கலைந்த கூந்தல்,
தங்கம் கண்டிரா காது,
வலதில் இரண்டு,
இடதில் மூன்றாய்
சாயமங்கிய
கண்ணாடி வளையல்கள்,
மேற்சட்டைக்கு எதிர் வண்ணத்தில்
பாவாடை,
கர கரக்கும்
கறுத்த கொலுசு,
இவைகள் போதுமாயிருக்கிறது
அழகியை
பேரழகியாக்க !!!
Tweet |
10 கருத்துரைகள்..:
இயற்கை அழகு சிறப்பு ...
அழகு மிளிரும் கவிதை! பாராட்டுக்கள்!
கவிதை வெகு ஜோர் அரசன்.
உண்மைதான் :) உங்க கவிதையை நான் திருடிக்கொள்ளப் போறேன்.
அதுதான் நிஜ அழகு. பவுடர் பூசியதெல்லாம் வெறும் பகட்டு. எல்லாம் சரி, இதான் உனக்கு அழகுன்னு நீயும் வரப்போறவளுக்கு தங்கம், புடவைன்னு வாங்கித் தர மாட்டியா!?
அழகி போதுமே.. பேரழகி கூட வேண்டாமே..
ரூபக், திருடி யாருக்கு கொடுக்க போறீங்க? ;-)
// நீயும் வரப்போறவளுக்கு தங்கம், புடவைன்னு வாங்கித் தர மாட்டியா!?//
ராஜிக்க்கா, வாங்கித் தரேலேன்னா கேக்காம இருந்திட போகுதா என்ன? கவிதைல சொல்ற பொய்களை நிஜத்தில் எதிர்பார்க்கலாமா ;-)
அரசரு அடிச்சு தொம்சம் பண்றாரு ..!
நீ கலக்கு அரசா ...
எளிமை தான் அழகுக்கு அழகு சேர்ப்பது!
நல்ல கவிதை அரசன். பாராட்டுகள்.
கருத்துரையிடுக