புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூன் 12, 2014

அழகிகளின் பேருந்து ...


முன்பெல்லாம் பயணமென்றால் பேருந்து தான் எனது முதல் சாய்ஸ், அது நெடுந்தூரமாக இருந்தாலும், குறுகிய பயணமாக இருந்தாலும் சரி. சன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி பின்னோக்கி ஓடும் மரங்களை இரசிப்பதில் ஒரு அலாதி. கடந்த இரண்டு மூன்று வருடங்களாக பயணமென்றாலே ஒரு வித எரிச்சல் தொற்றிக் கொள்கிறது, அதுவும் பேருந்து என்றால் சொல்லவே வேணாம்....

நடக்க கூடிய தொலைவில் இருந்ததினால் அலுவலகத்திற்கு நடந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்த எனக்கு அலுவலகம் மாறியது பெரும் தலைவலியாய் இருக்கிறது. எப்பவாது பேருந்தை நாடிய நான் தினமும் பேருந்தை நோக்குவதாய் நேர்ந்துவிட்டது. நாட்கள் செல்ல செல்ல பழகிவிடும் என்று நம்புகிறேன்.  

தினமும் வேடிக்கையாகவும், விரக்தியாகவும் சென்று கொண்டிருந்த பயண வேதனை, நேற்று கொஞ்சம் இரம்மியமாக அமைந்தது என்று சொல்வதில் மிகையிருக்காது என்று நினைக்கிறேன். வழக்கம் போல் பேருந்துக்காக காத்திருக்கையில், அழகிகளால் (மகளிர் பேருந்து அல்ல என்பது இங்கு மிக முக்கியம்) நிரம்பிய தாழ்தள சொகுசு பேருந்து ஒன்று வந்து தனது இரு இதழ்களை மெல்ல திறந்துகொண்டு என்னை வா, என்றழைக்க தயங்காமல் ஏறினேன். உள்நுழைந்த சற்று நேரத்தில் உள்ளூர உணர்ந்தேன், அவர்களைனைவரும் அழகிய அரக்கிகளென ... என்னா அராத்து... 




ஒரே சிரிப்பொலியும், பேச்சொலியுமாக பேருந்தே அதகளம் தான். பதிமூன்றுக்கும் மேற்பட்ட அழகிகளில் ஒருவர் கூட தலை வாரவில்லை எல்லாம் பார்லர்களின் புண்ணியத்தால், பேருந்தின் மங்கலான வெளிச்சத்தில் மின்னியபடி இருந்தன நிமிர்த்தப்பட்ட கூந்தல்? மேலை நாகரீகம் பாரபட்சம் பாராமல் அவர்களைனைவரையும் அரவணைத்திருந்தது. அழகிய பிரதேசங்களை சீராட்டியபடி வித விதமான "ஹெண்ட் பேக்" மாட்டியிருந்தாலும் மொபைல்களை மட்டும் உட்கரங்கள் வேர்க்க வேர்க்க பத்திரப் படுத்தியிருந்ததை பார்த்து கண்கள் வேர்க்க ஆரம்பித்து விட்டது, யாரும் அறியாமல் துடைத்துக் கொண்டேன்!

அக்கூட்டத்தினுள் உடல் பருத்த அழகியொருத்தி இருந்தாள், உடலுக்கு பொருந்தாத குரல். மொத்தக் கூட்டமும் அதிரும்படி அடிக்கடி சிரித்து மொத்தக் கூட்டத்தின் கவனத்தையும் தன் மேல் விழும்படி பார்த்துக்கொண்டாள். எனக்கு மட்டும் ஏனோ சிரிக்கும் போதெல்லாம் வித்தைக் காட்டும் பாம்பாட்டியாகவே தெரிந்தாள் அவள்.     

இன்னொருத்தி மெல்ல இதழ் விரிக்க, அருகில் நின்றவள் என்னவென்று சைகையில் கேட்க, இவள் மொபைல் அவள் கைக்கு மாறிய இருபது வினாடிகளில் அவள் சற்று பல் தெரியும்படி சிரித்து விட்டாள். பாவம் இருக்கையில் அமர்ந்திருந்த குழந்தை வீறிட ஆரம்பித்துவிட்டது. உண்மையில் அவள் சிரிப்பு அழகாகத்தான் இருந்தது, என் போல் அந்தக் குழந்தைக்கு இரசனை இல்லையென்றே கருதுகிறேன். 

கல்லூரிக் காலங்களுக்கே உரிய சீண்டலும் சில்மிசமும் நிறைந்த வாழ்க்கையை நகரத்து வாழ் தோழிகளும், தோழர்களும் நிறைவாக பயன் படுத்திக் கொள்கின்றனர். நான் கண்டவரை புறநகர்களில் சற்று குறைவு தான் என தோன்றுகிறது ... 

ஏதோ ஒரு நிறுத்தத்தில் இரண்டு மூன்று அழகிகளை தவிர்த்து மற்றவர்கள் இறங்கி கொள்ள, பேருந்து ஏதோ நரகத்தை நோக்கி விரைவதாய் தெரிந்தது இந்த நகரச் சாலைகளில். அடுத்த நிறுத்தத்தில் எஞ்சிய அழகிகளும் டாட்டா காட்டிவிட நெஞ்சை பிடித்துக் கொண்டு இருமியபடி நகர்கிறது நகரப் பேருந்து உறுமியபடி....    

Post Comment

7 கருத்துரைகள்..:

ராஜி சொன்னது…

ஜொள்ளு விட்டதைக் கூட எம்புட்டு அழகாய் பதிவாய் போட்டிருக்கான் பாரு!

Seeni சொன்னது…

கஷ்டம் தாங்க..

சீனு சொன்னது…

//என் போல் அந்தக் குழந்தைக்கு இரசனை இல்லையென்றே கருதுகிறேன். // ஹா ஹா ஹா செம பாஸு

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஆகா
தம +1

கார்த்திக் சரவணன் சொன்னது…

கூட்டம் அதிகமா இருந்தா வேடிக்கை மட்டும்தான்... ம்...

பால கணேஷ் சொன்னது…

காலி பஸ்ஸை படமெடுத்துப் போட்டிருக்கு அரசரை வன்மையாகக் கண்டிக்கிறேன். யாரங்கே.. இந்த அரசரை ஒரு மாதம் நாடு கடத்து...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல கவனிச்சு இருக்கீங்க! :)))

பால கணேஷ் - :)))) உங்களுக்கு மட்டும் தனியா ஃபோட்டோ அனுப்பி வைத்ததாக கேள்விப்பட்டேன்!