்கம் இல்லாது எழுத்திலும் பேச்சிலும் மட்டும் ஒழுக்கம் பேசுவது யாரை ஏமாற்றவோ தெரியவில்லை! இந்த மாதிரி ஆசாமிகளிடம் எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும்!

காமக்கிழத்தன் சொன்னது…

தலைப்பில், என் வலைப்பெயரில் பாதி [காமம்]இருக்கேன்னு பயந்துகிட்டே நுழைஞ்சி பார்த்தேன். ஒன்னுமே புரியலிங்க!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பலர் இப்படித்தான் இருக்கிறார்கள்...... :((((

பேச்சும் செயலும் வேறுவேறாக....

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

அந்த அண்ணாத்துதான் நீயா நானாவில் பெண்ணியம் பற்றி பேசி பரிசும் வாங்கினார்.