புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மே 03, 2014

பெற்ற சுமைக்கு...



பிளவுகளுக்குள் நுழையும்
மழை நீராய்
என் உடற்கூறுகளெங்கும்
அந்த சொற்களின்
எச்சில் சிதறிக் கிடக்கிறது...

செவி சேருமுன்னே
செத்திருக்கணும்,
பருவம் வந்த மகளை 
நினைத்து,
பழித் துடைக்கும்
கல்லாகி நிற்கிறேன்!

மறைக்க முற்பட்டும்
பற்ற வைக்கப்பட்ட
ஈர விறகாய்
முகம் புகைந்து கொண்டிருக்கிறது...

இன்னும் என்னவெல்லாம்
சகிக்க வேண்டியிருக்குமோ
எதிர் வீட்டுக்காரனின்
மகளை இழுத்துச் சென்ற
புள்ளையை பெற்ற சுமைக்கு...


Post Comment

13 கருத்துரைகள்..:

பால கணேஷ் சொன்னது…

ஒரு தாயின் எளிமையான வார்த்தைகளில் சொல்லப்பட்ட கவிதை வலிமையாக மனதில் தைத்தது. ஆனால் பெற்ற- சுமைக்கு இரண்டுக்கும் இடையில் ‘ச்’ (ஒற்று) வராது. அந்த ‘ச்’சை உனக்குப் புடிச்ச எந்தப் புள்ளைக்காவது கொடுக்கவும்.

arasan சொன்னது…

திருத்தி விட்டேன் சார் ,,,

ச் கொடுக்கும் அளவுக்கு அடியேனுக்கு வயதில்லை என்பதினால் அதை அப்படியே சேமித்து வைத்துக் கொண்டேன் வாத்தியார் அவர்களே ...(பிற்காலத்தில் உதவும் என்பதற்காக ..)

திருத்தியமைக்கு என் மனம் நிறை நன்றிகள் சார் ....

சதீஷ் செல்லதுரை சொன்னது…

ச் கொடுக்கும் அளவுக்கு அடியேனுக்கு வயதில்லை என்பதினால் அதை அப்படியே சேமித்து வைத்துக் கொண்டேன் வாத்தியார் அவர்களே ### அவ்வளவு நல்லவனாய்யா நீய்யி ....கவிதை மெய்யாலுமே சூப்பர்..உனக்கு இனி அடிக்கடி இப்படி சூப்பர்னு சொல்ல முடியாது..ஏன்னா எழுதுறது எல்லாமே நல்லாத்தான் இருக்கு ...
இனி ஒன்லி ஓட்டுதான் குத்தம் கண்டு பிடிச்சாதான்.... இனி பின்னூட்டம் பக்கம் வரணும் போல

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

வயசமூகத்தில் காணும், கேட்கும் நிகழ்வுகள் எந்த வயதினரையும் பாதிக்கும் என்பதை கவிதை உணர்த்திவிட்டது.

Seeni சொன்னது…

ம்ம்...
சரிதான்...

Yaathoramani.blogspot.com சொன்னது…

உவமைகள் மிக மிக அருமை
அற்புதமான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

சீனு சொன்னது…

கடைசிவரியை இரண்டு முறை படித்ததும் தான் புரிந்தது.. அதுதான் இதில் சுவாரசியம் என நினைக்கிறன்

Unknown சொன்னது…

வருத்தப் படாதீர்கள் அம்மா ,இதுவும் கடந்து போகும் ...பக்கத்துக்கு வீட்டு பையனோடு பொண்ணு ஓடிப் போகும் போது !
த ம 6

”தளிர் சுரேஷ்” சொன்னது…

மிக அருமையான கவிதை! தாயின் உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தியது! வாழ்த்துக்கள்!

ஆத்மா சொன்னது…

என் உடற்கூறுகளெங்கும்
அந்த சொற்களின்
எச்சில் சிதறிக் கிடக்கிறது...
////
வாவ்...

முத்துசாமிப் பேரன் சொன்னது…

அட தளிர் சுரேஷ் உங்களைத் தான் தன் பதிவில் கூறியிருந்தாரோ ஜீ? அவர் கூறியதில் பிழை இல்லை.

பையனைப் பெற்றவளின் புலம்பலை வார்த்தையில் வர்ணம் தீட்டியிருகிறீர்கள்...

நிலாமதி சொன்னது…

மிக அருமையான கவிதை! தாயின் உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தியது! பாராட்டுக்கள்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

தாயின் மனது சொல்லும் கவிதை.